காலத்துரிகை உலகு என்னும் காகிதத்தில் வரைந்தன,வரையப்படாத ஓவியத்தை. ஓவியங்கள் நடந்து கொண்டு இருந்தன.ஆம் அந்த நடமாடும் ஓவியத்தின் பெயர் மனிதன்.மகிழ்ச்சி,கோபம்,துக்கம் போன்ற நவரசங்களையும் காகிதத்தில் அல்லாமல் தன் காயத்தில் வரைந்து கொண்டே இருந்தான் மனிதன்.என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஏதோ ஒரு விதத்தில் ஆதாம் ஏவாள் சாயல் இருக்கும்.ஆம் ஆதாம் ஏவாள் உலகில் வரையப்பட்ட முதல் ஓவியம்.அந்த ஓவியங்கள் மற்ற ஓவியங்களை வரைந்தன.இன்று உலகே ஒரு ஓவிய கண்காட்சி.
ஒரு பெண்ணை நாம் விரும்பிகிறோம் என்றால் ஏதோ ஒரு சாயலில் நம் அன்னையை நினைவுப்படுதுவாள்.நம் அன்னை என்னும் நடமாடும் ஓவியம் மிக நெருக்கமானது.நாம் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு சம்பந்தபட்டவரே. எனக்கு என் சித்தி மகள் திவ்யா என்றால் மிகப் ப்ரியம்.எதோ ஒரு சாயலில் என் அம்மாவை நினைவுப்படுதுகிறாள் நம் மூதாதையர் ஆதாம் ஏவாள் என்பதால் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தபடுகிறோம்.
ஓவியங்கள் நவரசங்களை நம் கண்ணில் காட்டிக்கொண்டே இருக்கின்றன.எத்தனை ரசம்,எவ்வளவு உணர்ச்சி ...!
எவனோ ஒருவனை பகையாளி என்று நினைப்போம்,பகை வழிந்து ஓடும்.ஒரே ஒரு சிரிப்புபோதும்,அவனுக்காக எதையும் செய்யும் மனது நம்மிடம் வழிகிறதே, ஏன்?அவன் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு சொந்தம்.ஒரு உயிரிலிருந்து நகல் எடுக்கப்பட்ட பிரதிகள்.
உயிர் ஒன்று தான்,அதன் பிரதிகள் பல பெயர்களில்,பல ஊர்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.ரோட்டில் ஏதோ ஒரு பிச்சைக்காரன் நடமாடமுடியாமல் படுத்துக்கொண்டே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அதை கண்டுகொள்ளாமல் மனித உயிர்கள் நடந்து கொண்டே இருந்தது.மனிதனுக்கு ஏன் தெரியவில்லை அவன் ஏதோ ஒரு விதத்தில் சொந்தம் என்று?
ஈழத்தில் மனிதப் படுகொலை நடந்தாலும் ஈரானில் நடந்தாலும் கொல்வதும், கொலை செய்யப்படுவதும் நம் சகோதரன்.ஏன் தன் சொந்தத்திற்கு அழுகும் மனிதன்,வேறொரு மனிதனுக்காக அழுவதில்லை?
உலகு அவன் வீடு என்று அவன் அறிவதில்லை?
காலத்துரிகை ஒவ்வொரு நொடியையும் படங்களாக உலகத்தில் வரைந்து கொண்டே இருக்கிறது.எத்தனை ஆனந்தம்,எத்தனை கோபம் ,ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு உணர்வு...மனிதன் நடமாடும் ஓவியமாக,உணர்வுள்ள ஓவியமாக வரையப்படாத ஓவியமாக..

13 comments:
பேரண்புதான் தேவை நண்பா!
அருமையான சிந்தனை.
மனிதன் இன்னும் வரையப்படாத ஓவியம் என அழகாய் உதாரணங்களுடன்... அற்புதம் கார்த்திக்.... வாழ்த்துக்கள். எழுத்து நடை நிறைய மேம்பட்டிருக்கிறது. நிறைய இதுபோல் எழுதுங்கள்...
பிரபாகர்.
மிக்க நன்றி பிரபாகர் அண்ணன்,வேல்ஜி
ரொம்ப இயல்பாக மனிதனை பிரதிபளீதுள்ளீர்கள்..........
நாம் ஆதாம், ஏவாளின் மகன் என்பதால், நீயும் என் சகோதரனே...........
//காலத்துரிகை ஒவ்வொரு நொடியையும் படங்களாக உலகத்தில் வரைந்து கொண்டே இருக்கிறது//
அழகாக சொன்னீர்கள் கார்த்திக்..ஆனால் காலத்தூரிகை வரைந்த ஓவியங்கள் ஈழத்துக் கண்ணீரில் அழிந்து கொண்டிருக்கிறது.......
//ஒரு பெண்ணை நாம் விரும்பிகிறோம் என்றால் ஏதோ ஒரு சாயலில் நம் அன்னையை நினைவுப்படுதுவாள்//
சரியான புரிதல்....நண்பா.....
paaratta vaarthaigal illai. sirantha ezhuthu nadai. thelivana paarvai. nalla sinthanai nanba....vazhthukkal.
/ஏன் தன் சொந்தத்திற்கு அழுகும் மனிதன்,வேறொரு மனிதனுக்காக அழுவதில்லை?
உலகு அவன் வீடு என்று அவன் அறிவதில்லை?/
ஏனெனில் அவன் மனிதன். :((
சிலசமயங்களில் நாம் யார் ,எங்கிருந்து வந்தோம் ,ஏன் வந்தோம் என்றெல்லாம் எம்மை நாமே கேட்கத் தோன்றும்.அந்தச் சமயங்களில் உண்டான சிந்தனையை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
//மனிதன் நடமாடும் ஓவியமாக,உணர்வுள்ள ஓவியமாக வரையப்படாத ஓவியமாக..
//
Excellent narration of thoughts!
-Keyaar
உதாரணங்கள் மிக அழகு.... வார்த்தைகளும் சரியாக கையாளப்பட்டுள்ளன......
சொந்தங்களில் ஒன்று ஓட்டுப் போட்டுப் பின்னூட்டமிட்டு விட்டது....! ஆரம்ப வரிகளைப் படித்தபோது தோன்றியது....மறுபிறவி பார்த்திருக்கிறீர்களோ?
:-)azhagaana sinthanai..!
நல்ல எழுத்து. தத்துவம் அனைவரும் ரசிக்கும் படி எழுதி உள்ளீர்கள். யூத் விகடனில் லிங்க் கண்டு இங்கு வந்தேன்.
எனது படைப்புகளும் முதல் முறை யூத்
விகடனில் இந்த வாரம் தான் வந்தது. முடிந்தால் படிக்கவும்
கவிதை:
http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp
கட்டுரை:
http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp
Post a Comment