Sunday, 15 November 2009

பேராண்மையும் 2012 எது உலகத் தரம் ???நான் சனிக்கிழமை 2012 படம் பார்க்க போயிருந்தேன்.நான் பொதுவாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை.பிரமாண்டம் பிடிக்காது,நான் உளவியல் ரீதியாக பிரமாண்டமான உலக சினிமா பார்ப்பேன். நம் பேராண்மை என்று வந்தால் ஆயிரம் லாஜிக் சொல்லும் பதிவுலக நண்பர்கள்,லாஜிக் சொன்னால் மட்டும் பரவில்லை ,ஹாலிவுட் தரத்திற்கு இல்லை என்று சொல்கிறார்களே ,ஹாலிவுட் தரமாக தான் உள்ளதா??????????

உலகமே அழியுமாம் அமெரிக்கன் மட்டும் தப்பிபானாம் இது என்ன கேவலமான அரசியல். ஒரு இந்தியன் கண்டுபிடித்தாலும் அவன் அழியனுமாம்,இது தான் ஹாலிவுட் தரமா??????சரி மேலிருந்து குண்டுகள் போல ஒன்று வந்து கொண்டே இருக்குமாம் கதாநாயகன் சைக்கிள் ஓட்டுவது போல புகுந்து புகுந்து ஓட்டுவாராம் என்ன கொடுமை சரவணன்?????அதுவும் கதாநாயகன் பூமியில் இருந்து வருவாரே அந்தக் காட்சியில் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது.இதே காட்சியை தமிழன் செய்தால் இவங்களுக்கு இதை விட்டால் என்ன தெரியும் என்று கேவலப்படுத்துவது.

ஏன் அந்தக் கதாநாயகன் சுனாமி மண் பிளவு போன்றதில் இருந்து தப்பும் போது,என் கதாநாயகி கன ரக ஆயுதங்கள் பயன்படுதக்கூடதா என்ன?????????அதை நம்பும்படி எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்....என் நாயகி சுடுவது நம்பும்படி உள்ளது.அவர்கள் தப்பிப்பது நகைச்சுவையின் உச்சம்.ஏன் ஹாலிவுட் படம் என்றால் காட்சியை மட்டும் பார்க்கிறீர்கள்.தமிழ் படம் என்றால் லாஜிக் அது எப்படி தமிழ் பெண் அந்த ஆயுதங்கள் உபயோக படுத்துவாள் என்று????

ஹாலிவுட் தரம் என்பது என்ன,ஒன்று விலங்குகளை காட்டுவது,இல்லை பூகம்பம் போன்றவற்றை காட்டுவது,இல்லை alien,இல்லை seriel killer.இது தான் ஹாலிவுட் தரம் என்றால்............என் பேராண்மை அந்தத் தரத்தில் இல்லை.

ஊரே அழிந்து கொண்டிருக்கிறது?????சத்யம் திரை அரங்கில் கை தட்டிக் கொண்டே இருக்கிறான் இது என்ன அருவருப்பான ரசனை....பிரமாண்டம் என்று உங்கள் கண் முன்னால் சுனாமி வந்தால் ரசிப்பீர்களா.யார் சொன்னது சத்யம் திரை அரங்கு A center என்று???? பிரமாண்டதிலே மயங்கிக் கிடக்கிறான் மனிதன். இது கொடுரமான ரசனை.ஊடகங்கள் இதை நல்லவை என்று மனிதனிடம் சொல்கின்றன.

என் முன்னால் ஒரு பெண் கற்பழிக்க படுகிறாள்....அந்தப் பெண் கவர்ச்சியை பார்த்து ரசிப்பேனா??? ...இது அந்த அளவு தரம் இல்லா ரசனை............எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் என் நண்பர்கள் கட்டாயத்தின் பேரில் படம் போனேன் ....
நாம் இன்னும் அமெரிக்கன் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம் கை தட்டுகிறோம் .இது அடிமை தனத்தை காட்டுகிறது.என் பேராண்மை அடிமை தனத்தை முறியடிப்பவன்.


பின்குறிப்பு: சத்யம் திரை அரங்கில் நம் கழிப்பிடத்தில் விளம்பரம் வைத்து உள்ளனர் இது எவ்வளவு தரம் கெட்டது. மனிதன் எங்கே போய்க் கொண்டிருக்கிறான் ?????

38 comments:

டம்பி மேவீ said...

ஆமாங்க... இவங்க எல்லோரும் இப்படி தான். நம்ம ஊர் மக்காசோளம் சாப்பிட மாட்டங்க... அதே அமெரிக்க கம்பெனி AMERCIAN CORN ன்னு சொல்லி வித்தால் எவ்வளவு காசு தந்தும் வாங்கி சாப்பிடுவாங்க

வெண்ணிற இரவுகள்....! said...

சரியாக சொன்னிர்கள்

டம்பி மேவீ said...

"பின்குறிப்பு: சத்யம் திரை அரங்கில் நம் கழிப்பிடத்தில் விளம்பரம் வைத்து உள்ளனர் இது எவ்வளவு தரம் கெட்டது. மனிதன் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் ????? "


இதாவது பரவல... பெங்களூரில் ஒரு திரையரங்கில் TOILET TISSUE PAPER லில் ஒரு கம்பெனி விளம்பரம் செய்து இருப்பதை பார்த்துள்ளேன்

வெண்ணிற இரவுகள்....! said...

ஒத் ரொம்பக் கொடுமை

அன்புடன் மலிக்கா said...

பேராண்மை: எங்க ஊர் பக்கம் எடுத்ததுங்க,
பெண்களால் எதையும் செய்யமுடியும் என எடுத்துக்காட்டும் படம் சூப்பர்

புலவன் புலிகேசி said...

உண்மைதான் நண்பா..அதற்காக பேராண்மை ஒரு சிறந்தப் படம் என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. யதார்த்த சினிமாக்களையே விரும்புபவன் நான். 2012 இன்னும் பார்க்க வில்லை நீங்கள் சொல்வது போல் இருந்தால் அதுவும் எனக்குப் பிடிக்காத விஜய் படமாகத்தான் இருக்கும்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஹாலிவுட் தரம் என்கிறார்கள் அதை என்னால் ஏற்று கொள்ள முடியாது புலிகேசி...............
லாஜிக் தமிழனுக்கும் அவனுக்கும் ஒன்றே .................கருத்துக்கள் மாறுபடலாம் எனக்கு பேராண்மை மிகவும் பிடித்து இருந்தது நான்கு தடவை பார்த்தேன் ........உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் ஹாலிவுட் தரம் இல்லை என்று சொல்வது தவறு ....அப்படி ஒன்றும் ஹாலிவுட் தரமாய் எடுப்பதில்லை என்று தான் சொல்கிறேன்

வானம்பாடிகள் said...

:)

அகல் விளக்கு said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

:-)

s-capu...

கேசவன் .கு said...

அந்த காலத்திலேர்ந்து மனுஷன் பகட்டத்தானே விரும்புறான் !!

என்னத்த சொல்ல !!

க.பாலாசி said...

//நாம் இன்னும் அமெரிக்கன் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம் கை தட்டுகிறோம் .//

சரியான சாடல். உங்களது கருத்துக்களை ஏற்கிறேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நண்பர்களே

rajeshkannan said...

20 வயதான பெண் ருக்சான கௌசர், லஷ்கர்-இ -தைபா தீவிரவாதியை துப்பாகியால் சுட்டு கொன்ற உண்மை நடந்தது நம் நாட்டில்
என்று யாருக்கும் தெரியாதா ?

அது சாத்தியமான உண்மை என்றால் "பேராண்மை" பெண்கள் சாத்தியமே...

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நன்றி ராஜேஷ் ..........நன்றாய் புரிந்து வைத்திருகிறீர்கள்

ஊடகன் said...

நம்ம ஊரில் விஜயகாந்த் மற்றும் விஜய் இந்த மாதிரி நடித்தால் சிரிப்பார்கள், அமெரிக்க பட ஹீரோ இந்த மாதிரி நடித்தால் ஏற்றுகொள்வார்கள்.............. (என்னை பொறுத்த மட்டில் நம்மவர்கள் செய்வதும், அவர்கள் செய்வதும் கேவலம் தான்)

என்றுமே யதார்த்த சினிமாவிற்கு தான் பலம் அதிகம் , இதை யாராலும் மாற்ற முடியாது........

ஊடகன் said...

நம்ம ஊரில் விஜயகாந்த் மற்றும் விஜய் இந்த மாதிரி நடித்தால் சிரிப்பார்கள், அமெரிக்க பட ஹீரோ இந்த மாதிரி நடித்தால் ஏற்றுகொள்வார்கள்.............. (என்னை பொறுத்த மட்டில் நம்மவர்கள் செய்வதும், அவர்கள் செய்வதும் கேவலம் தான்)

என்றுமே யதார்த்த சினிமாவிற்கு தான் பலம் அதிகம் , இதை யாராலும் மாற்ற முடியாது........

butterfly Surya said...

இந்த படம் இன்னும் பார்க்கவில்லை.. படத்தை பற்றிய கருத்தை பார்த்து விட்டு சொல்கிறேன்.. ஹாலிவுட் தரம் என்பது டெக்னிக்கல் சம்மந்தபட்டது... உலக சினிமா என்பது வேறு...

எதையும் compare பண்ண வேண்டாம்.. ஒவ்வொரு படைப்பும் தனி சிறப்பானது..

வெண்ணிற இரவுகள்....! said...

சூர்யா நான் compare செய்ய வில்லை .....ஆனால் தமிழ் படங்களை ஏன் ஒப்பிடுகிறார்கள் ....
தமிழில் பேராண்மையில் லாஜிக் பார்த்தார்கள் இந்தப் படத்தில் ஏன் பார்கவில்லை என்பதே என் கேள்வி.....தொழிற் நுட்பம் தான் என்று எனக்கும் தெரியும் அதற்காக தப்பான அரசியலை காட்டலாமா,அதனால் தான் எனக்கு உலக சினிமா மட்டுமே பிடிக்கும்

butterfly Surya said...

கார்த்திக், ஒப்பிடுபவர்களை தான் சொல்கிறேன்.

2012 விஷுவல் அட்டகாசம் என்று தான் நினைக்கிறேன். கேபிளும் அதைதான் சொன்னார்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் சூர்யா ஒவோவ்று படைப்பும் தனளவிலே சிறந்தது ................ஆனால் பேராண்மையை கிழித்தார்கள் அது என்ன hollywood தரம் அதற்க்கு தான் இந்தப் பதிவு

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே என்னை பொருத்தவரை பேராண்மையில் எனக்கு பிடிக்காத அல்லது லாஜிக் இல்லாத விசயம் என்றால் அது அந்த பெண்களின் ஜாதி துவேசமே... இது நான் சற்றும் எதிர் பாராததும் , இதுவரை கேள்விப்படாததும்.... ஏனென்றால் சாதி இதுவரை கல்லூரிகளில் அதுவும் பெண்களிடம் அதுவும் NCC போன்ற கட்டுக்கோப்பான பெண்களிடம் இருக்குமென நான் நம்பவில்லை..

மற்றபடி, எனக்கு மிக மிக பிடித்தது... ஹாலிவுட் தரமெல்லாம் என்னைப்பொருத்தவரை வெறும் ஹம்பக்,... நம்ம கவுண்டர் பாணியில் சொல்வதென்றால்.....
உள்ளூர் படத்துக்கே வக்கில்லாதவன் ஹாலிவுட் பத்தி பேசரானாம்!!!

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே நான் mca படித்து இருக்கிறேன் ,,,,எங்கள் கல்லூரியில் ஜாதி வெறி என்றால் நம்புவீர்களா என்று தெரியாது ........?? ஆனால் இன்னும் இருக்கிறது என்பதே உண்மை ......
படித்தவர்களிடம் அதிகம் இருக்கிறது நண்பரே நான் mca படித்து இருக்கிறேன் ,,,,எங்கள் கல்லூரியில் ஜாதி வெறி என்றால் நம்புவீர்களா என்று தெரியாது ........?? ஆனால் இன்னும் இருக்கிறது என்பதே உண்மை ......
படித்தவர்களிடம் அதிகம் இருக்கிறது இன்னும் கூட

குறை ஒன்றும் இல்லை !!! said...

சில கல்லூரிகளில் இருக்கலாம் ஆனால் அதை யாரும் இப்படி மற்றவர்கள் முன் வெளிப்படுத்தி நான் பார்த்தில்லை.. அதுவும் NCC என்பது ராணுவம் போல கண்டிப்பானது.. அதான் சற்று மனக்குறை.. மற்றபடி எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்று...

velji said...

நான் இரண்டு படங்களையும் பார்க்கவில்லை.ஆனால் உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.பசங்க/ஸ்லம் டாக் மில்லியனர் படங்களை ஒப்பிட்டு இதேரீதியில் எழுதியிருந்தேன்.

பேராண்மை படத்தில்..இந்த சாக்பீஸ்,இந்த பென்ச்..உழைப்பை எடுத்துட்டா என்ற வசனம் அருமை.(விமர்சனத்தில் பார்த்தது).free trade eraவில் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்துதான்!

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் நண்பரே பேராண்மை பார்க்க வேண்டிய படம்

tamiluthayam said...

தமிழா, ஹாலிவுட்டா என்று வீம்பு செய்வது போல் சொன்னாலும், உண்மையத்தான் எழுதி இருக்கீறிர். இக்கரைக்கு அக்கரை பச்சை.

தர்ஷன் said...

பேராண்மை எனக்கு பிடித்த ஒரு படம்
இதை விட உங்கள் வலைப்பூவின் பெயரைக் கொண்ட கதையை ஜனநாதன் தழுவி எடுத்த படம் ரொம்பப் பிடிக்கும்.

சரவணகுமரன் said...

அதானே!

வெண்ணிற இரவுகள்....! said...

ம்ம்ம் நன்றி நண்பர்களே உங்கள் வரவிற்கு

(Mis)Chief Editor said...

நண்பா! நான் இரண்டையும் பார்க்கவில்லை. அதனால், என்னால் கருத்து சொல்ல இயலாது.

2012 பற்றி ஒரு எதிர்மறை எண்ணத்துடன் நீங்கள் படத்தைப் பார்த்திருப்பது, எழுதியதிலிருந்து புலப்படுகிறது. எனக்குப் பிடிக்காது என்பதுடன் ஒதுங்குவது நல்லது. அதைவிட்டுவிட்டு, அடுத்தவன் கைதட்டுகிறான் என்று அங்கலாய்ப்பது அடுத்தவன் ரசனையைக் குறை கூறுவதாகும். ரசனை என்பது தனிப்பட்டவனின் விருப்பு/வெறுப்பு என்பதை நீங்கள் நன்று அறிவீர்கள்.

ஆங்கிலப்படங்களை ஒட்டு மொத்தமாய் சாடியிருப்பது உண்மைக்குப் புறம்பான செயல். நிறைய படங்களின் தரம் உயர்ந்தேயிருக்கிறது. உ-ம், Catch me if you can, Aviator, A beautiful mind, Milion dollar baby, A bridge in the river Kwai, Seven year itch, Poltergeist, என அடுக்கிக்கொண்டே போகலாம்.

உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்தி, மனதை விசாலாமாக்கி உலகத்தை உற்று நோக்குங்கள். நிறைய நல்லது தென்படும்.

-பருப்பு ஆசிரியர்

இன்றைய கவிதை said...

விட்டுத்தள்ளு தோழரே!
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!

-கேயார்

வெண்ணிற இரவுகள்....! said...

அப்படி எல்லாம் எழுதுவதில்லை நண்பரே ....நான் பரந்து பார்ப்பதால் தான் எழுதுகிறேன் ..
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பொதுவாக சாடுவது தவறு .......
அந்தப் படத்தில் லாஜிக் சுத்தமாக இல்லை நண்பரே ............

எனக்கு தெரிந்து உலகம் அழியும் போது கை தட்டுவது பண்பட்ட ரசனை இல்லை ......
எனக்கு உங்கள் அளவு உற்று நோக்கத் தெரியவில்லை .........

வெண்ணிற இரவுகள்....! said...

தனி பட்டவரின் விருப்பு வெறுப்பு என்று சொல்ல முடியாது ...என்னால் உலகம் அழிவதை பார்த்து கை தட்டுவதை ரசிக்க முடியாது .....நான் கட்டாயம் கேட்பேன் ....இருந்தாலும் தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

வால்பையன் said...

//சத்யம் திரை அரங்கில் நம் கழிப்பிடத்தில் விளம்பரம் வைத்து உள்ளனர் இது எவ்வளவு தரம் கெட்டது. மனிதன் எங்கே போய்க் கொண்டிருக்கிறான் ????? //

அமெரிக்காவில் அதை துடைக்கும் பேப்பரில் விளம்பரம் இருக்கும்!
இது சந்தை யுகம், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் மறைமுகமாக நம் மீது வர்த்தக போர் புரிந்து கொண்டிருக்கிறது!

பேராண்மை போன்ற படங்கள் பேண்டஸி வகையறாவில் தான் சேரும்! உண்மையை யாரும் இன்னும் சொல்லவில்லை!

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பர்களே எல்லோரும் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ....அதுவும் வால்பையன் பின்னூட்டம் நல்ல ஆழமான பார்வை ....நன்றி நண்பர்களே புரிதலுக்கு

cshmech said...

நடுவில் ஏன் சம்பந்தமே இல்லாமல் பெண் கற்ப்பளிப்பை கொண்டுவருகிரீர்கள்?

"என் முன்னால் ஒரு பெண் கற்பழிக்க படுகிறாள்....அந்தப் பெண் கவர்ச்சியை பார்த்து ரசிப்பேனா??? ...இது அந்த அளவு தரம் இல்லா ரசனை............"

cshmech said...

///ஆங்கிலப்படங்களை ஒட்டு மொத்தமாய் சாடியிருப்பது உண்மைக்குப் புறம்பான செயல். நிறைய படங்களின் தரம் உயர்ந்தேயிருக்கிறது. உ-ம், Catch me if you can, Aviator, A beautiful mind, Milion dollar baby, A bridge in the river Kwai, Seven year itch, Poltergeist, என அடுக்கிக்கொண்டே போகலாம். ///

ஆம். "டைட்டானிக்"கில் நெஞ்சை உருக்கும் யதார்தமான காதல் காட்சிகளும் இருந்தது(உடல் புணரும் காட்சிகளை மட்டுமோ, இல்லை நாயகி பிறந்தமேணியில் வரும் காட்சியை மட்டுமோ நான் கூறவில்லை), பிரம்மாண்டமான காட்சிகளும் இருந்தது... காதல் இல்லாமல் இருந்திருந்தால் அது "ஒஸ்கர்"விருதை நாடியிருக்குமோ இல்லாயோ எனத் தெரியாது.. ஆனால் பிரம்மாண்டம் இல்லாமல் இருந்திருந்தால், அது கண்டிப்பாக அந்த விருதை நாடியிருகாது... ஆனால் "ஜேம்ஸ் கேமெரூன்" சொல்லியதாவது.."அந்தக் கதையின் பிரம்மாண்டத்தைவிட நாயகன் நாயகியின் அந்த இனம்தெரியாத காதலே என்னை ஈர்த்தது" எங்கிறார்... பிரம்மாண்டங்களை மக்களின் ரசனைக்காக சேர்ப்பதுதான்!! நம் படங்களில் தேவையில்லாத இடங்களில் வரும் டப்பங்குத்து பாடல்களும், மறு கலப்பு பாடல்களைப் போலும்!!

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே நான் கற்பழிப்பை கொண்டு வர வில்லை.................................
உலகம் அழியும் காட்சி நம்மை கை தட்ட வைக்கிறதே ...............அது தப்பான ரசனை ...........
அதைப் போன்றது என்று சொல்கிறேன்