Saturday, 28 November 2009
அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?
அழகர்
"அவளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.ஆனால் காதலைச் சொன்னால் ஏற்பாளா,இல்லை நட்பாய் தான் பழகி இருப்பாளா.." என்று யோசித்துக்கொண்டிருந்தான் அழகர். "நாளைக்கு எப்படியாவது காதலை சொல்லி விட வேண்டும்" என்று முடிவு எடுத்துக்கொண்டான்.மறுநாள் காலை அவனுக்கு மட்டும் நான்கு மணிக்கே விடிந்தது.பல் விளக்கும் நேரம் முதல் அவளை நினைத்துக்கொண்டே இருந்தான்.கழிவறையில் கூட
கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான்.
கல்லூரி சென்றான், சுடிதார் போட்டவர்கள் எல்லாமே அவளைப் போலவே தெரிந்தார்கள்.அனிச்சையாய் பார்த்தான் உண்மையிலேயே இப்பொழுது சுடிதாருக்குள் இருப்பது அவளே, பக்கத்தில் அவள் தந்தை அவன் வருங்கால மாமனார்.அவளைப் பெற்றதற்கு மனதார அவரிடம் நன்றி சொன்னான்.பக்கத்தில் சென்றான், கூடவே அவன் நண்பர்களும் சென்றார்கள். அவள் பொதுவாக எல்லாரையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்.இவனுக்கு சுருக்கென்று இருந்தது.அனைத்து நண்பர்களும் "வாங்கப்பா" என்று சொல்ல ....இவனுக்கு மனம் இல்லை என்றாலும் கிளியை போல் "வாங்கப்பா" என்றான்,மனதிற்குள் அழுது கொண்டே.......!பெண்கள் பார்வை புரியவில்லை அவனுக்கு.
ஆம் அவள் பெயர் ஸ்வேதா.
ஸ்வேதா
ஸ்வேதா தொலைக்காட்சியில் "கண்கள் இரண்டால்" பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.அந்தப் பாடலின் கதாநாயகன் பெயர் அழகர் என்பது முக்கியக் காரணம். ஆம் இவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
அவனைப் பார்க்கும் போது இவளுக்கும் வேதியியல் மாற்றங்கள்.அவள் தங்கை பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர் அப்பா அலறிக்கொண்டு வந்து தங்கையை அடித்தார் "எவன் போட்டோ டீ அது" என்று அறைந்தார்.இவள் உறைந்து போய் நின்றாள்."இருபது வருஷமா வளர்த்திருகோம்,வலிக்குது டீ என்றார்" கோபத்தில் தொலைக்காட்சியை எடுத்து உடைத்தார் இவள் காதல் உடைந்து போனது .............
"அப்பா பீஸ்" என்றாள்...."நீயும் ஏதாவது காதல் கீதல்" என்றார் "இல்லை" என்றாள்..."சரி நாளைக்கு நானே வரேன்" என்றார். "சரி பா" என்றாள்.
அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அழகர் தன் நண்பர்களுடன் வந்தான். இவள் அவனை கண்ணோடு கண் வைத்து பார்கவில்லை. பொதுவாக இவர்கள் எல்லாம் நண்பர்கள் என்று அறிமுகம் செய்தாள்.
எல்லாரும் "வாங்கப்பா" என்றார்கள் .அழகரும் சொன்னதை கவனித்தாள்.அவர் அப்பாவுக்கு சந்தோஷமாய் இருந்தது "அப்பா" என்று கூப்பிட்டது.காதல் பிரச்சனை,ஒரு காதலால் இன்னொரு காதல் உடைந்தது.அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?
Friday, 27 November 2009
மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது ,மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில்.
ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்திரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேச வில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா .
மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ...
நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு "நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??"
என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் "வீட்டில் யாரோ இறக்கிறார்கள் ,அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?" என்றேன்
அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்...
நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிருந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா.....ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை
encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????
முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.
கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் "வன்முறைக்கு வன்முறை தீர்வு " என்று குரல் கொடுப்பார்...................ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு....அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????
ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ...............மத்ததெல்லாம் ...........?????
ஏன் வணிக குப்பையாகி விட்டோம் ..............மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ....இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????
ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ..........
மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் .....
மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக
உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது .எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ....என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ....!
Wednesday, 25 November 2009
உயிர்த்து எழுவாயா பிரபாகரா....!
மௌனமாய் அழவில்லை .....
மண்ணுக்குள் புதைத்தான்
கழக கலக பெருச்சாளி அல்ல....
களப்போராளி........அவன்...!
ஒரு மகனுக்கு மத்திய அரசு ...
ஒரு மகனுக்கு மாநில அரசு ....
என் தலைவனின் மகன்களோ
மண்ணுக்குள்ளே மண்ணுக்காக...!
மூன்று நான்கு மனைவிகள்
இல்லை .....!
ஒரு மனைவி என் அண்ணி
எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை ..!
தமிழ் இனத்தலைவன் என்று சொல்லவில்லை ....
மகளை கவிஞர் என்று சொல்லவில்லை .....
இங்கே தலைவன் மானாட மயிலாட மார்பாட்டதிற்கு பேர் சூட்டும் போது....
என் தலைவன் மார்பை நிமிர்த்திக்கொண்டு சிங்களனின் துப்பாக்கி முன்பு உருமிக்கொண்டிருந்தான் ..!
இங்கே பெண் சிங்கத்திற்கு
கதை எழுதிக்கொண்டிருக்கும் போது .....!
என் புலி
பலி ஆனான்.......!
தமிழ் செம்மொழி மாநாடு நடத்தவில்லை ....
தலைவன் நடந்து வந்தாலே மாநாடு .......
இன்று மாவீரர் தினம் .....
என் தலைவன் உயிர்த்து எழுவானா .........????
இனம் காத்த வீரனே கடவுள்,
முனியாண்டி, ஐயனார் வீரர்களே.........
ரத்தம் சிந்தி கடவுள் ஆனான்
ஏசு.......!
கடவுள் பிரபாகரனே உயிர்த்து எழுவாயா?????
இல்லை சிலையாக எம்மை வழி நடுத்துவாயா ........
என்னால் உன்னை உயிருடன் கொண்டுவர
வைக்க முடியாது .....
உன்னைக் கவிதையால் மீட்டு எடுக்க முயற்சி செய்கிறேன்......
அழுகை வருகிறது ..... உண்மையிலேயே நீ இறந்து இருந்தால் .....
உன் தம்பி முத்துக்குமாரை கேட்டதாக சொல் .....
இப்படிக்கு நீ உயிர்த்து எழ காத்துக்கொண்டிருக்கும்
உன் தம்பி .......!
Monday, 23 November 2009
வெட்டப்பட்ட படச்சுருள் - இளமை விகடனில் எனது இரண்டாவது படைப்பு
வெட்டப்பட்ட படச்சுருள்
நான் வசித்த இடம், கவிஞர் அறிவுமதிக்குப் பிறகு நிறைய உதவி இயக்குனர்கள், நாளைய ஒளி ஓவியர்கள், நாளைய திரைப்பட தயாரிப்பாளர்கள் போன்றோர் தங்கியிருக்கும் இடம். இவர்களைத் தவிர, திரைப்படக் கல்லூரி மாணவர்களும் அவ்வப்போது வலம் வருகின்ற சூழல் நிறைந்த பகுதி. உலக சினிமாக்கள், புத்தகங்கள், சுற்றிக் கொண்டிருக்கிற இடம். எஸ்.ராமகிருஷ்ணன், சாரு போன்றவர்களின் குரல் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நிறைய விவாதங்கள்... "இந்த லைட்டிங் சரியில்லை," என்பார் நாளைய ரத்னவேலு.
"காட்சிகள் ஜம்ப் ஆகிறது," என்பார் நாளைய பாக்யராஜ்.இதை எல்லாம் கேட்டுக் கொண்டே நான்கு ருபாய் டீ குடித்துக் கொண்டிருப்பார், நாளைய தயாரிப்பாளரான இன்றைய தயாரிப்பு நிர்வாகி.
ஆம்... திரையுலகம் கனவுத் தொழிற்சாலை, கனவுலகம்.
நட்பின் துரோகம், பணத்தின் துரோகம் ஒரு பக்கம்... ஜெயித்தால் நீ தான் ராஜா, கட்சி கூட ஆரம்பிக்கலாம், தோற்றால்!? என்னைப் பொருத்தவரை, திரையுலகை அற்புதமாய் பதிவு செய்த படம் 'வெள்ளித்திரை'. என் சினிமா நண்பர்கள் அனைவரும், அதில் வரும் பிரகாஷ்ராஜ் போலவே எனக்குத் தெரிகின்றார்கள்.சினிமாவில் இரு வகை மக்கள். ஒன்று... வெள்ளித்திரையின் பிரகாஷ்ராஜ் வகை, மற்றொன்று அதே படத்தின் பிரித்விராஜ் வகை. இருவரும் திரையுலகின் இரு வேறு குறயீடு.
இங்கே ரஜினிகாந்தாக, அஜித்குமாராக, சசிகுமராக கனவு கண்டு வருகிறவர்கள், திரைக்குப் பின்னாலையே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு.
ஆம்... திரையில் இருபது வருடமாக கூட இணை இயக்குனர்களாக இருப்பவர்கள் உண்டு. இதைப் பற்றி நீங்களும் பலச் சூழல்களில் கேள்விப்பட்டிருக்கக் கூடும். எனக்கு ஒரு சில நேரடி அனுபவம் உண்டென்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்.
அத்தகைய தோல்விகளைக் கண்டு மனது வலிக்கத் தான் செய்கிறது. இந்தக் கனவுத் தொழிற்சாலை பலரின் தூக்கங்களை தின்று, சிலரைக் கனவு காண வைக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பர், பத்து வருடமாக உழைத்து இப்பொழுது தான் ஒரு நல்ல இயக்குனருடன் சேர்ந்திருக்கிறார், உதவி இயக்குனராக. அதற்கு அவர் கொடுத்த விலை 'காதல்'. அவரது காதலியைக் கரம் பிடிக்க முடியாதச் சூழல். இத்தனைக்கும் அந்தப் பெண், அவருடைய சொந்த அத்தை மகள்.
அப்படியே திரைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தாலும், வணிகச் சுழல் காரணமாக நினைத்ததை எடுக்க முடியாது. தேவை இல்லாத நகைச்சுவைக் காட்சி சேர்க்கச் சொல்வார் தயாரிப்பாளர். பெரிய நடிகர் என்றால் வேலை வாங்குவது சுலபம் அல்ல. படம் முடிந்தாலும் வெளி வருவது ஒரு குழந்தையின் பிரசவம் போன்றது, தாய் இறந்துகூட போகலாம்!
எனினும், மோதிப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் நாளைய பாலா. தான் வேலை பார்த்த கதாநாயகனிடம், 'உங்களுக்கு ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார்,' என்கிறான்..! புகைப்படத்துடன் சுற்றுகிறான்... கடன் வாங்கியாவது உடம்பு ஏற்றுகிறான். கதாநாயகன் என்ன தான் பிடிக்கவில்லை என்றாலும், நமக்கு வாழ்க்கை பிடித்து இருக்கிறது இல்லையா?
திரையுலகம் தூக்கங்களை நிறுத்தி விட்டு கனவு காணச் சொல்கிறது. சிலரின் வாழ்க்கை படத்தில் வரும் காட்சி போல ஜெயிக்கின்றன. சிலரின் வாழ்க்கை வெட்டப்பட்ட காட்சிகள் போல திரையில் வராமலே போகின்றன.
திரையிலும் சரி நிஜத்திலும் சரி வெட்டப்பட்ட காட்சிகளே அதிகம்.
வெட்டப்பட்ட படச்சுருள் மண்ணிலே மௌனமாய் அழுது கொண்டிருக்கின்றன!
http://youthful.vikatan.com/youth/Nyouth/venniraira21112009.asp>
Sunday, 22 November 2009
முடிவுக்கும் தொடக்கத்திற்கும் உண்டான சிறிய இடைவெளி
கவிதைகள் காகிதத்தில்
புணர்ந்த பின் கவிஞனுக்குச் சொந்தமில்லை ..............!
வார்த்தைகள் காற்றுடன் மணம்
செய்து,பெற்ற வாயிடம் வருகிறேன் என்று சொல்கின்றன .....!
கால்கள் விடைப் பெற்றுக் கொள்கின்றன ....செருப்பிடம்
கழட்டும் போது....!
ஒரு வரியிடம் முற்றுப்புள்ளி வைத்து.....
மற்றொரு வரியிடம் இதோ வருகிறேன் என்று
சொல்கிறது பேனா ..............!
மரணம் ஒரு முற்றுப்புள்ளி ..........
ஒரு வரியாக இறந்து மறு வரியாக உருவெடுப்பேனோ...!
எப்பொழுதும் ஒரு பக்கத்தின் முடிவில்
இன்னொரு பக்கம் தொடங்குகிறது ............!
முற்றுபுள்ளி முடிவா தொடக்கமா .........?
முடிவுக்கும் தொடக்கத்திற்கும் உண்டான சிறிய
இடைவெளி......!
வெட்டப்பட்ட படச்சுருள் -விகடனில் இரண்டாவது கட்டுரை
Thursday, 19 November 2009
பார்வைக் கோர்வை
வார்த்தைக் கோர்வை
கவிதையாம்
நம் பார்வைக் கோர்வை ...!
எவ்வளவு முயன்றும்
உன் முதல் பார்வையை விட
சிறப்பாய்
ஒரு கவிதை படிக்கவில்லை...!
உன் கண்கள்
பேசிக்கொண்டே இருக்கிறது ....
என் கண்கள் கேட்டுக்கொண்டே
இருக்கிறது ...!
இருக்கையிலே நான் இருக்கையிலே ...
ஒரு கை கன்னம் தொட உட்கார்ந்து இருந்தாய்...!
கன்னமாக இருந்திருக்கலாம் நீ தொட்டுக் கொண்டிருப்பாய் ...
கையாக இருந்தால் உன் கன்னம் தொடலாம் .....!
கையாலாகாமல் இருக்கிறேனே?
கவிஞன் இல்லை நான்
மொழிபெயர்ப்பாளன் உன் விழிகளை
கவிதையாய் ....!
Wednesday, 18 November 2009
தமிழ் இனத்தலைவன்
தமிழ் இனத்தலைவன்
என்றான் ...?
தமிழ் இனம் என் குடும்பம் என்றான் மேடையில்
இனம் அழிந்து கொண்டிருக்கிறதே
தலைவா? என்றேன் ......
'என் குடும்பம்..!' தமிழ் இனம் என்றான் ...!
என்றான் ...?
தமிழ் இனம் என் குடும்பம் என்றான் மேடையில்
இனம் அழிந்து கொண்டிருக்கிறதே
தலைவா? என்றேன் ......
'என் குடும்பம்..!' தமிழ் இனம் என்றான் ...!
Monday, 16 November 2009
யூத் விகடனில் வந்த கட்டுரை - புல்லுக்குள் பிரமாண்டம்
பின்நவீனத்துவ யுகம். டெலிபதியை நுட்பத்துடன் கையாண்டு தகவல் தொழிற்நுட்பம் செய்தான் மனிதன். நினைக்கும் நேரத்தில் தகவல் இன்னொரு இடத்துக்கு செல்லும் வசதி. ஆம்.. பிரமாண்டமாய் உலகம்.
மனிதன் ஒரு பிரமாண்டமான படைப்பாளி. ஆனால்..? மனிதனின் பிரமாண்டத்தை விட மனிதனை உருவாக்கிய ஒரு துளி எவ்வளவு பிரமாண்டமானது.அணுகுண்டை விட அணு பிரமாண்டமானது. வரிசையாக செல்லும் மனிதர்களை விட, வரிசையாக செல்லும் எறும்புகள் என்னை ஈர்க்கின்றன.
வெப் கேமரா வைத்து ஒரு பெரியவர் தன் பேரனுடன் பேசிக்கொண்டே இருக்கிறார், அவர் கண்களில் மிரட்சி. பெரியவருடன் பேச கணிப்பொறி ஒன்றே இருக்கிறது. ஆம்.. வாழ்வு பிரமாண்டமாய் இருக்கிறது, வலி அதை விட பிரமாண்டமாய் வளம் கூட கூட வாழ்க்கை குறைந்து கொண்டே இருக்கிறது.
பெங்களூர் சென்று இருந்தேன். அந்த நகரம் அத்தனை அற்புதமானது என்றுச் சொன்னார்கள். பிரமாண்டமாய் இருந்தது, ஒரு நாட்டுக்குள்ளே ஒரு மாநிலத்துக்கு மட்டும் கொடி வைத்து இருந்தது அருவெறுப்பாய் இருந்தது.
ஒரு பெரியவரிடம் வழி கேட்டேன். அவர் என்னை தமிழன் என்று புரிந்து கொண்டு ஏதோ கன்னடத்தில் திட்டினார். நான் நிலைமையை புரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு விலகி சென்றேன். அவமானமாக இருந்தது, வெறும் காசுக்காக வேறு மொழி, வேறு தேசம்.
ஒரு நாள் நானும் நண்பனும் தேநீர் அருந்தச் சென்றோம். நான் சத்தமாய் பேசிக்கொண்டிருந்தேன். 'என் நண்பன் டேய் மெதுவா பேசுடா இது தமிழ் நாடல்ல,' என்றான். மொழிப் பிரச்சனை.பெங்களூர் உண்மையிலேயே பிரமாண்டமான நகரமா சொல்லுங்கள்.எனக்கு பெங்களூரை விட என் மதுரையில் இருக்கும் புளியங்குளம் பிரமாண்டமாய் இருந்தது.
எனக்கு பொருட்களில் பிரமாண்டம் பிடிப்பதில்லை. பிரமாண்டமானது மனித மனம் மட்டுமே. எனக்கு ஜூராஸிக் பார்க் படத்தை விட 'சில்ரன் ஆஃப் ஹெவன்' பிரமாண்டமாய் தெரிகிறது; காட்டு விலங்கை விட குழந்தைகளின் மனம் எனக்கு பிரமாண்டமாய் தெரிகிறது. அந்தப் படத்தில் ஒரு சின்ன ஷூ, ஆனால் அது பெரிய பொருள். வாழ்க்கை எவ்வளவு அழகானது, குழந்தைகளை விட பிரமாண்ட பிறவியை காட்ட முடியாது.
தகவல் தொழில்நுட்பத்தை விட மனித உறவுகளுக்குள் இருக்கும் உறவு நுட்பமானது. எனக்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் பிடிப்பதில்லை; அதை விட, புற்கள் பிரமாண்டமாய் இருக்கின்றன
http://youthful.vikatan.com/youth/Nyouth/karthick141109.asp
Sunday, 15 November 2009
பேராண்மையும் 2012 எது உலகத் தரம் ???
நான் சனிக்கிழமை 2012 படம் பார்க்க போயிருந்தேன்.நான் பொதுவாக ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை.பிரமாண்டம் பிடிக்காது,நான் உளவியல் ரீதியாக பிரமாண்டமான உலக சினிமா பார்ப்பேன். நம் பேராண்மை என்று வந்தால் ஆயிரம் லாஜிக் சொல்லும் பதிவுலக நண்பர்கள்,லாஜிக் சொன்னால் மட்டும் பரவில்லை ,ஹாலிவுட் தரத்திற்கு இல்லை என்று சொல்கிறார்களே ,ஹாலிவுட் தரமாக தான் உள்ளதா??????????
உலகமே அழியுமாம் அமெரிக்கன் மட்டும் தப்பிபானாம் இது என்ன கேவலமான அரசியல். ஒரு இந்தியன் கண்டுபிடித்தாலும் அவன் அழியனுமாம்,இது தான் ஹாலிவுட் தரமா??????சரி மேலிருந்து குண்டுகள் போல ஒன்று வந்து கொண்டே இருக்குமாம் கதாநாயகன் சைக்கிள் ஓட்டுவது போல புகுந்து புகுந்து ஓட்டுவாராம் என்ன கொடுமை சரவணன்?????அதுவும் கதாநாயகன் பூமியில் இருந்து வருவாரே அந்தக் காட்சியில் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது.இதே காட்சியை தமிழன் செய்தால் இவங்களுக்கு இதை விட்டால் என்ன தெரியும் என்று கேவலப்படுத்துவது.
ஏன் அந்தக் கதாநாயகன் சுனாமி மண் பிளவு போன்றதில் இருந்து தப்பும் போது,என் கதாநாயகி கன ரக ஆயுதங்கள் பயன்படுதக்கூடதா என்ன?????????அதை நம்பும்படி எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்....என் நாயகி சுடுவது நம்பும்படி உள்ளது.அவர்கள் தப்பிப்பது நகைச்சுவையின் உச்சம்.ஏன் ஹாலிவுட் படம் என்றால் காட்சியை மட்டும் பார்க்கிறீர்கள்.தமிழ் படம் என்றால் லாஜிக் அது எப்படி தமிழ் பெண் அந்த ஆயுதங்கள் உபயோக படுத்துவாள் என்று????
ஹாலிவுட் தரம் என்பது என்ன,ஒன்று விலங்குகளை காட்டுவது,இல்லை பூகம்பம் போன்றவற்றை காட்டுவது,இல்லை alien,இல்லை seriel killer.இது தான் ஹாலிவுட் தரம் என்றால்............என் பேராண்மை அந்தத் தரத்தில் இல்லை.
ஊரே அழிந்து கொண்டிருக்கிறது?????சத்யம் திரை அரங்கில் கை தட்டிக் கொண்டே இருக்கிறான் இது என்ன அருவருப்பான ரசனை....பிரமாண்டம் என்று உங்கள் கண் முன்னால் சுனாமி வந்தால் ரசிப்பீர்களா.யார் சொன்னது சத்யம் திரை அரங்கு A center என்று???? பிரமாண்டதிலே மயங்கிக் கிடக்கிறான் மனிதன். இது கொடுரமான ரசனை.ஊடகங்கள் இதை நல்லவை என்று மனிதனிடம் சொல்கின்றன.
என் முன்னால் ஒரு பெண் கற்பழிக்க படுகிறாள்....அந்தப் பெண் கவர்ச்சியை பார்த்து ரசிப்பேனா??? ...இது அந்த அளவு தரம் இல்லா ரசனை............எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் என் நண்பர்கள் கட்டாயத்தின் பேரில் படம் போனேன் ....
நாம் இன்னும் அமெரிக்கன் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம் கை தட்டுகிறோம் .இது அடிமை தனத்தை காட்டுகிறது.என் பேராண்மை அடிமை தனத்தை முறியடிப்பவன்.
பின்குறிப்பு: சத்யம் திரை அரங்கில் நம் கழிப்பிடத்தில் விளம்பரம் வைத்து உள்ளனர் இது எவ்வளவு தரம் கெட்டது. மனிதன் எங்கே போய்க் கொண்டிருக்கிறான் ?????
Friday, 13 November 2009
தடுக்கி விழுந்த கவிதை
"உனக்கு நல்லது
நடக்கும்" என்று அம்மா சொன்னாள்....
திரும்பிப் பார்த்தேன் .....
தெருவில் நீ நடந்து கொண்டிருந்தாய்...!
என் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது
நீ நடக்கும் போது
மட்டுமே...!
சாலைத் தெருக்கள்
எல்லாம்,
உன் சேலை, தூரத்தில் தெரியுமா?
என்று பார்த்துக் கொண்டே இருந்தன ...
நீ மிதிக்க வேண்டுமாம்.........
நீ வந்ததோ மிதி வண்டியில் .....!
உன் வயற்றில் போகும்
சோறு சொர்கத்திற்கு
போகிறது ...!
அன்று ஒரு நாள்
நீ தடுக்கினாய் .....
நான் விழுந்தேன் ..................
என் விரலில்
இருந்த வார்த்தைகள்
தடுக்கி கவிதையாய் விழுந்தன....!
இன்னொரு முறை விழு ......
நான் கவிதை எழுத வேண்டும் ...!
Wednesday, 11 November 2009
வரையப்படாத ஓவியம்
காலத்துரிகை உலகு என்னும் காகிதத்தில் வரைந்தன,வரையப்படாத ஓவியத்தை. ஓவியங்கள் நடந்து கொண்டு இருந்தன.ஆம் அந்த நடமாடும் ஓவியத்தின் பெயர் மனிதன்.மகிழ்ச்சி,கோபம்,துக்கம் போன்ற நவரசங்களையும் காகிதத்தில் அல்லாமல் தன் காயத்தில் வரைந்து கொண்டே இருந்தான் மனிதன்.என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஏதோ ஒரு விதத்தில் ஆதாம் ஏவாள் சாயல் இருக்கும்.ஆம் ஆதாம் ஏவாள் உலகில் வரையப்பட்ட முதல் ஓவியம்.அந்த ஓவியங்கள் மற்ற ஓவியங்களை வரைந்தன.இன்று உலகே ஒரு ஓவிய கண்காட்சி.
ஒரு பெண்ணை நாம் விரும்பிகிறோம் என்றால் ஏதோ ஒரு சாயலில் நம் அன்னையை நினைவுப்படுதுவாள்.நம் அன்னை என்னும் நடமாடும் ஓவியம் மிக நெருக்கமானது.நாம் பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு சம்பந்தபட்டவரே. எனக்கு என் சித்தி மகள் திவ்யா என்றால் மிகப் ப்ரியம்.எதோ ஒரு சாயலில் என் அம்மாவை நினைவுப்படுதுகிறாள் நம் மூதாதையர் ஆதாம் ஏவாள் என்பதால் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தபடுகிறோம்.
ஓவியங்கள் நவரசங்களை நம் கண்ணில் காட்டிக்கொண்டே இருக்கின்றன.எத்தனை ரசம்,எவ்வளவு உணர்ச்சி ...!
எவனோ ஒருவனை பகையாளி என்று நினைப்போம்,பகை வழிந்து ஓடும்.ஒரே ஒரு சிரிப்புபோதும்,அவனுக்காக எதையும் செய்யும் மனது நம்மிடம் வழிகிறதே, ஏன்?அவன் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு சொந்தம்.ஒரு உயிரிலிருந்து நகல் எடுக்கப்பட்ட பிரதிகள்.
உயிர் ஒன்று தான்,அதன் பிரதிகள் பல பெயர்களில்,பல ஊர்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.ரோட்டில் ஏதோ ஒரு பிச்சைக்காரன் நடமாடமுடியாமல் படுத்துக்கொண்டே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அதை கண்டுகொள்ளாமல் மனித உயிர்கள் நடந்து கொண்டே இருந்தது.மனிதனுக்கு ஏன் தெரியவில்லை அவன் ஏதோ ஒரு விதத்தில் சொந்தம் என்று?
ஈழத்தில் மனிதப் படுகொலை நடந்தாலும் ஈரானில் நடந்தாலும் கொல்வதும், கொலை செய்யப்படுவதும் நம் சகோதரன்.ஏன் தன் சொந்தத்திற்கு அழுகும் மனிதன்,வேறொரு மனிதனுக்காக அழுவதில்லை?
உலகு அவன் வீடு என்று அவன் அறிவதில்லை?
காலத்துரிகை ஒவ்வொரு நொடியையும் படங்களாக உலகத்தில் வரைந்து கொண்டே இருக்கிறது.எத்தனை ஆனந்தம்,எத்தனை கோபம் ,ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு உணர்வு...மனிதன் நடமாடும் ஓவியமாக,உணர்வுள்ள ஓவியமாக வரையப்படாத ஓவியமாக..
உயிர் ஒன்று தான்,அதன் பிரதிகள் பல பெயர்களில்,பல ஊர்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.ரோட்டில் ஏதோ ஒரு பிச்சைக்காரன் நடமாடமுடியாமல் படுத்துக்கொண்டே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அதை கண்டுகொள்ளாமல் மனித உயிர்கள் நடந்து கொண்டே இருந்தது.மனிதனுக்கு ஏன் தெரியவில்லை அவன் ஏதோ ஒரு விதத்தில் சொந்தம் என்று?
ஈழத்தில் மனிதப் படுகொலை நடந்தாலும் ஈரானில் நடந்தாலும் கொல்வதும், கொலை செய்யப்படுவதும் நம் சகோதரன்.ஏன் தன் சொந்தத்திற்கு அழுகும் மனிதன்,வேறொரு மனிதனுக்காக அழுவதில்லை?
உலகு அவன் வீடு என்று அவன் அறிவதில்லை?
காலத்துரிகை ஒவ்வொரு நொடியையும் படங்களாக உலகத்தில் வரைந்து கொண்டே இருக்கிறது.எத்தனை ஆனந்தம்,எத்தனை கோபம் ,ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு உணர்வு...மனிதன் நடமாடும் ஓவியமாக,உணர்வுள்ள ஓவியமாக வரையப்படாத ஓவியமாக..
Tuesday, 10 November 2009
ஒபமாவும் உன் தெரு வார்டு மெம்பரும் ...!
"அண்ணா" என்றான் ....
வினாடி வினாவில் முதல் மதிப்பெண் ...!
நான் 'சட்டை' என்றேன் ....
'shirt' என்றான் .....!
தெரியாது என்றேன் ....
'shit' என்றான்...!
harry potter தெரியுமாம் .........
ராமகிருஷ்ணனின் யாமம் தெரியாதாம்...!
nostradamus தெரியுமா என்றான் .....
அகத்தியன் தெரியுமா என்றேன் ....!
poem எழுதுவேன் என்றான்
கவிதை எழுதுவேன் என்றேன்...!
cricket ஆடுவானாம் ......
கபடி ஆடுவேன் என்றேன் ...!
OBAMA பற்றி பேசினான் ......
உன் தெரு ward member தெரியுமா என்றேன் ...!
coke குடிப்பேன் என்றான் ..........
வயற்றில் பூச்சி இருக்கிறதா என்றேன் .....!
நான் படித்திருக்கிறேன் என்றான் .......
உங்கள் வேலையை பாருங்கள் என்றான் .....
"எழுத்துக்களுடன் அறிமுகம் மட்டுமே படிப்பு ஆகாது" என்றேன் .....
முறைத்தான் ....
புத்தகங்களை வாசி.......என்றான் ....
மனிதனை நேசி என்றேன் ...!
இதன் பெயர் 'அறிவு' என்றான் .....
நான் 'அடிமை' என்றேன் ....!
'அண்ணா' என்று ஆரம்பித்து ..........
'போடா' என்று முடித்தான் .........!
Sunday, 8 November 2009
மனிதர்களோடு பேசாமல் செல் போனுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்
மின்சார ரயில் போய்கொண்டிருந்தது.இயந்திரத்தோடு இயந்திரமாய் நானும் நகர்ந்து கொண்டிருந்தேன்.பார்க் ஸ்டேஷன் நின்றது ரயில், பூகம்பம் வந்தது போல் மக்கள் பதட்டமாக ஓடினர்.ஏன் ஓடுகிறார்கள்????எதற்கு ஓடுகிறார்கள்!என் முகத்தில் பய ரேகை ஓடிக்கொண்டிருந்தது.மனிதன் எந்திரன் ஆகி விட்டானா?????
இதைப் பற்றி மனது குடைந்த போது,நான் எடுக்க நினைத்த குறும்படம் ஒன்று நினைவிற்கு வருகிறது.காலை ஐந்து மணி mansion வாசம்,கதாநாயகன் அலார ஒலியிலே எழுகிறான்.மின்விசிறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.அவன் தொலைக்காட்சியை தொடங்கிவிட்டு காலை வேலைகளை பார்த்துக் கொண்டே செய்யத் தொடங்குகிறான். சட்டையை அயன் செய்கிறான்,குளிக்கிறான் அலுவல் செல்கிறான்......
வண்டியின் இரைச்சல் உள்ளே நடக்க ஆரம்பிக்கிறான்.வண்டிகள் எழுப்பும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.மின்சார ரயிலை பிடிக்கிறான்,அந்த ரயிலின் சத்தம் பிண்ணனி இசை அவன் காதிற்குள் அமைத்துக்கொண்டே இருந்தது.புகை வண்டியில் படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்களை காண்கிறான்.சிலர் காலை நாளிதழ்கள் படித்துக்கொண்டிருந்தனர்.தன் மகனின் அகவலி புரியாதவர்,ஹிந்து பேப்பரை புரிந்து கொண்டிருந்தார்.பார்க் ஸ்டேஷன் அலை போல் சில மக்கள் ரயிலில் இருந்து வெளி வாங்கினாலும்,அதே அலை போல் மக்களை ரயில் உள் இழுத்துக் கொண்டது.
ஒருவன் முகத்திலும் கலை இல்லை,வாழ்வை பற்றிய பயம் அப்பிக்கொண்டிருந்தது.
மின்சார ரயில் ஒரு சிறை கூடத்தின் நகர்வு போலவே அவனுக்கு தோன்றிற்று. அலுவல் செல்கிறான்,access card செலுத்தி தன் வரவை பதிவு செய்கிறான்.தன் கணினியோடு உரையாட ஆரம்பிக்கிறான்.நடுவில் சில மேல்லோட்டமான புன்னகை உதிர்க்கிறான்.அலுவல் விட்டு வெளியே வருகிறான்.கட்டிடங்கள் எல்லாம் அவனை விட உயர்வாய் இருக்கிறது.கட்டிடங்கள் தன்னை அமுக்குவதாக யோசிக்கிறான்.
இரவுப் பொழுது நடந்துக்கொண்டிருக்கிறான். கேமரா ariel view வருகிறது(மிகவும் மேலே).ஆட்கள் தெரியவில்லை வெறும் கட்டிடங்களும் ஒளிகளும் மட்டுமே மின்னிக்கொண்டிருந்தன. மனிதன் எங்கோ தொலைந்து விட்டான்.படம் மௌனத்துடனும் நவீனத்துவத்தின் சில சத்தங்களுடனும் முடிகிறது. சத்தங்களுடன் மௌனமாய் முடிகிறது.
நாம் ஓடவில்லை என்றால் தோற்றுவிடுவோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம் தோற்றுக்கொண்டே! நாம் மனிதர்களோடு பேசாமல் செல் போனுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.
Friday, 6 November 2009
படியளப்பவன்
மேகம் கருத்தது............
மழைக் காதலன் மண் காதலியை
முத்தமிட்டான்....
மழை பிழை
பிழைப்பிற்காக.........!
பூவுக்குள் நீர்
வந்ததும்,
பூகம்பம் வந்தது போல் பார்த்தாள்
பூக்காரி......!
கார், கப்பல்
போல் மிதக்கும்...!
புலம்பினான் குழாய் போட்ட
கணவான் ...!
திரை அரங்கில்
கூட்டம் கூடாதாம்....!
வேதனையில் விநியோகஸ்தர்....!
தெருவோரத் தொழிலதிபர்
இட்லிக் கடை ஆயாவிற்கு ......
இறங்கு முகம் ..........!
பக்கத்து வீட்டுப் பாப்பாவிற்கு
நெஞ்சுச்சளி....
மழைக் கடவுளிடம்
கேட்டேன்.................!
ஏன் மழை என்று ?
ஒரு வரியில் பதில் சொன்னார்.. ....
படியளப்பவன் பசியாறவேண்டும்...!
Thursday, 5 November 2009
புத்தனின் மனைவி
கல்லைக் காட்டி
இதில் கடவுள் இருக்கிறாரா என்றேன்........!
அதை செதுக்கி விட்டு
இப்போது பார்த்தாயா என்றான்.....!
புத்தன் சிலை,
அதை உடைத்து விட்டு .......
இப்போது ஒன்றும் இல்லை என்றேன் ......!
ஒன்றும் இல்லாததே கடவுள் .....
அதுவே புத்தன் என்றான் ....
போடா பித்தன் என்றேன்..!
அவன் துறவி என்றான் ....................
நீ சித்தார்த்தனை நினைத்தாயா என்றான் ..................
இல்லை நான் அவன் மனைவியை நினைத்து பார்க்கிறேன் என்றேன்.....
இல்லறம் சகிக்க முடியாதவன் ........
எப்படி சகிப்புத்தன்மையின் கடவுள் ஆக முடியும் என்றேன்....?
புலனடக்கம் வேண்டும் என்றான் ....?
அடக்கம் வேண்டும் என்றால் எதற்கு புலன்கள் என்றேன் .....?
தியானம் செய் என்றான் ...
கண்கள் பார்ப்பதற்கு மூடுவதற்கு அல்ல என்றேன் ....!
அடக்குவது இயற்கை அல்ல .....
அவிழ்பதே இயற்கை என்றேன் ....
போடா பித்தா என்றான் ........
சரிடா புத்தா என்றேன்.............
பின் குறிப்பு :
இந்த இடுகை சம்பந்தமான ஒரு உலக சினிமா சூர்யாவின் வலை பதிவில் இருந்து
http://butterflysurya.blogspot.com/2009/10/blog-post.html
என் நண்பனின் நண்பன்
என் நண்பனின்
நண்பன் என்றான் ..........
பின் ஒரு நாள் நண்பன்
ஆனான்....!
s ராமகிருஷ்ணன் படிப்பேன்
என்றேன்.....
அவரைப் போல் எழுதுவேன்
என்றான்......!
இளையராஜா பாடல்
கேட்பேன் என்றேன்
கணீர்க் குரலில்
பாடிக் காட்டினான்.....!
செல்வராகவன்
படம் பிடிக்கும்
என்றேன் ........
majidi majidh பார்த்ததில்லையா என்றான்...!
பிடித்து இருந்தது அவனை.......
ஒத்த சிந்தனை ஒரு படி
மேல் அவனிடம் .......
காதலை சொல்லப் போகிறேன்
என்றேன் .......!
நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்
என்றான் ....!
எனக்கு அவளை பிடிக்க .....
அவளுக்கு அவனைப் பிடிக்க .......
எனக்கு அவனைப் பிடிக்கவில்லை .....!
ஒத்த சிந்தனை .....
ஒத்து வரவில்லை
பத்துக்கு பத்து
இந்த தொடர் இடுகைக்கு என்னை அழைத்த என் ஆருயிர் நண்பன் இரும்புத்திரை மற்றும் என் தோழி மலிக்கா இருவருக்கும் நன்றி
1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்
கவிஞர்
பிடித்தவர் – நா முத்துக்குமார்
பிடிக்காதவர்- வைரமுத்து கலைஞருக்கு ஜால்ரா போடுவதால்
இயக்குனர்
பிடித்தவர்- செல்வராகவன்,majidh majith
பிடிக்காதவர்- பீ வாசு,சங்கர்,மணி சார்,
அரசியல்வாதி
பிடித்தவர்- ஸ்டாலின்(ரஷ்ய தலைவர்)
பிடிக்காதவர்-கலைஞர்
நடிகை
பிடித்தவர் -- நிறைய பேரு இருக்காங்க
பிடிக்காதவர்-- யாருமே இல்ல
நடிகர்
பிடித்தவர்- நம்ம தல தான் தல போல வருமா
பிடிக்காதவர்-தலனு சொன்னவுடனே உங்களுக்கு புரியனும்
,2 தனக்கு எல்லாம் தெரியும் என்ற உலக நயாகன்
எழுத்தாளர்
பிடித்தவர்- ராமகிருஷ்ணன்,சாரு,dostovesky
பிடிக்காதவர்-ஜெயமோகன்
உலகத் தலைவர்
பிடித்தவர்- சே குவேரா(தன் நாடு என்று எண்ணாமல் மனிதன் என்று எண்ணிய ஒரே போராளி )
பிடிக்காதவர்-காந்தி
இசைஅமைப்பாளர்
பிடித்தவர்: ராஜாங்கம்
பிடிக்காதவர்: யாரும் இல்லை ஒருவன் கத்தினால் கூட அது இசை தான்
இத்தொடரை தொடர நான் அழைக்கும் அன்பர்கள்
கடலலைகள்
விழியில் விழுந்தவன்
அன்புடன்
கார்த்திக் வெண்ணிறஇரவுகள்
1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்
கவிஞர்
பிடித்தவர் – நா முத்துக்குமார்
பிடிக்காதவர்- வைரமுத்து கலைஞருக்கு ஜால்ரா போடுவதால்
இயக்குனர்
பிடித்தவர்- செல்வராகவன்,majidh majith
பிடிக்காதவர்- பீ வாசு,சங்கர்,மணி சார்,
அரசியல்வாதி
பிடித்தவர்- ஸ்டாலின்(ரஷ்ய தலைவர்)
பிடிக்காதவர்-கலைஞர்
நடிகை
பிடித்தவர் -- நிறைய பேரு இருக்காங்க
பிடிக்காதவர்-- யாருமே இல்ல
நடிகர்
பிடித்தவர்- நம்ம தல தான் தல போல வருமா
பிடிக்காதவர்-தலனு சொன்னவுடனே உங்களுக்கு புரியனும்
,2 தனக்கு எல்லாம் தெரியும் என்ற உலக நயாகன்
எழுத்தாளர்
பிடித்தவர்- ராமகிருஷ்ணன்,சாரு,dostovesky
பிடிக்காதவர்-ஜெயமோகன்
உலகத் தலைவர்
பிடித்தவர்- சே குவேரா(தன் நாடு என்று எண்ணாமல் மனிதன் என்று எண்ணிய ஒரே போராளி )
பிடிக்காதவர்-காந்தி
இசைஅமைப்பாளர்
பிடித்தவர்: ராஜாங்கம்
பிடிக்காதவர்: யாரும் இல்லை ஒருவன் கத்தினால் கூட அது இசை தான்
இத்தொடரை தொடர நான் அழைக்கும் அன்பர்கள்
கடலலைகள்
விழியில் விழுந்தவன்
அன்புடன்
கார்த்திக் வெண்ணிறஇரவுகள்
Wednesday, 4 November 2009
இந்த சாலைகள் எந்த கால்களையும் மறக்காது.
காகிதத்தில் வார்த்தையை தூக்கி எறிந்து கொண்டு இருந்தேன்.வார்த்தைக்கு நடுவில் இடைவெளி.இடைவெளி இருந்தால் தான் அர்த்தம் இருக்குமாம்.ஒவ்வொரு வார்த்தையும் தனியாய் நடந்து கொண்டிருந்தது.தனிமை கொன்று தின்று கொண்டிருந்தது என்னை.ஒவ்வொரு சாலையிலும் எத்தனை கால்கள் நடந்து போயிருக்கும் அத்தனையும் சாலைகள் நியாபகம் வைக்குமா.ஆனால் இந்த சாலையாகிய மனிதன்,தன் மீது கால் பதித்தவர்களை மறப்பதில்லை.
இந்த சாலை என்னும் மனிதனை படைத்தது என் சேலை அணிந்த தாய்.வாழ்கை சிலரை அறிமுகப்படுத்தி இருக்கறது,சிலரை தூக்கி எறிந்து கொண்டே இருக்கிறது.தாய் தன் வயிரிலிருந்து தூக்கி எறிந்த போதே,தனி ஆள் ஆனேன்.
தனி மரம் தோப்பாகாது ஆனால் தோப்பில் இருப்பது எல்லாமே தனி மரமே.வார்த்தைக்கு நடுவே இருக்கும் இடைவெளி போல் குடும்பம்,அப்பா,அம்மா,அக்கா,உயிர் தங்கை,நண்பர்கள் இருந்தாலும் ஒரு இடைவெளி இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இவன் தான் நண்பன் என்று நம்பிக்கொண்டிருப்பேன்.காலச் சுழல் அவன் அயல் தேசத்தில் இருப்பான்,இன்னொரு நண்பன்,அவனும் ஒரு நாள் தூக்கி எறியபடுவான்.
கவிதை எழுதிக்கொண்டு கிழித்துக்கொண்டே இருக்கிறது வாழ்கை.ஒரு கவிதையையும் முழுமையாக படித்ததில்லை.செடிகளில் இருந்து உதிரும் பூ போல் நாளுக்கு நாள் என் சிரிப்பு உதிர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு மனிதன் உதிரும் போதும் என்ன நினைப்பான்.அவன் நினைத்து பார்க்க கூட உயிருடன் இல்லாமல் போக போவது எப்படி இருக்கும்.ஒரு பெரியவர் இறக்கிறார் என்றால்,கடைசி நேரத்தில் என்ன நினைப்பார்.....அவர் காதலி நியாபகம் வருவாளா.அம்மா நியாபகம் வருவாளா,நண்பன்? நினைத்துப் பார்க்கக் கூட உயிரோடு இல்லை என்பது என்ன கொடுமை.
எதற்கு மனிதன் பிறக்க வேண்டும்? உதிரவா..........இறந்த பின்பு என் அம்மாவை பார்ப்பேனா? கண்களால் களவாடிய காதலியை பார்ப்பேனா?என் அப்பா?என் நண்பன்?
யாருமே இல்லாத போது எதற்கு பிறப்பு.ஒரு புகைப்படம் உயிரோடு இருக்கிறது புகைப்படத்தை எடுத்தவனும் இருப்பவனும் இல்லை....
நான் இறக்கும் நாளை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.........
நாளை இந்த நினைவில்லை,நாளை நீங்கள் யார் என்று தெரியாது????
பதிவுகள் இருக்கும் பதிவர் இருக்க போவதில்லை...............
கவிதை இருக்கும் கவிஞர் இருக்க போவதில்லை.....
புள்ளிகள் என்னும் பொட்டு வைத்து.........வாக்கியங்களை கொலை செய்யாதீர்கள்.
நமக்கு தேவை முற்று பெறாத, புள்ளி வைக்காத வாக்கியங்கள்!இந்த சாலைகள் எந்த கால்களையும் மறக்காது........உயிரோடு இருந்தால் ...
Tuesday, 3 November 2009
நான் அவன் இல்லை
ஆன்ம விசாரனையில் இறங்கினேன்
"நான்" ""என்" என்பதை எனக்குள்
விசாரித்துக்கொண்டிருந்தேன் .....
என் கவிதை என்றேன் கர்வத்தில் .....
என் சதை என்றேன் தங்கையிடம் .....
என் விதை என்றேன் அம்மாவிடம் ....
என் பேனா ...
பேனாவும் நானும் ஒன்றா?
என் வீடு
வீடும் நானும் ஒன்றா?
"என்" முன்னால்
வந்தால் அது நான் அல்ல ......
மனது விழித்தது...........
"என்" உடல் ....................
உடலும் நானும் ஒன்றா............
கவிதையில் தேடுகிறேன் ...........
விதை தெரியவில்லை ..........
"டேய் கார்த்திக்" என்றார் அப்பா .....
"நான் அவன் இல்லை " என்றேன் ....
Monday, 2 November 2009
சோழி போட்ட கோழி
ஆண்டிபட்டி,நெற்கள் காற்றில் வாசனையாய் கவிதை எழுதிக்கொண்டிருந்தது.மழை
வருவதை மண் வாசனை தண்டோரா போட்டு சொல்லிக்கொண்டிருந்தது.மழை அதுவும் மாலை நேரம் மழையுடன் காற்றுடன் அவன் காதலும் கலந்தது. அவன் மனதில் நினைத்துக்கொண்டான் நாளை எப்படியாவது காதலை சொல்ல வேண்டுமென்று.காலையில் ஊரில் கேட்கும் முதல் குரல் அவனுடையது.ஆம் வீடு என்னும் கூட்டிற்குள் போகும் போது ஒரு பார்வை பார்த்தாலே நாளை விடிந்தவுடன் காதலை சொல்ல வேண்டும்,மனதிற்குள்ளும்,மழையினால் வெளியிலும் இடி இரவு முழுவதும் இடித்துக்கொண்டே இருந்தது.
காலையில் எழுந்தவுடன் அனைவரையும் எழுப்பினான் அதுவே அவன் முதல் வேலை.வீடே திருவிழா கோலம் பூண்டிருந்தது.காதலை தன் காதலியிடம் சொல்ல முயன்றான்.காதலியை பார்த்தான்,அவளும் பார்த்தாள்.அவளிடம் சொல்ல வந்தபோது.அவளை யாரோ தூக்கி சென்றனர்."கோழி அடிச்சு குழம்பு வைக்கணும்,தலைய சீவு பா".என்றான் மாயாண்டி.மாயாண்டிக்கு எத்தனை நாள் இவன் சேவல் சண்டையில் வெற்றிபெற்று கொடுத்து இருப்பான்.சேவலான இவனுக்கு மனது அடித்தது.அவள் சாகும் போது கூட இவன் காதலை சொல்லவில்லையே.ஏன் மனிதனுக்கு மட்டும் தான் காதல் சொந்தமா. அவன் மனது வலித்தது.
உசிலம்பட்டி வெப்போர், சேவல் சண்டை. (காலில் கத்தி கட்டாமல் சேவல் சண்டை அதுவே வெப்போர்).இவன் சேவல் பல ஊரில் வெற்றிபெற்ற சேவல். மாயாண்டிக்கு இது மான பிரச்சனை,ஆம் அவன் பகையாளி,மற்றும் பங்காளியான பாட்டையா சேவலுடன் மோதல்.மாயாண்டியின் சேவல் பாட்டையா சேவலை எகிரி
அடித்தது மாயாண்டி சந்தோஷம் அடைந்தான். சேவல் அவனை பார்த்தது,என்ன இருந்தாலும் தன் காதலியின் கால்கள் அவன் வயிரிலே இருக்கிறது,காதலியை கொன்றவன்,அவன் சந்தோசமாக இருக்கலாமா. இரண்டாவது சுற்றில் அவனை அவமான படுத்த தோற்க ஆரம்பித்தது.ஒவ்வொரு அடி வாங்கும் போதும் தன் காதலியான கோழியை நினைத்துக்கொண்டது.கண்கள் இருட்டியது சேவலுக்கு,அடிகள் விழுந்தாலும் வலிக்கவில்லை.
மாயாண்டி மண்ணை கவ்வ வேண்டும். ஆம் சாகும் போது மண்ணை முத்தமிட்டது.வானில் இருந்த கோழியின் உயிர் இதை ஒரு தேரில் ஏற்றிக்கொண்டு சென்றது.மாயாண்டி மண்ணை கவ்வினான்.சேவலும் கோழியும் வானில் பறந்து கொண்டே சிரித்துக்கொண்டனர்.
Sunday, 1 November 2009
நானும் தீபாவளியும்
என் நண்பன்
புலிகேசியின் அழைப்பை ஏற்று இந்த தொடர் பதிவை எழுதுகிறேன்.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு?
என் பெயர் கார்த்திக் நான் மென்பொருள் பொறியாளர்.என் சொந்த ஊர் மதுரை.முதலாளித்துவ வேலையில் இருக்கும் ஒரு பொதுவுடமையாளன்.தனி மனிதனின் வலி உலகத்தில் உள்ள அனைத்தையும் விட பெரியது என்று சொல்லிக்கொள்பவன்.ஒரு பிச்சைகாரனை பார்த்தல் அவன் சோறுக்கு பிச்சை எடுப்பான் பாசத்திற்கு எங்கே போவான் என்று கேட்பவன்.அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று சொன்னாலும்???
கேள்வி கேட்பதாலேயே நான் marx,che guvera ஆகி விட முடியாது......சரியாக சொல்ல போனால் உலகத்திற்காக வருந்தினாலும் இதவரை உருப்படியாய் எதுவும் செய்ய வில்லை.
பொருளாதரத்தில் வல்லரசு நாடுகளில் கூட தனி மனிதன் அன்புக்கு ஏங்குகிறான்.புல்லின் மீது உள்ள பனி துளி காய்வதை போல் வாழ்கை காய்ந்து கொண்டு இருக்கிறது. காதலி அருகில் இல்லை, எனக்கு பிடித்தவர்கள் எங்கோ உள்ளனர் எதற்கு இந்த வாழ்கை...என்று ஏக்கம் கொண்டவன்.....அதனாலேயே இடுகை பெயர் வெண்ணிற இரவுகள் என்று வைத்தேன்....Dostovesky சொல்வதும் இத்தகைய தனிமையே........
2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
வரலாறு படம் வந்திருந்த நேரம்.பட பாடல்கள் அனைத்து தொலைக்காட்சியிலும் போட்டனர்.சிம்பு பாடல்கள் அம்மாடி ஆத்தாடி அனைத்திலும் கலக்கிக்கொண்டு இருந்தது. ஈ படம் வட்டாரம் மற்றும் சில படங்கள் பலத்த போட்டி,வரலாறு படத்திலே கம்மா கரையில பாடல போட்டார்கள் ,தல அசிங்கமாக இருந்தார்,அப்பொழுது நினைத்தேன் இந்த தீபாவளியும் தோல்வியா என்று. ஆர்வம் தாங்காமல் மதிய காட்சி புறப்பட்டு சென்றேன்.....மிரட்டி விட்டார் தல.......ஊடகங்கள் உதவி இல்லாமல் தம்பி போல் இருக்கும் ரசிகர்கள் ஆதரவில் கோடி பார்த்த படம்
"நெருபென்ரும் தலை கீழாய் எரிவதில்லை,மனம் உள்ள மனிதன் அழிவதில்லை"
"தல போல வருமா"...அது மறக்க முடியாத தீபாவளி
3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
என் சொந்த ஊரு மதுரைல இருந்தேன்
4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்?
தற்போது சென்னையில் இருக்கிறேன்.முன்பு இருந்த உற்சாகம் இல்லை,தொலைக்காட்சியிடம் நாமெல்லாம் தொலைந்து விட்டோம்.குழந்தைகள் கூட தொலைக்காட்சி பார்ப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.முன்பெல்லாம் ஒரு வாரம் கலை கட்டும் இப்பொழுது தீபாவளி அன்று கூட கலை கட்டவில்லை.
5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா ?
சொல்லப்போனால் இந்த தீபாவளி கொண்டாடுவதில் விருப்பம் இல்லை.ஈழம் இப்படி இருக்கிறது எதற்கு தீபாவளி என்று நினைத்தேன்.ஆனால் அலுவலுக்கு தேவை பட்டது,அதனால் மதுரையில் ஒரு பிரபல கடையில் வாங்கினேன்.
6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?
எங்கள் வீட்டில் எப்போதுமே அம்மா செய்வது தான். ஒரு கல்யாண வீடு போல செய்வாள்.பெரிய கூட்டு குடும்பம்.மாலாடு,உக்காரை,மிட்சர் மைசூர் பாகு போன்ற பல விடயம் இருக்கும்.
7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்.
(உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல் தொலைபேசி குறுந்தகவல்.......ஆனால் இந்த தொலைபேசி நிறுவனங்கள் இந்த முக்கிய நாளை வைத்து காசு பார்ப்பது வெறுப்பாக இருக்கிறது...
காசு பார்க்க இவர்களுக்கு ஒரு சாக்கு வேண்டும்.சந்தோசம் என்றாலும் காசு,துக்கம் என்றாலும் காசு.
8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா?
நான் படங்கள் அதிகாமாய் பார்ப்பேன்,தீபாவளி முதல் நாள் ஆண்மையுடன் ஒரு படம் பேராண்மை பாத்தேன் சிலிர்த்தது.தீபாவளி அன்று ஆதவன் பாத்தேன் உட்கார முடிய வில்லை.வடிவேல் காப்பாற்றினார்
9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள்? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்
என்னை பொறுத்த வரை யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாது. ஒரு பிச்சைக்காரன் இருக்கிறார் என்றால் அவருக்கு தேவை பொருளாதாரம் மட்டுமே. ஏன் மக்கள் பொருள் சார்ந்த விஷயங்களை மட்டும் உதவி என்று பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.அகம் சார்ந்து ஒவ்வொரு மனிதனும் பாதிக்க படுகிறான்.....
இதை எல்லாம் யோசித்து பொருள் உதவி செய்வதில்லை.ரஜினி கோடிகளில் புரள்கிறார் என்பதற்காக அவர் நன்றாக இருக்கிறார் என்பது அர்த்தம் இல்லை.
ரஜினி முதல் பிச்சைக்காரன் வரை அகத்தனிமையில் இருகிறார்கள்......பொருள் சார்ந்த உதவிகள் மீது நம்பிக்கை இல்லை
உதவி செய்ய கூடிய அளவு தகுதி இல்லை.என்னை பொறுத்தவரை பிச்சைக்காரனும் நானும் ஒன்றே மனரீதியாக........நாம் உதவுகிறோம் என்று சொல்வதே அகம்பாவம்....என்னால் உதவ முடிகிறது அதனால் செய்கிறேன் என்பதே நிதர்சன உண்மை ....
10) நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் வலைத்தளங்கள்?
ஒன்று எழுத ஆர்வமாக ஆரம்பித்து...கோபமாக எழுதி...பதிவு எழுதுவதினால் ஒன்றும் ஆக போவதில்லை என்று சொல்லிகொண்டிருக்கும் அருமை நண்பன் இளந்தமிழன்.மற்றொன்று எதையும் வெளிப்படையாய் பேசும் பார்க்காமல் இருந்தாலும் உயிர் நண்பன் இரும்புத்திரை நண்பர்கள் தட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அழைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)