Sunday 22 November 2009
முடிவுக்கும் தொடக்கத்திற்கும் உண்டான சிறிய இடைவெளி
கவிதைகள் காகிதத்தில்
புணர்ந்த பின் கவிஞனுக்குச் சொந்தமில்லை ..............!
வார்த்தைகள் காற்றுடன் மணம்
செய்து,பெற்ற வாயிடம் வருகிறேன் என்று சொல்கின்றன .....!
கால்கள் விடைப் பெற்றுக் கொள்கின்றன ....செருப்பிடம்
கழட்டும் போது....!
ஒரு வரியிடம் முற்றுப்புள்ளி வைத்து.....
மற்றொரு வரியிடம் இதோ வருகிறேன் என்று
சொல்கிறது பேனா ..............!
மரணம் ஒரு முற்றுப்புள்ளி ..........
ஒரு வரியாக இறந்து மறு வரியாக உருவெடுப்பேனோ...!
எப்பொழுதும் ஒரு பக்கத்தின் முடிவில்
இன்னொரு பக்கம் தொடங்குகிறது ............!
முற்றுபுள்ளி முடிவா தொடக்கமா .........?
முடிவுக்கும் தொடக்கத்திற்கும் உண்டான சிறிய
இடைவெளி......!
வெட்டப்பட்ட படச்சுருள் -விகடனில் இரண்டாவது கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நல்லா இருக்கு நண்பரே..........
விகடன் கட்டுரைக்காக வாழ்த்துக்கள்..............
நன்றி ஊடகன்
ரசிக்க வைக்கும் கவிதை.மிக அருமை வார்த்தைகளின் கோர்வை!!!
/ஒரு வரியிடம் முற்றுப்புள்ளி வைத்து.....
மற்றொரு வரியிடம் இதோ வருகிறேன் என்று
சொல்கிறது பேனா ..............!/
/வார்த்தைகள் காற்றுடன் மணம்
செய்து,பெற்ற வாயிடம் வருகிறேன் என்று சொல்கின்றன/
அசத்துறப்பா. விகடனில் வந்ததற்கு பாராட்டுகள்.
//மரணம் ஒரு முற்றுப்புள்ளி ..........
ஒரு வரியாக இறந்து மறு வரியாக உருவெடுப்பேனோ...!//
ம்ம்ம்...கண்டிப்பாக.... எந்தவொரு முடிவிலும் தொடங்காத வார்த்தைகள் இல்லை.
நல்ல இடுகை..
இளமை விகடன் கட்டுறையும் சிறப்பாக உள்ளது நண்பரே.....
மிகவும் நன்றாயிருக்கிறது கார்த்திக்... தலைப்போடு இயைந்த ஒன்று மிக அருமை...
பிரபாகர்.
நன்றாக இருக்கிறது ........ super
ஆமாம் எதுவும் முடிவு என்றில்லை.
உலக இயக்கமே அப்படித்தானே.
சொல்லியிருக்கும் விதம் அழகு.
superb...!
//சொல்கிறது பேனா ..............!
மரணம் ஒரு முற்றுப்புள்ளி ..........
ஒரு வரியாக இறந்து மறு வரியாக உருவெடுப்பேனோ...!//
நண்பா,
நெஞ்சில் பதிந்த வரிகள்.
அழகிய சொல் நடை!
/மரணம் ஒரு முற்றுப்புள்ளி ..........
ஒரு வரியாக இறந்து மறு வரியாக உருவெடுப்பேனோ/
மரணம் ஒரு முற்றுப்புள்ளி இவ்வுலக்கிற்கு..
நல்லவரிகள் தோழமையே..
Post a Comment