Friday 13 November 2009

தடுக்கி விழுந்த கவிதை



"உனக்கு நல்லது
நடக்கும்" என்று அம்மா சொன்னாள்....
திரும்பிப் பார்த்தேன் .....
தெருவில் நீ நடந்து கொண்டிருந்தாய்...!

என் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது
நீ நடக்கும் போது
மட்டுமே...!

சாலைத் தெருக்கள்
எல்லாம்,
உன் சேலை, தூரத்தில் தெரியுமா?
என்று பார்த்துக் கொண்டே இருந்தன ...
நீ மிதிக்க வேண்டுமாம்.........
நீ வந்ததோ மிதி வண்டியில் .....!

உன் வயற்றில் போகும்
சோறு சொர்கத்திற்கு
போகிறது ...!

அன்று ஒரு நாள்
நீ தடுக்கினாய் .....
நான் விழுந்தேன் ..................

என் விரலில்
இருந்த வார்த்தைகள்
தடுக்கி கவிதையாய் விழுந்தன....!

இன்னொரு முறை விழு ......
நான் கவிதை எழுத வேண்டும் ...!

25 comments:

ஈரோடு கதிர் said...

//என் விரலில்
இருந்த வார்த்தைகள்
தடுக்கி கவிதையாய் விழுந்தன//

இந்த வரி நல்லாயிருக்கு

சூர்யா ௧ண்ணன் said...

//இன்னொரு முறை விழு ......
நான் கவிதை எழுத வேண்டும் ...! //

அருமையான கவிதை!!

சத்ரியன் said...

//என் விரலில்
இருந்த வார்த்தைகள்
தடுக்கி கவிதையாய் விழுந்தன....!//


அசைபோடும் வரிகள்...!

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி கதிர்,சூர்யா,சத்ரியன்

தேவன் said...

கவிதை அருமை

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி கேசவன்

velji said...

காதல் நிரம்பிய வரிகளால் கவிதை துள்ளி விளையாடுகிறது.

Deepan Mahendran said...

// அன்று ஒரு நாள்
நீ தடுக்கினாய் .....
நான் விழுந்தேன் //

நல்லாயிருக்கு நண்பரே !!!

vasu balaji said...

/அன்று ஒரு நாள்
நீ தடுக்கினாய் .....
நான் விழுந்தேன் ..../

எனக்குப் பிடித்த வரி. அருமை

அகல்விளக்கு said...

சிறப்பான கவிதை நண்பா...

//"உனக்கு நல்லது
நடக்கும்" என்று அம்மா சொன்னாள்....
திரும்பிப் பார்த்தேன் .....
தெருவில் நீ நடந்து கொண்டிருந்தாய்...!//

தொடக்கமே அசத்தல்.

கலகலப்ரியா said...

அருமை...!

தமிழ் உதயம் said...

சற்று முன் ஒரு பின்னூட்டம் எழுதினேன். அழகிய ஓவியங்களுக்காக இப்படி "பாடகரின் குரல், ஓவியரின் விரலும் சிறந்த ரசிகனின் இரு கண்கள் என்று. இப்போது இந்த கவிஞனின் சிந்தனையை எப்படி சிறப்பிப்பது என்று தெரியவில்லை.

இன்றைய கவிதை said...

//"உனக்கு நல்லது
நடக்கும்" என்று அம்மா சொன்னாள்....
திரும்பிப் பார்த்தேன் .....
தெருவில் நீ நடந்து கொண்டிருந்தாய்...!//

மாமியையும், மருமகளையும்
இப்படித்தான் இணைக்க முடியும்!!

அருமை!!

-கேயார்

பிரபாகர் said...

விரல் தடுக்கும் விஷயம் அருமை, கதிரை நானும்...

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

நன்று.........

ஊடகன் said...

நல்லா இருக்கு ...............

பல வரிகள் பாதித்து எழுதியது போல ஒரு உணர்வு .........

Jawahar said...

கவிதையில் இருக்கும் மெல்லிய சோகம் முதலில் புரியவில்லை. படத்தைப் பார்த்ததும் ரொம்ப பாதித்தது. 'நல்லது நடக்கும்' க்கு நீங்க தந்திருக்கிற விளக்கம் ஹைலைட்.

http://kgjawarlal.wordpress.com

மாதேவி said...

"இன்னொரு முறை விழு ......
நான் கவிதை எழுத வேண்டும் ..."!அருமை.

ஸ்ரீராம். said...

//"உன் வயற்றில் போகும்
சோறு சொர்கத்திற்கு
போகிறது ..."//

அப்படியா?!

நல்லா இருக்கே நியாயம்...நீங்க கவிதை எழுத 'அவள்' தடுக்கித் தடுக்கி விழுந்து கொண்டு இருக்கணுமா...!

ஹேமா said...

கவிதை முழுவதுக்குள்ளுமே
தடுக்கி விழுந்தபடி நான் !

vasu balaji said...

யூத்ஃபுல் விகடன் சமூகம் பகுதியில் உங்கள் புல்லுக்குள் பிரம்மாண்டம். வாழ்த்துகள் கார்த்திக்
http://youthful.vikatan.com/youth/Nyouth/karthick141109.asp

Admin said...

அருமையான வரிகள்

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பாமரன் ஐயா ............நானே இப்பொழுது தான் பார்க்கிறேன்

அன்புடன் மலிக்கா said...

இன்னொருமுறை விழு
நான் கவிதை எழுதவேண்டும்..

எழுதிய கவிஞருக்குள் ஏதோ தடுக்கி விழுந்து விட்டது...

மிக அருமை தோழமையே..

அத்திரி said...

அழகு கவிதை