Wednesday 9 February 2011

ஜூனியர் விகடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயத்தில் எப்படி கேட்டு இருக்க வேண்டும்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி ஜூனியர் விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று ஆர் கே சதீஷ் குமார் தளத்தில் ஒரு செய்தி படித்தேன் . ஊடகங்கள் மக்களிடம் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாய் இருக்கிறது அந்த சர்வே .


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா கைது செய்யப்பட்டது?

தாமதமான நடவடிக்கை...

2.ராசாவின் கைது வரும் சட்டமன்ற தேர்தலில் ...

எதிரொலிக்கும்

3.ராசா கைதுக்கு பிறகும் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தொடர்வது தார்மீக ரீதியில் சரியா?
-சரியில்லை

4.ராசா கைது நடவடிக்கை பிறகு தி.மு.க -காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் இணைந்து மனம் ஒன்றி பணியாற்றுவார்களா?

--இனி நடக்க போகும் சம்பவங்களை பொறுத்து அமையும்

5.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய குடும்ப ஆதிக்கம் இருந்திருக்குமா?
-நிச்சயம் இருக்கிறது...

6.ராசாவுக்கு ஆதராவக தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் போட்டிருப்பது ,தொண்டர்களை உற்சாகபடுத்துமா,சோர்வடைய வைக்குமா?
-கலவையாக இருக்கும்

7.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கும்...
-இருக்கிறது (அதிகமானோர் இதை குறிப்பிடுகிறார்கள்)

8.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை....

அரசியல் செய்கிறது (அதிகமானோர் கருத்து)


நன்றி ஆர் கே சதீஷ் குமார்


கேள்விகள் எப்படி இருந்து இருக்க வேண்டும்

1 எதற்கு பொது சொத்துக்களை விற்க வேண்டும் ?

2 ஊழலில் ராசாவிற்க்கு மட்டும் தான் பங்கா , ஆதாயம் அடைந்த டாட்டா போன்ற முதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை .

3 நிரா ராடிய ஒலி நாடா சொல்கிறதே இந்த அமைச்சரே முதாலாளிகளின் தயவால் தான் நியமிக்கப்பட்டார் என்று , அப்படி இருக்க அவர்களுக்கு சாதகமாய் தான்
இருப்பார் என்று? இப்படி முதலாளிகள் அமைச்சர்களை முடிவு செய்தால் நம்மை யார் ஆள்கிறார்கள் .

4 இந்த ஊழலில் மக்கள் பணம் உள்ளதா ? யாருடைய பணம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது ?

5 ராஜா இல்லாமல் வேறு யாரவது அமைச்சராக இருந்திருந்தால் இந்த ஊழல் நடைபெறாது என்கிறீர்களா ?


இப்படி கேள்விகளை ஏன் விகடன் கேட்கவில்லை . தனியார்மயம் தான் ஊழலின் ஊற்றுக்கண் என்று
அவர்களுக்கு தெரியாதா ? ஊழலில் அரசியல்வாதிகள் பங்கு மட்டும் இருக்கா முதலாளிகள் பங்கு இல்லையா ?
அது விகடனுக்கு தெரியாது . ஏன் இந்த முற்ப்போக்கு முகமூடி ? மக்கள் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற கேள்வியை விட்டு விட்டு , இது தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற மொன்னையான கேள்விகளை கேட்பதன் உள்ளர்த்தம் என்ன , மறைந்திருக்கும் அரசியல் என்ன ? இந்த ஊடகங்கள் முதலாளித்துவ ஊடகங்கள் முதலாளிகளை காட்டிக்கொடுக்காது .

5 comments:

குரங்கு பாண்டி said...

//////// ஜூனியர் விகடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயத்தில் எப்படி கேட்டு இருக்க வேண்டும் ////


சொல்லிட்டாருயா பீபுள் மார்ச் எடிட்டரு ...,

குரங்கு பாண்டி said...

//////// ஜூனியர் விகடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயத்தில் எப்படி கேட்டு இருக்க வேண்டும் ////


சொல்லிட்டாருயா பீபுள் மார்ச் எடிட்டரு ...,

குரங்கு பாண்டி said...

//// Your comment has been saved and will be visible after blog owner approval. /////


கருத்து சுதந்திரம் ...,மக்கள் சுதந்திரம் ன்னு பேசுற வெண்ணைகள் சாரி சாரி ..,வெண்ணிற இரவுகள் இந்த மாதிரி பண்ணலாமா ..,

குரங்கு பாண்டி said...

கமெண்ட் மாடரேஷன் போட்டு எதுக்கு நீ அரசியல் பதிவ எழுதுரே ..

குரங்கு பாண்டி said...

எப்படியும் நீ வாந்தி தான் எடுத்திருப்பே ..,மைனஸ் ஒட்டு போட்டு கிளம்பறேன்