Thursday, 5 November 2009
புத்தனின் மனைவி
கல்லைக் காட்டி
இதில் கடவுள் இருக்கிறாரா என்றேன்........!
அதை செதுக்கி விட்டு
இப்போது பார்த்தாயா என்றான்.....!
புத்தன் சிலை,
அதை உடைத்து விட்டு .......
இப்போது ஒன்றும் இல்லை என்றேன் ......!
ஒன்றும் இல்லாததே கடவுள் .....
அதுவே புத்தன் என்றான் ....
போடா பித்தன் என்றேன்..!
அவன் துறவி என்றான் ....................
நீ சித்தார்த்தனை நினைத்தாயா என்றான் ..................
இல்லை நான் அவன் மனைவியை நினைத்து பார்க்கிறேன் என்றேன்.....
இல்லறம் சகிக்க முடியாதவன் ........
எப்படி சகிப்புத்தன்மையின் கடவுள் ஆக முடியும் என்றேன்....?
புலனடக்கம் வேண்டும் என்றான் ....?
அடக்கம் வேண்டும் என்றால் எதற்கு புலன்கள் என்றேன் .....?
தியானம் செய் என்றான் ...
கண்கள் பார்ப்பதற்கு மூடுவதற்கு அல்ல என்றேன் ....!
அடக்குவது இயற்கை அல்ல .....
அவிழ்பதே இயற்கை என்றேன் ....
போடா பித்தா என்றான் ........
சரிடா புத்தா என்றேன்.............
பின் குறிப்பு :
இந்த இடுகை சம்பந்தமான ஒரு உலக சினிமா சூர்யாவின் வலை பதிவில் இருந்து
http://butterflysurya.blogspot.com/2009/10/blog-post.html
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நீங்க எழுத கவித மட்டுந்தாங்க.. எனக்கு புரியற மாதிரி இருக்கு. அதுக்கே.. ஓட்டு போடலாங்க! :) :)
வார்த்தைகளில் ஆழம் இருப்பதை விட ...........
கருத்தில் ஆழம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து நண்பா
எளிமையா அருமையா இருக்கு நண்பா... புத்தனின் மனைவியின் பார்வையில் அருமை.
பிரபாகர்...
நண்பரே ,
உங்கள் கூற்றை முழுதுமாக ஏற்று கொள்ள முடியவில்லை.இருப்பினும் வார்த்தைகளை மிக அழகாக கையாண்டு இருப்பது நன்றாக உள்ளது.அடக்கவேண்டியத்தை அடக்கத்தான் வேண்டும்,அடக்ககூடாததை அடக்க கூடாது..இதுதானே உலக நியதி? அழகாக சொல்லி இருக்கீர்கள்.
poongundran2010.blogspot.com
நல்ல ஒரு ஆன்மீக கவிதை.......
நல்ல பார்வை ..! நன்று ..!
புத்தரை அழைத்திருப்பது மேலும் நன்று ...!
அருமை.. கருத்தில் ஆழம்.. நன்று..
நல்ல சிந்தனை.....
வித்தியாசமான பார்வை.அருமை.
அருமை.
அருமையான வித்தியாசமான கவிதை.பாராட்டுகள்
புத்தர் தற்சமயம் போதிமரத்தடியில் இல்லை.புலம் பெயர்ந்தாரோ இல்லை போதி மரத்தடியில் புதைபட்டுக் கிடக்கிறாரோ !அவருக்காகக் கவி எழுதிய உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
சூப்பர் நண்பா .........!
Good one
Post a Comment