Tuesday 3 November 2009

நான் அவன் இல்லை























ஆன்ம விசாரனையில் இறங்கினேன்
"நான்" ""என்" என்பதை எனக்குள்
விசாரித்துக்கொண்டிருந்தேன் .....
என் கவிதை என்றேன் கர்வத்தில் .....
என் சதை என்றேன் தங்கையிடம் .....
என் விதை என்றேன் அம்மாவிடம் ....

என் பேனா ...
பேனாவும் நானும் ஒன்றா?
என் வீடு
வீடும் நானும் ஒன்றா?
"என்" முன்னால்
வந்தால் அது நான் அல்ல ......
மனது விழித்தது...........

"என்" உடல் ....................
உடலும் நானும் ஒன்றா............
கவிதையில் தேடுகிறேன் ...........
விதை தெரியவில்லை ..........
"டேய் கார்த்திக்" என்றார் அப்பா .....
"நான் அவன் இல்லை " என்றேன் ....

12 comments:

சயந்தன் said...

ஆன்மவிசாரணைகள், தனக்குள்ளான தேடல்கள்..நான் உயிருடன் இருக்கும்போதே என் பெயர்செத்து, நான் செத்துப்போகும் பொழுதுகள், அற்புதமான தேடல் கவிதை நண்பரே..வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை ...

ஹேமா said...

நான் என்பதைத் தேடத் தொடங்கினாலே போதும்.வாழ்வின் மாயை புரியும்.

velji said...

/என்" முன்னால்
வந்தால் அது நான் அல்ல ..../
-அருமை.

பிரபாகர் said...

அப்போ கார்த்திக் யாரு?

நல்லருக்கு கார்த்திக்...

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி சயந்தன் ஸ்டார் ஹேமா வேல்ஜி பிரபாகர் .........
நான் என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன்

புலவன் புலிகேசி said...

அப்பா உங்களை எப்படி கூப்புடறது. நல்லத தேடல் கார்த்திக்..........

வெண்ணிற இரவுகள்....! said...

அவர் கார்த்திக் என்று கூப்பிட்டாலும் கார்த்திக் நான் அல்ல
அது என் பெயர் .....பெயரும் நானும் ஒன்றல்ல

ஊடகன் said...

//"என்" உடல் ....................
உடலும் நானும் ஒன்றா............//


என்னை பாதித்த வரிகள்.............

நீங்கள் கூறியது ஆன்மா(உயிர்) வேறு உடல் வேறு , மரணத்துக்கு பின் இரண்டும் வேரே.....

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் அதனால் தான் ஆன்ம விசாரனை என்று சொன்னேன் ஊடகன்

rajeshkannan said...

நாளுக்கு நாள் உங்களின் (பேச்சிலும் & எழுத்திலும்) முனேற்றங்கள்
தெரிகிறது

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ராஜேஷ்