Saturday 28 November 2009

அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?


















அழகர்
"அவளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்.ஆனால் காதலைச் சொன்னால் ஏற்பாளா,இல்லை நட்பாய் தான் பழகி இருப்பாளா.." என்று யோசித்துக்கொண்டிருந்தான் அழகர். "நாளைக்கு எப்படியாவது காதலை சொல்லி விட வேண்டும்" என்று முடிவு எடுத்துக்கொண்டான்.மறுநாள் காலை அவனுக்கு மட்டும் நான்கு மணிக்கே விடிந்தது.பல் விளக்கும் நேரம் முதல் அவளை நினைத்துக்கொண்டே இருந்தான்.கழிவறையில் கூட
கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தான்.
கல்லூரி சென்றான், சுடிதார் போட்டவர்கள் எல்லாமே அவளைப் போலவே தெரிந்தார்கள்.அனிச்சையாய் பார்த்தான் உண்மையிலேயே இப்பொழுது சுடிதாருக்குள் இருப்பது அவளே, பக்கத்தில் அவள் தந்தை அவன் வருங்கால மாமனார்.அவளைப் பெற்றதற்கு மனதார அவரிடம் நன்றி சொன்னான்.பக்கத்தில் சென்றான், கூடவே அவன் நண்பர்களும் சென்றார்கள். அவள் பொதுவாக எல்லாரையும் தன் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்.இவனுக்கு சுருக்கென்று இருந்தது.அனைத்து நண்பர்களும் "வாங்கப்பா" என்று சொல்ல ....இவனுக்கு மனம் இல்லை என்றாலும் கிளியை போல் "வாங்கப்பா" என்றான்,மனதிற்குள் அழுது கொண்டே.......!பெண்கள் பார்வை புரியவில்லை அவனுக்கு.
ஆம் அவள் பெயர் ஸ்வேதா.

ஸ்வேதா

ஸ்வேதா தொலைக்காட்சியில் "கண்கள் இரண்டால்" பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.அந்தப் பாடலின் கதாநாயகன் பெயர் அழகர் என்பது முக்கியக் காரணம். ஆம் இவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
அவனைப் பார்க்கும் போது இவளுக்கும் வேதியியல் மாற்றங்கள்.அவள் தங்கை பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர் அப்பா அலறிக்கொண்டு வந்து தங்கையை அடித்தார் "எவன் போட்டோ டீ அது" என்று அறைந்தார்.இவள் உறைந்து போய் நின்றாள்."இருபது வருஷமா வளர்த்திருகோம்,வலிக்குது டீ என்றார்" கோபத்தில் தொலைக்காட்சியை எடுத்து உடைத்தார் இவள் காதல் உடைந்து போனது .............
"அப்பா பீஸ்" என்றாள்...."நீயும் ஏதாவது காதல் கீதல்" என்றார் "இல்லை" என்றாள்..."சரி நாளைக்கு நானே வரேன்" என்றார். "சரி பா" என்றாள்.
அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த போது அழகர் தன் நண்பர்களுடன் வந்தான். இவள் அவனை கண்ணோடு கண் வைத்து பார்கவில்லை. பொதுவாக இவர்கள் எல்லாம் நண்பர்கள் என்று அறிமுகம் செய்தாள்.
எல்லாரும் "வாங்கப்பா" என்றார்கள் .அழகரும் சொன்னதை கவனித்தாள்.அவர் அப்பாவுக்கு சந்தோஷமாய் இருந்தது "அப்பா" என்று கூப்பிட்டது.காதல் பிரச்சனை,ஒரு காதலால் இன்னொரு காதல் உடைந்தது.அழகர் நேற்று மட்டும் காதலைச் சொல்லி இருந்தால்...?

17 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

Super..

வித்யாசமான நடை..

இதுக்கு முன் இப்படியாயின கதை படித்ததில்லை..

வாழ்த்துக்கள் தல

பூங்குன்றன்.வே said...

கதை களத்தை அருமையாக/எளிமையாக கொண்டு சென்று இருக்கீர்கள்.நானாக இருந்தால் எப்படியும்
ஒரு நாலு எபிசொட் போட்டு இழுத்து இருப்பேன்.எப்போதான் உங்கள மாதிரி எழுத போறேன்னு தெரியல பாஸ்.

அகல்விளக்கு said...

ரொம்ப வித்தியாசமான கதை வடிவம்...

ரொம்ப நல்ல சிறுகதை.

vasu balaji said...

நறுக்குத் தெரிச்சா மாதிரி சுருக்கமான கதை. அபாரம்.

thiyaa said...

சுருக்கமான கதை.

Menaga Sathia said...

ரொம்ப நல்ல சிறுகதை.

ஸ்ரீராம். said...

சூழ்நிலைக் கைதிகள்...ஆனால் இந்தக் காதல் இன்னொரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டே தீரும்.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு...! ஒரு நாளில் அல்ல... நொடியில் பிறழ்ந்து விடும் வாழ்க்கை... பல சமயங்களில் கொடுமை..

இன்றைய கவிதை said...

நல்லாருக்கு!

-கேயார்

MoHaNeSh said...

வணக்கம் .
எதேச்சையாக உங்களின் பதிவிற்குள் நுழைந்தேன் .கதையைப் படித்தப் பின் உமது எழுத்துக்களுக்கு ரசிகனாகி விட்டேன் ..

creativemani said...

அப்போ... அவ்ளோதானா?

ஈரோடு கதிர் said...

ஹை... கதை சூப்பரா இருக்கு...

என் நடை பாதையில்(ராம்) said...

adada... arumai. kathaikkaetra nalla thalaippu.

க.பாலாசி said...

கதையை இருவேறு பார்வையில் வித்யாசப்படுத்தியிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

நல்ல கதை..வாழ்த்துக்கள் நண்பரே

ஊடகன் said...

திரைக்கதை அருமை........
படத்தேர்வு கொடுமை.........

இனியாள் said...

நல்ல கதை, அப்பா என்று அழைத்ததால் காதல் மரித்து பொய் விடுமா என்ன...?