Thursday, 24 February 2011

வாக்காளர்களே இல்லாத பொழுது எப்படி வாக்கு வங்கி குறையும்


சுட்ட மண்ணிலே
மீனாக மடிந்துகொண்டிருக்கிறான்
எம்மீனவன் ....
அம்மீன்கள் விற்பனைக்கு வைக்க
படுகின்றன வாக்கிற்காக.. !
தேர்தல் வாக்கிற்காக
நக்கும் நாக்குகள் கதைக்கின்றன

மீன்களை ஐந்து நட்சத்திர உணவகத்தில்
மட்டுமே பார்த்த
அரிதாராம் பூசும் நடிகன் ,
மீனவனுக்காக குரல் கொடுக்கிறான் .
தன் இழந்த பிம்பத்தை மீட்க்க
மீனவன் பிம்பம் தேவை !

கனிமொழி உண்ணாவிரதம் ..........
ஆச்சர்யம் அடையவேண்டாம் .
தமிழக மீனவர்களுக்கு இலங்கை மீனவர்களுக்குமே
பிரச்சனையாம் ,ராணுவத்திற்கு சம்பந்தம் இல்லையாம்
எப்படி மன்மோகனுக்கும் spectrum ஊழலுக்கும்
சம்பந்தம் இல்லை தானே ...!

தந்தி அனுப்புவோம் ........
தந்தி அனுப்புவதற்குள் நான்கு
உயிர் போயிருக்கும் அவ்வளவு
தானே ...............

வாக்காளர்களே இல்லாத பொழுது
எப்படி வாக்கு வங்கி குறையும்

1 comment:

ம.தி.சுதா said...

////வாக்காளர்களே இல்லாத பொழுது
எப்படி வாக்கு வங்கி குறையும்////

நிஜத்தை பகிர்கிறீர்கள் நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)