Monday, 14 February 2011
காதல் சில கேள்விகள்
"காதலர் தினம்" நேற்று கொண்டாடப்பட்டது . நானும் காதலிலே கசிந்து உருகியது உண்டு , படங்கள் என்றால் காதல் படங்கள் கவிதை என்றால் காதல் கவிதை வாழ்க்கை என்றால் காதல் வாழ்கை மட்டுமே என்று எண்ணியதுண்டு . வாசிக்க ஆரம்பித்த காலத்தில் என் கல்லூரி வாழ்க்கையில் நான் அதிகம் விரும்பிப்படித்தது தபு சங்கர் . இலக்கிய ரசனையே இல்லாத காலத்தில் தபு சங்கர் கவிதை படித்து அகமகிழ்ந்தது உண்டு . கவிஞர் ஆனால் தபு சங்கர் போல ஆக வேண்டும் என்று எண்ணியதுண்டு . "எதை கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் " போன்ற கவிதைகள் மனப்பாடமாய் இருந்தது உண்டு . அதை போல கவிதைகள் கிறுக்கி நண்பர்களிடம் பாராட்டு வாங்கியது நிறைய முறை . அதுவும் காதலுடன் கவிதை எழுதும் பொழுது , என்னை போன்ற இலக்கணம் தெரியாதவன் , எழுத்துபிழையுடன் எழுதுபவன் கூட கவிஞன் ஆகிறான் .
ஆட்டோகிராப் 7G போன்ற படங்கள் பார்த்து உறங்காமல் இருந்த நாட்கள் உண்டு . கணிப்பொறியில் காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்கிய நாட்கள் மிக அதிகம் . பைத்தியக்காரத்தனமாய் காதலித்து , வாழ்வை தொலைத்த , நேரத்தை வீணடித்த நாட்கள்(வருடங்களை) உண்டு . பதிவு எழுத ஆரம்பித்த பொழுது கூட , காதல் கவிதைகளும் , காதல் கதைகளும் நிறைய எழுதியது உண்டு . ஏக்கங்கள் மட்டுமே படைப்புகள் , NOSTALGIA வே சிறந்த படைப்பு என்று எண்ணிய காலங்கள் , தூக்கம் துலைத்த இரவுகள் . "வெண்ணிற இரவுகள் " புதினத்தின் வரும் கதாநாயகன் என்னை போலவே இருப்பான் என்று என்று நண்பன் சொல்ல , அதை வாங்கிவிட்டு
பாதி கூட படிக்கமால் இந்த தளத்திற்கு வெண்ணிற இரவுகள் என்று பெயர் கூட வைத்து விட்டேன் . காதலும் தனிமையும் அவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்கின .
ஆனால் இப்பொழுது பறந்து விரிந்த பார்வையுடன் காதலை அணுகும் பொழுது காதல் ஒன்று அவ்வளவு புனிதமானதாய் இல்லை என்றே சொல்லுவேன் . என் நண்பர் கேட்ட கேள்வி தான் என் காதுக்குள் ஒலிக்கிறது , ஒரு பெண் மனதுக்கு பிடித்தவளாய் இருக்கிறாள் , ஆனால் அவள் தொழில் சாதாரண தொழில் என்று வைத்துக்கொள்வோமே , நாம் அந்த பெண்ணை SIGHT கூட அடிக்கப்போவதில்லை . நடுத்தர்வர்கத்தில் இருந்து வரும் ஆண்மகனால் ஒரு பணக்காரப்பெண்ணை உற்றுப்பார்க்கலாம் ஆனால் காதல் என்று வரும்பொழுது தன்
வர்க்கத்திற்கு ஏற்ற தன் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணை மட்டுமே மனத்தால் கூட நினைக்க முடிகிறது . உதாரணமாய் ஒரு நடுத்தரவர்க்க மென்பொருளில் வேலை செய்பவர் ஒரு மீனவ பெண்ணை நினைப்பது இல்்லை ஏன் பார்ப்பது கூட இல்லை . ஜாதி மறுப்பு திருமணங்கள் நடக்கிறது உண்மை ஆனால் வர்க்க மறுப்பு காதல் சாத்தியமா . இப்படி உளவியல் ரீதியாக நாம் மூளை சலவை செய்யப்பட்டு உள்ளோம் அப்படி
இருக்க இச்சமூகத்தில் உண்மையான காதல் எப்படி மலரும் . காதல் செய்ய ஆண் பெண் என்ற தகுதியை தாண்டி வர்கங்கள் முடிவு செய்யப்படும் காதலோ திருமணமோ உண்மையில் எப்படி இருக்கும் . நாம் ஈன்று எடுக்கும் குழந்தைகள் கூட வர்க்க பேதத்துடனே வளரும் .
என்ன டா காதலில் கூட அரசியல் பேசுகிறார்கள் என்று சிலர் சொல்லக்கூடும் . வாழ்க்கை அனைத்திலும் அரசியல்
இருக்கிறது பார்வை இருக்கிறது. நம் நண்பர்கள் , நாம் உடுத்தும் ஆடை , நம் செய்கை அனைத்திலும் அரசியல் உண்டு , அது கண்டிப்பாய் விமர்சனத்துக்கு உட்பட்டது . காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது அமரத்துவம் வாய்ந்தது ,ஆனால் இச்சமூகத்தில் காதல் உண்மையாகா தான் உள்ளதா ? காதலிப்பவர் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டுப்பாருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
. நாம் ஈன்று எடுக்கும் குழந்தைகள் கூட வர்க்க பேதத்துடனே வளரும் . //
நிச்சயமா.. தன் காலில் நிற்க பழக்கும் அதே சமயம், தேர்ந்தெடுக்கும் விதத்தையும் ஆயுசுக்கும் மன நிறைவு தரக்கூடிய துணையை தேர்ந்தெடுக்க சொல்லித்தரணும்..
பெண் செக்யூரிட்டியை பார்ர்த்தே அனேகமா துணையை தேர்வுசெய்வாள்..
f
காதலிக்கும் போது காலம் செல்வது தெரிவதில்லை ...காலம் செல்ல செல்ல காதல் போவதும் தெரிவதில்லை..
முழிச்சுக்கோ .....சன் ரைஸ் குடிச்சுக்கோ :)
ஆதலினால் காதல் செய்வீர்.
ஒவ்வொரு பதிவிற்கும் இடையில்
நீண்ட இடைவெளி ஏன் நண்பரே?
காதல் என்று எதுவுமே இல்லை. காமம் மட்டுமே உண்மை. காதலுக்குள் காமம் ஒளிந்து கிடக்கிறது பொருளாதார அடிப்டையிலேயே தான் காதல் (காமம்) வருகிறது என்பது என் தாழ்வான கருத்து
Post a Comment