Monday, 16 November 2009

யூத் விகடனில் வந்த கட்டுரை - புல்லுக்குள் பிரமாண்டம்








பின்நவீனத்துவ யுகம். டெலிபதியை நுட்பத்துடன் கையாண்டு தகவல் தொழிற்நுட்பம் செய்தான் மனிதன். நினைக்கும் நேரத்தில் தகவல் இன்னொரு இடத்துக்கு செல்லும் வசதி. ஆம்.. பிரமாண்டமாய் உலகம்.

மனிதன் ஒரு பிரமாண்டமான படைப்பாளி. ஆனால்..? மனிதனின் பிரமாண்டத்தை விட மனிதனை உருவாக்கிய ஒரு துளி எவ்வளவு பிரமாண்டமானது.அணுகுண்டை விட அணு பிரமாண்டமானது. வரிசையாக செல்லும் மனிதர்களை விட, வரிசையாக செல்லும் எறும்புகள் என்னை ஈர்க்கின்றன.

வெப் கேமரா வைத்து ஒரு பெரியவர் தன் பேரனுடன் பேசிக்கொண்டே இருக்கிறார், அவர் கண்களில் மிரட்சி. பெரியவருடன் பேச கணிப்பொறி ஒன்றே இருக்கிறது. ஆம்.. வாழ்வு பிரமாண்டமாய் இருக்கிறது, வலி அதை விட பிரமாண்டமாய் வளம் கூட கூட வாழ்க்கை குறைந்து கொண்டே இருக்கிறது.

பெங்களூர் சென்று இருந்தேன். அந்த நகரம் அத்தனை அற்புதமானது என்றுச் சொன்னார்கள். பிரமாண்டமாய் இருந்தது, ஒரு நாட்டுக்குள்ளே ஒரு மாநிலத்துக்கு மட்டும் கொடி வைத்து இருந்தது அருவெறுப்பாய் இருந்தது.

ஒரு பெரியவரிடம் வழி கேட்டேன். அவர் என்னை தமிழன் என்று புரிந்து கொண்டு ஏதோ கன்னடத்தில் திட்டினார். நான் நிலைமையை புரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு விலகி சென்றேன். அவமானமாக இருந்தது, வெறும் காசுக்காக வேறு மொழி, வேறு தேசம்.


ஒரு நாள் நானும் நண்பனும் தேநீர் அருந்தச் சென்றோம். நான் சத்தமாய் பேசிக்கொண்டிருந்தேன். 'என் நண்பன் டேய் மெதுவா பேசுடா இது தமிழ் நாடல்ல,' என்றான். மொழிப் பிரச்சனை.பெங்களூர் உண்மையிலேயே பிரமாண்டமான நகரமா சொல்லுங்கள்.எனக்கு பெங்களூரை விட என் மதுரையில் இருக்கும் புளியங்குளம் பிரமாண்டமாய் இருந்தது.

எனக்கு பொருட்களில் பிரமாண்டம் பிடிப்பதில்லை. பிரமாண்டமானது மனித மனம் மட்டுமே. எனக்கு ஜூராஸிக் பார்க் படத்தை விட 'சில்ரன் ஆஃப் ஹெவன்' பிரமாண்டமாய் தெரிகிறது; காட்டு விலங்கை விட குழந்தைகளின் மனம் எனக்கு பிரமாண்டமாய் தெரிகிறது. அந்தப் படத்தில் ஒரு சின்ன ஷூ, ஆனால் அது பெரிய பொருள். வாழ்க்கை எவ்வளவு அழகானது, குழந்தைகளை விட பிரமாண்ட பிறவியை காட்ட முடியாது.

தகவல் தொழில்நுட்பத்தை விட மனித உறவுகளுக்குள் இருக்கும் உறவு நுட்பமானது. எனக்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் பிடிப்பதில்லை; அதை விட, புற்கள் பிரமாண்டமாய் இருக்கின்றன

http://youthful.vikatan.com/youth/Nyouth/karthick141109.asp

21 comments:

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் கார்த்திக்...தொடருங்கள்..

vasu balaji said...

மிகவும் பிடித்திருந்தது கார்த்திக். பாராட்டுக்கள். என்னைப்போல் ஒருவன்:)

வெண்ணிற இரவுகள்....! said...

இந்தப் பதிவு முதலில் போடப்பட்டு இருக்கிறது என்று சொல்லியதே நீங்கள் தானே ஐயா ...
உங்கள் ஆசீர்வாதம்.....

ரிஷி said...

சூப்பர்.. அருமை.. மனிதநேயக் கனிவு இருக்கிறது உங்களிடம். இதுதான் உலகத்திலுள்ள அத்தனை கோடி ஜனங்களுக்கும் தேவை.

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் தோழா....

மிக நுட்பமான கட்டுரை. வெகுவாய் ரசிக்க வைத்தது.

க.பாலாசி said...

//அவர் என்னை தமிழன் என்று புரிந்து கொண்டு ஏதோ கன்னடத்தில் திட்டினார்.//

இந்த கொடுமை என்றகலுமோ....

நல்ல கருத்துள்ள இடுகை நண்பா....

கலகலப்ரியா said...

அருமை அருமை...! நிஜம்மாவே சூப்பர்..! வாழ்த்துகள் விகடனில் வந்தமைக்கு...!

ஊடகன் said...

பிரம்பாண்ட்மான இயல்பான கட்டுரை..........

வாழ்த்துக்கள் தோழா....

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் கார்த்தி

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

மேவி... said...

உங்களின் வாழ்வியல் கருத்துக்கள் அருமையாய் இருக்கு......

இன்று பலர் உணர்வுகளால் தேசாந்திரி யாய் இருக்கிறார்கள் அதான் problem

தேவன் said...

///வெறும் காசுக்காக வேறு மொழி, வேறு தேசம்///

அருமையாக சொன்னீர்கள் போங்கள் !

malar said...

வாழ்த்துகள்.......அருமையாக சொன்னீர்கள்

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள்....

(Mis)Chief Editor said...

//வெறும் காசுக்காக வேறு மொழி, வேறு தேசம்//

தவறா? தெரியவில்லை நண்பா!

//பெங்களூரை விட என் மதுரையில் இருக்கும் புளியங்குளம்
பிரம்மாண்டமாய் இருந்தது//

இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், புளியங்குளத்திலேயே இல்லாமல்
சென்னை வந்து சத்யம் தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு 'நல்லா இல்லை'
என ஏன் எழுத வேண்டும்? நாளை சென்னை கூட பிடிக்கவில்லை, புளியங்குளம்
தான் பிடிக்கிறது என்று
எழுதினாலும் எழுதுவீர்கள் போல!

// எனக்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் பிடிப்பதில்லை; அதை விட புற்கள்
பிரம்மாண்டமாய் இருக்கின்றன.//

அதற்காக வீட்டில் இல்லாமல், புற்களிலா படுத்துறங்க முடியும்?

எழுதுவதற்குத் தோதாய் இருக்கும் பல விஷயங்களை நம்மால் நடைமுறைப்
படுத்த இயலாத நிலையில் என்ன செய்யப்போகிறோம்?


-பருப்பு ஆசிரியர்

இன்றைய கவிதை said...

//ஒரு நாட்டுக்குள்ளே ஒரு மாநிலத்துக்கு மட்டும் கொடி வைத்து இருந்தது அருவெறுப்பாய் இருந்தது.
//
இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு புரட்சியே இருப்பதாகப் படித்திருக்கிறேன்.
நேரம் இருந்தால் இதைப் பற்றியும் எழுதுங்கள்!

வாழ்த்துக்கள்!!

-கேயார்

thiyaa said...

வாழ்த்துக்கள் தோழா..

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

வாழ்த்துக்கள் கார்த்திக்.

வெண்ணிற இரவுகள்....! said...

//இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், புளியங்குளத்திலேயே இல்லாமல்
சென்னை வந்து சத்யம் தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு 'நல்லா இல்லை'
என ஏன் எழுத வேண்டும்? நாளை சென்னை கூட பிடிக்கவில்லை, புளியங்குளம்
தான் பிடிக்கிறது என்று
எழுதினாலும் எழுதுவீர்கள் போல!
//
நண்பரே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பின்னூட்டம் போடுகிறீர்களே அதைப் போல .....நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் .....நீங்கள் சத்யம் திரைஅரங்கில் படம் பார்க்கும் முதலாளி போல ....................நான் என்ன செய்ய என்னால் புலம்பத்தான் முடியும்
நான் போராளி அல்ல ................பிடிக்க வில்லை என்றாலும் சில விஷயங்களை செய்யத்தான் வேண்டி இருக்கிறது cheif editor mudhalaali

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நண்பர்களே தங்கள் வருகைக்கு

(Mis)Chief Editor said...

பிடிக்கவில்லை என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல!

உடன்பாடில்லை என்பதுதான் சரி!
நான் முதலாளி அல்ல நண்பா!!

-பருப்பு ஆசிரியர்