Tuesday, 9 March 2010
கவிதைக்கு ஒரு புத்தன்
கவிதை தொகுப்பு
என்று உன்னிடம் ஒரு நோட்டை
எடுத்துக்கொடுத்தேன் ...!
முதல் பக்கம்
திருப்பினாய் ..............!
நர நர என்று மண்.................
என்ன என்று கேட்டாய் .........
"நீ மிதித்த மண்" என்றேன் .....
"முதன் முதலில் காலில் எழுதிய கவிஞர் நீ தான்" என்றேன் ....
அடுத்த பக்கம் திருப்பினாய்
வாடிய பூ இருந்தது ...............
"என்ன கவிதைகள் அவ்வளவு தானா என்றாய் ............
மேலும் ஒரு கவிதை இருக்கிறது
என்றேன் ....!
பிய்ந்த செருப்பை எடுத்துவிட்டு காண்பித்தேன் .....
சிரித்தாய் .........!
நீ உன் காலில் உதறிய செருப்பை
தலையணையாய் வைத்து தூங்குகிறேன் என்றேன் ...!
நீ பார்த்த முதல் பார்வையை பதிவு செய்ய முடியவில்லை
நீ பேசிய வார்த்தைகள் காற்றில் கவிதையாய் உலாவி கொண்டிருக்கிறது
என்றேன் .....!
புத்தகங்கள் பத்தாது
கவிதைக்கு ஒரு புத்தன் வேண்டுமென்றேன்...!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
///"முதன் முதலில் காலில் எழுதிய கவிஞர் நீ தான்" என்றேன் ....
நீ பார்த்த முதல் பார்வையை பதிவு செய்ய முடியவில்லை ///
- அருமை. :)
தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
///"முதன் முதலில் காலில் எழுதிய கவிஞர் நீ தான்" என்றேன் ....///
கவிதை வாழும்... வாழ்த்துக்கள்.
Post a Comment