Friday, 19 March 2010
விதர்பா விவசாய படுகொலைகள்
போர் முனையை விட பேனா முனை கூரியது. ஆனால் இங்கே பேனா முனை எப்படி உள்ளது ஊடகங்கள் எப்படி உள்ளது .பேனா முனை நடிகைகள் பற்றி எழுதுகிறது.படுக்கை அறை வரை செல்கிறது. கட்டாயம் குமுதம் குங்குமம் ஆனந்த விகடனில் நடிகைகள் படம் இல்லை மாஸ் ஹீரோ படம் மட்டுமே அட்டையில் இருக்கும். நக்கீரன் reportor போன்ற பத்திரிகைகள் அப்பொழுது நடக்கும் செக்ஸ் crime அதாவது நித்யானந்தா, சங்கரர்,தேவநாதன்,ஜெயலக்ஷ்மி போன்றவர்கள் ஆக்கிரமிப்பார்கள். ஊடகங்கள் எதை காட்டுகின்றன அரை குறை ஆட்டங்கள் , கிரிக்கெட் ஆட்டங்கள், கலைஞர் பாராட்டு விழா.
விதர்பா விவசாய தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை ஊடகம் காட்டாமல் சச்சின் 200 அடித்ததை கொண்டாடும் ,அதை பற்றி எழுதினால் அதை தேச பற்று என்று சொல்லி அடிக்க வருவார்கள், எதிர்த்து பதிவெல்லாம் போடுவார்கள். எத்தனை ஊடகங்கள் இந்த விதர்பா விவசாயிகளின் தற்கொலையை பதிவு செய்தன.
விவசாயம் வீழ்ச்சி அடைந்ததால் 1997 முதல் 216000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் மொத்தம் 20000 கிராமங்கள் பஞ்சத்தால் பாதிக்கபட்டுள்ளன.
1.Gunwant Raut of Dhotra inWashim
2.Vithal Lende of Bishur in nagpur
3,Amol Matharmare of Mahatoli In Yavatmal
4.Kisan Patil of Katpur In Amaravati
5.Sandeepzole of Pahur In Yavatmal
6.Purshottam Dewase of Kakada In Wardha
7.Ankush Narayan Thakray of Nimtalai in Nagpur
8.Suryakant Ganpat Gokare of Aadkoli in Yavatmal
9.Satish Keshav Dhote of Bhabulgoan in Yavatmal
10.Smt.Vimal Abhiman Kowe of Zuli In Yavatmal.
11.Santosh Janardhan Bhisale of Koyali In Washim
12.Prahald Nimba Rathode of Mahagoan in Yavatmal
13.Raobhan Raoji Surpam of Morwa In Yavatmal
14.Praka Bhaukade of Udi In Akola .
15.Balaji Paikine 0f Marsud In Yavatmal
16.Prahal Gawande of Bhadkad In Akola .
இவர்கள் IPL அணியில் எடுக்கப்பட்ட வீரர்கள் அல்ல . தேச பற்று மிக்க சச்சின் டெண்டுல்கரோ அவருக்காக எழுதும் தேசப்பற்று மிக்க பதிவர்களோ அல்ல ,கடந்த வாரம் தற்கொலை செய்த விவசாயிகள்!!!!.கணக்கெடுப்பு சொல்கிறது மொத்தம் 15460 கிராமங்கள் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று, உணவு உடை இருப்பிடம் வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. அரசு அந்த பகுதியில் எந்த வேலையையும் செய்ய வில்லையாம். ஊடகங்களும் அரசும் கவனிக்காததால் நாம் தற்கொலை என்று சொல்வதை விட விவசாய படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும்.
தாஜ் ஹோட்டலுக்கு குண்டு வைத்தால் குரல் கொடுக்கும் சச்சின் அதே மாநிலத்தில் உள்ள விவசாயி தற்கொலைக்கு குரல் கொடுத்தாரா என்ன?????????? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.
விவசாய படுகொலை நடந்துகொண்டிருக்கிறது நாமெல்லாம்
விதர்பாவுக்கு பக்கத்தில் இருக்கும் மும்பையில் நடக்கும் மேட்ச் பார்த்து கை தட்டுகிறோம் என்ன நுகர்வு கலாச்சாரம்.ஆனால் இதை பற்றி சிலர் எழுதி கொண்டு தான் இருக்கிறார்கள்.பேனா முனையை அற்புதமாய் பயன்படுத்தியவர் சாய்நாத் . விதர்பா மக்களுக்காக ஊடகங்களிலே எழுதும் ஒரே ஜீவன். இப்பொழுது ஹிந்து பத்திரிகையிலே ரூரல் பகுதிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் சொல்கிறார் " ஊடகங்கள் மேல வாழும் 5 சதவிகித மக்களை பற்றி தான் எழுதுகிறார்கள், எனக்கு கீழே அடித்தட்டில் வாழும் ஐந்து சதவீகித மக்கள் பற்றி எழுத தான் விருப்பம் " என்று சொல்கிறார் . அவர் எழுத்தால் தான் விதர்பா விடயம் ஒரு அளவிற்கு கவனத்திற்கு வந்தது. இங்கே உள்ள ஊடகங்கள் என்ன காண்பிக்கின்றன நித்யானந்தா, IPL , நீயா நானா, ஊதாரி தனமான நடன போட்டிகள், வன்மம் வளர்க்கும் மெகா தொடர்கள் கொடுமை.
சாய்நாத் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் அதன் பெயர் "Every body loves a good drougt". பஞ்சத்தால் கஷ்டப்படும் மனிதர்கள் பற்றிய உண்மை கதைகள் காட்டாயம் வாங்கி படியுங்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
நீங்கள் சொல்வது உண்மைதான்...
ஆனா இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...
//"Every body loves a good drougt".//
இந்நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதா நண்பா?
தகவல் கொடுங்கள்.
எப்படி குரல் கொடுப்பார்கள் நண்பரே பிணம் சின்னிங்க இங்கே அடிப்படையே சிக்கல இருக்கு. உங்க பதிவு நல்ல இருக்கு வாழ்த்துகள்
நட்புடன்: குரு
www.rkguru.blogspot.com
IPL டிக்கேட் வாங்கவே காசு இல்லாம இருக்கோம் எங்கள போய் "Every body loves a good drougt" ......என்னா பொங்க...........
Pleasse change post title to "Free IPL Tickets" then only this message reach to all.......
மிகவும் வேதனைக்குரிய விஷயம். மிகப்பெரிய விவசாய தேசம் எங்கே போய் கொண்டிருக்கிறது?
இந்தியாவின் கடைசி விவசாயி மரிக்கும் போதுதான் ஒவ்வொரு இந்தியனும் உணருவான் பணத்தை உண்ண முடியாது என்று...
நியாயமான கோபம்.
அந்தப் புத்தகத்தினைப்
பிரசுரித்தவர்கள் முகவரி
சொன்னால் வாங்க இலகுவாய்
இருக்கும்.
இந்த விஷயம் பற்றிப்
பேசுபவர்களைப்
பரவலாக்குவோம்.
பேசாத சச்சினோ
சாதாரணனோ
இவர்களைத்
தவிர்ப்போம்.
இப்ப பாருங்க, கிருஷ்ணர் வாயைத் தொறந்தா இன்னா தெரிது? ஒரு பக்கம் புச்சு புச்சா உசுரு மொளக்கிது, இன்னொரு பக்கம் பொத்துப் பொத்துன்னு புட்டுக்கினு போவுது. வல்லரசுல இதெல்லாம் சகஜமப்பான்னு - ஈழத்துல எழவு உயிந்தப்போ கலிஞ்சரு - ஓரில் நெய்தல் கறங்க...அப்பிடின்னு சங்கப்பாட்டு கோட் பண்ணி பாடிக்கிறாரு, தெர்யாதா? நம்ம ஆளுக்கு எப்பயும் டாப் கிளாஸ்தான் புடிக்கும். பாட்டம் கிளாஸ் வாணாம், உவ்வாக்...
நண்பர்களே தமிழில் வந்துள்ளதா என்பது தெரியவில்லை கேட்டு சொல்கிறேன்
செய்தியின் அரசியல் இது தானோ?
சாய்நாத் போன்றவர்கள் சாமான்யர்கள் பற்றி எழுதுகிறார்கள்.
மீடியாவே இன்று விபச்சாரமாகி ( paid news) வருகிற நேரத்தில் அதை வெளியிட்ட “திஹிந்து” வெளியிட்டமைக்கு நன்றி கூறுவோம்.
இன்றைய தினம் தமிழகத்தில் கிராமம் நகரம் வித்தியாசங்கள் டிஜிட்டல் யுகத்தில் மறைந்து வருகின்றன எதில்?
எல்லா இரவுகளும் சீரியல்களால் மறைக்கப்ப்டுகின்றன. அப்படியே செய்திகள் மக்கள் கவனித்தால் அது பரப்ரப்பு மிகுந்துதவை/ உள்ளாக்கப்படுபவை. என்ன செய்வது. மக்களை அண்டை வீட்டில் என்ன நட்க்கிறது என்பதை கூட கவனிக்க விடாமல் டிஜிட்டல் யுகம் அழுத்தி வைத்திருக்கிறது.
என்று விடியுமோ???
வெ. நீலகண்டன் எழுதி வெளி வந்திருக்கும் 'ஊர்க்கதைகள்' படிச்சுப்பாருங்க.
கிராமமக்கள் தவிப்பு புரியும்.
க்ரிக்கெட்டு & அரசியல் வியாதிகள் ஒழிஞ்சால்தான் உருப்படுவோம்.
பொழுதுபோக்குக்கான ஒரு விஷயம் இன்னிக்கு பெரிய பணம் புரட்டும் தொழிலா ஆகிக்கிடக்கு. மக்கள் கள்ளுண்ட மனநிலையில்............
என்னவோ போங்க:(
தாஜ் ஹோட்டலுக்கு குண்டு வைத்தால் குரல் கொடுக்கும் - இது பிற நாட்டின் சதி, இதற்கு குரல் கொடுத்தால் அவன் தேச பக்தி மிக்கவன்.
அதே மாநிலத்தில் உள்ள விவசாயி தற்கொலைக்கு குரல் கொடுத்தா - இதற்கு காரணம் நம் நாடு, இதற்கு குரல் கொடுத்தால் அது அரசியல், குரல் கொடுப்பவன் தேசத்தூரோகி.
இதையெல்லாம் மறக்கத்தானே உங்களுக்காக இவ்ளோ செலவளித்து IPL போட்டிகளெல்லாம் நடத்துகிறோம்.
http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்
:((
இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...இதுதான் அரசியல்வியாதிய்களின் கொள்கை..இது மாற்றம் பெற என்ன செய்ய வெண்டுமென எவருக்கும் தெரிவதில்லை....
நாட்டின் முதுகெலும்பை ஒடித்து கிரிக்கெட் ஸ்டெம்ப் ஆக நட்டு விளையாடுவார்கள்...!!!
"உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. "
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், முற்றும் துறந்துவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட
அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது....
என்ற வள்ளுவப்பெருந்தகையின் வாக்கை இந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் திரு. சாய்நாத் அவர்களுக்கும் உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
உங்கள் வருத்தத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணராது த்ங்கள் லாபத்துக்காக மட்டுமே இயங்குகின்றன.விகடன்_குமுதம்-நக்கீரன் போன்ற கழிசடைகளை ஆதரிக்கும் தமிழர்கள் இருக்கும் வரை இது போன்ற பொதுப் பிரச்சினைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பது நூற்றுக்கும் குறைவானவர்கள்தான் என்ற பொருமலுடன் இந்தப் பதிவிற்கான உங்களுக்கும் சாய்நாத்திற்கும் என் நன்றி.கஞ்சி குடிப்பதற்கிலார் என்ற பாரதியின் வரிகள்தான் என்றும் நிதர்சனமான உண்மை.
http://www.indianjpsychiatry.org/article.asp?issn=0019-5545;year=2008;volume=50;issue=2;spage=124;epage=127;aulast=Behere. This also gives a indepth study . Very good ! I suggest you to read thru ..
ஒரு இயக்கத்தை கட்டமைத்து அதன் மூலம் போராட்டங்களும், வ்ன்முறைகளையும் செய்தாலே தவிற உலகமயமாக்கலால் மயங்கிக்கிடக்கும் நம் மக்களுக்கு உறைக்காது. உள்ளூர் மக்களும், இளைஞர்களும் சேர்ந்தாலே இதை நடத்தினாலே தவிற வேறு வழி காண முடியாது. அல்லது எத்தனையோ கிறித்தவ NGO க்கள் இருக்கிறது, அதனுடைய உதவியை நாடலாம். அமெரிக்க ஏகாதிபத்திய பணமாக இருந்தாலும் பரவாயில்லை, உயிர்க்ள் பிளைக்குமே...
Post a Comment