Thursday 11 March 2010

தலையில் ஒரு கவசம்















விபச்சாரிகள் விற்பனைக்கு...........
எந்த அழகி விலை போவாள் ................
எந்த மாடு சிறந்த மாடு .............
போல் ஏலம் விடப்பட்டனர் வீரர்கள்
என்று சொல்லிக்கொள்கிறவர்கள்
ரெண்டு கோடி மூணு கோடி என்று
விலை போயினர் தேசப்பற்று என்று சொல்லிக்கொள்ளும்
வீரர்கள் .................
பேட்டில் MRF நெஞ்சில் அடிடாஸ்...........
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விளம்பரம்
செய்யும் தேசப்பற்று வீரன் தலை ஹெல்மெட்
கவசத்தில் மட்டும் இந்திய கொடியை வைத்து இருந்தான்....!
விளம்பரத்திற்கு விலைபோகிறாயே...............
என்று கல் எரிபவர்களை சமாளிக்க ......
இந்திய கொடி போட்ட கவசத்தை தலையில் அணிந்து
கொண்டான்..................!
ரிலையன்ஸ் போன்ற முதலாளிகளுக்கு
விற்பனை செய்ய உதவியது விளையாட்டு ........!
ஊடகங்கள் டோனி லக்ஷ்மிராய்
படுக்கை அறை வரை சென்றது ............!
ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்ய
அழகிகள் குத்தாட்டம் போட்டனர் ...........!
இவர்களுக்கு தேசப்பற்று
என்பது தலையில் அடிவிழமால் இருக்க ஒரு
கவசம்..!

10 comments:

க.பாலாசி said...

ம்ம்ம்.......

Anonymous said...

கேவலமான விளையாட்டு இந்த முட்டாள்கள் என்னிக்கு .......என்னத்த சொல்லி என்ன.......

தமிழ்க்குமரன் said...

சூப்பர்

தமிழ்க்குமரன் said...

சூப்பர்

ரமேஷ் கார்த்திகேயன் said...

நாட்டு பற்ற காட்ட என்னங்க செய்யணும் .
நீங்க என்னலாம் செய்தீங்க

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த பதிவே நாட்டுப்பற்று இருக்கறதாலே தான் வந்திருக்கு.....................
நான் என்ன செய்தேன் என்பதை பற்றி பதிவு போடல ...............
நாட்டுப்பற்று கிரிக்கெட்ல இல்ல அது தான் பதிவின் நோக்கம் .........................................

ரமேஷ் கார்த்திகேயன் said...

//
இந்த பதிவே நாட்டுப்பற்று இருக்கறதாலே தான் வந்திருக்கு//

அதே மாதிரிதான் அவர்களுக்கும் நாட்டு பற்றோ [வீட்டு பற்றோ] இருக்க போய் தான் கிரிக்கெட் [விளம்பரதிலையும் ]
ஆடுறாங்க.


சொல்லுதல் யாருக்கும் எளியவாம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

ரமேஷ் கார்த்திகேயன் said...

//நாட்டுப்பற்று கிரிக்கெட்ல இல்ல //
அது நிஜம் தான் .
ஆனால் நாட்டு பற்ற எப்படி காட்டலாம்
சொல்லுங்க

Madumitha said...

அதையும் மீறி
ஒரு அடி
விழுந்துருக்கு
உங்கள்
கவிதை மூலமாக.

Srikanth said...

தேசப்பற்று என்பது தலையில் அடிவிழமால் இருக்க அல்ல!
அது இந்த விளம்பரங்கள் மக்களிடம் புகுத்துவதற்கு!