Tuesday, 22 February 2011
தளபதி(கேப்டன்) இளைய தளபதி(ஸ்மால் கேப்டன்)
நாகை மாவட்டத்தில் பேசிய நடிகர் விஜய் அவரின் அறிய தத்துவமான "மத்திய மாநில அரசுகளுக்கு தந்தி அனுப்புங்கள் " என்று சொல்லி உள்ளார் . அவரை பார்க்க ஒரு கூட்டம் . இந்த நடிகர் யார் என்றால் ஈழத்தில் பிரச்னை உக்கிரமாய் இருக்கும் பொழுது தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேர ராகுல் காந்தியை சந்தித்தவர் . இந்த நடிகர் யார் என்றால் "கோகோ கோலா " விளம்பரத்தில் பணத்துக்காக நடித்தவர் . இவருக்கு சீனியர் நடிகர் என்ன டா என்றால் சரக்கு அடித்துவிட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறார் . ஒருவர் சினிமா வெளிவர பிரச்சனை என்பதால் அரசியலில் இறங்குகிறார் , இன்னொருவர் கல்யாண மண்டப பிரச்னையை ஏதோ ஈழ பிரச்சனை போல மேடைக்கு மேடை பேசுகிறார் ,இவர்களின் அறஉணர்ச்சி மக்கள் பிரச்சனையில் இருந்து வருவதில்லை , தன் மண்டைக்குள் இருக்கும் பிரச்சனையில் இருந்து வருகிறது . இத்தகைய முட்டாள்களே நம்மை ஏமாற்றுகிறார் என்றால் , நாம் எந்த அளவு இருக்கிறோம் .
சரத்குமார் என்பவர் தனக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை என்று அ தி மு கா சென்ற வரலாற்று காரணம் நாம் அறிந்ததே .விஜய டி ராஜேந்தர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று அவருக்கே தெரியாது . பிரச்சாரத்திற்கு போக கூட நேரம் ஒதுக்காத கார்த்திக் தான் ஜாதி என்பதாலேயே தலைவராய் இருக்கிறார் . இப்படி நடிகர்களின் நகைச்சுவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது . இந்த கோமாளிகளுக்கு பின் நின்று நாமும் கோமாளி ஆகப்போகிரோமா ?கேப்டன் தளபதி என்றால் இளைய தளபதி ஸ்மால் கேப்டன் தானே
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்...
ஆம் சங்கவி ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவார்கள்
ஸ்மால் கேப்டன் அல்ல, யங் கேப்டன். அது சரி, விஜயகாந்த் மப்புடன் மேடையில் பேசினார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
அவர் மப்பில் இருக்கிறார் , எங் சுமால் விளக்கங்கள் எல்லாம் சரி மைய கருத்து
முக்கியம் அல்லவா பாலா
யங் சுமால் என்பது ஒரு வேடிக்கைக்காக சொன்னேன். ஆனால் மப்பில் இருக்கிறார் என்பது ஒரு அவதூறாக இருக்க வாய்ப்புண்டு. அதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி உங்கள் பதிவின் நோக்கம் பற்றி நான் விமர்சிக்கவில்லை.
Post a Comment