Tuesday 9 March 2010

என்னோடு வா வீடு வரைக்கும்






















அவ பார்க்கவே இல்ல நான் பார்த்துக்கிட்டே இருந்தேன் . ஒரு கடை அவ ஏதோ வாங்கிகிட்டு இருந்தா. நான் உள்ள நுழைஞ்சேன் "என்ன வேணும் " அப்படி கேட்டான் கடைக்காரன் "வாட்டர் பக்கெட்" அப்படின்னு சொன்னேன்.காச மட்டும் கொடுத்துட்டு வாட்டர் பக்கெட் கூட வாங்காம அவ பின்னாடியே வந்துட்டேன்.கடைசில பார்த்தா நான் வேலை தேடரப்ப இருந்த அதே தெருவுல தான் அவ வீடாம்.

அவ தினமும் காலைல ஒரு கடைல ஏதோ வாங்குவா, நான் அவள பார்க்கிற ஆர்வத்துல என்ன வாங்கறான்னு கவனிச்சதில்லை. நானும் ஒருவா பூத்ல போன் யாருக்காவது செய்வேன். அவ என்னைய மொறச்சு பார்ப்பா. அவ வீட தாண்டி தான் வெளில போனும் நான் போறப்ப எல்லாம் அவ வீட்ல இருக்காளான்னு பார்த்திட்டு போவேன். அது அவளுக்கும் தெரியும். அவளும் அதிகமா பார்ப்பா. பார்க்கிற பொண்ணுகள தான் திருப்பி திருப்பி பார்க்க தோணும். அவ வீடு இருக்கற இடத்துல ஒரு வளைவு இருக்கும் அந்த சந்து திரும்பிய சந்து
அது என்னமோ என் வாழ்க்கைய திருப்பி போட்டுச்சு.

நான் பார்க்கிறது அவங்க அம்மா அண்ணன் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு என்ன பார்த்தாலே மொறைப்பாங்க அவங்க அம்மா. அப்புறம் நம்பர் வாங்கினேன் யாருமே இல்லை என்று தெரிந்தால் பேசுவேன். ப்ரொபோஸ் பண்ணேன் அவளும் பேசிக்கிட்டே இருந்தா. பசங்க சொன்னாங்க அவ மோசாமான பொண்ணுன்னு அவங்க சொன்ன பிறகு அவங்களோட பேசறதில்ல. ஏனோ எனக்கு அப்படி கோவம் வந்திச்சு.

அவ வீடு திருப்பத்துல சில பாச்சுலர் பசங்க இருந்தாங்க ஒருத்தன் தெருவுலே உட்கார்ந்து இருப்பான் எனக்கு அவன பார்த்த எருச்சல் வரும். உங்களுக்கு செல்வராகவன் பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் நா பிரச்சனை இல்ல. எனக்கு என் காதலிய ரொம்ப பிடிக்கும் உனக்கும் பிடிக்கும் நா பிரச்சனை. அவன் ஒரு பஜாஜ் m 80 வண்டில ஏறி உக்காந்து இருப்பான். அவ வீடு முன்னாடி எனக்கா எரிச்சல் வரும்.

ஒரு நாள் குடை பிடிச்சிகிட்டு அவ வீடு முன்னாடி நிக்கற பஜாஜ் m 80 ல உட்கார்ந்து இருக்கான். நான் மழையா இருந்தாலும் நீச்சல் அடுச்சுக்கிட்டாவது அவள பார்க்க போவேன். அவனும் உட்கார்ந்து இருந்தான் கோவம் வந்திச்சு.

அப்புறம் என்னன்னாலாமோ பிரச்சனை வந்திச்சு. அவ பாட்டுக்கு சர்வ சாதாரணமா போய்டா?
அப்புறம் வேலைகிடைக்காமல் சில காலம் அப்புறம் ஒரு வேலை கிடைச்சு ஒரு வழியா வாழ்க்கையை ஓட்டுகிறேன். அவ ஏதோ அமெரிக்காவுல படிக்காறாங்க. என்ன கொடுமைனா அவ படிக்க போன நேரம் வாரணம் ஆயிரம் படம் வந்திச்சு. "அமெரிக்க இங்க தாண்ட இருக்கு" என்று சொன்னவுடனே அதற்காகவே நான் படத்த ஆறு முறை பார்த்தேன். மார்க்ஸ் பிடித்த எனக்கு அமெரிக்கா பிடிக்காது. ஆனா அந்த படம் பார்த்தவுடனே பிடிச்சிருந்தது. நான் கூட போகலாம்னு நினைச்சேன் ஆனா வாழ்கை வேற சினிமா வேற. இருந்தாலும் " அமெரிக்க இங்க தான் இருக்கு" அப்படின்னு வாரணம் ஆயிரம் படத்துல சொன்ன வசனம் என் காதுக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு.


சரி நான் யாரு அப்படின்னு கேட்குறீங்களா ................நான் தான் கார்த்திக் விண்ணை தாண்டி எல்லாம் வர வேண்டாம் வீட்டுக்கு வந்த போதும் அப்படின்னு
சொல்லிருக்கேன்.நான் அதே தெருவுல தான் இருக்கேன் கடைசியா வந்தப்ப அவ பார்த்தா நான் பார்க்கவே இல்ல....!

10 comments:

சசிகுமார் said...

நல்ல ரசனையோடு எழுதி உள்ளீர்கள் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

இனியாள் said...

நல்லா இருக்கு, உங்க கதை தான் போல.

மா.சதீஷ் குமார் said...

சூப்பர் சூப்பர் ..... நல்லா இருந்தது...

இது உண்மையா இல்ல உங்க கற்பனையா... உண்மைனா USக்கு போகவேண்டாம். கற்பனைனா USக்கும் போயிட்டு வந்துருங்க.......... :)

இளந்தமிழன் said...

இது உன்னோட லவ் ஸ்டோரி - ன்னு எனக்கு தெரியும் (ஏன்னா 2006 -அப்போ நானும் உன் ரூம்தான்) ... விடுறா அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கல.

த்ரிஷா இல்லைன்னா திவ்யா !

அறிவு GV said...

இப்டி தான் சில படங்களும், பாடல்களும் நம்மை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும். உஷாரா இருந்துக்குங்க பாஸ்.
நீங்கள் இருவரும் மீண்டும் சேர வாழ்த்துக்கள். உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும்..! :)

க.பாலாசி said...

//இளந்தமிழன் said...
இது உன்னோட லவ் ஸ்டோரி - ன்னு எனக்கு தெரியும் (ஏன்னா 2006 -அப்போ நானும் உன் ரூம்தான்) ... விடுறா அந்த பொண்ணுக்கு கொடுத்து வைக்கல.
த்ரிஷா இல்லைன்னா திவ்யா !//

நண்பனாக நானும் வழிமொழிகிறேன்...

ச ம ர ன் said...

//பார்க்கிற பொண்ணுகள தான் திருப்பி திருப்பி பார்க்க தோணும்//

super point !!! :)

சிவாஜி சங்கர் said...

//இளந்தமிழன் said...
த்ரிஷா இல்லைன்னா திவ்யா !//

திவ்யாவும் இல்லைன்னா.... ஆவ்வ்வ்வவ்..

கதை நல்லா இருக்குதுங்க..!

Anbu said...

:-))

Kiran said...

கார்த்தி இது உங்க கதை மாதிரி இருக்கு