Friday 30 October 2009

சத்யம்,ரோகினி,கிருஷ்ணவேணி


















அமருக்கு கல்யாண நாள். அவன் மென்பொருள் துறையில் ப்ராஜெக்ட் மேனேஜர்.அன்று மனைவியுடன் படம் பார்ப்பதற்கு சத்யம் தியேட்டரில்
மாலை நான்கு மணி காட்சிக்கு புக் செய்து இருந்தான்.மாதம் நான்கு லட்சம் சம்பளம்,நல்ல மனைவி,காதல் திருமணம்,அதுவும் இன்று கல்யாண நாள்.மூன்று மணிக்கு தனது டீமில் உள்ள டீம் தலைவரிடம் அன்று செய்ய வேண்டிய வேலையை சொல்லி விட்டு,டோயோடோ காரிலே சிட்டாக பறந்தான்.

டீம் leader கணேஷ் அமர் சொன்ன வேலையை முடிக்க நான்கு முப்பது
ஆனது.அவனிற்கு வேலை என்று அன்று அவசரமாக வீடு திரும்பினான்.வீடு
வந்து சேரும் போது மணி ஐந்து பதினைந்து.கணேஷ் மனைவி உமா
காத்துக்கொண்டிருந்தாள்.


"என்னங்க கல்யாண நாள்,கொஞ்சம் சீக்கிரம் வந்திர்கலாம்". என்றாள்

"காசில படம் போலாமா" என்றான்.


"என்ன படம்"

"அஜித் படம் கௌதம் மேனன் இயக்குனர்".


"உனக்கு தான் அஜித் பிடிக்குமே" என்றான்.
"ஆனா இன்னிக்கு எப்படி டிக்கெட் கிடைக்கும்" என்றாள்.
"அப்படி இல்லைனா கோயம்பேடு ரோகினி போவோமே ஆறு theatre எல்லா
theatrelayum முதல் நாள் அதனால தல படம் தான் போட்டிருப்பாங்க அங்க
கிடைக்கும்" சரி ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடலாம்.



ஆட்டோ பிடித்தான்,ஆட்டோ ஓட்டுனர் மாரி,அவர்களை

ரோகிணியில் இறக்கி விட்டார்,அதற்க்கு அவருக்கு கிடைத்தது நூறு ருபாய்.

வீட்டிற்கு புயல் வேகத்தில் வந்தார்.அவர் வீடு இருப்பது

கண்ணமாபேட்டை.அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தார் மாரி,மணி
ஆறு பத்து."இன்னிக்கு இன்னா நாலு நம்ப கல்யாண நாலு,கிளம்பு வா டி"


"கிர்ஷ்ணவேணி போகலாம் " என்றான்.


"பதினஞ்சு ரூபா டிக்கெட் நமக்கு தேவையா" .....அவன் மனைவி மல்லி.


"ஒரு நாள் தானே " என்று அவளை பார்த்து சிரித்தான் ........


படங்கள் வேறு இடங்கள் வேறு ........காதல் ஒன்று...

13 comments:

புலவன் புலிகேசி said...

//ஆனா இன்னிக்கு எப்படி டிக்கெட் கிடைக்கும்" என்றாள்.
"அப்படி இல்லைனா கோயம்பேடு ரோகினி போவோமே ஆறு theatre எல்லா
theatrelayum முதல் நாள் அதனால தல படம் தான் போட்டிருப்பாங்க அங்க
கிடைக்கும்" சரி ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடலாம்.
//

எல்லாம் சரிதான்...ஆனா டீம் லீடருக்கு இந்த மாதிரி வறுமைய காட்டுறது சரியாப் படல.. அவங்களாம் நிச்சயம் குறைச்சலா 40,000 வாங்குவாங்க.....சொன்ன விதம் நன்று. எடுத்துக் கொண்ட கதாப் பாத்திரங்கள் ஒட்டவில்லை....

ஊடகன் said...

ஏற்ற இறக்கங்களை அழகாக prathipalithulleergal........
நன்றாக உள்ளது.......

வாழ்த்துக்கள்.............

TAMLISH இல் வாக்கும் போட்டு விட்டேன்..............

வெண்ணிற இரவுகள்....! said...

அவர் வறுமையில் இல்லை நன்றாக படியுங்கள் ............புலிகேசி

வெண்ணிற இரவுகள்....! said...

அது பெயர் வறுமை இல்லை என் மாமா கூட பத்து வருடமாக தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ளார்

புலவன் புலிகேசி said...

40,000 ரூபாய் வாங்குபவன் காசி தியேட்டருக்கு ஏன் ஆட்டோவில் போக வேண்டும்... குறைந்தது ஒரு இரு சக்கர வாகனமாவது நிச்சயம் இருக்கும். அதைத் தான் சொன்னேன்...

வெண்ணிற இரவுகள்....! said...

இல்லை எங்கள் மாமா விடம் இல்லை .......அதன் பெயர் வறுமையா என்ன சொல்லுங்கள் அவர்
வாகனம் பழுது ஆகி இருக்கலாம் வறுமை என்றால் என்ன தெரியுமா

வெண்ணிற இரவுகள்....! said...

கதை ஒரு நடுத்தர வர்க்கம் ஒரு பணக்காரன் ஒரு ஏழை காதல் அது புரிந்ததா அதுவே வெற்றி
புலிகேசி

புலவன் புலிகேசி said...

//கதை ஒரு நடுத்தர வர்க்கம் ஒரு பணக்காரன் ஒரு ஏழை காதல் அது புரிந்ததா அதுவே வெற்றி
புலிகேசி//


அது புரிந்தது..சொன்ன விதம் எனக்கு சரியாகப் படவில்லை என்று தான் சொல்லியிருக்கிறேன். இதில் வெற்றி தோல்வி என்ன இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே.......

க.பாலாசி said...

ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று பார்வையும் தெளிவாக பதிந்துள்ளீர்கள். நல்ல கதை....வாழ்த்துக்கள் நண்பரே....

இராகவன் நைஜிரியா said...

வெவ்வேறு மூன்று பேர்களுடைய வாழ்க்கை முறையை அழகாக இணைத்திருக்கின்றீர்கள்.

வாழ்த்துகள்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ராகவன் நன்றி பாலாசி

Menaga Sathia said...

3 பேர் வாழ்க்கை+காதல் அழகா சொல்லிருக்கிங்க..

பின்னோக்கி said...

நல்ல கற்பனை..பல தளங்களிலுள்ள வேறுபாட்டை நன்றாக எழுதியிருக்கீங்க..

நான் எழுதிய பதிவு படிச்சு பாருங்க.

http://pinnokki.blogspot.com/2009/10/1000.html