என் நண்பனின்
நண்பன் என்றான் ..........
பின் ஒரு நாள் நண்பன்
ஆனான்....!
s ராமகிருஷ்ணன் படிப்பேன்
என்றேன்.....
அவரைப் போல் எழுதுவேன்
என்றான்......!
இளையராஜா பாடல்
கேட்பேன் என்றேன்
கணீர்க் குரலில்
பாடிக் காட்டினான்.....!
செல்வராகவன்
படம் பிடிக்கும்
என்றேன் ........
majidi majidh பார்த்ததில்லையா என்றான்...!
பிடித்து இருந்தது அவனை.......
ஒத்த சிந்தனை ஒரு படி
மேல் அவனிடம் .......
காதலை சொல்லப் போகிறேன்
என்றேன் .......!
நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்
என்றான் ....!
எனக்கு அவளை பிடிக்க .....
அவளுக்கு அவனைப் பிடிக்க .......
எனக்கு அவனைப் பிடிக்கவில்லை .....!
ஒத்த சிந்தனை .....
ஒத்து வரவில்லை
7 comments:
//எனக்கு அவளை பிடிக்க .....
அவளுக்கு அவனைப் பிடிக்க .......
எனக்கு அவனைப் பிடிக்கவில்லை .....!
ஒத்த சிந்தனை .....
ஒத்து வரவில்லை //
ரொம்ப நல்லாருக்கு கார்த்திக்... நல்ல முன்னேற்றம். நிறைய எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
அருமையான சிந்தனை
//காதலை சொல்லப் போகிறேன்
என்றேன் .......!
நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்
என்றான் ....!//
சரியான நிகழ்வு. காட்சியை நினைத்துப் பார்க்கிறேன்.
//ஒத்த சிந்தனை .....
ஒத்து வரவில்லை //
காதலி தேர்வில் கூட ஒத்த சிந்தனை...
ஆஹா ஓகே
நன்றி பிரபாகர்,ஸ்டார்,அகல்விளக்கு,அத்திரி
:-))
//ஒத்த சிந்தனை .....
ஒத்து வரவில்லை//
இதுக்குத்தான் ...
ஒரு பேட்டைக்கு ரெண்டு ரவுடி கூடாது -- ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாது-னு சொல்வாங்கப்போல.
Post a Comment