Wednesday, 2 February 2011

பலி ஆடு - spectrum ஊழல் ராசா

ராஜா கைது செய்யப்பட்டு இருக்கிறார் . ஊழலின் ஆதாயங்கள் முதலாளிகள் பெற்றுக்கொள்ளும் பொழுது ராஜா
மட்டும் கைது செய்யப்பட்டது ஏன் ? ஆரம்பத்தில் இருந்தே ராஜா மீது ராஜாவை குறிவைத்து மட்டும் இந்த ஊழல்
வழக்கு கொண்டுசெல்லப்பட்டது . சோ போன்ற ஜாம்பவான்கள் கூட முதலாளித்துவம் தான் ஊழலின் ஊற்றுக்கண்
என்பதை எளிமையாய் மறந்துவிட்டார்கள் . சரி மக்களிடம் இவ்விடயம் எப்படி போய் சேர்ந்து இருக்கிறது , எப்படி
விடயத்தை சேர்த்து இருக்கிறார்கள் ஊடகங்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு மாதம் முன்பு எடுக்கப்பட்ட ரிப்போர்ட் . ராஜாவை மட்டும் கைது செய்து இருக்கிறார்களே ? அவர் மட்டும் குற்றவாளியா ? அதனால் புரிதலுக்கு இத்தருணத்தில் பதிவு செய்கிறேன் .முதலில் ஒரு வயதான பெரியவரிடம் ஸ்பெக்ட்ரெம் ஊழல் என்றால் என்ன என்று
கேட்டபொழுது , சொல்வதற்கு
விருப்பம் இல்லாதவராய் கையை அசைத்தார் . அவர் உடுத்தி இருக்கும் வேட்டி
சட்டையை பார்த்தால் நடுத்தரவர்க்கம் என்று தெரிந்தது .

வயதானவருக்கு பின் அமர்ந்து இருந்த ஒரு 35 முதல் நாற்பது வயது இளைஞரை
அணுகினேன் .
விகடன் பதிப்பகத்தில் வேலை செய்பவர் , அறிவுத்துறை சாராமல் உடலுழைப்பு
செய்பவர் ,மதுரைக்காரர் . அவரிடம் கொஞ்சம் கேள்வி கேட்க வேண்டும் என்று
சொன்ன பொழுது ரொம்ப அடக்கமாய் " சரி கேளுங்க " என்றார் . "ஸ்பெக்ட்ரெம்
அலைக்கற்றை ஊழல் அத பத்தி என்ன நினைக்குறீங்க " என்றேன் , " சார் அது
தப்பு தான் சார் " என்றார் ."தப்புதான் யார் யாரெல்லாம் தப்பு
செஞ்சுருக்காங்க " என்று கேட்ட பொழுது " ராஜான்னு சொல்லிக்கிறாங்க ,
ஆனா மத்தவங்களுக்கும் தொடர்பு இருக்கும் சார் " . " மத்தவங்கனா ?" என்று
வினவிய பொழுது " காங்கிரஸ் , பெரிய தலைங்க நிறைய பேருக்கு சம்மந்தம்
இருக்கும்
சார் " . சரி "இந்த பணம் யாரோட பணம் யார்ட்ட இருக்கு " என்ற கேள்விக்கு
சட்டென " இது நம்ம பணம் தான் சார் , ஆனா அரசியல்வாதீட்ட இருக்கு சார் "
என்றார் . அப்ப வோட்டு மாத்தி போட்டா சரியாடுமா அப்புறம் ஏன் எல்லா
ஆட்சிலயும் ஊழல் நடக்குது என்று கேள்விகேட்டுவிட்டு , இதில் ஆதாயம்
அடைந்தது முதலாளிகள் என்று அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட்டபின் "ஆமாம்
சார் நீங்க சொன்னவுடனே தான் சார் தெரியுது " என்றார் .இது மக்களுக்கான
அரசு அல்ல முதலாளிகளுக்கான அரசு என்று சிறிது விளக்கம் கொடுத்த பின்
புரிந்து கொண்டார் ."ஏன் டாட்டா வீட்ல எல்லாம் ரைட் நடக்கல , ராஜா வீட்ல
மட்டும் நடக்குது " என்று கேட்டவுடன் பணிவாய் சிரித்தார் "தெரியலைங்க "
என்றார் .

அடுத்து 28 வயதை ஒட்டிய இருவரை சந்தித்தேன் . அதில் ஒருவர் ராமேஸ்வரம்
இன்னொருவர் கடையநல்லூர் .
கடையநல்லூரை சேர்ந்தவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் , குரூப்
ஒன்ணிற்கு தன்னை தயார் படுத்திவருகிறார் .
இன்னொருவர் TVS BPO அதில் வேலை செய்பவர் . இருவரும் மதுரையில் ஒன்றாய்
கல்லூரியில் படித்தவர்கள் .
குரூப் ஒன் படிப்பவர் ஆர்வமாய் பதில் அளித்தார் , அவருக்கு புள்ளி
விவரங்கள் எல்லாம் தெரிந்து இருந்தது .
ஆனால் பொதுபுத்தி ஏற்ப்படுத்தி இருக்கும் தாக்கங்களால் "ஊழலுக்கு
காரணம் அரசியல்வாதி தான் சார் " என்றார் .நான் எளிமையான கேள்வி கேட்டேன்
" இந்த பணம் எல்லாம் யார்ட்ட இருக்கு ,ராஜா மட்டும் சட்ட பாக்கெட்ல
போட்டுக்கிட்டார " "இல்ல நிறைய பேருக்கு பங்கு கண்டிப்பா இருக்கும் சார்
,சரிங்களா " என்றார் . புள்ளி விவரங்களை வைத்து அவருக்கு இந்த பணம்
எல்லாம் முதலாளிட்ட இருக்கு " ஏன் டாட்டா வீட்ல எல்லாம் ரைட் நடக்கல ,
ராஜா வீட்ல மட்டும் நடக்குது " . என்று கேட்டவுடன் "கண்டிப்பா நடத்தனும்
சார் " என்றார் . "நிரா ராடியா டேப் கேட்டா , அமைச்சர டாடா முடிவு
பண்றாரு எப்படி அவங்க நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்புறீங்க சார் "
என்றவுடன் சிரித்து விட்டு "பெரிய இடத்து விஷயம் சார் புரியுது , ஆனா
நாம என்ன பண்ண முடியும் " விடயத்தை புரிந்து கொண்டார் இப்படி
விரக்க்த்தியாய் பதில் சொன்னார் .

அடுத்து TVS அதில் வேலை செய்யும் அவர் நண்பரிடம் "இதெல்லாம் பற்றி
உங்களுக்கு ஐடியா இல்லையா?"
என்று கேட்ட பொழுது " எனக்கு பொலிடிக்ஸ் எல்லாம் intrest இல்ல சார் ,
தெரியாத விசயத்துல என்ன பேச "
என்றார் , நடுத்தரவர்க்கம் பார்ப்பதற்கு மாடர்ன் இளைஞர் போல இருந்தார்
."சரி இந்த ஊழலில் நீங்கள்
பாதிக்கபடவில்லைன்னு நினைக்குறீங்களா " என்று சொன்னவுடன் தோளை
குளிக்கினார் . மடைதிறந்த வெள்ளம் போல் பதில் சொல்லாமல் மணிரத்தின படம்
போல் ரத்தின சுருக்கமாய் " நோ ஐடியா " என்றார் .

அடுத்தது ஒரு இன்போசிஸ் இளைஞர் , மைசூரில் வேலை செய்கிறார் .
ஸ்பெக்ட்ரெம் ஊழல் என்று சொன்னவுடன்
மடைதிறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார் . இதுல முதலாளிகளுக்கு எல்லாம்
சம்மந்தம் இருக்கு என்றார் ஆணித்தனமாய் . கரெக்ட்டான புள்ளி விவரங்கள்
சரியான பார்வை . சரி இது எல்லாம் எப்ப மாறும்னு நினைக்கிறீங்க " என்று
கேட்டவுடன் நம்ம அரசியல் அமைப்பையே மாத்தனும் சார் , இந்த அமைப்புல
இருந்தா யார் வந்தாலும் ஊழல் தான் நடக்கும் சார் என்றார் . ஆச்சர்யமாய்
இருந்தது இன்போசிசில் வேலை , ஆனால் ஆழமான பார்வை என்று அவர் பூர்வீகத்தை
கேட்டபொழுது , அவர் ஈரோட்டுக்காரர் . விசைத்தறியில் வேலை பார்த்து
சேலை நெய்யும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் . முதலாளிகளுக்கு
கரண்ட் இலவசமாய் கொடுக்கிறார்கள் , இங்கே ஈரோட்டிலே விசைத்தறி வைத்து
இருக்கும் சிறுமுதலாளிகள் தமிழ்நாட்டில் மின்சார
பற்றாகுறையால் பாதிப்பு அடைகிறார்கள் என்றார். அவர் நண்பரின் வாழ்கையை
சொன்னார் , நண்பர் சொந்தமாய் விசைத்தறி வைத்து இருப்பவர் , முன்பு
கூலிக்கு வேறொரு இடத்தில் வேலை செய்தவர் . ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி
நேரம் வேலை செய்தால் இரு சேலைகளை நெய்ய முடியும் , ஒரு சேலைக்கு அறுபது
ருபாய் போல இரண்டு சேலைக்கு 120 ரூபாய் கூலிக்கு வேலை செய்து
கொண்டிருந்தார் நண்பர் . பின்பு கடன் வாங்கி 25000 ரூபாய்க்கு
சொந்தமாய் விசைத்தறி வாங்கி இருக்கிறார் , அப்பொழுது தமிழக சூழலில்
மின்சார பற்றாக்குறை , அதனால் இரவெல்லாம் விசைதரியை இயக்குகிறாராம்
நண்பர் , அதனால் அவர் குழந்தைகளால்
தூங்க முடியவில்லையாம் . சொல்லும் பொழுது அழுது விட்டார் . இயல்பான
மனிதர்கள் எவ்வளவு நேர்மையாய் இருக்கிறார்கள் , மென்பொருள் துறையில்
வேலை செய்தால் கூட ?முதலாளிகளால் ஈரோட்டில் ஒரு சிருமுதலாளி எப்படி
பாதிக்கபடுகிறான் , எப்படி முதலாளிகளுக்கு அரசு சலுகை அளிக்கிறது வரி
விளக்கு அவர்களுக்கு எப்படி இருக்கிறது , அதனால் பாதிக்கபடுவது யார்
என்று அழுத்தமாய் பதிவு செய்தார் நண்பர் .அவருடைய அழுத்தமான பதில் " இந்த
அரசியல் அமைப்பையே மாத்தனும் சார் "

அடுத்தது ஒரு mechaanical engineer ,திருச்சிக்காரர் ஆர்வமாய் பதில்
சொன்னார் . "இந்திய GDP அதுல ரிலையன்ஸ் கம்பெனியோட பங்கு அஞ்சு
percentage அது நமக்கு கேவலம் சார் " என்றார் . இந்த ஊழலுக்கு யார்
காரணம்னு நினைக்கிறீங்க என்று கேட்டபொழுது , "இருபது வருடங்களுக்கு
முன்னாடி வந்த தனியார்மயம் தான் " என்றார் .சுக்ராமில் இருந்து ராஜா வரை
செய்த ஊழலை பட்டியலிட்டார் .ரிலையன்ஸ் வெளிநாட்டின் கால்களை உள்நாட்டு
கால் போல காட்டி ஊழல் செய்ததை எல்லாம் அழகாக விளக்கினார் ."ஊழலுக்கு
காரணம் தனியார்மயம் " என்றார் . "இதை எல்லாம் பகிர்ந்துகொள்ள ஆட்கள்
இல்லை என்றார் " . "டாட்டாவும் மற்ற முதலாளிகளும் தான் பிரதான
குற்றவாளிகள் சார் " என்றார் .முதலாளித்துவம் தன்னை எப்படி சுரண்டுகிறது
என்று வாழ்வியல் அனுபவம் கொண்டும் விளக்கினார் . இந்த அமைப்பு மாற
வேண்டும் என்பதில் ஆணித்தனமாய் இருந்தார் .

அடுத்து பார்த்தவர் ஒரு பத்திரிகை நிருபர் , அவரிடம் ஊழலுக்கு காரணம்
யார் , யாருடைய பணம் என்று கேள்விகள் வினவிய பொழுது "முதலில் அத்தனை
கோடிகளுக்கு எத்தனை ஜீரோ என்று சொல்லுங்கள் " என்று அறிவாளித்தனமாய்
கேட்டார் . எவ்வளவு கேட்டும் கலாய்க்கும் நோக்கத்திலேயே இருந்தார் .
"சரி ஜீரோ தெரியாத
பாமரன் ஊரில் இவ்வளவு ஊழல் தேவையா ?" என்று கேட்டதற்கு பான்பராக் மென்ற
வாயுடன் " முதல எத்தன ஜீரோ சொல்லுங்க சார் " என்று ஏளனமாய் சிரித்தார் .
மனிதர் உலக நாவல் எல்லாம் படித்து இருக்கிறாராம் என்ன பிரயோஜனம் ,
உள்ளூரில் கொள்ளை அடிப்பது யார் என்று தெரியவில்லை .

அடுத்து பார்த்தது ஒரு போக்குவரத்து ஊழியர் " யார் சார் ஊழல் பண்ணல நான்
பண்றேன் நீங்க பண்றீங்க TV இருந்தாலும் ஓசி TV வாங்குறோம் , காசு
வாங்கிட்டு வோட்டு போடறோம் , அதனால இது எல்லாம் தடுக்க முடியாது சார் "
என்றார் . உடனே நான் எல்லாம் ஊழலும் ஒன்றா என்று கேட்டவுடன் , "ஆம் ஒன்று
தான் " என்றார் . "இந்த ஊழலில் ராஜா மட்டுமே குற்றவாளியா என்று
கேட்டதற்கு "அதெப்படி இதுல டாட்டா அம்பானி எல்லாருக்கும் பங்கு இருக்கு
சார் " என்றார். ஆனால் மக்களும் ஊழல் செய்கிறார்கள் என்றும் சொன்னார் .
தனியார்மயம் ஊழல் மிகுந்தது என்பதை புரிந்துகொள்ளும் அவர் அனைத்து ஊழலும்
ஒன்றானதே என்ற கருத்தையும் வைத்து இருந்தார்.

அடுத்து பார்த்தது ஒரு engineer நடுத்தர வர்க்கம் "இது எல்லாம் பெரிய
இடத்து சமாசாரம் சார் என்றார் " சரிங்க அதுல இருக்கறது நம்ம பணம் தானே
என்று சொன்னவுடன் . "அரசியல்வாதிகளுக்கு தான் சார் இதுல பங்கு இருக்கு "
என்றார் . "இதுல ஆதாயம் அடைஞ்சது யார் "என்று கேள்வி மேல் கேள்வி
போட்டவுடன் "
அதெப்படி தப்பாகும் இவங்க நினைச்சா கை எழுத்து போடாமே இருக்கலாமே
தப்பு வந்து அரசியல் வாதி மேல தான் சார் " என்றார் . அப்பா இதையெல்லாம்
சட்டமாக்கிட்டா ஏத்துக்குவீங்க பொது சொத்த யார் வேணாலும் விற்கலாம்
என்று சொன்னபொழுது " சார் அவங்களால முடியுது வாங்கறான் சட்டப்படி தானே
சார் முதலாளி வாங்குறான் " என்றார் . அவர் மனைவி கேள்வி கேட்க
ஆரம்பித்தவுடனேயே ஒதுங்கி நின்று கொண்டார் . அவர் மனைவி சைகை காட்ட
அவரை நோக்கி நடந்துகொண்டே "வரேன் சார்" என்றார் .


அடுத்து வெளியில் ஒரு ஆட்டோக்காரர் MGR படம் போட்ட ஆட்டோ . "ஊழலுக்கு
ராஜா மட்டுமே காரணமா " என்று கேட்டபொழுது இல்ல சார் "கனிமொழி தயாளு
அம்மாள் இவங்களும் தான் சார் என்றார் " . "இந்த தபா அம்மா ஆட்சி வருது ,
எல்லாருக்கும் encounter தான் சார் " என்றார் . கொஞ்சம் விளக்கமாய்
அவரிடம் இதற்க்கு காரணம்
முதலாளி தான் என்று சொன்னபொழுது அவரால் புரிந்துகொள்ள முடிந்தது .இந்த
முதலாளிகளும் அடங்க டெல்லீலா அம்மா போல யாரவுது இருக்கணும் என்றார்
ஆடோக்காரர்

அடுத்து சென்னை கடல்க்கரையில் காலன் விற்பவரிடம் . spectrum ஊழல்னு
சொல்றாங்களே அதைபத்தி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபொழுது ,
குறுக்கிட்ட அவர் மகள் "அதெல்லாம் அதுக்கு ஒன்னும் தெரியாது சார் அது
எழுத படிக்கல " என்றால் . உடனே கேள்விகளை அவளிடம் கேட்டபொழுது "
நல்லதும் செய்யரானங்க TV எல்லாம் தராங்க , ஊழலும் பண்றாங்க சார் , அவங்க
என்ன பன்றான்கனே தெரியல , ஒவ்வொருத்தரும் ஒவ்வரு மாத்ரி சொல்றாங்க சார்
". சரி "ஊழல்ல
ராஜாவுக்கு மட்டும் தான் பங்கா" என்று கேட்டபொழுது "தெரில சார் ,
அப்படி தான் சொல்றாங்க ஆனா அப்படி எப்படி இருக்க முடியும் எல்லார்க்கும்
பங்கு இருக்கும் , எப்படி அத்தன பணத்த வச்சுக்கிட்டு நிம்மதியா இருக்க
முடியுதுன்னு தெரியல சார் " என்றார் . சரி "இந்த கடலை வித்துடுராங்கனு
வச்சுக்குவோம் " அப்படின்னு விளக்கத்தை ஆரம்பிக்கும் பொழுது "ஏற்க்கனவே
2000 கோடி ரூபாய் கொடுத்து வித்துட்டான்கலாம் சார்
சொல்லிக்கிறாங்க ஆனா யாருக்கும் நல்லது செய்யணும்னு மனசு இல்ல சார் ".
ஊழலுக்கு தனியார்மயம் காரணம் என்று விளக்கிய பொழுது புரிந்து கொண்டார்
மேலும் " என்னமோ நாடு முன்னேரிடுசுனு சொல்றாங்க , ஏழைங்க ஏழைங்களா தான்
இருக்காங்க பணக்காரங்க பணக்காரங்களா தான் இருக்காங்க , அம்பானி பலகோடி
ரூபாய்ல வீடு கட்டி இருக்காராம் , இந்த பீச்ல எத்தன பேர் வீடில்லமா
இருக்காங்க , விலைவாசி வேற ஏறுது சார் , ஏழைங்க
என்ன பண்ணும் " என்றார் .

அடுத்து கடற்கரையில் இட்லிக்கடைக்காரர் ஆறுமுகத்திடம் கேட்டபொழுது "இதுக்கு தான்
சார் கேப்டன் வரனும் , சேலத்துல இன்னா ஜனம் சார் பாத்தீங்களா " என்றார்
வெள்ளந்தி மனிதர் . ஊழலுக்கு யார் காரணம் என்று கேட்டபொழுது " இராசா
தான் சார் " என்றார் . "நாட ஒண்டி ஆளுக்கே கொடுக்ககூடாது சார் அதனால
கேப்டன் தான் சார் வரணும் " . அவரிடம் எவ்வளவு பேசியும் முதாலளிகளுக்கு
ஊழலில் பங்கு என்று விளக்க முடியவில்லை " சார் அவங்க அவங்க வியபாரத்த
பாக்குறாங்க , இந்த அரசியல்
நாய்ங்க தான் சார் காரணம் " என்றார் அயோத்திக்குப்பத்துக்காரர் .

அடுத்து அதே கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐயப்பன்
நொச்சிக்குப்பத்துக்காரர், BHEL நிறுவனத்தில் மாதம் 7000 ரூபாய்
சம்பாதிப்பவர் . அவரிடம் ஊழலை பற்றி கேட்டப்பொழுது " ஏஏஎராஸா தான்
காரணம் சார் " என்றார் சரி அப்படியானால் டாட்டவிர்க்கு சம்பந்தம்
இல்லையா என்று கேட்டபொழுது "இன்னா சார் படிச்சவன்
மாதிரி கீரா ? ஈஎராசா தானே sign போடணும் இது தெரியமா கீரையே சார் "
என்றார் . மேலும் "போதைல பேசுறேன்னு நினைக்காத சார் இந்த அரசியல்வாதிட்ட
துட்ட புடிங்கிட்டா ? எங்க குப்பத்துல இருக்குறவங்க ஏன் இந்தியாவே
சாப்பிடலாம் சார் , அமெரிக்கால ஏன் உசந்த கட்டடமா இருக்கு , அங்க டாலர
சுத்த விடறான் சார் இங்க துட்ட பதுக்குறான் சார் " என்றார் .

"இல்லா துட்டும் ச்விச்ஸ்ல இருக்காம் சார் இவன் நினச்சா விசாரிச்சு
மக்களுக்கு தரலாம்ல சார் " என்றார் . மேலும் "அந்த துட்ட எடுத்தா ,
இந்தியா அமெரிக்காக்கு கடன் தர அளவு இருக்காம் சார் " . "துட்ட அடி
வேனம்கள , மக்களுக்கும் செய் இந்த MGR அதத்தான் பண்ணாரு , ஆனா ஏஏஏஎராஸா
அடிச்சதுல மன்மோகன் சிங் பாவம் தலைல கைய வச்சுட்டாராம் " "நான் இந்திய
டுடே படிப்பேன் சார் என்றார் ". முதலாளிகள் சட்டப்படி செய்கிறார்கள் அது
வியாபாரம் , ஆனால் கையெழுத்து போட்ட ராசா மற்ற அரசியல்வாதிகள் செய்வது
தான் தவறு என்ற கருத்தில் ஆணித்தனமாய் இருந்தார் .

4 comments:

கண்ணகி said...

நல்ல இடுகை....அதே சமயம் மற்றவர்களிடம் நீங்கள் கேட்ட கேள்விக்குரிய உண்மையான் விளக்கத்தையும் இடுகையில் பதிவு செய்திருந்தால் ஒரு முழுமையும், புரியாதவர்களுக்கு புரிய வைத்த மாதிரியும் இருந்திருக்கும்..நல்ல உழைப்பு....

vinodh said...

//சோ போன்ற ஜாம்பவான்கள் கூட முதலாளித்துவம் தான் ஊழலின் ஊற்றுக்கண்
என்பதை எளிமையாய் மறந்துவிட்டார்கள் . //

சீரியசான பதிவிலும் சிரியஸான கருத்தா... :-)

vinodh said...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதி வரும் போது மக்களிடம் கலந்துரையாடி பதிவு செய்திருப்பது சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

@kannagi ஊழலுக்கு காரணம் தனியார்மயம் , தனியாருக்கு தாரை வார்ப்பது , அம்பானியையும் டாடாவையும் பிடிக்காமல்
ராசாவை பிடிப்பது ஏன் அதுவே இந்த பதிவின் சாரம்