படங்கள் பற்றி விமர்சனங்கள் வரும் பொழுது பொதுவாய் படத்தை படமாக பாருங்கள் என்ற விமர்சனம் வருவதுண்டு ."ராவணன் " படம் வந்தபொழுது எழுதிய விமர்சனத்திற்கு அது ஒரு கலை அவ்வளவே பிடித்து இருந்தால் பாருங்கள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அது என்ன அரசியல் விமர்சனம் செய்வது என்று வாதம் செய்பவர்கள் உண்டு . ஒரு படம் மொக்கை என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , போர் என்று சொல்லலாம் நமக்கு உரிமை உண்டு , நாயகி நன்றாக கவர்ச்சியாய் இருக்கிறார் என்று சொல்ல உரிமை உண்டு , ஆனால் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் மட்டும் படத்தை படமாக பார் என்று விமர்சனம் அறிவு ஜீவிகளிடம் இருந்து இயல்பாய் வரத்தான் செய்யும் .
இப்படி தான் பயணம் பார்க்க சென்ற பொழுது என் திரையுலகை சேர்ந்த நண்பரிடம் இது ஹிந்துத்துவா படம் என்று
சொன்னபொழுது அவர் சண்டைக்கு வந்தார் .மோடியை உங்களால் தீவிரவாதியாக சித்தரிக்க முடியுமா என்று நான் கேட்டேன் "மோடி தான் சிறந்த முதல்வர் என்று அவர் வாதிட்டார் " . நீங்கள் எல்லாம் ஹிந்து இல்லை பார்ப்பனர்கள் மட்டுமே ஹிந்து என்று சொன்னேன் , நீங்கள் அவர்களுக்கு வேலை செய்பவர் என்று சொன்னேன் . " எப்படி சொல்கிறீர்கள் நான் ஹிந்து தான் " என்று சொன்னார் .ஹிந்து மதம் உங்களை இழிவு படுத்துகிறது "இந்த ஒரு வீட்டில் மட்டுமே பத்தினி வாழ்கிறார் " என்று பார்ப்பனீயம் சொல்கிறது அதை ஏற்றுகொண்டால் நீங்கள் ஹிந்து தான் என்றேன். இப்படிப்பட்ட யோசிக்காத சமூகத்தில் ஒரு படைப்பு என்பது வரும்பொழுது அரசியல்
விமர்சனம் தேவை என்றே நினைக்கிறேன் .
சினிமாவை மொக்கை என்று விமர்சனம் செய்யலாம் ஆனால் அரசியல் விமர்சனம் கூடாது என்ன ஜனநாயகம் ?
ஆனால் இப்படி அரசியல் விமர்சனம் செய்யாதவர்கள் கூட "நடுநிசி நாய்களில் " வரும் வக்கிரம் என்னும் அரசியல் பற்றி சமூகம் பற்றி கவலை பட்டார்கள் . இது அவர்கள் செய்யும் தவறல்ல , அப்படம் அவர்களை மனதளவில் பாதித்து இருக்கிறது , அதில் அவர்களுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருக்கிறது . இதே நடுநிசி நாய்களை விமர்சனம் செய்பவரை கூப்பிட்டு "அன்பே சிவம் " பற்றி விமர்சனத்தை சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் "நீ என்ன பெரிய புடிங்கியா , நீ முதல்ல ஒரு படம் எடு" என்பார்கள். தன்னை பாதிக்கிற விடயத்தில் மட்டும் , தன்னில் இருந்து வரும் சமூக அக்கறையை மட்டும் காட்டும் இவர்கள் மற்றபடங்களை அரசியல் விமர்சனம் செய்யும்பொழுது "படத்தை படமாய் பாருங்க பா " என்று சொல்வார்கள் .
பின் குறிப்பு :
இப்பதிவை எழுத்தத்தூண்டியது அண்ணன் ஜாக்கியை பற்றி பதிவுலகில் எழப்பட்டிருக்கும் விமர்சனங்கள் . ஆனால் ஒருவிதத்தில் ஜாக்கி நேர்மையானவர் அவர் சிலபடங்களை மட்டும் அரசியல் பார்வையுடனும் சில படங்களை படங்களாகவும் பார்ப்பதில்லை அனைத்து படங்களையும் படமாகவே தான் பார்க்கிறார் .
1 comment:
ஒவ்வொருவரும் தான் கையில் வைத்திருக்கும் அளவுகோலில் அளக்கிறார்கள்.அதனால், வித்தியாசங்கள் எழுவது சகஜம்.
Post a Comment