Saturday 13 March 2010

நீதிக்கு தண்டனை



















ஜாதிகள் எல்லாம் ஒழிந்து விட்டது என்று நாம் பெயரளவில் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் உண்மையிலேயே ஒழிந்ததா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லத்தோன்றும். உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பே இதற்க்கு சான்று. சுஷ்மா திவாரி ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் பிரபு நொச்சில் என்பவரை காதலித்து கல்யாணம் செய்திருக்கிறார் . பிரபு நொச்சில் கேரளாவை சேர்ந்த எழவா என்னும் பழங்குடியை சேர்ந்தவர்.

தங்கை காதலித்தாள் கல்யாணம் செய்தாள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை அவள் அண்ணன் கொன்றுள்ளான், இரண்டு பேரை காயபடுத்தயுள்ளான். அந்த நேரத்தில் மாசமாய் இருந்த சுஷ்மா திவாரி வெளியே
போயிருந்ததால் தப்பித்து உள்ளார். இது நடந்தது 2004.அந்த அண்ணன் கொலைகாரன் பெயர் திலிப் திவாரி. மும்பை உயர் நீதி மன்றம் திலிப் திவாரிக்கு மரண தண்டனை
வழங்கியது ஆனால் உச்ச நீதி மன்றம் 2009 தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது . அவர்கள் கொடுத்த தீர்ப்பு ஆச்சர்யம் அளித்தது.

“It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”

அதாவது திலிப் திவாரி ஒரு அண்ணன் என்ற முறையில் கலப்புத்திருமணம் நடக்கும் பொழுது செய்தது சரியே என்கிற பாணியில் அதை நியாயபடுத்தியது. ஜாதி பார்ப்பதே தவறு அதுவும் அதை நியாய படுத்துகிறது உச்ச நீதி மன்றம். அதை எதிர்த்து சுஷ்மா போராடிக்கொண்டிருக்கிறார் . இது நமது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்கிறார். (Prevention of Atrocities) Act, 1989 சட்டம் படி இது எல்லாம் தவறு என்று சொல்கிறார் சுஷ்மா.

சரி நான்கு கொலை செய்திருக்கிறார் திலிப் திவாரி அவர் செய்ததை நியாபடுத்துகிறது உச்ச நீதி மன்றம். சரி மனு தர்மம் என்ன சொல்கிறது ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் நாடு மட்டுமே கடத்த படுவான் தண்டனை மிக குறைவு . இதே போல் மற்றவர்கள் கொலை செய்தால் கொடுக்க படும் தண்டனையே வேறு. மனு தர்மத்தை வழிமொழிகிறதா உச்ச நீதி மன்றம்.

சரி நம் மக்கள் ஏன் இதற்காய் குரல் கொடுக்கவில்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் கூட குரல் கொடுக்கவில்லை. நித்தியானந்தன் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகம் இந்த செய்தியை ஏன் கண்டுகொள்ளவில்லை. இது தலித்தை பற்றி செய்தி என்பதாலா
இதை எல்லாம் போட்டால் யார் பத்திரிகை வாங்குவார் என்பதாலா. தினமும் குமுதம் பத்தரிகையில் இருந்து எனக்கு குறுந்தகவல் வந்து கொண்டிருக்கிறது நித்தியானந்தன் புது வீடியோ பார்க்க சொல்லி என்ன சொல்ல இந்த ஊடகங்களை .

ஏன் மக்கள் இந்த தீர்ப்புக்கு எதிராய் குரல் கொடுக்கவில்லை இன்னும் மக்கள் மனுதர்மத்தை நம்புகிறார்களா இல்லை IPL என்னும் இந்திய தேசப்பற்றில் ஊறி கிடக்கிறார்களா.நான்கு பேரை கொன்றிருக்கிறான் மரண தண்டனை கொடுக்க வேண்டியது தானே. ஒரு விவசாயி ஒரு இளம் பெண்ணை கற்பழித்து இருக்கிறார் மரண தண்டனை அது நியாயம் சரி, அதை போல் இந்த திலீப் திவாரிக்கும் மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டுமே.
ஏன் மக்கள் கூட கேள்வி எழுப்பவில்லை நமக்குள் supreme கோர்ட் ஒளிதிருக்கிறதா இல்லை நாம் மனுதர்மத்தை நம்புகிறோமா இல்லை நமக்கு இதெல்லாம் முக்கியம் இல்லையா????யார் சொன்னது சாதிகள் இல்லை என்று.

11 comments:

Unknown said...

கண்டிப்பாக கண்டிக்க வேண்டிய விசயம்.

கவனத்திற்குக் கொண்டுவந்ததற்கு நன்றி..

அகல்விளக்கு said...

சாட்டையடியாய் விழுகிறது வார்த்தைகள்...

இன்னும் ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது...

ஈரோடு கதிர் said...

மிகக் கொடுமையான் செய்திதான்..

சுஷ்மா திவாரி வெல்லட்டும்...

ச. தமிழ்செல்வன் விரிவாக இடுகை இட்டிருக்கிறார்...

gulf-tamilan said...

ஏன் எந்த தமிழ் ஊடகங்களிலும் இந்த செய்தி வரவில்லை?

Unknown said...

நான் உங்களது இந்தப் பதிவிற்கு எனது தளத்தில் ஒரு தொடர் பதிவை....(எதிர்பதிவல்ல) எனது பார்வையில் எழுதியுள்ளேன். உங்களிடமிருந்து வரும் அது சார்ந்த ஆரோக்கியமான கருத்துக்களுக்காகவும் காத்திருக்கிறேன்.

எனது வலைப்பூ...www.antogaulbert.blogspot.com

Prabhakaran said...

மிகச் சரியான தீர்ப்பு. தாய் தந்தையரை ஏமாற்றி விட்டு செல்லும் அனைத்து பெண்களுக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்தால் இந்திய கலாசாரம் சீரழியாது. அந்த பெண்ணையும் சேர்த்து கொன்றிருக்க வேண்டும். ஆனால் விட்டு விட்டதுதான் மிகப்பெரிய தவறு.

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த பிரபாகரன் போல தேசப்பற்று உள்ளவர்களை என்ன செய்வது...................இந்திய காலச்சரம் என்பதன் பெயரிலே என்ன வெல்லாம் செய்யபோகிறார்கள்

க.பாலாசி said...

அவனுக்கு கிடைத்திருக்கவேண்டிய தண்டனை மரணமே.... நீதி தவறியிருக்கிறது.

ஊடகங்களுக்கான தீனி இப்போது மாதுவிடமே மலிந்துகிடக்கிறது.

rajeshkannan said...

நான் சொல்கிறேன் என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம்...
எத்தனை பிரமாணர்கள்(ஆண்கள்) ஒழுக்கமா இருக்கிறார்கள் என்று சொலுங்கள்.
மது அருந்துகிறார்கள், மாமிசம் சாப்பிடுகிறார்கள் இது போன்ற செயல்கள்
அவரகளுக்ன ஒரு இன்பத்தை கொடுக்கிறது. ஒரு பிரமாண வகுப்பை
சேர்ந்த பெண் காதலித்து திர்மனமம் செய்ய கூடாத? என்ன ஒரு
கேவலமான எண்ணம்.கேவலமான் தீர்ப்பு.....

Anonymous said...

தன் உணர்வுக்கு தன சுத்ரதர் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று நாம் எண்ணினால் முதலில் அவர்கள் உணர்வுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட பெண் அவ்வாறு செய்தாரா? காதல் திருமணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் ஒப்புதல் தர மறுக்கிறார்கள் என்ற நிலை இருந்தால் அதை குடும்பத்திற்காக கைவிடுவதுதான் சிறந்தது. தெரிந்தோ தெரியாமலோ ஒரு குடும்பத்தில் பிறந்து விட்டோம், அவர்களுக்கு செஞ்சோற்று கடனாளியகிறோம். அந்த பெண்ணும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்.

கிறித்துவம் , இஸ்லாம் போன்ற மதங்களும் கலப்பு திருமணங்களை அனுமதிப்பது இல்லை. "they have to marry a partner of another (pagan or kafir) faith is prohibited" . இதற்கு மனு என்ன செய்வார் மனு தர்மம்தான் என்ன செய்யும்.நீங்கள் சாமர்த்தியமாக கற்பழிப்பு பின்னணியை கூறாமல் டபாய்த்து விட்டர்கள்.

Anonymous said...

தன் உணர்வுக்கு தன சுத்ரதர் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று நாம் எண்ணினால் முதலில் அவர்கள் உணர்வுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட பெண் அவ்வாறு செய்தாரா? காதல் திருமணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் ஒப்புதல் தர மறுக்கிறார்கள் என்ற நிலை இருந்தால் அதை குடும்பத்திற்காக கைவிடுவதுதான் சிறந்தது. தெரிந்தோ தெரியாமலோ ஒரு குடும்பத்தில் பிறந்து விட்டோம், அவர்களுக்கு செஞ்சோற்று கடனாளியகிறோம். அந்த பெண்ணும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்.

கிறித்துவம் , இஸ்லாம் போன்ற மதங்களும் கலப்பு திருமணங்களை அனுமதிப்பது இல்லை. "they have to marry a partner of another (pagan or kafir) faith is prohibited" . இதற்கு மனு என்ன செய்வார் மனு தர்மம்தான் என்ன செய்யும்.நீங்கள் சாமர்த்தியமாக கற்பழிப்பு பின்னணியை கூறாமல் டபாய்த்து விட்டர்கள்.