Sunday 19 December 2010

ரொம்ப நல்லவன்

"ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது. ஊழல் அபாயத்தை ஒழிப்பதில், கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்" இந்த பொன்னான வார்த்தைகளை உதிர்த்தவர் வேறு யாரும் அல்ல , எங்கு திரும்பினாலும் ஊழல்
என்ற செய்து எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கும்படி செய்த காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா . ஊழல் மற்றும் முறைகேடான நடவடிக்கைகள் விஷயத்தில் சகிப்புத் தன்மைக்கே இடமில்லை. ஊழலை ஒழிப்பதில் கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி துணைபோகாது. ஊழல்வாதிகளையும் ஆதரிக்காது. அதாவது அன்னை என்ன சொல்கிறார் என்றால் , காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு துணை போகாது , ராஜா சுரேஷ் கல்மாடி போன்றவர்களுக்கு துணை போவதால் அவர்கள் ஊழல் செய்தவர்கள் அல்ல காங்கிரஸ் தான் ஊழலுக்கு துணை போகதே .

அரசுத் துறைகளில் நடைபெறும் ஒப்பந்தங்கள், கொள்முதல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக முறையான சட்டத்தையும் இயற்ற வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும். அதனால் தான் அணுஆயுத ஓப்பந்தம் வெளிப்படையாக நடந்தாதாம் . காங்கிரஸ்
போல வெளிப்படையாக இருக்க முடியுமா ?

பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் சந்தேகம் கொள்ள முடியாது. எனவே பிரதமரை பா.ஜ., விமர்சிப்பது கேவலமான செயல். பிரதமருக்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் காங்கிரஸ் கட்சி அளிக்கும். ஊழல் குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயேகூட, காங்கிரஸ் தனது கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அசோக் சவான் உட்பட பலரும் ராஜினாமா செய்தனர். பிக்பாக்கெட் அடிப்பவன் கூட ஜெயிலில் தான் போடுவார்கள் , ஆனால் ராஜா , சவான் போன்றவர்கள் ராஜினாமவே செய்துவிட்டார்கள் இது அல்லவோ நேர்மை .அதனால் பிரதமர் மன்மோகன் சிங்க் மிகவும் நல்லவர் .

2 comments:

pichaikaaran said...

வெட்கம்..வேதனை..

வேறு என்ன சொல்ல முடியும்?

அமிர்தா said...

தி.மு.க நபர் ஒருவர் என்னிடம் வாங்கி கட்டி கொன்டார் . கூட்டு குழு விசாரணை எல்லாம் வெறும் கண் துடைப்பு..... என விவாதம் தொடர்ந்தது.