
என் இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர் , ஒருவர் காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி என்று வாதிடுபவர். இன்னொருவர் காதல் என்று ஒன்று உள்ளது அது இந்த மண்ணில் சாத்தியம் இல்லை என்று சொல்பவர் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் .முதல் நண்பர் அவரிடம் "காதல் என்பது வெறும் பால் உணர்ச்சி தான் மரினா பீச் சத்யம் திரையரங்கில் எல்லாம் பாருங்கள்" என்றார் அதற்க்கு இரண்டாம் நண்பர் "பால் உணர்ச்சியில் வருவது தவறல்ல ஆனால் வர்க்கம் சார்ந்து தான் காதல் வருகிறது அது காதலே அல்ல
உடன்படிக்கை" என்றார் . எனக்கும் என் நண்பருக்கும் வர்க்கம் என்று எதை சொல்கிறார் என்று புரியவில்லை .
நண்பர் இன்னொரு நண்பரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.கடைசியில் வர்க்கம் என்று விவாதம் செய்த நண்பர் ஒரே ஒரு கேள்வி கேட்டார் இன்னொரு நண்பரால் பதில் சொல்ல முடியவில்லை " அழகா இருக்கு ஒரு பொண்ணு உங்களுக்கும் பிடிச்சிருக்கு அந்த பொண்ணு சித்தாள் வேலை செய்கிறாள் நீங்க காதலிப்பீங்களா" சக நண்பர் சாப்ட்வேர் "அது எப்படி முடியும் " என்றார் . இதன் பெயர் தான் வர்க்கம் கிளாஸ் சார்ந்தே ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்று நண்பர் விளக்கினார்.
வர்க்கம் என்பது இனம் சார்ந்து இருக்கலாம் மதம் ஜாதி சார்ந்து இருக்கும் அது எல்லாம் இல்லாத வகையில் பொருளாதாரம் சார்ந்து இருக்கும். நானும் அந்த நண்பரும் பேசிக்கொள்ளும் பொழுது கூட நிறைய கேள்வி கேட்டு மடக்குவார் பேசிப்பார்க்கும் பொழுது நண்பரிடம் ஒரு ஆழம் இருக்கும் அஜித் பிடிக்கும் என்றால் ஏன் பிடிக்கும் என்பார் . நான் தொழிலாளியுடன் சமமாய் பழகுவார் என்பேன். அப்படி என்றால் அந்த தொழிலாளி வீட்டில் பெண் எடுப்பாரா????? என்பார் நான் முழிப்பேன் அப்புறம் என்ன தொழிலாளி எல்லாம் வர்க்கம் சார்ந்தது கார்த்திக் என்பார்.
நானும் யோசித்து பார்த்தேன் சினிமாவில் காட்டுவதை போல் ஒரு பணக்கார பெண் ஏழை பையனை காதலிப்பது பணக்கார பையன் ஏழை பெண்ணை காதலிப்பது இது எல்லாம் சாத்தியமே இல்லை அப்படி இருந்தாலும் மிக குறைவு. மனிதனின் லெவல் மாற மாற நட்பு வட்டாரம் மாறும் அந்த அளவிலே மட்டுமே யோசிப்பான். காரில் வரும் பெண்கள் காரில் வரும் பையனையே காதலிப்பாள் . ஒரு கல்லூரியில் படிக்கும் இரு பாலார் காதலித்தால் ஏறக்குறைய ஒரே பொருளாதார அமைப்பையே சேர்ந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஜாதி மத ரீதியாகவோ ஒரே வர்க்கம் சார்ந்து இருப்பார்கள்.
அப்படியே ஏழை பையனாய் இருந்தால் கூட அவன் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நன்றாய் படித்து மென்பொருள் நிறுவனம் அல்லது அதை ஒத்த மேட்டுக்குடி வேலை இதை பார்த்தே காதல் வருகிறது . இன்னொரு நண்பரிடம் கேட்டேன் "high கிளாஸ் பொண்ணுகள பார்பீங்களா" அதற்க்கு அவர் சொன்ன பதில் "அழகா இருந்தாலும் லவ் பண்ண தோணாது" " ஏன் " என்று கேட்டேன் . "அந்த பொண்ணெல்லாம் நமக்கு செட் ஆகாது" என்றார் நண்பர் . ஒரு மிடில் கிளாஸ் பையன் காதலிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு
குடும்ப பாங்கான பெண்ணையே பார்ப்பான் ஏன் என்றால் அதை பார்த்தால் தான் இவனுக்கு ஒத்துவரும் என்று இவனுக்கு தெரியும் .
எல்லாமே வர்க்கம் சார்ந்து என்றால் உண்மையான காதல் என்ன என்று நண்பரிடம் கேட்டேன் . எதுவுமே பொருள் வைத்து கொள்ளாமல் பாதுகாப்பு இல்லாமல் அன்றைய நாளுக்கு மட்டும் உழைக்கும் மக்களிடம் இது சாத்தியம் என்றார். எப்படி என்று யோசித்து பார்க்கும் பொழுது சரியாகவே தோன்றியது . ஆம் இவனிடமும் பாதுகாப்பு இல்லை அவளிடமும் பாதுகாப்பு இல்லை சொத்துக்கள் இல்லை இங்கு இருவருக்கும் பிடிக்கும் உயிரை கூட விடுவார்கள் என்பது முன்னிலை படுகிறது , பணம் தேவை ஜாதி வர்க்கம் எல்லாம் பின்னிலை அடைகிறது, அதனால் அந்த இடத்தில் காதல் சாத்தியம்.
இன்னொரு இடத்திலும் காதல் சாத்தியம் எங்கே என்றால் ஒரு போராளி போல இருக்கிறான் , போராட்டங்களில் கலந்து கொள்கிறான், எப்பொழுது ஜெயிலுக்கு போவான் என்று தெரியாது இதை போல் ஒருவன் இருந்தால் எந்த பெண்ணும் நெருங்கி வர மாட்டாள். அவன் வாழ்கையில் பாதுகாப்பு இல்லை அவனையே ஒரு பெண் காதலித்தால் அங்கே உண்மையான காதலுக்கு சாத்தியம் இருக்கிறது ஏன் என்றால் இங்கே பிடிப்பது மட்டுமே பிரதானம் ஆகி விடுகிறது .
நண்பரிடம் பேசிவிட்டு வந்த பொழுது பெசென்ட் நகர் பீச்சில் காருக்குள் மேட்டுக்குடி காதல் நடந்து கொண்டிருந்தது உள்ளே A R ரஹ்மான் "கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஹோசன்ன" பாடிக்கொண்டிருந்தது. உள்ளே நூறு காதலர்கள் இருப்பார்கள் பீச்சில் அந்த வர்க்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. எங்கோ ஒரு இடத்தில் "கண்கள் இரண்டால்" பாடல் ஒலித்து கொண்டிருந்தது எப்பொழுதுமே கிளர்ச்சி ஏற்ப்படுத்தும் அந்த பாடல் இப்பொழுது என்னை ஒன்றும் செய்யவில்லை. என் காதலி என்னை விட்டு போய்விட்டால் என்ற வடு கூட இல்லை கொஞ்சம் சுதந்திரமாய் இருந்தது வெகு நாட்களுக்கு பின்.