Wednesday 16 February 2011

கவின்மலருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவின்மலர் உங்களின் "பத்திரிகை துறைக்கு முன்னும் பின்னும் " என்ற கட்டுரை படித்தேன் . விருப்பப்பட்ட வேலையை தேர்ந்தெடுத்து வேலை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் . ஆனால் உங்களிடம் சில கேள்விகள் இருக்கிறது ? கட்டுரை முடிக்கும் பொழுது "Thanks To Recission " என்று எழுதிருக்கிறீர்கள்? ஒரு பிரச்னையை தன்னை மைய்யப்படுத்தி பார்க்கும் பார்வை இது . என்னுடைய நண்பர்கள் பலர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் மென்பொருள் துறையிலே இன்று வேலை செய்பவர்கள் , அவர்களை
RECISSION பாதித்தது , RECISSION சமயத்தில் தற்கொலை எல்லாம் செய்து கொண்டார்கள் என்று தினசரிகளில் செய்திகள் வந்ததுண்டு . நீங்கள் மார்க்சியம் தெரிந்தவர் , ஒரு பிரச்னையை தனிமனிதனிடம் இருந்து அணுகுவதா ? இல்லை சமூக நிலையில் இருந்து அணுகுவதா ? கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன் ? ஊரையே பாதித்த RECISSION உங்களை பாதிக்கவில்லை என்றால் , உங்களுக்கு மாற்றிக்கொள்ள வேறு வழி உள்ளது , மாற்றிக்கொள்ள முடியாதவர்களுக்கு ?

ஒரு விவசாயி ஒரு பண்ணையாரின் கீழ் வேலை செய்கிறான் ஆனாலும் அவன் வேலையை ரசித்து செய்கிறான்
இதில் மக்களுக்கு ஏதும் தீங்கு இல்லை , எனக்கு இலக்கியம் தான் பிடிக்கும் என்று அவன் ஓட முடியாது அவனுக்கு வேறு மாற்று இல்லை . சரி நீங்கள் பத்திரிகை துறையை தேர்வு செய்திருக்கிறீர்கள் . ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதை விட இங்கே வளைந்து கொடுத்து போவது அதிகமாய் இருக்கும் . நாடே அறிந்த கேப்பமாரியை நல்லவன் என்று எழுதச்சொல்வார்கள் ?எழுதித்தான் ஆக வேண்டும் இல்லை என்று மறுக்க முடியுமா. இங்கே சுதந்திரமாக தான் செயல்படுகிறீர்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? பொது புத்தியில் என்ன உள்ளதோ, அதை அறுவடை செய்ய வேண்டும் ,ஆள்பவர்களுக்கு முதலாளிகளுக்கு ஆதரவாய் எழுத வேண்டும் ? தான் நிற்க வேண்டும் என்பதற்காய் தன் கொள்களை விட்டுக்கொடுக்க வேண்டும் . இதற்க்கு பெயர் பிழைப்புவாதம் ,இதற்க்கு மென்பொருள் துறையில் இருப்பவர் எவ்வளவோ மேல் .

அந்த கட்டுரையில் ஒரு வரியில் "ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு யாருக்காகவோ டாட் நெட்டையும், ஏ.எஸ்.பி.யையும், ஜாவாஸ்கிரிப்டையும் படிக்க வேண்டியதில்லை" இப்படி யாருக்காகவோ என்று எழுதிருந்தீர்கள் , இப்பொழுது அதே யாருக்காகவோ எந்த முதலாளிக்காகவோ , எந்த கட்சி சார்புடனோ தானே எழுத முடியும் ,மக்களுக்காகவா எழுத முடியும்.


http://kavinmalar.blogspot.com/2011/02/blog-post.html

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice post

ராம்ஜி_யாஹூ said...

nice post

பத்மா said...

true

ராம்ஜி_யாஹூ said...

As told by Peter Drucker, whether you work as a local church cashier or as Research Head in General Motors , its your attitude, interest, willingness are only matter

ஆயிரத்தில் ஒருவன் said...

'' நாடே அறிந்த கேப்பமாரியை நல்லவன் என்று எழுதச்சொல்வார்கள் ?எழுதித்தான் ஆக வேண்டும் இல்லை என்று மறுக்க முடியுமா. இங்கே சுதந்திரமாக தான் செயல்படுகிறீர்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? பொது புத்தியில் என்ன உள்ளதோ, அதை அறுவடை செய்ய வேண்டும் ,ஆள்பவர்களுக்கு முதலாளிகளுக்கு ஆதரவாய் எழுத வேண்டும் ? தான் நிற்க வேண்டும் என்பதற்காய் தன் கொள்களை விட்டுக்கொடுக்க வேண்டும் . இதற்க்கு பெயர் பிழைப்புவாதம்"

மிகவும் சரியான வார்த்தை கார்த்தி. என் நண்பன் கூட பிரபல நாளிதழில் ஒன்றில் செய்தியாளராக வேலை செய்கின்றான் இதே கேள்வியை நானும் பல முறை கேட்டிருக்கிறேன். தொழில் வேறு கொள்கை வேறு என்று மழுப்பலாக கூறுவான். அவனால் சிரிப்பை மட்டுமே சில நேரங்களில் பதிலாக அளிக்கமுடிந்தது.

kuthu said...

இவருக்கு recession-ல வேலை போகலன்னா பத்திரிக்கைக்கு வந்திருப்பாரா?