Wednesday, 25 November 2009

உயிர்த்து எழுவாயா பிரபாகரா....!மௌனமாய் அழவில்லை .....
மண்ணுக்குள் புதைத்தான்
கழக கலக பெருச்சாளி அல்ல....
களப்போராளி........அவன்...!

ஒரு மகனுக்கு மத்திய அரசு ...
ஒரு மகனுக்கு மாநில அரசு ....
என் தலைவனின் மகன்களோ
மண்ணுக்குள்ளே மண்ணுக்காக...!

மூன்று நான்கு மனைவிகள்
இல்லை .....!
ஒரு மனைவி என் அண்ணி
எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை ..!

தமிழ் இனத்தலைவன் என்று சொல்லவில்லை ....
மகளை கவிஞர் என்று சொல்லவில்லை .....
இங்கே தலைவன் மானாட மயிலாட மார்பாட்டதிற்கு பேர் சூட்டும் போது....
என் தலைவன் மார்பை நிமிர்த்திக்கொண்டு சிங்களனின் துப்பாக்கி முன்பு உருமிக்கொண்டிருந்தான் ..!

இங்கே பெண் சிங்கத்திற்கு
கதை எழுதிக்கொண்டிருக்கும் போது .....!
என் புலி
பலி ஆனான்.......!

தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவில்லை ....
தலைவன் நடந்து வந்தாலே மாநாடு .......
இன்று மாவீரர் தினம் .....
என் தலைவன் உயிர்த்து எழுவானா .........????இனம் காத்த வீரனே கடவுள்,
முனியாண்டி, ஐயனார் வீரர்களே.........
ரத்தம் சிந்தி கடவுள் ஆனான்
ஏசு.......!
கடவுள் பிரபாகரனே உயிர்த்து எழுவாயா?????
இல்லை சிலையாக எம்மை வழி நடுத்துவாயா ........

என்னால் உன்னை உயிருடன் கொண்டுவர
வைக்க முடியாது .....
உன்னைக் கவிதையால் மீட்டு எடுக்க முயற்சி செய்கிறேன்......
அழுகை வருகிறது ..... உண்மையிலேயே நீ இறந்து இருந்தால் .....
உன் தம்பி முத்துக்குமாரை கேட்டதாக சொல் .....
இப்படிக்கு நீ உயிர்த்து எழ காத்துக்கொண்டிருக்கும்
உன் தம்பி .......!

29 comments:

புலவன் புலிகேசி said...

கவலையே படாதீங்க..அவர் சாகல நிச்சயம் வருவார்...

Sangkavi said...

இரவு என்று இருந்தால்......
பகல் ஒன்று இருக்கும்.......................

கவலைப்படாதீங்க வருவார்............

ரோஸ்விக் said...

இதைப் படித்து, இந்தப் படத்தைப் பார்த்தவுடன் கண் கலங்கிவிட்டேன் நண்பா...நிச்சயம் அண்ணன் வருவார் என்று நம்பும் கோடிக்கனக்காநோரில் நானும் ஒருவன்...அவர் வரவேண்டும்...

தமி |ழீன | த்தலைவரைபற்றிய வசைகள் மிக மிக அருமை...வருமா அவர்களுக்கு ரோசம்??

வானம்பாடிகள் said...

ம்ம்.உங்கள் வலி புரிகிறது.

க.பாலாசி said...

எல்லோரது கோபமும், ஏக்கமும் உங்களின் கவிதையாய்....

ஊடகன் said...

வலியுடன் கூடிய இடுகை..........
தமிழர்களுக்கு பிரபாகர் ஜெயந்தி வாழ்த்துக்கள்..............

பேநா மூடி said...

உண்மையான தமிழின தலைவுக்கு இன்று பிறந்த நாள் ... வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை...

rajeshkannan said...

மிகவும் அருமை தமிழன் மீது அக்கறை கொண்டவர்களுக்கு இது வலிக்கும். மற்றவர்களுக்கு புளிக்கும் (கழக கலக பெருச்சாளிகளுக்கு )

சத்ரியன் said...

காலத்தின் கரங்களில்... நம்மின் நம்பிக்கைகளைப் பொத்தி வைப்போம்...!

லெமூரியன்... said...

காட்டிக் கொடுத்தவனும் கூட்டிக் கொடுத்தவனும் வரலாற்றில் பெரும் ஒரே பெயர் எட்டப்பன்.......இவன்களுக்கு அந்த பெயர் குறிக்கப் பட்டுவிட்டது...இனி இவன்கள் என்ன வலி என்று நீலி கண்ணீர் வடித்தாலும் எவனும் கண்டு கொள்ளபோவதில்லை.......நிற்க.....தலைவன் ஆதவன்...காலத்தால் அழிக்க முடியாது அவன் புகழை...அவன் வீரத்தை....மாவீரனைப் பற்றிய கவிதையில் மண்புழு எதற்கு....! இனி அந்த ...................பற்றி எழுதாதீர்கள்.

கலகலப்ரியா said...

:)

சவுக்கு said...

தலைவர் வரமாட்டார் என்ற தைரியத்தில்தான் மாத்தையாவை மாவீரன் என்று எழுதியுள்ளார் கருணாநிதி. தலைவர் நிச்சயம் வருவார். நிச்சயம் வருவார். அன்று கருணாநிதிக்கு மவுன வலி அல்ல. நெஞ்சு வலி தான் வரும்

அஹோரி said...

நண்பரே
ஈழ மக்களுக்கு ஒரே நம்பிக்கை அவர் தான். பெருந்தலைவன் மீண்டும் வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
பிரபாகரனை பற்றி எழுதும் போது ஈன பிறவிகளை ஏன் நினைக்கிறீர்கள்?

வெண்ணிற இரவுகள்....! said...

ம்ம்ம் நெஞ்சு வலி வரத்தான் போகிறது ..................................கலைங்கருக்கு

வெண்ணிற இரவுகள்....! said...

ம்ம்ம் ஆனால் இவர்கள் எவ்வளவு தரம் கெட்டவர்கள் .................தலைவன் எவ்வளவு தரமானவன் என்று ஒரு ஒப்பீடு அஹோரி

srs said...

nijamagavay vallikkirathu nanpa unmai sila nearam ourkkalukkum tamil makklukkum puriyum

tamiluthayam said...

ஒவ்வொரு தமிழனின் ஏக்கமும் புரிகிறது. பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பதே பெருமைக்குரியது.

butterfly Surya said...

வலியும் ஆதங்கமும் அனைவருக்கும் உண்டு.. நம் அரசியல் வியாதிகளை தவிர..

பகிர்விற்கு நன்றி நண்பா..

முரளிசாமி said...

அன்றிலிருந்து இன்றுவரை போராடும் தலைவனுக்கு மரணம் வலுவில் வந்துவிடுகிறதே!

ஆனால் ஊழல் பெருச்சாளிகளுக்கோ, சுயநல வாதிகளுகளின் தலைவனுக்கோ மரணம் வர மறுக்குதே!

அய்யகோ நெஞ்சுபொருக்கவில்லையே!!!

My Dear Friend said...

அய்யகோ நெஞ்சுபொருக்கவில்லையே!!!

ஹேமா said...

இன்னும் நம்பிக்கையோடுதான் ஈழத்தமிழன் வாழ்வு.

LOSHAN said...

என்ன சொல்வது?
எதை எதிர்பார்ப்பது புரியவில்லை..

உங்கள் மன உணர்வுகளுக்கு நன்றிகள்..

prithik said...

thozhar thalaiva nalamudan irukkiraar idil ungalukku thuliyum sandhegam vendaam

அசாதி said...

ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் தொடர்பான கட்டுரையைப் படித்துவிட்டு கருத்து சொல்லவும்.

singamla66 said...

வணக்கம் தமிழர்களே,
உன் சகோதரன், சகோதரி,செத்து கொண்டு இருக்கும்போது உனக்கு
தமிழ் புத்தாண்டு,தை பொங்கல்,கொண்டடங்கள் தேவையா? தமிழ்நாடு அரசியல்வாதிகள் பின்னால் செல்லாதே? உன் சுயநினைவோடு சிந்த்யுங்கள்./,,,,,,,,,,,,,,,,

singamla66 said...

மாவீரனே,
உன் வீரத்தை சொல்ல,
உன் திறமைகளே காட்ட,
உன் பேச்சு திறனே பார்க்க,
அவர்கள் ஆட்டத்தை ஒடுக்க,
நீங்கள் விரைவில் வர வேண்டும்......
உன் புது வீரத்தை,
கண்டு அழிந்துவிடவேண்டும்,......

சந்தோஷ் தமிழன் said...

தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவில்லை ....
தலைவன் நடந்து வந்தாலே மாநாடு .......

அற்புதமான வரிகள்

prithik said...

தோழா கலங்காதே நம் தலைவர் நலமுடன் இருக்கிறார் நிச்சயம் சில மாதங்களுக்குள் வெளிப்படுவார்.நிச்சயம் வெல்வோம்

தர்ஷன் said...

மேலே பின்னூட்டமிட்டிருக்கும் பல பேரின் ஆசை நிஜமாகாதா என நப்பாசை கொண்டவர்களில் நானும் ஒருவன். என்றும் இத்தீ மாறாமல் நம்மனைவரின் நெஞ்சிலும் கனன்று கொண்டேயிருக்கும்.