Thursday, 19 November 2009

பார்வைக் கோர்வை























வார்த்தைக் கோர்வை
கவிதையாம்
நம் பார்வைக் கோர்வை ...!

எவ்வளவு முயன்றும்
உன் முதல் பார்வையை விட
சிறப்பாய்
ஒரு கவிதை படிக்கவில்லை...!

உன் கண்கள்
பேசிக்கொண்டே இருக்கிறது ....
என் கண்கள் கேட்டுக்கொண்டே
இருக்கிறது ...!

இருக்கையிலே நான் இருக்கையிலே ...
ஒரு கை கன்னம் தொட உட்கார்ந்து இருந்தாய்...!
கன்னமாக இருந்திருக்கலாம் நீ தொட்டுக் கொண்டிருப்பாய் ...
கையாக இருந்தால் உன் கன்னம் தொடலாம் .....!
கையாலாகாமல் இருக்கிறேனே?

கவிஞன் இல்லை நான்
மொழிபெயர்ப்பாளன் உன் விழிகளை
கவிதையாய் ....!

24 comments:

balavasakan said...

//கையாக இருந்தால் உன் கன்னம் தொடலாம் .....!
கையாலாகாமல் இருக்கிறேனே? //
நெஞ்சை தொட்டு விட்டீரகள் எனக்கும் காதல் கவிதை எழுத ஆசையாய் இருக்கிறது இதற்காகவாவது யாரையாவது காதலிக்க வேண்டும்

கலகலப்ரியா said...

ada ada.. pinreenga..!

vasu balaji said...

கார்த்திக்குக்குள் ஒரு அழகான கவிஞ்ஞனை கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். நல்லாருக்கு கார்த்திக்.

தேவன் said...

:)

ஜெட்லி... said...

//உன் கண்கள்
பேசிக்கொண்டே இருக்கிறது ....
என் கண்கள் கேட்டுக்கொண்டே
இருக்கிறது ...!//

கண் எப்படிங்க கேக்கும்??

ஹோ...காதல் கவிதையா அப்போ கேக்கும்...

இன்றிலிருந்து நானும் உங்கள் பயணத்தில் சேர்கிறேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே.. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு.

thiyaa said...

நல்ல கவிதா முடிவு அருமை

ஊடகன் said...

ஏதோ விடுபட்ட மாதிரி தோன்றுகிறது.........

சேர்ந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்...........

ப்ரியமுடன் வசந்த் said...

//இருக்கையிலே நான் இருக்கையிலே ...//


//கவிஞன் இல்லை நான்
மொழிபெயர்ப்பாளன் உன் விழிகளை
கவிதையாய் ....! //

மென்மையா சொல்லியிருக்கீங்க..
நீங்கள் ஒரு காதல் மிதவாதி....

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு கார்த்திக்...டி.ராஜேந்தரின் கோர்வை...

க.பாலாசி said...

//எவ்வளவு முயன்றும்
உன் முதல் பார்வையை விட
சிறப்பாய்
ஒரு கவிதை படிக்கவில்லை...!//

ரசித்தேன் நண்பா...கவிதையை. பிரிவு தரும் கவிதையோ? ஏனென்றல் கவிதை அருகிலிருந்தால் எழுத தோன்றாதல்லவா...

velji said...

அருமையான கோர்வை!

சிவாஜி சங்கர் said...

""!!!EXCELLENT!!!''
Sema..

அன்புடன் மலிக்கா said...

கவிஞன் இல்லை நான்
மொழிபெயர்ப்பாளன் உன் விழிகளை
கவிதையாய் ....!

கவிஞனே கலைகட்டுகிறது என் கவிதை..

இன்றைய கவிதை said...

அருமையான கவிதை!
காதலைப் பற்றி எவ்வளவு சொன்னாலும்
எந்த விதமாக சொன்னாலும்
நெஞ்சில் பூப்பூக்கவே செய்கிறது!

வாழ்த்துக்கள்!

-கேயார்

அன்புடன் மலிக்கா said...

மன்னிக்கவும்.. உன் கவிதை

(Mis)Chief Editor said...

நீ காதைக் குடைந்தபோது
என் மனசு உடைந்தது!

உன் வாய்
சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறது...
என் வயிறு
நிறைந்துகொண்டே போகிறது!

கையாக இருந்தால் உன்
செருப்பு ஸ்ட்ராப் மாட்டியிருக்கலாம்தான்...!
ஆனால், உன் பின் வரும் நாயாயிருக்கிறேனே!

இப்படித்தான் எனக்கு எழுத வருகுது!!
என்ன பண்றது தோழரே?!

உங்கள மாதிரி அழகா, அம்சமா எழுத வர்லியே?!

-பருப்பு ஆசிரியர்

Admin said...

அருமையாக இருக்கிறது.

ஹேமா said...

காதல் கொட்டிக் கிடக்கிறது.நீங்களே அள்ளிக் கொள்ளுங்கள்.உங்களுடையது அது !

Ashok D said...

நல்லாவே இருக்கு உங்கள் மொழிபெயர்ப்பு

பூங்குன்றன்.வே said...

ரசனை மிகுந்த கவிதை! ரசிக்க வைத்தது..

rajeshkannan said...

சூப்பர்

Narmada said...

nice one!!!!!!!! any affairs!!!!!!!!!!!!