Wednesday 23 February 2011

நடுநிசி நாய்கள்


நடுநிசி நாய்கள் பார்த்தேன் , படம் பார்த்த பின்பு உண்மையிலேயே மன உளைச்சல் ஏற்ப்படுத்தியது , கதையை கூர்ந்து நோக்க தொடங்கினேன் . சமர் என்ற பையன் அவன் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தப்படுகிறான் அதனால் மனச்சிதைவு உள்ளாகிறான் , அவன் வளர்ப்பு தாய் அவரை புணர்கிறான் ,வளர்ப்புத்தையின் கணவரை கொல்கிறான், பின் நிறைய பெண்களை அனுபவித்து கொடுமை செய்கிறான் ,என்று படம் முழுக்க வக்கிரத்தின் உச்சத்தில் செல்கிறது . "ஊரில் நடப்பதை தானே எடுக்கிறோம் " என்று படைப்பாளிகள் எளிதில் சொல்வதுண்டு ,ஆனால் ஏதாவது ஒரு விடயத்தை மட்டும் காட்டிவிட்டு ,சில விடயங்களை மறைப்பதை படைப்பாளிகள் திறம்பட செய்கிறார்கள் .

அந்த சமர் போன்ற குணாதிசியம் மிக்க சிறுவன் எந்த சமூகத்திலே வளர்கிறான் , அவர் தந்தை குரூப் செக்ஸ் வைத்துக்கொள்கிறார் , அது எந்த சமூகத்தில் இருக்கிறது . பணத்திமிருடன் பெண்களை நுகர்வு பொருளாய் பார்த்து பழக்கப்படும் மேட்டுக்குடி பணக்கார சமூகத்தில் இருக்கிறது .அச்சமூகம் நுகர்வு கலாச்சாரம் சீர்கேடு
என்பதை படம் விமர்சனமே செய்யவில்லை .அப்படி விமர்சனம் செய்து அச்சமூகத்தில் இருந்து வளர்க்கப்படும் குழந்தை இப்படி தான் சிதைவுடன் வளரும் என்று சொல்லி இருந்தால் படம் ஒரு சிறந்த படைப்பை வந்திருக்கமுடியும் . அதைவிடுத்து வெறும் வக்கிரத்தை மட்டுமே மூலதனமாய் கொள்கிறது கதை என்பதே பிரச்சனை .

எந்த ஒரு பிரச்சனையையும் சமூகத்துடன் பொருத்திப்பார்க்க வேண்டும் என்பதே சிறந்த ஆய்வு முறை என்று நினைக்கிறேன் . உதாரணமாய் கள்ளக்காதல் பிரச்சனை , அவசர உலகம் ஒரு நாளைக்கு பத்து மணி நேர உழைப்பு கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பு செலுத்த முடியவில்லை அதனால் கள்ளக்காதல் அதிகரிக்கிறது . இது வெறும் ஒழுக்கம் சம்பத்தப்பட்ட பிரச்சனையாக பார்த்தோமானால் நாம் தீர்வு சொல்ல முடியாது ,ஆனால் அதன் ஆணி வேரை பார்க்கவேண்டுமென்றால் , அக்காலகட்ட சமூகத்துடன் இணைத்து
அப்பிரச்சனையை பரிசீலிக்க வேண்டும் . அப்படி பரிசீலிக்காமல் போனால் , ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தீர்வுகளை தேடிக்கொண்டிருக்க வேண்டும் . அப்படி சமூகத்துடன் பிரச்னையை இணைத்து பார்க்காமல் இது ஒரு தனிமனித ஒழுக்க பிரச்சனையாய் செல்கிறது "நாடு நிசி நாய்கள்".

நடுநிசி நாய்கள் என்றாலும் ,நாய்கள் அந்தரத்தில் இல்லை சமூகத்தில் உள்ளது . அந்த நாய் சொறி நாய் ஆனாலும் அந்த நாய் ஏன் சொறிநாய் ஆனது என்ற பின்புலத்துடன் சொல்லப்படாத கதையானதால் நடுநிசி நாய்கள் நாதரி நாய்கள் ஆனது .

பின் குறிப்பு : படத்தை படமாக தான் பார்க்க வேண்டும் என்று சொல்லும் விமர்சகர்கள் , இப்படத்தை மட்டும் படமாய் பார்க்காமல் சமூகம் பாதிப்படையும் என்று பதறுவது ஏன் ,அக்னி பார்வைக்கு எழுந்த கேள்வி எனக்கும் எழுவதை தவிர்க்க முடியவில்லை

4 comments:

இன்றைய கவிதை said...

உண்மை தான் நண்பரே இது பல காலமாக தொடர்கிறது சிகப்பு ரோஜாக்கள் என்ற படமும் கிட்டதட்ட இதே கதை தான் , பழங்காலத்தில் ஒரு படத்தின் இறுதியில் சமுகத்திற்க்கு ஒரு கருத்தாவது இருக்கும் இன்று அது இல்லாமல் வெறும் வர்த்தகமாய் ஆகிவிட்டது இந்த மாதிரி பட்ங்களில் வக்கிர வர்த்தகமாய் உருவெடுக்கிறது

நன்றி
ஜேகே

sathishsangkavi.blogspot.com said...

நல்ல அலசல்...

ம.தி.சுதா said...

நல்ல பார்வை ஒன்று நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

Anonymous said...

கவிதைகள் கருத்து அருமை.வரிகளில் இன்னும் செறிவூட்டம் கூட்டினால் பிரமாதமாக இருக்கும்.