Friday 5 March 2010

மண்ணும் மண் சார்ந்த பதிவர்களும்

















மண்ணோடு சம்பந்த பட்டவனே மனிதன். எப்படி ஒரு குழந்தைக்கு உண்டான உணவு தாய் பால் தாயிடமே இருக்கிறதோ அதைபோல் மனிதனின் உணவு உலகத்திலேயே எடுக்கப்படுகிறது. மண் ஒரு விதத்தில் மனிதனின் தாய். தாய் கூட பத்து மாதங்கள் தான் உணவளிபாள் மண் பிறந்தது முதல் நமக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.

மண் சார்ந்த பதிவர்களை தேடிக்கொண்டிருந்தேன். மண் என்றால் மண்ணை பற்றி எழுதுபவர்களை தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது மூலிகை பற்றி எழுதும் குப்புசாமி கண்ணில் பட்டார். மூலிகை என்றால் மருத்துவ குணம் உள்ளது. எனக்கு தெரிந்து சிறுவயதில் எனக்கு வயத்து வலி என்றால் வீட்டில் உள்ள ஓம செடியை பிய்த்து திண்பேன். அப்புறம் வீட்டில் துளசி இருந்தது, அம்மா துளசி கசாயம் போடுவார்கள்.எனக்கு தெரிந்த மூலிகை வைத்தியம் அவ்வளவே, ஆனால் குப்புசாமியை படிக்கும் பொழுது மூலிகை வைத்தியம் மிக விரிந்தது என்பது தெரிகிறது. மனிதர் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் எழுதி உள்ளார். படிக்கும் போதே மூலிகை விவசாயத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று தெரிகிறது.

இத்தனை செடிகள் உள்ளதா என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது . அதுவும் இத்தனை மருத்துவ குணங்களுடன். அவரின் வலைப்பூ முகவரி


http://mooligaivazam-kuppusamy.blogspot.com/

குப்புசாமியின் சுட்டியை நான் மரவளம் என்னும் ப்ளோகில் இருந்து எடுத்தேன். இவர் கவனிக்க படவேண்டிய பதிவர். மரவளம் பற்றி எழுதுவதோடு மட்டும் அல்லாமல் நீர்வளம் நீர்மேலன்மை போன்றவற்றையும் எழுதுகிறார் . மேலும் வெட்டிவேரை எப்படி வளர்ப்பது அதன் பயன்கள் பற்றி எழுதி உள்ளார். கட்டாயம் படிக்கப்பட வேண்டிய பதிவுகள் விவசாயம் சம்பந்தமான அமைச்சகம் உதவிகள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் எழுதி உள்ளார். மரம் விவசாயம் சம்பதமான அனைத்து விடயங்களையும் எழுதி உள்ளார்.
விவசாய வலைத்தளங்கள் அறிமுகம் செய்து உள்ளார். உலக விவசாயம் பற்றிய அறிமுகம் கூட அந்த வலைதளங்களில் இருக்கும்.

http://maravalam.blogspot.com/


நாம் மண்ணிற்கு என்ன செய்து விட்டோம் குளோபல் வார்மிங்கை குறைக்க மரமாவது வைக்கலாமே. அன்னைக்கு கூட சம்பாதித்து கொடுக்கிறோம் உணவளித்த மண்ணிற்கு என்ன செய்ய போகிறோம். உண்மையிலேயே விடயம் உள்ள பதிவுகள். இந்த பதிவால் ஒரு விதை மண்ணில் பதிந்தாலும் வெற்றியே.

9 comments:

க.பாலாசி said...

நானும் இதுபோல் பதிவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன் நண்பா... மிக..மிக...நல்ல பகிர்வு...

//இந்த பதிவால் ஒரு விதை மண்ணில் பதிந்தாலும் வெற்றியே. //

சரியாக சொன்னீர்கள்...

நன்றி நண்பா...

Ramesh said...

நல்லது பகிர்வுக்கு நன்றி.. நாங்களும் ஒரு கிராமத்திலிருந்து மண்வாசனை சேர்க்கும் போது தங்கள் அறிமுகம் பயனுள்ளதாக உள்ளது....
மரணப்படுக்கையிலும் மறக்காத மண்வாசனை நுகரப்படட்டும்.....

Unknown said...

நல்ல பகிர்வு தோழா..

வின்சென்ட். said...

ஜயா,

தனியாக பதிவேற்றி மேலும் பலருக்கு இந்த இருவலைப் பூக்களையும் அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி. உங்கள் பதிவில் எனக்கு நெகிழ்ச்சியை தந்தது http://vennirairavugal.blogspot.com/2010_02_01_archive.html
என்ற பதிவு. நன்றியுடன் வின்சென்ட்

அன்புடன் நான் said...

நல்ல ஆதங்கம்....

பகிர்வுக்கு நன்றிங்க.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி...

Paleo God said...

பகிர்வுக்கு நன்றி..:)

விஜய் said...

நானும் விவசாயத்திற்கென்று தனி வலைப்பக்கம் வைத்துள்ளேன்.

agasool.blogspot.com

நண்பர்களின் ஆதரவு தேவை.

நன்றி

விஜய்

பாலா said...

நல்ல பதிவு. வரவேற்கிறேன்.

//நாம் மண்ணிற்கு என்ன செய்து விட்டோம் குளோபல் வார்மிங்கை குறைக்க மரமாவது வைக்கலாமே. அன்னைக்கு கூட சம்பாதித்து கொடுக்கிறோம் உணவளித்த மண்ணிற்கு என்ன செய்ய போகிறோம்.

என்ன செய்ய போகிறோம்?