மேகம் கருத்தது............
மழைக் காதலன் மண் காதலியை
முத்தமிட்டான்....
மழை பிழை
பிழைப்பிற்காக.........!
பூவுக்குள் நீர்
வந்ததும்,
பூகம்பம் வந்தது போல் பார்த்தாள்
பூக்காரி......!
கார், கப்பல்
போல் மிதக்கும்...!
புலம்பினான் குழாய் போட்ட
கணவான் ...!
திரை அரங்கில்
கூட்டம் கூடாதாம்....!
வேதனையில் விநியோகஸ்தர்....!
தெருவோரத் தொழிலதிபர்
இட்லிக் கடை ஆயாவிற்கு ......
இறங்கு முகம் ..........!
பக்கத்து வீட்டுப் பாப்பாவிற்கு
நெஞ்சுச்சளி....
மழைக் கடவுளிடம்
கேட்டேன்.................!
ஏன் மழை என்று ?
ஒரு வரியில் பதில் சொன்னார்.. ....
படியளப்பவன் பசியாறவேண்டும்...!
23 comments:
நல்ல கரு
மழை பெய்யும் இந்த வேளையில் மழையாய் உன் கவிதை!
பிரபாகர்.
நன்றி பிரபாகர் கதிர்
superb
நல்ல மலையில் நனைந்து வந்து உங்கள் கவிதை படித்தேன். அருமை...
கடைசியில் செம டச் நண்பா....கவிதையை நன்றாயிருக்கிறது.
//// தெருவோரத் தொழிலதிபர்
இட்லிக் கடை ஆயாவிற்கு ......
இறங்கு முகம் ..........!////
ஆமா ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் பா ???/
/ஒரு வரியில் பதில் சொன்னார்.. ....
படியளப்பவன் பசியாறவேண்டும்...!/
அருமை
நன்றி வானம்பாடிகள் ,பாலாசி,கேசவன் ,புலிகேசி,அத்திரி
so super...........
படியளப்பவன் பசியாறவேண்டும்!
நெஞ்சம் தொட்ட வரிகள். வியாபாரிகளுக்கு மழையும் கூடாது,வெய்யிலும் கூடாது..அவர்கள் எங்கே படியளப்பவன் பற்றி யோசிக்க போகிறார்கள்?
நல்ல சிந்தனைக்கு வாழ்த்துக்கள்!!!
poongundran2010.blogspot.com
Supper da Machan...kalakita
- Santhosh
கவிதை அற்புதம் நண்பரே ... தொடரட்டும் தங்கள் பணி .
அருமை ...!
உண்மையை சரியா
சொன்னிங்க ஜி ....
இப்படிச் சொல்லி முடிச்சிட்டீங்க.நல்லாவேயிருக்கு.
mama super alaga iruku
கடைசி வரி, அழகு!
கடைசி வரி வேறு இருந்தது கடைசி வரிக்கு மட்டும் நன்றி கதிர் அவர்களுக்கு
அருமை...!
மிக அருமையாக இருக்கு தோழமையே..
எல்லரும் அருமைன்னு சொல்லிட்டாங்க.. இப்ப நா என்ன சொல்ல..?
படி அளப்பவனும் பார்க்கிறான் மூழ்கிப் போன தன் பயிரை!
Post a Comment