Monday 2 November 2009

சோழி போட்ட கோழி














ஆண்டிபட்டி,நெற்கள் காற்றில் வாசனையாய் கவிதை எழுதிக்கொண்டிருந்தது.மழை
வருவதை மண் வாசனை தண்டோரா போட்டு சொல்லிக்கொண்டிருந்தது.மழை அதுவும் மாலை நேரம் மழையுடன் காற்றுடன் அவன் காதலும் கலந்தது. அவன் மனதில் நினைத்துக்கொண்டான் நாளை எப்படியாவது காதலை சொல்ல வேண்டுமென்று.காலையில் ஊரில் கேட்கும் முதல் குரல் அவனுடையது.ஆம் வீடு என்னும் கூட்டிற்குள் போகும் போது ஒரு பார்வை பார்த்தாலே நாளை விடிந்தவுடன் காதலை சொல்ல வேண்டும்,மனதிற்குள்ளும்,மழையினால் வெளியிலும் இடி இரவு முழுவதும் இடித்துக்கொண்டே இருந்தது.

காலையில் எழுந்தவுடன் அனைவரையும் எழுப்பினான் அதுவே அவன் முதல் வேலை.வீடே திருவிழா கோலம் பூண்டிருந்தது.காதலை தன் காதலியிடம் சொல்ல முயன்றான்.காதலியை பார்த்தான்,அவளும் பார்த்தாள்.அவளிடம் சொல்ல வந்தபோது.அவளை யாரோ தூக்கி சென்றனர்."கோழி அடிச்சு குழம்பு வைக்கணும்,தலைய சீவு பா".என்றான் மாயாண்டி.மாயாண்டிக்கு எத்தனை நாள் இவன் சேவல் சண்டையில் வெற்றிபெற்று கொடுத்து இருப்பான்.சேவலான இவனுக்கு மனது அடித்தது.அவள் சாகும் போது கூட இவன் காதலை சொல்லவில்லையே.ஏன் மனிதனுக்கு மட்டும் தான் காதல் சொந்தமா. அவன் மனது வலித்தது.

உசிலம்பட்டி வெப்போர், சேவல் சண்டை. (காலில் கத்தி கட்டாமல் சேவல் சண்டை அதுவே வெப்போர்).இவன் சேவல் பல ஊரில் வெற்றிபெற்ற சேவல். மாயாண்டிக்கு இது மான பிரச்சனை,ஆம் அவன் பகையாளி,மற்றும் பங்காளியான பாட்டையா சேவலுடன் மோதல்.மாயாண்டியின் சேவல் பாட்டையா சேவலை எகிரி
அடித்தது மாயாண்டி சந்தோஷம் அடைந்தான். சேவல் அவனை பார்த்தது,என்ன இருந்தாலும் தன் காதலியின் கால்கள் அவன் வயிரிலே இருக்கிறது,காதலியை கொன்றவன்,அவன் சந்தோசமாக இருக்கலாமா. இரண்டாவது சுற்றில் அவனை அவமான படுத்த தோற்க ஆரம்பித்தது.ஒவ்வொரு அடி வாங்கும் போதும் தன் காதலியான கோழியை நினைத்துக்கொண்டது.கண்கள் இருட்டியது சேவலுக்கு,அடிகள் விழுந்தாலும் வலிக்கவில்லை.

மாயாண்டி மண்ணை கவ்வ வேண்டும். ஆம் சாகும் போது மண்ணை முத்தமிட்டது.வானில் இருந்த கோழியின் உயிர் இதை ஒரு தேரில் ஏற்றிக்கொண்டு சென்றது.மாயாண்டி மண்ணை கவ்வினான்.சேவலும் கோழியும் வானில் பறந்து கொண்டே சிரித்துக்கொண்டனர்.

19 comments:

ஈரோடு கதிர் said...

க்கும்....
நம்ம எத்தன கோழி
பழிவாங்க காத்திருக்கோ

புலவன் புலிகேசி said...

நண்பரே உங்கள் காதல் சிந்தனை இப்போது கோழியிடம். நன்றாக இருந்தது...

விழியில் விழுந்தவன் said...

எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியது.....

ஹேமா said...

ஒரு சேவலுக்குள்ளும் காதல் இருக்கும்ன்னு உணர வச்ச முதல் ஆளைய்யா நீங்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

உயிர் என்றாலே காதல் இருக்கும் அதை சொல்ல வந்தேன் ஹேமா...நன்றி புலிகேசி கதிர் விழியில் விழுந்தவன்

அன்புடன் மலிக்கா said...

அப்பாப்பா ரசனையோ ரசனை..

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி மலிக்கா...எனக்கு தமிழ் நன்றாய் தெரியும் என்று சொல்ல மாட்டேன் ...நன்றாய் ரசிக்க தெரியும்....வருகைக்கு நன்றி

ஊடகன் said...

கலக்கலா இருந்தது..........

நல்ல யோசனை.............நல்ல கதை (இல்லை நிசம்).........

என் நடை பாதையில்(ராம்) said...

அப்போ ஒவ்வொரு சேவல் சண்டையிலும் தோற்கும் கோழிக்குப் பின் ஒரு காதல் கதை இருக்குமோ!!!

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ராம் நன்றி ஊடகன்

பிரபாகர் said...

வித்தியாசமா இருக்குங்க. நல்லா யோசிச்சிருக்கீங்க... வாழ்த்துக்கள்....

பிரபாகர்.

க.பாலாசி said...

//மாயாண்டி மண்ணை கவ்வ வேண்டும். ஆம் சாகும் போது மண்ணை முத்தமிட்டது.வானில் இருந்த கோழியின் உயிர் இதை ஒரு தேரில் ஏற்றிக்கொண்டு சென்றது//

நண்பா...அப்ப மாயாண்டி வீட்லயும் ஒரு சேவல் குடும்பபத்தார் இருந்திருக்காங்கன்னு சொல்லுங்க....உயிர்வலி எல்லாருக்கும் ஒண்ணுதாங்கற மாதிரி காதலும் எல்லா உயிர்களுக்குள்ளும் உண்டு என்பதை நாமும் உணரவேண்டும். கதையான உங்களின் இடுகை நிஜமாக கூட இருக்கலாம்..

வாழ்த்துக்கள் நண்பா...

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி பலாசீ நன்றி பிரபாகர்....ஆம் உண்மையாக கூட இருக்கலாம்

rajeshkannan said...

vidyasamaana sinthanai.... just like a cartoon movie............

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ராஜேஷ் கண்ணன்

அன்புடன் நான் said...

வித்தியாசமான கோணம் மிக ரசித்தேன் .... பாராட்டுக்கள்.

அன்புடன் மலிக்கா said...

காதலுடன் கதையை இணைத்ததுபோல் இணைத்தது அருமை

வால்பையன் said...

சேவலுக்கு அம்புட்டு அறிவு இருந்துச்சுன்னா, மனுசனுங்க மண்ணை தான் திங்கணும்!

மகா said...

simply super sir!