Saturday, 13 March 2010

வினவு வினவு செய்















நான் எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி அமைக்க உதவியது வினவு.எல்லாவற்றையும் பாசிடிவாக பார் என்று சொல்பவர்கள் மத்தியில் உண்மையை உண்மையாக பார் விவாதம் செய் என்று சொல்லும் தளம். என் படம் பார்க்கும் முறை மாறியுள்ளது , முன்பெல்லாம்
அழகியல் சார்ந்த விடயங்களை இலக்கியம் என்று நினைத்து கொண்டிருந்தேன், சாரு ராமகிருஷ்ணன் அதிகம் படித்தேன் , தோழர் ஒருவர் சொன்ன பிறகு வினவு படிக்க ஆரம்பித்தேன். மக்களுக்கு பயன்படாதா இலக்கியம் இலக்கியம் அல்ல. இலக்கு இல்லாத இலக்கியம் இலக்கியம் அல்ல என்று புரிந்தது.

சினிமாவிலே எனக்கென்று ஒரு புரிதல் இருந்தது ."சினிமா திரை விலகும் போது" என்ற புத்தகம் படித்தேன் சினிமா பற்றி அரசியல் விமர்சனங்கள். எதற்கு சினிமா கலை என்று கேள்வி கேட்கலாம். ஒரு கலையில் நாம் எதை ரசிக்கிறோமா அது நம் சமூதாயத்தை வெளிப்படுத்தும். உதாரணமாய் ஆணாதிக்க வசனத்துக்கு கைதட்டும் ரசிகர்கள் ஆணாதிக்க சமூகத்தை
பிரதிபலிக்கிறார்கள். கலை நம் ரத்தத்தில் ஊறி இருப்பது. ஒரு நல்ல ரசனை இல்லாத சமூகத்தை ஏமாற்றி விடலாம். நம் அரசியல் சூழலுக்கு நம் கலை கூட ஒரு காரணம். அதனால் கலை இலக்கியம் சினிமா போன்றவை ஆரோக்கியமாய் இருக்க வேண்டும் அதனால் அதை பற்றி விமர்சனங்கள் கட்டாயம் தேவை. அது வினவு ரோம்பத்தெளிவாய் விமர்சனம் செய்கிறது.

அரசியல் நிகழ்வுகளை மூன்றாம் கண் கொண்டு பார்க்கிறது. "நாட்டாமை சொம்ப தூக்கிக்கிட்டு வந்துட்டாரு" என்று கற்கள் விழுந்தால் கூட அவர்களிடம் விவாதம் செய்து அரசியல் என்ன எப்படி பார்க்க வேண்டும் என்று என்னை போன்ற கத்துகுட்டிகளுக்கு கற்று கொடுக்கிறது.
எனக்கு தெரிந்து அவர்கள் "ஆயிரத்தில் ஒருவன்" படம் விமர்சனம் தவிர மற்ற எல்லா கட்டுரைகளும் அருமை என்றே சொல்லுவேன். விமர்சனம் வைத்தால் பதில் சொல்ல வேண்டும்??? அதை விடுத்து பிரபலங்களை எதிர்க்கிறார் எதிர்மறையாய் எழுதுகிறார் என்று சொல்லக்கூடாது. சரி இதே போல் பிரபலங்களை பாராட்டினாலும் மிக சிறந்த இடத்திற்கு வரலாம். எனக்கு தெரிந்து சமீபத்தில் பெரிய பதிவரானவர் அஜித் பற்றி எழுதியாதால்
60 வாக்குகள் வாங்கினார் . கேள்வியில் பிரபல பதிவர்களில் 100 ரேங்க் பின்தங்கி இருந்தவர் இன்று 20 ரேங்க் அருகில் உள்ளார். அவர் என்னை விட பிரபலம்.

ஏன் பிரபலங்களை எதிர்க்கும் போது உங்களுக்கு வரும் கோபம் அவர்களை பாராட்டும் போது வரவில்லை. சரி அப்படியே விமர்சித்தாலும் அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று அதை பற்றி விவாதம் செய்ய வேண்டியது தானே. அரசியல் விமர்சனமோ சினிமா விமர்சனமோ மற்று விமர்சனம் வளர்ச்சிக்கு தேவை. பிரபலங்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள்.
நான் தவறு செய்வதை விட கமலஹாசன் ஜாதி வெறியை தூண்டிவிடுவது போல் படம் எடுத்தால் அதற்க்கு தாக்கம் அதிகம்.

ரஜினிகாந்த் இவ்வளவு பேசிவிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யப்படுவார். சச்சின் நாட்டுப்பற்று பற்றி பேசிவிட்டு பூச்சி கொல்லி மருந்துகளான பெப்சி விளம்பரத்திற்கு வந்தால் விமர்சனம் செய்ய தான் படுவார். ஏன் சச்சின் அதே மகாராஷ்ட்ராவில் நடந்த விவசாய படுகொலைகள் பற்றி பேசுவதில்லை, தாஜ் ஹோட்டல் என்றால் வருகிறார். இந்த பார்வை எல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தது வினவு .
நான் சமீப காலமாய் சில காதல் பதிவுகள் போட்டிருந்தேன் எதற்கு என்றால் காதல் எல்லாம் நான் சாதரணமாய் எழுதினாலே வரும் , ஒரு விடயமும் இல்லாமல் நான் குறை சொல்லி பதிவு எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை . நான் எழுதுவது குறை சொல்வதற்கு அல்ல விமர்சனங்கள் , நான் ஜால்ரா அடித்தால் கூட பிரபல பதிவர் ஆகலாம்.

http://www.vinavu.com

6 comments:

ஹாய் அரும்பாவூர் said...

வெண்ணிற இரவுக்கு வணக்கம்

உங்கள் எழுத்தின் மாற்றமும் சரி இப்போது எழுதும் சமுகம் சார்ந்த பதிவுகளும் என்னை கவர்ந்து உள்ளது

நானும் மாற வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் மாறுவேன் என்ற நம்பிக்கையில்

ஆரம்ப கால என் பதிவுக்கு நீங்கள் எழுதிய பின்னுட்டமும் சரி
என்னை ஆதரவு தந்த ஆரம்ப கால Followers நீங்கள் தான் என்றும் நன்றியுடன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//எனக்கு தெரிந்து சமீபத்தில் பெரிய பதிவரானவர் அஜித் பற்றி எழுதியாதால்
60 வாக்குகள் வாங்கினார் . கேள்வியில் பிரபல பதிவர்களில் 100 ரேங்க் பின்தங்கி இருந்தவர் இன்று 20 ரேங்க் அருகில் உள்ளார். அவர் என்னை விட பிரபலம்//

நண்பரே எதை எழுத வேண்டும் என எழுதுபவரே தீர்மாணிக்க வேண்டும்.. எல்லோரும் உங்களை போலவே நாட்டின் மீது மிக பற்றுகொண்டவராக(எழுதுவதில் மட்டும்) இருக்க முடியுமா?

அது என்ன ஒப்புமை? என்னை விடவும்? ஹீம்ம்ம்ம்ம்!!!!

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

sweet said...

huh i think u r MAD

crazy guy

i love rajini, vijay, simbu, surya

don't criticize anybody

do ur job first

loosu

madhumidha

sweet.person321@gmail.com

Bala said...

நண்பரே நீங்கள் விமர்சனம் செய்வதை கண்டிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. ஒரு விஷயம் எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்து விட்டால் பிரச்சினையே இல்லை. ஆனால் அது நடக்காத விஷயம். உங்களுக்கு வினவு உண்மையை பார் என்று கத்துக்கொடுத்தது என்று கூறி உள்ளீர்கள் இந்த விஷயத்தில் ஏன் அதை செய்ய மறுக்கிறீர்கள்? நாம் நம்பும் ஒரு விஷயத்தை கேவலமான வார்த்தைகளால் ஒருவர் அர்ச்சனை செய்யும் பொது உணர்சிகளை அடக்கி கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? அப்படி என்றால் "ஜட்டி" பதிவுக்கு பின் சில நாள் நீங்கள் காணாமல் போன காரணம் என்ன? உங்களாலேயே கடுமையான வார்த்தைகளை தாங்க முடிய வில்லை என்றால், இந்த முட்டாள் சமூகத்தின் ஒரு பிரஜை எப்படி பக்குமவம் அடைந்திருக்க வேண்டும் என்று நினைகிறீர்கள்?

நீங்கள் எழுதி வரும் பல பதிவுகள் என்னை சிந்திக்க வைத்திருக்கின்றன ஆனால் உணர்ச்சிகரமாக எழுதுகிறேன் என்று கடுமையான சொற்களை வீசிவிட்டு ஐயோ என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று புலம்புவதில் என்ன அர்த்தம்? பொசிடிவாக பார் என்று சொல்வது உண்மையை கண்டு கொள்ளாதே என்று அர்த்தம் அல்ல. muthalil இதை புரிந்து கொள்ளுங்கள். கருத்தோடு மோதுங்கள் என்று இதற்க்கு நீங்கள் பதில் போடுவீர்கள். உங்களை விமர்சிப்பவர்கள் எல்லோரும் உங்கள் எதிரிகள் அல்ல. எனக்கு அவ்வளவாக கோர்வையாக எழுத வராது. இருந்தும் இவ்வளவு பொறுமையாக உங்களுக்கு பின்னூட்டம் இடுகிறேன் என்றால் உங்கள் சிந்தனைகள் என்னை கவர்ந்ததலேயே அன்றி உங்களின் வார்த்தை பிரயோகம் ஏற்படுத்திய எரிச்சல் அல்ல. இன்னும் எத்தனை பதிவுக்குதான் சச்சினை இழுத்துக்கொண்டு அலைய போகிறீர்கள்?.....

ரவி said...

:))