Saturday 6 March 2010

பிரபலத்திற்கு கை தட்டுவோம்






















சச்சின் விளம்பரத்தில் நடிப்பதில்லை
சச்சினை ஆதரித்தால் தேசப்பற்று .....................
உதிரம் கொதிக்கும் .....!
நித்யானந்தர் கதவை திற என்பது உண்மை
தான் ....எந்த கதவு என்று அவர் சொல்லவில்லையே
அவர் சாமியார் தான் அவரை பற்றி எழுதினால் தப்பு....!
2012 சிறந்த படம் ஆம் உலகம்
அழியும் நான்கு பேரு தப்பிப்பார்கள் நாங்கள் கை தட்டுவோம் ........!
ரஜினி திருட்டு cd பற்றி கேட்டால் ..........................
கை தட்டுவோம் ...ஆனால் அவர் படம் ப்ளாக்கில் பார்ப்போம் .....!
ஈழம் பிரச்சனை பேசுவோம்
அங்கே நடக்கும் கிரிக்கெட் பார்ப்போம் வேட்டைக்காரன் பார்ப்போம் ....!
" சச்சினை திட்டிய சாரு ரசிகர் " என்று எழுதியவருக்கு
நான் சாரு படிப்பதில்லை என்று தெரியும் எதற்கு சாரு பெயர் ....!
கமல் ஜாதி ரீதியாக கருத்து சொல்வார் .....
அதை திட்டினால் பிரபலத்தை திட்டிகிரோமாம் ...................!
பாம்பே படம் ஹிந்துத்துவா படம் ...............
அதை விமர்சனம் செய்தால் திட்டுவார்கள் .....!
அரசியல் விமர்சனம் இருக்கவே கூடாது ....
அவர்கள் பிரபலங்கள் நாம் அடிமைகள் ....
கை தட்டிக்கொண்டே இருப்போம் ..................!
இப்படி தான் நித்தியானந்தனும் பிரபலம் ..................
இன்று மட்டும் ஏன் அவனை திட்டுகிறீர்கள் ...
இன்றும் கை தட்டலாமே ...........

3 comments:

Unknown said...

//சச்சின் விளம்பரத்தில் நடிப்பதில்லை
சச்சினை ஆதரித்தால் தேசப்பற்று .....................
உதிரம் கொதிக்கும் .....!//

சச்சின் விளம்பரப் படத்தில் நடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் விளம்பரத்தில் நடிப்பதற்காகவே சாதனை புரிகிறார் என்று சொல்வது தப்பு.

//ரஜினி திருட்டு cd பற்றி கேட்டால் ..........................
கை தட்டுவோம் ...ஆனால் அவர் படம் ப்ளாக்கில் பார்ப்போம் .....!//

திருட்டி சிடி என்பதைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்பதைப் பற்றி புரிந்து கொள்ளாத பதிவு உங்களுடையது. அவர் ரசிகர்களை தியேட்டர்களைப் புறக்கணிக்கச் சொல்லி கேட்கவில்லை. தயாரிப்பாளர்களைத்தான் கேட்டுக் கொண்டார். இதை அங்கேயே போட்டிருப்பேன். ஆனால் அதில் வந்தி மற்ற சில விசயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அதனால் மறுப்பு சொல்லவில்லை.

//ஈழம் பிரச்சனை பேசுவோம்
அங்கே நடக்கும் கிரிக்கெட் பார்ப்போம் வேட்டைக்காரன் பார்ப்போம் ....!//

ஈழம் பிரச்சனைக்கும் கிரிக்கெட் வேட்டைக்காரன் பார்க்காமலிருப்பதற்கும் என்ன சம்மந்தம்? அப்படி கிரிக்கெட்டையும் வேட்டைக்காரனையும் புறக்கணிப்பதால் ஈழப்பிரச்சனை தீர்ந்து விடுமா சொல்லுங்கள்? ஈழப் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களே சிங்களர்கள் மட்டுமே விளையாடும் இலங்கை அணிக்கு கொடி பிடிக்கும் போது, நாங்கள் அதைப் புறக்கணிப்பதால் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள்? இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்கள். என் நிலையை மாற்றிக்கொள்ளும்படி இருக்கிறதா பார்ப்போம்.


//அவர்கள் பிரபலங்கள் நாம் அடிமைகள் ....
கை தட்டிக்கொண்டே இருப்போம் ..................!//

பிரபலங்கள் வெளிப்படையாக தவறு செய்தால் அவர்களைத் தட்டுங்கள் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. அவர்கள் பேசும் பேச்சிலும் செயலிலும் உள்ளர்த்தம் கண்டுகொண்டு - உங்களுக்கு தவறென்று தோன்றுவது பெருவாரியான மக்களுக்குத் தோன்றவில்லை - அவர்களைத் திட்டுவது நன்றாக இல்லை.

//இப்படி தான் நித்தியானந்தனும் பிரபலம் ..................
இன்று மட்டும் ஏன் அவனை திட்டுகிறீர்கள் ...
இன்றும் கை தட்டலாமே ........... //

அவர் என்ன செய்தார் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இப்போது அவருக்கு யாரும் கை தட்ட மாட்டார்கள்.

நாளை சச்சினோ, ரஜினியோ, கமலோ இதே போல கையும் களவுமாக ஏதாவது பிரச்சனையில் மாட்டும்போது நித்யானந்தாவுக்கு கிடைத்த அதே மரியாதையை பதிவுலகம் செய்யும்.

அத்திரி said...

கரீக்டா சொன்னீங்க

ஹாய் அரும்பாவூர் said...

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

அவர்கள் அப்படிதான் நாம் நம்மை திருத்தி கொள்வோம்