Friday 27 November 2009

மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது ,மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில்.
ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்திரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேச வில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா .
















மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ...
நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு "நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??"
என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் "வீட்டில் யாரோ இறக்கிறார்கள் ,அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?" என்றேன்
அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்...

நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிருந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா.....ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை
encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????










முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.
கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் "வன்முறைக்கு வன்முறை தீர்வு " என்று குரல் கொடுப்பார்...................ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு....அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ...............மத்ததெல்லாம் ...........?????
ஏன் வணிக குப்பையாகி விட்டோம் ..............மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ....இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????
ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ..........
மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் .....

மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக
உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது .எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ....என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ....!

49 comments:

அன்புடன் அருணா said...

நியாயமான கேள்விகள்.

ஈரோடு கதிர் said...

நேத்து ஒரு பரதேசி சொல்றான்...

இலங்கையை அணியை மாவீரர் தினத்தன்று வீழ்த்திவிட்டதாம் இந்தியா... அதுவே மகிழ்ச்சியாம்...

வெண்ணிற இரவுகள்....! said...

ம்ம் கதிர் இவர்கள் வணிகக் குப்பைகள் கதிர் ..................இவர்களை என்ன செய்ய.....
எந்த அளவிற்கு நாம் தரம் தாழ்ந்து விட்டோம்

நர்சிம் said...

கோவத்தை நல்லா மொழிப்படுத்தி/வெளிப்படுத்தி இருக்கீங்க.

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி நரசிம் .....ஆனால் ஈழம் பற்றி எழுதும் போது மட்டும் யாரவது பாராட்டினால் மனது சந்தோஷம் அடைவதில்லை..........மகிழ்ச்சியை விட கோபம் கொப்பளித்துக்கொண்டிருக்கிறது .....ஊடகங்களை பார்த்தால் ஒரு வித எரிச்சல் வருகிறது .....அதை விட இந்தப் பிரச்சனைக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று தொலைக்கட்சிக்குள் தொலைபவர்களை பார்த்தல் கொல்ல வேண்டும் போல் இருக்கிறது நண்பா ......

தமிழ் உதயம் said...

பதிலுக்கு "நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??"
என்று வாதாடினான் என் நண்பன் முட்டாள்களிடம் பேசி பேசி வார்த்தையை இழந்து விட்டோம். மூடனிடம் பேசி வாழ்க்கையை இழந்து விட்டோம். இந்த இரண்டு நாள் தமிழக நிகழ்வு(மாவீரர் தின செயல்கள்) தமிழனின் சூடு, சொரணைகள் உயிர்ப்பித்து வருவதாகவே பார்க்கிறேன்.

vasu balaji said...

நச் நச்னு இருக்கு கார்த்திக்.

க.பாலாசி said...

//நான் சொன்னேன் "வீட்டில் யாரோ இறக்கிறார்கள் ,அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?" என்றேன்

sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????

விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு....அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் .....//

narukkendra kelvigal. nalla idugai nanbaa.

கலகலப்ரியா said...

//மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????//

கடவுளுக்கு கூட..!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது ,மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில்.
ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்திரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேச வில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா //


ஒன்று புரியவில்லை நண்பரே.. ஏன் தாஜ் ஹோட்டலில் தங்குபவர்கள் இந்தியர்கள் இல்லையா அல்லது இந்தியாவின் விருந்தாளிகள் இல்லையா? இந்த அஞ்சலி தாஜ் ஹோட்டலில் தங்கியவனுக்கு மட்டும் இல்லை உயிரிலந்த பல வீரர்களுக்குமே..

என்ன தான் தமிழ் என்றாலும் முதலில் நீங்கள் இந்தியர் பிறகே தமிழர்.. தமிழ் மொழி தானே தவிர மற்ற படி வேறு எந்த விசேசமும் இல்லை..

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்படி பார்த்தால் உங்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாத இலங்கை விசயத்தில் இப்படி மீண்டும் மீண்டும் எழுதுவதும் ஒரு வகையான விளம்பரமே..

முதலில் அருகில் இருக்கும் ஏதாவது புலம் பெயர்ந்த தமிழனுக்கு ஒரு வேளை உணவளியுங்கள், முடிந்தால் ஒரு குடும்பம் வாழ வழி செய்யுங்கள்... பிறகு பக்கது நாட்டைப் பற்றி கவலை கொள்ளுங்கள் !!!

வெண்ணிற இரவுகள்....! said...

//ஒன்று புரியவில்லை நண்பரே.. ஏன் தாஜ் ஹோட்டலில் தங்குபவர்கள் இந்தியர்கள் இல்லையா அல்லது இந்தியாவின் விருந்தாளிகள் இல்லையா? //
ஆம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள் ............
தாஜ் ஹோட்டலில் இருப்பவர்களுக்கு கவலை படுங்கள் ..........................ஆனால் பக்கத்தில் ஒரு இனமே அழிகிறதே அதற்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டாம் ...................வருதப்படலாமே நண்பரே .................................................அநதப் பொழுதில் மட்டை பந்து பார்ப்பது .................................
தவறு நீங்கள் அந்த வகையை சேர்ந்தவர் போல

வெண்ணிற இரவுகள்....! said...

//என்ன தான் தமிழ் என்றாலும் முதலில் நீங்கள் இந்தியர் பிறகே தமிழர்//
நண்பரே நான் தமிழன் இல்லை ......................நான் இந்தியனும் இல்லை ............
நான் மனிதன் மட்டுமே நண்பா .......................

அப்படி பார்த்தல் இந்தியா நாடு மட்டுமே ....தமிழ் மொழி மட்டுமே என்று சொன்னால் ........
நீங்கள் ராஜ் பக்ஷே வகையை சார்ந்தவர்..............அப்ப இந்தியன் இறந்தால் தான் கவலை படுவீர்கள் போல ......

ஏன் செப்டம்பர் 11 வேற நாட்டில் நடந்த விடயம் தானே அமெரிக்கன் உயிர் மட்டும் தான் உயிரா..........சொல்லுங்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

ஏன் பக்கத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது ...........ஏன் அதை ஊடகங்கள் சொல்ல வில்லை ,,,, உலக அழகி போட்டி வேற ஊரில் நடந்தால் வெளுச்சம் போட்டு கவலை படும் ஊடகம் .............அமெரிக்க அதிபர் பற்றி கவலைப்படும் ஊடகம் .....ஏன் இதை கேட்பதில்லை ..........
நீங்கள் முதலாளி ....நீங்கள் இந்தியன் ........................நான் மனிதன் மட்டுமே .............நண்பா ............

வெண்ணிற இரவுகள்....! said...

நான் கேட்கத்தான் செய்வேன் ..............இலக்கியத்தின் முதல் கடமை தட்டிக்கேட்பது ....நான் கேட்பேன் யார் வந்தாலும் கேட்பேன் ...............இந்திய நேயம் என்று யாரும் சொல்ல வில்லை ...
மனித நேயம் என்று மட்டுமே சொல்கிறார்கள் ..............இப்படி முதலாளி போல பேசாதீர்கள் .......
உங்கள் வீட்டு குழந்தை அந்த முள் வேலிக்குள் இருந்தால் உங்களுக்கு தெரியும் நண்பரே ...........
நான் கட்டாயம் ஈழ குழந்தை ஒன்றை தத்து எடுப்பேன் நண்பா .....
//முதலில் அருகில் இருக்கும் ஏதாவது புலம் பெயர்ந்த தமிழனுக்கு ஒரு வேளை உணவளியுங்கள், முடிந்தால் ஒரு குடும்பம் வாழ வழி செய்யுங்கள்//
தீவிரவாதம் தப்பு என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் ,உங்களிடம் ஏன் நீங்கள் களத்தில் சண்டை போட வேண்டியது தானே என்று கேட்டால் அதை போல் அபத்தம் உங்கள் கேள்வி ...?
நீங்கள் சொல்வதை பார்த்தல் படத்தை பற்றி விமர்சனம் செய்பவன் படம் எடுக்க வேண்டும் ....
சுட்டிக்காட்டுவதே என் கடமை .....sirupillaithanamaai pesa vendam

வெண்ணிற இரவுகள்....! said...

//அப்படி பார்த்தால் உங்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாத இலங்கை விசயத்தில் இப்படி மீண்டும் மீண்டும் எழுதுவதும் ஒரு வகையான விளம்பரமே..
//
aam thurumbai asaika mudiyuma mudiyatha enbathai neengal sollak koodathu ......................kaalam sollum tamil inam yaar enru .......ungal padhilil manitha neyam illai ...............................naangal pepsi coco colavirkku ......DHONI pola vilambaram seiyavillai ....................nanbaa .......naangal vanikakuppaikal alla ..........enna seivathu vilambaram seithaal thane padikireenga

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று முதலில் புரிந்து கொள்ளுங்கள் ............
தாஜ் ஹோட்டலில் இருப்பவர்களுக்கு கவலை படுங்கள் ..........................ஆனால் பக்கத்தில் ஒரு இனமே அழிகிறதே அதற்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டாம் ...................வருதப்படலாமே நண்பரே .................................................அநதப் பொழுதில் மட்டை பந்து பார்ப்பது .................................
தவறு நீங்கள் அந்த வகையை சேர்ந்தவர் போல//

பார்த்தீர்களா .. நான் உங்களை கவலைப்பட மட்டுமே வேணாம் என்றே சொல்கிறேன்.. இப்படி எழுதி எழுதி என்ன செய்ய முடியும்? மாறாக ஒருவருக்கு உணவழிக்கலாம் அல்லவா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இந்தியனும் இல்லை ............
நான் மனிதன் மட்டுமே நண்பா .......................//

அப்போது சோமாலியா பட்டினி பற்றி எவ்வளவு எழுதி இருக்கின்றீர் நண்பரே?

நம் நாட்டில் சக தமிழர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்களா?

//அப்படி பார்த்தல் இந்தியா நாடு மட்டுமே ....தமிழ் மொழி மட்டுமே என்று சொன்னால் ........
நீங்கள் ராஜ் பக்ஷே வகையை சார்ந்தவர்..............அப்ப இந்தியன் இறந்தால் தான் கவலை படுவீர்கள் போல ......

ஏன் செப்டம்பர் 11 வேற நாட்டில் நடந்த விடயம் தானே அமெரிக்கன் உயிர் மட்டும் தான் உயிரா..........சொல்லுங்கள்//

மனிதன் எங்கு இறந்தாலும் நான் கவலைப்படுவேன்.. ஆனால் கவலை மட்டுமே பட்டுக்கொண்டு அடுத்தவரை குற்றம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.என்னால் என்ன இயலுமொ அதை செய்வேன்..வருத்தப்படும் உதடுகளை விட உதவும் கரங்களே மேல் நண்பரே..

லெமூரியன்... said...

உதவலாம் நண்பரே....சக தமிழர்கள் அளித்த உதவிகளே இன்னும் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது...வேறு எவ்வளிலாவது உதவலாம் என்றால் இறையாண்மைக்கு ஊரு விளைவிக்கிறோம் என்கிறார்கள்.....நீங்கள் இந்தியன் முதலில் பிற்பாடே நீங்கள் தமிழன் என்கிறீர்கள்.....ஆனால் வட நாட்டுகாரனும் உங்கள் இந்திய அரசும் முதலில் உங்களை தமிழனாகவே பார்க்கிறது....பின்பே நீங்கள் இந்தியன்.....மும்பையில் செத்தவருக்கு கண்ணீர் விடும் உங்கள் இந்திய அரசு என்னைக்காவது என் ராமேஸ்வர மீனவனுக்கு கண்ணீர் விட்டிருக்கிறதா?? உங்கள் ஊடங்கங்கள் ஏன் கொதித்தெளவில்லை??? வட நாட்டுக்காரனும் பணக்காரனும் மட்டுமே உங்கள் இந்திய அரசாங்கைத்திர்க்கு இந்தியனாக தெரிவார்கள்.....ஆதலால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள்....முதலில் தமிழனாக இருக்கப் பாருங்கள்...வாழ்க்கை ஓரளவிற்கு உங்களுக்கு வெளிச்சம் தரும்....இந்தியன் என்று சொல்லி உங்கள் அழிவை நீங்களே தேடிக் கொள்ளாதீர்கள்....ஏனென்றால் தமிழர்கள் என்றுமே இந்தியாவின் இரண்டாம் தர குடிகள் தான்....உங்கள் அரசாங்கம் என்று சொல்கிறாயே அப்போ இந்தியாவை விட்டு வெளியில் போ என்று நீங்கள் சொன்னால் என் பதில் இதுதான்.....வெறும் ஐம்பது ஆண்டு வரலாறு கொண்டு நாடு இந்தியா.....அதற்க்கு முன்பே மூவாயிரம் ஆண்டுகள் பூர்வாங்க தமிழ் குடிகள் நாங்கள்....தேவை பட்டால் இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரித்தேடுப்பத பற்றியும் ஆலோசிப்போம்.

புலவன் புலிகேசி said...

/முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.//

தீவிரவாதி யாரா இருந்தாலும் கொலை செய்யப் படனும்...நல்ல கருத்துதான் ஆனால் அதுக்காக முதலாளி கொலை செய்யப் படவில்லை கீழ மட்டத்தில் உள்ளவன் தான் கொலை செய்யப் படுகிறான் என்றால் உங்களை ஒருவன் கொல்ல வந்தால் அவனை கொள்வீர்களா அல்லது அவனை அனுப்பியவனை தேடி கொள்வீர்களா??

புலவன் புலிகேசி said...

//மனிதன் எங்கு இறந்தாலும் நான் கவலைப்படுவேன்.. ஆனால் கவலை மட்டுமே பட்டுக்கொண்டு அடுத்தவரை குற்றம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.என்னால் என்ன இயலுமொ அதை செய்வேன்..வருத்தப்படும் உதடுகளை விட உதவும் கரங்களே மேல் நண்பரே..//

சரியாக சொன்னீர்கள்...

புலவன் புலிகேசி said...

//அப்படி பார்த்தல் இந்தியா நாடு மட்டுமே ....தமிழ் மொழி மட்டுமே என்று சொன்னால் ........
நீங்கள் ராஜ் பக்ஷே வகையை சார்ந்தவர்..............அப்ப இந்தியன் இறந்தால் தான் கவலை படுவீர்கள் போல ......//

ஏன் தமிழன் இந்தியன் இல்லையா... இப்படியெல்லாம் ஒருவரை பற்றி சொல்லாதீர்கள்.அவரும் தமிழர் தான்..அவருக்கும் என்னை போல் உங்களை போல் வருத்தமிருக்கும். வருத்தம் மட்டும் படுவதால் ஒன்றும் ஆகி விட போவதில்லை.

ஹேமா said...

ஒரு கோபக் குவியல்.

வெண்ணிற இரவுகள்....! said...

தமிழன் இந்தியன் என்று பேசாதீர்கள் ..............புலிகேசி உங்களுக்குள் ஈழ மக்களை எதிர்க்கும் ஒரு முதலாளி இருக்கிறார் .......................நான் இந்தியன் என்றே சொல்ல வர வில்லை ..........
ஏன் இலங்கையில் மக்கள் குவியல் குவியலாக கொள்ளப்படும் போது....நம் ஊடகங்கள் பேசாமல் இருந்தன ..................என்னாலான உதவிகளை நான் செய்வேன் அது தனி பட்ட உதவி .....
ஆனால் நான் சொல்ல வந்ததை ஏன் திசை திருபுரீர்கள் ....................................

அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டாமா ??????அரசியல் தொலை நோக்கோடு பாருங்கள் ...
சும்மா இந்தியன் தமிழன் என்று உளறாதீர்கள் ................

வெண்ணிற இரவுகள்....! said...

//மனிதன் எங்கு இறந்தாலும் நான் கவலைப்படுவேன்.. ஆனால் கவலை மட்டுமே பட்டுக்கொண்டு அடுத்தவரை குற்றம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.என்னால் என்ன இயலுமொ அதை செய்வேன்..வருத்தப்படும் உதடுகளை விட உதவும் கரங்களே மேல் நண்பரே//
என்னால் என்ன இயலுமோ அதை நானும் செய்து கொண்டிருப்பேன் ........................ஆனால் நான் எத்தனை பேரை காப்பாற்ற முடியும் சொல்லுங்கள் ................அரசியல் ரீதியாக தீர்வு முக்கியம் .........

வெண்ணிற இரவுகள்....! said...

எத்தனை பேருக்கு உதவ முடியும் சொல்லுங்கள் நண்பரே ...............................
குறை இருந்தால் சொல்லத்தான் செய்வேன் .......ஏன் கலைஞர் செய்யவில்லை உதவி .....
இலங்கைக்கு ராணுவ உதவி செய்ததே இந்தியா .....அது தான் இந்தியன் என்னும் இறையான்மையா

வெண்ணிற இரவுகள்....! said...

தயவு செய்து இந்தியன் என்று சொல்லவதை விட்டு விட்டு ...மனிதனாய் இருங்கள் .....
சோமாலிய இருக்கட்டும் முதலில் பக்கத்து ஊர் இனப்படுகொலை நடந்திருக்கிறது ................அந்த இறந்த உயிர்களை அவமானபடுததீர்கள் .................

நீங்கள் கௌண்டமணி செந்தில் காமெடி போட்டு ....உணர்வுகளை ஏன் அசிங்க படுத்துறீங்க ........
புலிகேசி குறை சொல்ல வேண்டும் என்று குறை சொல்ல வேண்டாம் ....மனிதனாக இருங்கள் இந்தியனாக இருக்க வேண்டாம்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே எனக்கு ஒன்று சுத்தமாக புரியவில்லை.ஏதாவது ஒரு புலம் பெயர்ந்த தமிழனுக்கு உணவழிக்க சொன்னால் அதை தவிர்க்க காரணம் தேடுகிறீர்கள்.. நேரடியாக பதில் சொல்லுங்கள் உங்களால் இப்போதைக்கு முடிந்த செயல் ஒருவருக்கு உணவு தர தயார் எனவும் அதை நடைமுறையும் படுத்த தயாரா?

..உங்களை பார்த்து வேறு ஒருவர் இன்னொருவருக்கு உதவி செய்வார்களே.. அதை விடுத்து ஐ.நா சபை சொல்லியே கேட்காதவர்கள் நம்மை போல காகிதப்புலிகள் சொல்லியா கேட்கப்போகிறார்கள்?

உங்கள் மனசாட்சிக்கே தெரியும் உங்களால் என்ன செய்ய முடியும் என்றும், நீங்கள் கேட்கும் அந்த அரசியல் தீர்வு இப்போதைக்கு வராதெனவும் .. ஆகவே இயன்றதை பார்ப்போம்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நீங்கள் கௌண்டமணி செந்தில் காமெடி போட்டு ....உணர்வுகளை ஏன் அசிங்க படுத்துறீங்க .......//
அப்படி என்றால் உங்கள் உணர்வுகள் வெறும் எழுத்துக்களில் மட்டும் தானா? செயலில் இல்லயா?
நீங்கள் குறிப்பிட்ட பதிவில் வேறுமனே எழுத மட்டுமே செய்பவரை மட்டுமே கிண்டலடித்துள்ளேன் ... ஒரு வேளை நீங்களும் அப்படியே இருந்தால் நான் என்ன செய்ய?

குறை ஒன்றும் இல்லை !!! said...

நான் கூறுவது ஒன்று மட்டும் தான் .. எனக்கும் இலங்கை தமிழர் மேல் பாவமாக தான் உள்ளது.. அதுவும் முள்வேலிக்குள் வைத்து சரியான உணவு இல்லாமல் மிகவும் கொடுமையானது தான்.. என் கேள்வி வேறும் கவலை பட்டு மட்டும் கொண்டு இருந்தால் என்ன பயன்.. எப்படியோ உயிர் தப்பிய தமிழனுக்கு உதவலாமே நீங்கள்?
இல்லை சக இந்திய தமிழனுக்கு உதவலாமே? ஏன் உதவ மனமில்லாமல் வெறுமனே வெற்றுக்கூச்சல் போடுவதால் யாருக்கு என்ன பயன்?

நிதர்சனத்தை பாருங்கள் நண்பர்களே..

தமிழ் உதயம் said...

வெண்ணிற இரவுகளே, நம்மால் இந்தியனாகவும் இருக்க முடியாது. மனிதனாகவும் இருக்க முடியாது. தமிழனாக மாத்திரமே இருக்க முடியும். இதை யாராவது குற்றம் என்று சொன்னால் சொல்லி விட்டு போகட்டுமே.

வெண்ணிற இரவுகள்....! said...

நான் கட்டாயம் உதவி செய்வேன் ....செய்வது இருக்கட்டும் நண்பா ..........
இந்த பதிவு தமிழ் ஊடகங்கள் கவலைபடுவதில்லையே .................அது தான் சொல்கிறேன் ......
நான் ஒருவனுக்கு உதவி செய்வது முக்கியம் இல்லை நண்பா .......அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டாமா ....? ஊடகங்கள் மும்பைக்கு கவலை பட வேண்டாம் என்று சொல்ல வில்லை ....ஆனால் இலங்கை பிரச்னையை ஏன் ஊடகங்கள் கவலை படுவதில்லை ............
நான் கட்டாயம் உதவி செய்வேன் நண்பா .............ஆனால் நிரந்தரத் தீர்வு வேண்டும் ....ஊடகங்கள் பார்க்க வேண்டும் .....தொலை நோக்கம் வேண்டும் .....அதை சொன்னால்
எதிர்கிறீங்க ........................................????என்ன சொல்ல சரி விடுங்கள் சண்டை வேண்டாம்

வெண்ணிற இரவுகள்....! said...

இன்னொரு சொல்கிறேன் கேளுங்கள் .....தமிழ் மக்கள் ஒன்றும் பிச்சைகாரன் அல்ல ....அவர்களுக்கு அவர் மண்ணை கிடைக்க செய்தாலே போதும் நண்பரே .........................
....
ஊடகங்கள் செய்வது சரியா...?சரி விடுங்கள் ..........................

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இன்னொரு சொல்கிறேன் கேளுங்கள் .....தமிழ் மக்கள் ஒன்றும் பிச்சைகாரன் அல்ல ....அவர்களுக்கு அவர் மண்ணை கிடைக்க செய்தாலே போதும் நண்பரே .........................
....
ஊடகங்கள் செய்வது சரியா...?சரி விடுங்கள் ...................//

நண்பரே.. ஊடகங்கள் எப்போதோ வியாபார நோக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது.. அதை நம்பி எந்த பயனும் இல்லை...

ஒரே கேள்வி... இலங்கை பிரச்சினைக்கு யாரால் முழு தீர்வை தர முடியும்? இதற்கு நேரடியான பதிலை சொல்லுங்கள் ... வெறுமனே இந்தியா என்றோ இல்லை ஐ.நா என்றொ சொல்ல முடியாது ஏனென்றால் எல்லோரும் முயற்சித்தாயிற்று, ஏன் அமெரிக்கா கூட கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தது ஆனால் என்ன பிரியோஜனம்?'
இன்னமும் அங்கே தமிழன் செத்துக்கொண்டு தானே இருக்கிறான் ?

இப்படி இந்தியாவை, ஐ.நா வை, காங்கிரஸை, திமுகவை, அதிமுகவை,ஊடகங்களை, சக தமிழரை எவ்வளவு நாட்களுக்கு குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறொம் என்பதே...

என்னதான் தொண்டை கிழிய கத்தினாலும் ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதைக்கூட நிறுத்த முடியாது என தெரியாதா?

இல்லை இப்படி எழுதுவது மனத்திருப்திக்கு தான் எனில் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படி வெறுமனே எழுதி மனத்திருப்தி அடைய போகிறீர் என்பதே..

வெண்ணிற இரவுகள்....! said...

//எல்லோரும் முயற்சித்தாயிற்று, ஏன் அமெரிக்கா கூட கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தது ஆனால் என்ன பிரியோஜனம்?'
இன்னமும் அங்கே தமிழன் செத்துக்கொண்டு தானே இருக்கிறான் ? //
நண்பரே இந்தியா தான் ஆயுதம் வழங்கியது அதை நிறுத்தி இருக்கலாமே ....ஒரு இலங்கை அமைச்சரே சொல்லி இருக்கிறார் ,,,,,,,,,,இதற்க்கு பேர் தான் இந்திய இறையாண்மை ....சொல்லுங்கள் நான் எப்படி இந்தியன் என்று சொல்வேன் ..............................இது இப்பவும் நிறைய பேருக்கு தெரியாது அதனால் தான் எழுதுகிறேன் ....இது எல்லாருக்கும் தெரிந்திருந்தால் நாம் மட்டை பந்து பார்க்க மாட்டோம்

arul said...

உங்கள் இடுகை நியாயமான ஒரு கேள்வியைக் கேட்கிறது.
பக்கத்து நாட்டில் ஒரு பெரிய அவலம் நடந்தபோது நடக்கும்போது அப்படி நடப்பதையே அலட்சியப்படுத்திய இந்திய ஊடகங்கள் , இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் ,சமத்துவம் பேசும் அரசியல்வாதிகள் எல்லோருமே பெரிய குற்றவாளிகள் ,பல்லாயிரகணக்கான மக்கள் கொடுமையாக கொல்லப்படும்போது மௌனம் சாதித்து அல்லது அதை திசை திருப்பி பொய் புனைந்த எல்லோரும் தமது மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆக உங்கள் இடுகை நியாயமான ஒரு கேள்வியைக் கேட்கிறது.
பக்கத்து நாட்டில் ஒரு பெரிய அவலம் நடந்தபோது நடக்கும்போது அப்படி நடப்பதையே அலட்சியப்படுத்திய இந்திய ஊடகங்கள் இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் சமத்துவம் பேசும் அரசியல்வாதிகள் எல்லோருமே பெரிய குற்றவாளிகள் ,பல்லாயிரகணக்கான மக்கள் கொடுமையாக கொல்லப்படும்போது மௌனம் சாதித்து அல்லது அதை திசை திருப்பி பொய் புனைந்த எல்லோரும் தமது மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆக vendum.
நாங்கள் இந்தியர்கள் ஆனபடியால் நாங்கள் ஏன் அக்கறைப்பட வேண்டும் என்று கூறுபவர்கள் வேண்டும் என்றோ அல்லது அறியாமை காரணமாகவோ விதண்டாவாதம் புரிகிறார்கள்.
இந்தியாவில் இருக்க விரும்பாவிடில் வெளியேறுங்கள் என்று சிறுபிள்ளை வாதம் செய்பவர்களே!தமிழகம் எங்கள் பூமி எங்கள் மண்ணில் நாங்கள் வாழ்வது எங்கள் விருப்பம் ,வெளியேறும்படி கூறுவதற்கு நீங்கள் யார்?
அறுபது ஆண்டுகள் மட்டும் கொண்ட ஆயிரம் மீட்டர்களுக்கு அப்பால் டெல்லியில் இருந்து எங்களை ஆளும் இந்திய தேசியம் என்ற ஒரு செயற்கை ஏற்பாட்டுக்காக மூவாயிரம் ஆண்டுக்கு மேலான பிணைப்பு கொண்ட இயற்கையான பந்தமும் சொந்தமும் கொண்ட தமிழர்களை அலட்சியப்படுத்த சொல்பவர்கள் இந்தியாவின் மக்களை இந்திய தேசியம் என்று சொல்லி பல காலம் அடக்கி வைத்திருக்க முடியாது .

Unknown said...

ஈழத்தில் நடந்த கொலைகளை நியாயபடுத்தவோ அல்லது அலட்சியப்படுத்தவோ சிலர் கூறும் சொல்பிரயோகங்கள் 'நாங்கள் இந்தியர் பிறகுதான் தமிழர் ''தமிழ் என்பது வெறுமே ஒரு மொழிதான் விசேஷம் ஒன்றும் இல்லை'.
அப்படியா ,இந்தியா என்பதும் ஒரு நாடு -வெறும் நிலப்பரப்பு . அவ்வளவுதான் விசேஷம் ஒன்றும் இல்லையே பிறகு எதற்காக தேசப்பற்று அப்படி இப்படி என்று பெரிதாக அலட்டிக்கொள்கிறீர்கள்.

புலவன் புலிகேசி said...

//தமிழன் இந்தியன் என்று பேசாதீர்கள் ..............புலிகேசி உங்களுக்குள் ஈழ மக்களை எதிர்க்கும் ஒரு முதலாளி இருக்கிறார் .......................//

எனக்குள் எந்தவொரு முதலாளியும் கிடையாது..தகுதியற்ற தமிழனாக எழுதித் தீர்ப்பதைவிட உதவி செய்பவனுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

புலவன் புலிகேசி said...

//ஏன் இலங்கையில் மக்கள் குவியல் குவியலாக கொள்ளப்படும் போது....நம் ஊடகங்கள் பேசாமல் இருந்தன ..................என்னாலான உதவிகளை நான் செய்வேன் அது தனி பட்ட உதவி .....
ஆனால் நான் சொல்ல வந்ததை ஏன் திசை திருபுரீர்கள் ....................................//

நான் ஒன்றும் திசை திருப்பவில்லை.. ஏன் உளறுகிறீர்கள்..எத்தனை பேருக்கு உதவியிருக்கிறீர்கள்..நீங்கள் ஊடகங்களுக்கு எதிராக எழுதுங்கள் வேண்டாம் என்று யார் சொன்னது. இன்னொருவரை பார்த்து நீ ஒரு முதலாளித்துவன் ஈழ மக்கள் மீது வருத்தமில்லாதவன் என்றெல்லாம் சொல்லாதீர்கள். அவர்களின் மனதிலும் அந்த பாதிப்பு இருந்து கொண்டுதானிருக்கிறது.

புலவன் புலிகேசி said...

//அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டாமா ??????அரசியல் தொலை நோக்கோடு பாருங்கள் ...
சும்மா இந்தியன் தமிழன் என்று உளறாதீர்கள் //

அனைவரும் அப்படி பார்த்து தான் அரசியல் வாதிகளை வெறுத்திருக்கிறார்கள். நீங்கள் மட்டும் தான் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்ற கர்வத்தை விடுங்கள். நம்ம அரசியல்வியாதிகளை வைத்து கொண்டு ஒரு மயி... புடுங்க முடியாதுன்னு மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள்.

புலவன் புலிகேசி said...

//தயவு செய்து இந்தியன் என்று சொல்லவதை விட்டு விட்டு ...மனிதனாய் இருங்கள் .....
சோமாலிய இருக்கட்டும் முதலில் பக்கத்து ஊர் இனப்படுகொலை நடந்திருக்கிறது ................அந்த இறந்த உயிர்களை அவமானபடுததீர்கள் .................//

அப்படியானால் பாகிஸ்தானில் நடக்கும் படு கொலைகளை எண்ணி வருந்த்தியிருக்கிறீர்களா? மனதைத் தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம். அப்படியெல்லாம் இருக்க முடியாது கார்த்தி. நம் தமிழினம் என்ற எண்ணத்தால் தான் நான் நீங்கள் ஏன் ஒவ்வொரு தமிழனும் ஈழத்திற்காக ஏக்கப் படுகிறோம்.

வெண்ணிற இரவுகள்....! said...

அரசியல் தொலை நோக்கம் வேண்டும் ,,,,,,,இந்தியன் என்று சொல்வெதெல்லாம் மாயை .....
அதை புரிந்து கொள்ளாத உங்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை ...........................

வெண்ணிற இரவுகள்....! said...

சரிங்க புலிகேசி கரெக்டா சொன்னீங்க

புலவன் புலிகேசி said...

//புலிகேசி குறை சொல்ல வேண்டும் என்று குறை சொல்ல வேண்டாம் ....மனிதனாக இருங்கள் இந்தியனாக இருக்க வேண்டாம்//


சும்மா எழுதி பேர் வாங்கறதுக்கு என்ன வேணா எழுதலாமுங்க. எங்க இருந்து பாருங்களேன் பார்ப்போம். அப்படி இருந்தா பாகிஸ்தான் காரன் எப்பவோ நமக்கு மொட்டையடிச்சி நம்மள கொன்னு குவிச்சிருப்பான். இந்த நாட்டுப்பற்று வேணுமுங்க. நீங்க சொல்ற மாதிரி எல்லாரும் நாடு பாக்காதீங்கன்னா அது இந்த உலகம் அழிஞ்சி மறுபடியும் பொறந்தாதான் நடக்கும்.

வெண்ணிற இரவுகள்....! said...

//சும்மா எழுதி பேர் வாங்கறதுக்கு என்ன வேணா எழுதலாமுங்க. //
இப்படி உணர்வுகளை கொச்சை படுத்த வேண்டாம் ..........புலிகேசி ...........................
உங்கள் இந்திய உணர்வு வாழ்க .........................................

புலவன் புலிகேசி said...

//அரசியல் தொலை நோக்கம் வேண்டும் ,,,,,,,இந்தியன் என்று சொல்வெதெல்லாம் மாயை .....
அதை புரிந்து கொள்ளாத உங்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை ...........................//

இந்த மாதிரி மழுப்புகிற உங்களை போன்றவர்களால் தான் தமிழ்நாடே வீணாகிப் போயிருக்கிறது.

வெண்ணிற இரவுகள்....! said...

இப்ப என்ன வேணும் உங்களுக்கு ..................புலிகேசி இந்திய ஊடகங்கள் செய்வது சரியே போதுமா ..........நீங்கள் சண்டையிட வந்திருகுரீர்கள் .........................................சரி நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் போதுமா ......................

புலவன் புலிகேசி said...

//இப்ப என்ன வேணும் உங்களுக்கு ..................புலிகேசி இந்திய ஊடகங்கள் செய்வது சரியே போதுமா ..........நீங்கள் சண்டையிட வந்திருகுரீர்கள் .........................................சரி நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் போதுமா ......................//

இதில் ஜெயிப்பதற்கு ஒன்றுமில்லை.. உங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என நீங்கள் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. நான் ஒன்றும் சண்டையிட வர வில்லை. நீங்கள் எதிர்கருத்து தெரிவிக்கும் அனைவரையும் எதிரியாக பார்ப்பதால் அப்படி தோன்றுகிறது என நினைக்கிறேன்.

புலவன் புலிகேசி said...

உங்களுக்கு எதி கருத்து தெரிவிப்பதால் என்னை எதிரியாக நினைக்கும் உங்கள் நினைப்பில் முதலாலித்துவம் தெரிகிறது.