Sunday 8 November 2009

மனிதர்களோடு பேசாமல் செல் போனுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்


















மின்சார ரயில் போய்கொண்டிருந்தது.இயந்திரத்தோடு இயந்திரமாய் நானும் நகர்ந்து கொண்டிருந்தேன்.பார்க் ஸ்டேஷன் நின்றது ரயில், பூகம்பம் வந்தது போல் மக்கள் பதட்டமாக ஓடினர்.ஏன் ஓடுகிறார்கள்????எதற்கு ஓடுகிறார்கள்!என் முகத்தில் பய ரேகை ஓடிக்கொண்டிருந்தது.மனிதன் எந்திரன் ஆகி விட்டானா?????

இதைப் பற்றி மனது குடைந்த போது,நான் எடுக்க நினைத்த குறும்படம் ஒன்று நினைவிற்கு வருகிறது.காலை ஐந்து மணி mansion வாசம்,கதாநாயகன் அலார ஒலியிலே எழுகிறான்.மின்விசிறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.அவன் தொலைக்காட்சியை தொடங்கிவிட்டு காலை வேலைகளை பார்த்துக் கொண்டே செய்யத் தொடங்குகிறான். சட்டையை அயன் செய்கிறான்,குளிக்கிறான் அலுவல் செல்கிறான்......

வண்டியின் இரைச்சல் உள்ளே நடக்க ஆரம்பிக்கிறான்.வண்டிகள் எழுப்பும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.மின்சார ரயிலை பிடிக்கிறான்,அந்த ரயிலின் சத்தம் பிண்ணனி இசை அவன் காதிற்குள் அமைத்துக்கொண்டே இருந்தது.புகை வண்டியில் படித்துக்கொண்டிருக்கும் சிறுவர்களை காண்கிறான்.சிலர் காலை நாளிதழ்கள் படித்துக்கொண்டிருந்தனர்.தன் மகனின் அகவலி புரியாதவர்,ஹிந்து பேப்பரை புரிந்து கொண்டிருந்தார்.பார்க் ஸ்டேஷன் அலை போல் சில மக்கள் ரயிலில் இருந்து வெளி வாங்கினாலும்,அதே அலை போல் மக்களை ரயில் உள் இழுத்துக் கொண்டது.

ஒருவன் முகத்திலும் கலை இல்லை,வாழ்வை பற்றிய பயம் அப்பிக்கொண்டிருந்தது.
மின்சார ரயில் ஒரு சிறை கூடத்தின் நகர்வு போலவே அவனுக்கு தோன்றிற்று. அலுவல் செல்கிறான்,access card செலுத்தி தன் வரவை பதிவு செய்கிறான்.தன் கணினியோடு உரையாட ஆரம்பிக்கிறான்.நடுவில் சில மேல்லோட்டமான புன்னகை உதிர்க்கிறான்.அலுவல் விட்டு வெளியே வருகிறான்.கட்டிடங்கள் எல்லாம் அவனை விட உயர்வாய் இருக்கிறது.கட்டிடங்கள் தன்னை அமுக்குவதாக யோசிக்கிறான்.

இரவுப் பொழுது நடந்துக்கொண்டிருக்கிறான். கேமரா ariel view வருகிறது(மிகவும் மேலே).ஆட்கள் தெரியவில்லை வெறும் கட்டிடங்களும் ஒளிகளும் மட்டுமே மின்னிக்கொண்டிருந்தன. மனிதன் எங்கோ தொலைந்து விட்டான்.படம் மௌனத்துடனும் நவீனத்துவத்தின் சில சத்தங்களுடனும் முடிகிறது. சத்தங்களுடன் மௌனமாய் முடிகிறது.

நாம் ஓடவில்லை என்றால் தோற்றுவிடுவோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம் தோற்றுக்கொண்டே! நாம் மனிதர்களோடு பேசாமல் செல் போனுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

14 comments:

புலவன் புலிகேசி said...

குறும்படம் நன்று.....

கலகலப்ரியா said...

கசப்பான உண்மை...!

விழியில் விழுந்தவன் said...

/*கட்டிடங்கள் தன்னை அமுக்குவதாக யோசிக்கிறான்.*/
உங்கள் கதையில் ஒரு தன்னம்பிக்கையில்லாத்தனம் தெரிகிறது.

ஸ்ரீராம். said...

இயந்திர மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட வயதில் இதெல்லாம் தோன்றும்!

வெண்ணிற இரவுகள்....! said...

dostovesky,gorky, s ramakrishnan அவர்கள் சொல்லாததை நான் சொல்லவில்லை.....கலைஞன் கண்ணாடி மாதிரி காலத்தை பிரதிபலிக்க வேண்டும்.இந்தச் சூழலில் எவனுமே தன்னம்பிக்கையோடு இருக்க மாட்டான்

வெண்ணிற இரவுகள்....! said...

வயது முக்கியம் அல்ல பக்குவமே முக்கியம் ஸ்ரீராம் .எண்பது வயது ஆனாலும் சிலர் பக்குவ படுவதில்லை

ஊடகன் said...

//நாம் ஓடவில்லை என்றால் தோற்றுவிடுவோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம் தோற்றுக்கொண்டே!//

நானும் எந்திரனே .............

வெண்ணிற இரவுகள்....! said...

ஊடகன் எந்திரனாய் விட்டீர்களா

vasu balaji said...

இதுதான் யதார்த்தம். பிடித்திருக்கிறதோ இல்லையோ வாழ்ந்து கழிக்க வேண்டும்.:)

ஈரோடு கதிர் said...

//நாம் ஓடவில்லை என்றால் தோற்றுவிடுவோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம் தோற்றுக்கொண்டே//

மிகவும் பிடித்த வரி

பிரபாகர் said...

//மனிதர்களோடு பேசாமல் செல் போனுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.//

யதார்த்தமான உண்மை. ஊடகங்களுக்கும், செல்போனுக்கும், இன்டர்நெட் க்கும் நிறைய செலவழித்து அருமையான உறவுகளை இழக்கிறோம்...

நன்று கார்த்திக்...

பிரபாகர்.

Unknown said...

அத்தனையும் கசக்கின்ற உண்மை...... குறும்படம் அருமை.......

Abdul Rahman said...

definitely truth

கலையரசன் said...

கரைக்டா சொன்னீங்க பாஸ்...