Thursday, 3 December 2009
உணர்வு வரையும் ஓவியம்
பெயர் நிலவன் நிலவு சூரியனின் ஒளியை உள் வாங்கி வெளுச்சம் கொடுக்கிறது.நிலவனுக்கு ராமேஸ்வரம் பார்வையற்றோர் கல்லூரி ஒளி ஊட்டிக்கொண்டிருந்தது.ஆம் அவன் பார்த்த ஒரே நிறம் கருப்பு. நிறங்களை பார்த்ததை விட உணர்ந்ததே அதிகம். சுளீர் என்று வெய்யில் அடித்தால் மஞ்சள் நிறம் உணர்வான்.மழை அடித்தால் வானத்தின் வர்ணம் கருப்பு என்று உணர்வான்.நெல் வாசம் முகர்ந்தால் பச்சை நிறம் உணர்வான். ரத்தம் வந்தால் சிகப்பு நிறம் உணர்வான். நிறத்தை பார்த்ததை விட உணர்திருந்தான்.
நிலவனுக்கு யாரவது அவனை கண் இல்லாதவன் என்று சொன்னால் பிடிக்காது. "ஐயோ பாவம் " என்ற சொல் பிடிக்காது.ஒருமுறை ஒருவர் அப்படி சொல்ல "கண் இருந்து மூலதனம் புத்தகம் படித்தாயா,ரஷ்ய இலக்கியம் தெரியுமா,எனக்கு தெரியும் " என்பான்."நான் பார்க்க மாட்டேன் உணர்வேன்,நீ உணர மாட்டாய் பார்த்து மட்டும் கொண்டிருப்பாய்" என்பான்."பார்வை இல்லாதவனுக்கு ஆயிரம் வர்ணம்" என்பான்.தத்துவங்கள் வந்து கொண்டே இருக்கும்,எழுதினால் இன்னொரு தாய் காவியம் படைக்க கூடிய திறமை அவனிடம் இருந்தது.
பார்வையற்றோருக்கான தேர்வு நாள். சூர்யா அவனுக்காக பரீட்சை எழுத வந்த பெண். ஒரு கால் ஊனம் .இலங்கை பெண்,அகதி முகாமில் இருந்து வந்த தமிழ் பெண். பெண் புலியாக சில காலம் இருந்த போது சண்டையில் அவள் கால் பரி போனது.நிலவனுக்காக பரீட்சை எழுத வந்திருந்தாள்.
பரிட்சையில் பரிச்சியம்,பின் வாரம் ஒரு முறை நிலவனை பார்க்க வருவாள். வாரம் நாட்களாக மாறின,நாட்கள் நிமிடங்களாக மாறின.நிமிடம் நொடியாய் மாறின. தினமும் நிலவனிடம் பேசிக்கொண்டே இருந்தாள். நிலவனின் ஆளுமை அவளுக்கு பிடித்து இருந்தது. அவன் பார்வையாக மாறத் தொடங்கி இருந்தாள். அவனிடம் ஒரு நாள் " என்னைய கல்யாணம் ..." என்று ஆரம்பித்தாள். "என்னய பார்த்து பரிதாப பட்டு லவ் பண்றியா" என்றான். "இல்லை பிரமித்து தான் லவ் பண்றேன்" என்றாள்."எனக்கு பரிதாப படறது
பிடிக்காது" என்றான். "நான் பரிதாப படல லவ் பண்றேன்" என்றாள்.
இவனுக்கும் அவளை பிடித்து இருந்தது. அவளின் காலாக இவன் மாறினான், இவன் கண்ணாக அவள் மாறினாள். ஆம் நிலவிற்கு சூரியன் வெளுச்சம் கொடுத்தது.முதன் முதலாக இவன் காதல் நிறமான நீல நிறத்தை உணர்ந்தான்.அவன் உணர்வு நீலத்திலே வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தது. உணர்வு வரையும் ஓவியம் எவ்வளவு அழகானது.
பின்குறிப்பு :
இன்று "world physically challenged " நாள் அவர்களுக்கு அர்ப்பணிப்பு ....
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இரு"மை" ஒருமை ஆனது !
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
காதல்...சுமையையும் சுகமாக்குவது.
கதை அருமை!
தொடரட்டும் உமது பணி!
-கேயார்
அசத்துறீங்க கார்த்திக்.
உணர்வு வரையும் ஓவியம் எவ்வளவு அழகானது. ரெம்ப அழகானது
அருமை கார்த்திக்
gr8
நல்ல பதிவு கார்த்திக்.
நண்பா, மனம் தொட்ட கதை, பார்வையற்றவர்களின் பிரதிபலிப்பு, நன்றிகள் பல.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுதிறனுடையோர்க்காக நடத்தப்படும் எங்களது வலைப்பதிவுகளில் கூட இதனைப்போன்ற தொகுப்புகளை வெளியிடவில்லை. நன்றிகள் உரித்தாகுக. தயவு செய்து எங்களது வலைப்பதிவுகளை ஒருமுறை பார்வையிடவும் www.handicappedwelfare.blogspot.com
Post a Comment