Sunday, 1 November 2009

நானும் தீபாவளியும்என் நண்பன்
புலிகேசியின் அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவை எழுதுகிறேன்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

என் பெயர் கார்த்திக் நான் மென்பொருள் பொறியாளர்.என் சொந்த ஊர் மதுரை.முதலாளித்துவ வேலையில் இருக்கும் ஒரு பொதுவுடமையாளன்.தனி மனிதனின் வலி உலகத்தில் உள்ள அனைத்தையும் விட பெரியது என்று சொல்லிக்கொள்பவன்.ஒரு பிச்சைகாரனை பார்த்தல் அவன் சோறுக்கு பிச்சை எடுப்பான் பாசத்திற்கு எங்கே போவான் என்று கேட்பவன்.அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று சொன்னாலும்???
கேள்வி கேட்பதாலேயே நான் marx,che guvera ஆகி விட முடியாது......சரியாக சொல்ல போனால் உலகத்திற்காக வருந்தினாலும் இதவரை உருப்படியாய் எதுவும் செய்ய வில்லை.
பொருளாதரத்தில் வல்லரசு நாடுகளில் கூட தனி மனிதன் அன்புக்கு ஏங்குகிறான்.புல்லின் மீது உள்ள பனி துளி காய்வதை போல் வாழ்கை காய்ந்து கொண்டு இருக்கிறது. காதலி அருகில் இல்லை, எனக்கு பிடித்தவர்கள் எங்கோ உள்ளனர் எதற்கு இந்த வாழ்கை...என்று ஏக்கம் கொண்டவன்.....அதனாலேயே இடுகை பெயர் வெண்ணிற இரவுகள் என்று வைத்தேன்....Dostovesky சொல்வதும் இத்தகைய தனிமையே........

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

வரலாறு படம் வந்திருந்த நேரம்.பட பாடல்கள் அனைத்து தொலைக்காட்சியிலும் போட்டனர்.சிம்பு பாடல்கள் அம்மாடி ஆத்தாடி அனைத்திலும் கலக்கிக்கொண்டு இருந்தது. ஈ படம் வட்டாரம் மற்றும் சில படங்கள் பலத்த போட்டி,வரலாறு படத்திலே கம்மா கரையில பாடல போட்டார்கள் ,தல அசிங்கமாக இருந்தார்,அப்பொழுது நினைத்தேன் இந்த தீபாவளியும் தோல்வியா என்று. ஆர்வம் தாங்காமல் மதிய காட்சி புறப்பட்டு சென்றேன்.....மிரட்டி விட்டார் தல.......ஊடகங்கள் உதவி இல்லாமல் தம்பி போல் இருக்கும் ரசிகர்கள் ஆதரவில் கோடி பார்த்த படம்
"நெருபென்ரும் தலை கீழாய் எரிவதில்லை,மனம் உள்ள மனிதன் அழிவதில்லை"
"தல போல வருமா"...அது மறக்க முடியாத தீபாவளி

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

என் சொந்த ஊரு மதுரைல இருந்தேன்

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தற்போது சென்னையில் இருக்கிறேன்.முன்பு இருந்த உற்சாகம் இல்லை,தொலைக்காட்சியிடம் நாமெல்லாம் தொலைந்து விட்டோம்.குழந்தைகள் கூட தொலைக்காட்சி பார்ப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.முன்பெல்லாம் ஒரு வாரம் கலை கட்டும் இப்பொழுது தீபாவளி அன்று கூட கலை கட்டவில்லை.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்க‌ளா ?

சொல்லப்போனால் இந்த தீபாவளி கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.ஈழம் இப்படி இருக்கிறது எதற்கு தீபாவளி என்று நினைத்தேன்.ஆனால் அலுவலுக்கு தேவை பட்டது,அதனால் மதுரையில் ஒரு பிரபல கடையில் வாங்கினேன்.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

எங்கள் வீட்டில் எப்போதுமே அம்மா செய்வது தான். ஒரு கல்யாண வீடு போல செய்வாள்.பெரிய கூட்டு குடும்பம்.மாலாடு,உக்காரை,மிட்சர் மைசூர் பாகு போன்ற பல விடயம் இருக்கும்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்.
(உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

மின்னஞ்சல் தொலைபேசி குறுந்தகவல்.......ஆனால் இந்த தொலைபேசி நிறுவனங்கள் இந்த முக்கிய நாளை வைத்து காசு பார்ப்பது வெறுப்பாக இருக்கிறது...
காசு பார்க்க இவர்களுக்கு ஒரு சாக்கு வேண்டும்.சந்தோசம் என்றாலும் காசு,துக்கம் என்றாலும் காசு.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

நான் படங்கள் அதிகாமாய் பார்ப்பேன்,தீபாவளி முதல் நாள் ஆண்மையுடன் ஒரு படம் பேராண்மை பாத்தேன் சிலிர்த்தது.தீபாவளி அன்று ஆதவன் பாத்தேன் உட்கார முடிய வில்லை.வடிவேல் காப்பாற்றினார்

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்

என்னை பொறுத்த வரை யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாது. ஒரு பிச்சைக்காரன் இருக்கிறார் என்றால் அவருக்கு தேவை பொருளாதாரம் மட்டுமே. ஏன் மக்கள் பொருள் சார்ந்த விஷயங்களை மட்டும் உதவி என்று பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.அகம் சார்ந்து ஒவ்வொரு மனிதனும் பாதிக்க படுகிறான்.....
இதை எல்லாம் யோசித்து பொருள் உதவி செய்வதில்லை.ரஜினி கோடிகளில் புரள்கிறார் என்பதற்காக அவர் நன்றாக இருக்கிறார் என்பது அர்த்தம் இல்லை.
ரஜினி முதல் பிச்சைக்காரன் வரை அகத்தனிமையில் இருகிறார்கள்......பொருள் சார்ந்த உதவிகள் மீது நம்பிக்கை இல்லை
உதவி செய்ய கூடிய அளவு தகுதி இல்லை.என்னை பொறுத்தவரை பிச்சைக்காரனும் நானும் ஒன்றே மனரீதியாக........நாம் உதவுகிறோம் என்று சொல்வதே அகம்பாவம்....என்னால் உதவ முடிகிறது அதனால் செய்கிறேன் என்பதே நிதர்சன உண்மை ....

10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

ஒன்று எழுத ஆர்வமாக ஆரம்பித்து...கோபமாக எழுதி...பதிவு எழுதுவதினால் ஒன்றும் ஆக போவதில்லை என்று சொல்லிகொண்டிருக்கும் அருமை நண்பன் இளந்தமிழன்.மற்றொன்று எதையும் வெளிப்படையாய் பேசும் பார்க்காமல் இருந்தாலும் உயிர் நண்பன் இரும்புத்திரை நண்பர்கள் தட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அழைக்கிறேன்.

5 comments:

புலவன் புலிகேசி said...

உங்களைப் பற்றிய விபரம் மற்றும் விளக்கம் நன்றாக இருந்தது. நம்மிடம் இருப்பது இன்னொருவனிடம் இல்லாத பொழுது அதை அவனுக்கு கொடுப்பதும் உதவிதான். மன அளவில் உதவி செய்ய எந்த மனிதனாலும் முடியாது. அடுத்தவர் மனம் என்னவென்றுபுரிவது அவ்வளவு சுலபம் அல்ல...அருமை நண்பரே.........

வெண்ணிற இரவுகள்....! said...

என்னுடடைய கோபம் எல்லாம் நாம் பொருளாக செய்தாலும் மன ரீதியாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது தான் புலிகேசி

ஊடகன் said...

//என்னை பொறுத்தவரை பிச்சைக்காரனும் நானும் ஒன்றே மனரீதியாக........//

உண்மை தான்.....

உங்களின் பொதுவுடைமை கொள்கை என்னையும் பாதித்தது.........

க.பாலாசி said...

நண்பா...உங்களது முதல் பதிலையும், ஒன்பதாம் பதிலையும் மிக ரசிக்கிறேன். உங்களின் சமுதாயத்தின் மீதான பார்வை மிக அழுத்தமாக உள்ளது. இந்த இடுகை தொடர்இடுகை என்பதையும் தாண்டி உங்களின் மூலம் வேறுகோணம் பெறுகிறது. வாழ்த்துக்கள் நண்பரே...

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நண்பா