Wednesday, 18 November 2009

தமிழ் இனத்தலைவன்

தமிழ் இனத்தலைவன்
என்றான் ...?
தமிழ் இனம் என் குடும்பம் என்றான் மேடையில்
இனம் அழிந்து கொண்டிருக்கிறதே
தலைவா? என்றேன் ......
'என் குடும்பம்..!' தமிழ் இனம் என்றான் ...!

22 comments:

க.பாலாசி said...

//தலைவா? என்றேன் ......
'என் குடும்பம்..!' தமிழ் இனம் என்றான் ...//

நச்....ஆமா உண்மையாவா? அவர் குடும்பம் தமிழ் இனமா?

புலவன் புலிகேசி said...

அரசியலை குடும்பமாக்கியதோடு, தமிழையும் குடும்பமாக்கும் திறன் தமிழினத்தலைவனைத் தவிற யாருக்கு வரும்..தமிழ் குடும்ப "மகள்" பற்றி நமக்குத் தெரியாதா என்ன?

பிரபாகர் said...

நன்று கார்த்திக்... ஆறு வரிகளில் அழகாய்....

பிரபாகர்.

பிரபாகர் said...

உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி புலிகேசி ,பிரபாகர் அண்ணன் ,பாலாசி

ஈரோடு கதிர் said...

'நச்'னு இருக்கு கார்த்தீ!!!

சத்ரியன் said...

//"இனம் அழிந்து கொண்டிருக்கிறதே
தலைவா? என்றேன் ......
'என் குடும்பம்..!' தமிழ் இனம் என்றான் ...!//

ஆறடியில் ஒரு பேரிடி கவிதை...

vasu balaji said...

கார்த்திக் பிரமாதம்.

அகல்விளக்கு said...

சரியாச் சொன்னீங்க நண்பா...

நச்சென்று உள்ளது.

பதி said...

பலரின் உணர்வுகளை ஆறே வரிகளில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
:)

வெண்ணிற இரவுகள்....! said...

இன்று பதிவு வேண்டாம் என்று நினைத்தேன் கலைஞரின் அறிக்கை சூடேற்றி விட்டது ,,,,நன்றி நண்பர்களே

ரோஸ்விக் said...

நறுக் வரிகள்....எனக்கு வரும் கோபத்திற்கு வார்த்தைகள் கண்ணியம் தவறிவிடுவதாய் நண்பர்கள் கோபித்துகொள்கிரார்கள். :-)

//இன்று பதிவு வேண்டாம் என்று நினைத்தேன் கலைஞரின் அறிக்கை சூடேற்றி விட்டது//

அடிக்கடி அறிக்கை விட்டால் இந்த மழை காலத்திற்கு நல்லது என்று எண்ணுகிறாரோ?? எல்லோரும் சூடாகி விடுவார்கள் அல்லவா...?

சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை.

(Mis)Chief Editor said...

நீங்கள் எழுதி, நான் படித்ததில் இது ஒன்றுதான் தேறுகிறது, தோழரே!

வாழ்த்துக்கள்!

-பருப்பு ஆசிரியர்

இன்றைய கவிதை said...

என்னங்ணா!
இப்டி போட்டு தாக்கறீங்க?!

தினகரனுக்கு அனுப்பிப் பாருங்களேன்!

-கேயார்

ப்ரியமுடன் வசந்த் said...

`நறுக்`கிட்டீங்க.......

ஹேமா said...

யாருக்கோ நல்லாவே காயம் வராம அடிக்கிறீங்க !அடி போய்ச் சேரணுமே !

velji said...

கடலில் தூக்கி போட்டாலும் என் மீதேறி பயணம்செய்யலாம்னு சொல்லியிருக்காங்க!

அஹோரி said...

கவிதை ... கவிதை ...
அருமை.

இலங்கையில் 'போண்டா கிரி' ன்னு ஒரு வாரிசு இருந்து இருந்து இருந்தால் தமிழ் இனம் காப்பாற்ற பட்டிருக்குமோ ?

வெறுப்புல எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.

வெண்ணிற இரவுகள்....! said...

இருக்கலாம் நண்பரே ....இலங்கையில் யாராவது ஒரு மகன் மகள் இருந்தால் ....இலங்கையே எழுதி வைத்திருப்பார்.................பெண் கவிஞர் மகள் ஆகிவிட்டால் செம்மொழி மாநாடு நடுத்துவார்...பேரன் அரசியலில் அறிமுகம் ஆகா வேண்டும் என்று இளைஞர் மாநாடு நடத்துவார்....பேத்தி மகளுக்காக மகளிர் மாநாடு நடத்துவார்...கொள்ளுப் பேரன் பேத்திகளுக்கு மட்டுமே மாநாடு நடத்தவில்லை ...............................

இப்பொழுது இலங்கை பயணம் போனதே ,,,,இவர் செம்மொழி மாநாடு நடத்த வேண்டும் .......என்பதற்கு தான்

Deepan Mahendran said...

நச்....நண்பரே...!!!

G VARADHARAJAN said...

பிரமாதம் ஆக்கங்கள் ரசிக்கவும் சிந்திக்கவும் அருமை இவற்றை பார்ப்பதால் பெருமை

நன்றி ஜி வரதராஜன் புதுக்கோட்டை

கலகலப்ரியா said...

:)