Wednesday, 4 November 2009
இந்த சாலைகள் எந்த கால்களையும் மறக்காது.
காகிதத்தில் வார்த்தையை தூக்கி எறிந்து கொண்டு இருந்தேன்.வார்த்தைக்கு நடுவில் இடைவெளி.இடைவெளி இருந்தால் தான் அர்த்தம் இருக்குமாம்.ஒவ்வொரு வார்த்தையும் தனியாய் நடந்து கொண்டிருந்தது.தனிமை கொன்று தின்று கொண்டிருந்தது என்னை.ஒவ்வொரு சாலையிலும் எத்தனை கால்கள் நடந்து போயிருக்கும் அத்தனையும் சாலைகள் நியாபகம் வைக்குமா.ஆனால் இந்த சாலையாகிய மனிதன்,தன் மீது கால் பதித்தவர்களை மறப்பதில்லை.
இந்த சாலை என்னும் மனிதனை படைத்தது என் சேலை அணிந்த தாய்.வாழ்கை சிலரை அறிமுகப்படுத்தி இருக்கறது,சிலரை தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறது.தாய் தன் வயிரிலிருந்து தூக்கி எறிந்த போதே,தனி ஆள் ஆனேன்.
தனி மரம் தோப்பாகாது ஆனால் தோப்பில் இருப்பது எல்லாமே தனி மரமே.வார்த்தைக்கு நடுவே இருக்கும் இடைவெளி போல் குடும்பம்,அப்பா,அம்மா,அக்கா,உயிர் தங்கை,நண்பர்கள் இருந்தாலும் ஒரு இடைவெளி இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இவன் தான் நண்பன் என்று நம்பிக்கொண்டிருப்பேன்.காலச் சுழல் அவன் அயல் தேசத்தில் இருப்பான்,இன்னொரு நண்பன்,அவனும் ஒரு நாள் தூக்கி எறியபடுவான்.
கவிதை எழுதிக்கொண்டு கிழித்துக்கொண்டே இருக்கிறது வாழ்கை.ஒரு கவிதையையும் முழுமையாக படித்ததில்லை.செடிகளில் இருந்து உதிரும் பூ போல் நாளுக்கு நாள் என் சிரிப்பு உதிர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு மனிதன் உதிரும் போதும் என்ன நினைப்பான்.அவன் நினைத்து பார்க்க கூட உயிருடன் இல்லாமல் போக போவது எப்படி இருக்கும்.ஒரு பெரியவர் இறக்கிறார் என்றால்,கடைசி நேரத்தில் என்ன நினைப்பார்.....அவர் காதலி நியாபகம் வருவாளா.அம்மா நியாபகம் வருவாளா,நண்பன்? நினைத்துப் பார்க்கக் கூட உயிரோடு இல்லை என்பது என்ன கொடுமை.
எதற்கு மனிதன் பிறக்க வேண்டும்? உதிரவா..........இறந்த பின்பு என் அம்மாவை பார்ப்பேனா? கண்களால் களவாடிய காதலியை பார்ப்பேனா?என் அப்பா?என் நண்பன்?
யாருமே இல்லாத போது எதற்கு பிறப்பு.ஒரு புகைப்படம் உயிரோடு இருக்கிறது புகைப்படத்தை எடுத்தவனும் இருப்பவனும் இல்லை....
நான் இறக்கும் நாளை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.........
நாளை இந்த நினைவில்லை,நாளை நீங்கள் யார் என்று தெரியாது????
பதிவுகள் இருக்கும் பதிவர் இருக்க போவதில்லை...............
கவிதை இருக்கும் கவிஞர் இருக்க போவதில்லை.....
புள்ளிகள் என்னும் பொட்டு வைத்து.........வாக்கியங்களை கொலை செய்யாதீர்கள்.
நமக்கு தேவை முற்று பெறாத, புள்ளி வைக்காத வாக்கியங்கள்!இந்த சாலைகள் எந்த கால்களையும் மறக்காது........உயிரோடு இருந்தால் ...
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அனுபவித்து படித்தேன் நல்ல இடுகை..!
//ஒரு புகைப்படம் உயிரோடு இருக்கிறது புகைப்படத்தை எடுத்தவனும் இருப்பவனும் இல்லை....//
நல்ல சிந்தனை பாஸ்
ஒவ்வொரு வரியும் ஏதொ ஒன்றை காதில் சொல்லிட்டு போகுது...
கவிதை மாதிரி ஆனா கவிதையில்லை
ரொம்ப பிடிச்சுருக்கு பாஸ்...
ஆம் நண்பரே இது மரணம் பற்றிய இடுகை
//எதற்கு மனிதன் பிறக்க வேண்டும்? உதிரவா..........இறந்த பின்பு என் அம்மாவை பார்ப்பேனா? கண்களால் களவாடிய காதலியை பார்ப்பேனா?என் அப்பா?என் நண்பன்?
யாருமே இல்லாத போது எதற்கு பிறப்பு.ஒரு புகைப்படம் உயிரோடு இருக்கிறது புகைப்படத்தை எடுத்தவனும் இருப்பவனும் இல்லை....
//
மரணத்தை பற்றி நன்கு யோசித்து எழுதிருக்கிறீர்கள். நல்லாருக்கு கார்த்திக். (இதையே அனுபவிச்சி எழுதியிருக்கீங்கன்னா காமெடியா ஆயிடும்ல....?)
நிறைய எழுதுங்கள்.
பிரபாகர்.
இதை அனுபவித்து தான் எழுதுகிறேன் ......பிரபாகர் .......மரணத்தை தவிர இதில் உள்ள அனைத்தையும் அனுபவித்து தான் எழுதுகிறேன். நான் எதையும் யோசித்து எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை,அனுபவித்ததை தான் எழுதுவேன்....
சில கதைகளில் கற்பனை இருக்கும் ஆனாலும் ஓரளவு நான் அனுபவிதத்தே
நல்லா இருக்கு கார்த்தி..ஆனால் இது போன்ற துக்கங்களைப் பற்றி எண்ணாமல் இந்தக் கணம் உயிரோடிருக்கிறோம் என்று மட்டும் நினைத்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.........
:-(
ஆம் அப்படி தான் வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் புலிகேசி,என்ன கலையரசன் என்ன சொல்ல வருகிரீர்கள்
மிக அழகாக நெய்யப்பட்ட வார்த்தை நெசவு..
ஏதோ ஒன்றை மௌனமாக சொல்லும் இடுகை
நன்றி கதிர்........................தமிழ் ஆசானிடம் இருந்து ஒரு பாராட்டு
நல்ல பதிவு கார்த்திக்
உங்களை பத்துக்குபத்து தொடர் இடுகைக்கு அழைத்துள்ளேன்.
http://niroodai.blogspot.com/2009/11/blog-post_04.html. கார்த்திக்...
நன்றி மலிக்கா
அனுபவித்துப் படிக்க ஒரு அருமையான கவிதை...
ரொம்ப அழகான இயல்பான அனுபவ கட்டுரை (கவிதை)..........
நன்றி அகல் விளக்கு ,,,,நன்றி ஊடகன்
//கவிதை எழுதிக்கொண்டு கிழித்துக்கொண்டே இருக்கிறது வாழ்கை.//
இடுகையை படிக்கும்போது ஏதோவொன்றை இழந்துவருகிறோம் என்றே தோன்றுகிறது. என்னவென்று பார்க்கையில் முன்சொன்ன வார்த்தையை பின்சொன்ன வார்த்தையது விழுங்கிவிட்டதாக உணர்கிறேன். ஒவ்வொன்றும் சிறப்பு. தாங்கள் எடுத்துக்கூறிய விதம் ரசிக்கவைக்கிறது. மரணமென்பது ஒரு மறந்துபோகும் நினைவு அவ்வளவுத்தான். சாலைகளுக்குத்தான் தெரியும் தன்னை கடந்துபோனவனின் கணம்.
நல்ல இடுகை...நண்பா....
Post a Comment