Sunday, 21 March 2010

இந்த பதிவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம்

இன்று பேருந்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது FM ஓடிக்கொண்டிருந்தது . IPL அணிகள் ஏலம் பற்றி சுலபா என்ற ரேடியோ ஜாக்கி பேசிக்கொண்டிருந்தார். 1500 கோடி ரூபாய் என்று பெருமையாய் பேசிக்கொண்டிருந்தார். இந்தியா எங்கயோ போய்க்கொண்டிருக்கிறது என்று பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ஊடகங்கள் என்ன தான் செய்கின்றன , ஊடகமே உங்களுக்கு சினிமா கிரிக்கெட் தவிர ஒன்றும் தெரியாதா
விதர்பா பற்றி பேசினால் பத்து வாக்கு கூட வரவில்லை . சரி கவர்ச்சிக்காக IPL போட்டி பற்றி அதிலிருந்து
லிங்க் கொடுத்தேன் அப்படியும் வாக்கு விழவில்லை ...........................ஒரு வாக்கிற்கு 1000 2000 எல்லாம் தர முடியாது , ம்ம்ம் நான் சும்மாக எழுதுகிற காதல் பதிவுகள் 15 வாக்கு வாங்குகின்றன ........................................

எனக்கு விதர்பா விடயம் நிறைய பேரிடம் செல்ல வேண்டும் ......நான் யாரிடமும் வாக்கு கேட்க மாட்டேன் .முதன் முதலாய் வாக்கு கேட்கிறேன் தயவு செய்து இந்த பதிவிற்கு வாக்கு அளிக்க வேண்டாம் போன பதிவின் முந்தய பதிவின் லிங்க் தருகிறேன் வாக்கு அளியுங்கள் .................................

http://vennirairavugal.blogspot.com/2010/03/blog-post_4213.html

6 comments:

Thenammai Lakshmanan said...

ம்ம்ம் நான் சும்மாக எழுதுகிற காதல் பதிவுகள் 15 வாக்கு வாங்குகின்றன ........................................//

Its true and hurting....Vennira iravukaL karthik...

சிவாஜி சங்கர் said...

No words to say.. :(

Admin said...

சென்னை பஞ்சாப் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி இரவு 8.15 மணிக்கு ஸ்டேடியத்துக்கு வந்தார்.

பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருக்கான விசேஷ அறையில் அமர்ந்து போட்டியை அவர் ரசித்து பார்த்தார்.

மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தலைவர் என்.சீனிவாசன், முதல் அமைச்சரின் செயலாளர்கள் சண்முகநாதன், ராஜரத்தினம், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோரும் அந்த அறையில் இருந்தபடி போட்டியை ரசித்தனர்.

சூப்பர் ஓவரின் போது மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார் முதல்வர்.

http://thatstamil.oneindia.in/news/2010/03/22/cm-enjoys-ipl-match-at-chepauk.html

”முதல்வன் எவ்வழிய்யோ மக்களும் அவ்வழியே”

எவன் வந்தாலும் தமிழ்நாட்ட திருத்த முடியாது..........

மோனி said...

நல்ல விஷயங்களுக்காய்
ஒட்டு கேட்டுப்பெறும் நிலை..
ஹூம்...

பெருங்காயம் said...

இந்த இடுகைக்கு ஓட்டுப் போடுவதால் என்னவாகப் போகிறது? இன்னும் பலருக்கு தெரியும். தெரிந்து...? அனுதாபம் வரும். இதைப்போன்றதோரு நிலைமையை தடுக்க நம்மால் ஆன செயல் என்ன?

Madumitha said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது.
அதுக்காக ‘சும்மா எழுதியதுக்கு”
என்று நம் எழுத்தை நாமே
குறைத்துச் சொல்லலாமா?