Friday, 4 December 2009
சாரு நரசிம் அரவிந்த் நான் - சாருவின் புது அடி ஆள்
மிக பெரிய நட்சத்திர பதிவர் நரசிம் என்னை அறிமுக படுத்தியதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்கிறேன்.முதலில் என் உயிர் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் என்னை அறிமுக படுத்தினான்.அரவிந்தும் சரி நர்சிமும் சரி சாருவின் வாரிசுகள். நரசிம் ஒரு புத்தகம் வெளியிட போகிறார் அய்யனார் கம்மா. தலைவர் சாரு போல மிகப்பெரிய ஆளுமையாக வர வாழ்த்துக்கள்.நரசிம் புத்தக வெளியீடு பற்றி பார்க்க
என்ன பெரிய விஷயம் என்றால் சாரு நரசிம் சங்க இலக்கியம் பற்றி எழுதியதை அவர் பதிவில் எழுதி இருந்தார் அன்று நரசிம் என்னைப் பற்றி எழுதி இருந்தார்.இதைப் போல் உயிர் நண்பன் அரவிந்த் யோகி பற்றி எழுதி இருந்தான். அந்த யோகி பதிவில் என் பெயர் இடம் பெற்று இருந்தது.
எனக்கு முன்பெல்லாம் சாரு என்றாலே பிடிக்காது அவருக்கு இளையராஜா பிடிக்காது அதனால் பிடிக்காமல் இருந்தது. போக போக சாரு மீது ஒரு இனம் புரியாத அன்பு. மனிதர் என்றால் நேர்மை போலி இல்லாத அன்பு அப்பா வியப்பாய் இருக்கிறது.கமல் என்றால் எல்லாரும் பாராட்டுவார்கள் சாரு திட்டுவார் வெறும் விளம்பரத்திற்கு அல்ல,கமலிடம் அவர் கேட்கும் ஒரு கேள்விக்கும் கமலால் பதில் சொல்ல முடியாது."தலைவன் இருக்கிறான்" என்ற படத் தலைப்பு "உன்னைப் போல் ஒருவன்" ஆனது .
அது தான் சாருவின் ஆளுமை. existentialism fancy baniyan புத்தகம் படித்தேன்.அது சாருவின் வாழ்க்கை வரலாறு என்று வாசகனுக்கு தெரியும்.இருந்தாலும் ஓரினச்சேர்க்கை பற்றி எழுதி இருப்பார்.
பதிவு எழுதும் நான் கூட நல்லவன் என்று தான் வேஷம் போடுவேன். தன் செக்ஸ் வாழ்க்கையை பற்றி எழுத யாருக்காவது தைரியம் உண்டா.கமல் சொன்னால் அப்படியே கேட்காமல் அது தவறு என்று சுட்டிக்காட்டும் ஆளுமை உண்டா. மனுஷியா புத்திரன் என்றாலும் அவரையும் கிழிப்பார் என் சாரு. தன் புத்தகம் வெளி ஆக வேண்டும் என்று ஜால்ரா போட மாட்டார். அவருக்கு ஜால்ரா அடியாள் என்றால் நானும் சேர்ந்து கொள்வேன்.
நரசிம் பதிவு பற்றி சாரு எழுதி இருந்த போது அதில் என் அதிர்ஷ்டமாக நரசிம் எழுதிய வேறு பதிவில் நான் இருந்தேன். அதே போல் அரவிந்த் எழுதிய பதிவில் சாரு சொல்லி இருந்த பதிவில் என் பெயர் உண்டு . சாரு சொல்லித் தான் dostovesky தெரியும் வெண்ணிற இரவுகள் என்று பெயர் வைத்தேன்.சாரு பார்க்காத சாருவிடம் விடயம் கற்றுக்கொண்ட 'ஏகலைவன்'.
எவ்வளவு பெரிய எழுத்தாளர் நான் எழுதினால் அழகாய் பதில் போடுவார்,ஆனால் எனக்கு பின்னூட்டம் எழுதியவருக்கு பதில் போட கூட நேரம் இல்லை,யார் பெரிய ஆள். சாரு ஒரு ஆளுமை,அவரின் புது அடியாள் அடியேனே. ஒரு தலைக்கு வாலாக இருப்பது தப்பில்லை.
எனக்கு ராமகிருஷ்ணன் கூட பிடிக்கும் ஆனால் அவர் படிக்கும் போது மிக நல்லவர் என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் சாரு ஒரு குழந்தை ஒரு காட்டாறு,சாருவை புரிந்து கொண்டாலே நீ அனைத்து இலக்கியம் படித்த மாதிரி.சாரு உலக இலக்கியத்தின் சாறு.அடியாளாக இருப்பதில் பெருமை.
சாருவை பிடிக்காதவர்கள் சாரு சொல்லும் உண்மையை ஜீரணிக்க முடியாதவர்கள் .இருந்தாலும் தினமும் அவர் வலை தளத்தை மேய்பவர்கள்.galileo வை பைத்தியம் என்று தான் சொன்னார்கள்.பாரதி அவர் சம காலத்தில் கோமாளியாகவே
பார்க்கப்பட்டார். சாரு கலியுக பாரதி. இலக்கியத்தில் அழகு என்பதை விட ஆணித்தனமான உண்மை இருக்கும்.ஒரு ஜால்ரா போட தெரியாதவனுக்கு ஜால்ரா போடுவது தப்பு இல்லை. அவரின் பெருமைக்குரிய அடி ஆள் வெண்ணிற இரவுகள் கார்த்திக்
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
// galileo வை பைத்தியம் என்று தான் சொன்னார்கள்.பாரதி அவர் சம காலத்தில் கோமாளியாகவே
பார்க்கப்பட்டார். சாரு கலியுக பாரதி. இலக்கியத்தில் அழகு என்பதை விட ஆணித்தனமான உண்மை இருக்கும். //
எனக்கு இலக்கியம் தெரியாது.., எனினும் இந்த வார்த்தைகளில் உண்மை இருப்பது புரிகிறது.., congrats புது அடியால் ஆனதுக்கு ...
உங்கள் கருத்துகளுடன் நிறைய உடன் படுகின்றேன்
:)
நீங்கதானா அவரு! :)
நீங்கதான் அந்த புது அடியாள்.... நர்சிமின் பதிவில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்... தல நரசிம் என்னையும் அறிமுகப்படுத்தி இருந்தார்
இவர் உண்மையச்சொன்னாலும் சிலர் வறட்டு பிடிவாதமாய் ஏற்க மறுக்கின்றனர். ஆனால் இவர் கருத்துகளை நான் ஆமோதிக்கிறேன்.
நன்றி பேனா மூடி
அருண் மொழி வர்மன்
கலகல பிரியா
பாலா
என் நடை பாதையில்
எறும்பு அன்றே வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் .......
நஸ்ரிம் தளத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள் ..............மென் மேலும் எழுதுங்கள் நானும் படிக்கறேன்.........
நன்றி ......
சாருவைப் பற்றிய புதிய நோக்கில் விமரிசனம் நன்று கார்த்திக்.
சாருவோட ஜீரோ டிகிரி நாவலா இல்லை
கட்டுரையா என்று விளக்கவும்....
ஜீரோ டிகிரி நான் லீனியர் நாவல் ஜெட்லி!
//சாரு கலியுக பாரதி//
100% சரி
//சாருவை பிடிக்காதவர்கள் சாரு சொல்லும் உண்மையை ஜீரணிக்க முடியாதவர்கள் .இருந்தாலும் தினமும் அவர் வலை தளத்தை மேய்பவர்கள்.galileo வை பைத்தியம் என்று தான் சொன்னார்கள்.பாரதி அவர் சம காலத்தில் கோமாளியாகவே
பார்க்கப்பட்டார். சாரு கலியுக பாரதி. இலக்கியத்தில் அழகு என்பதை விட ஆணித்தனமான உண்மை இருக்கும்.ஒரு ஜால்ரா போட தெரியாதவனுக்கு ஜால்ரா போடுவது தப்பு இல்லை. அவரின் பெருமைக்குரிய அடி ஆள் வெண்ணிற இரவுகள் கார்த்திக் //
Super!!
-Keyaar
நானும் சாருவின் தளத்தை தினமும் வசிக்கும் தீவிர வாசகன் ( வெறியன் ).....
இன்று முதல் நானும் அடியாள்...........
மனதில் படும் கருத்தை( உண்மையை ) வெளிப்படையாக ( யாரைப்பற்றி கவலைப்படாமல் ) கூறுவதில் என் தல அஜித்தை போல் அண்ணன் சாருவும் என் தலைவனே.......
பார்வை சிறப்பாக இருக்கிறது நண்பா...
நல்ல பதிவு தோழமையே..[அடியாளா???????:{]
அடியாள் என்பதை விட அல்லக்கை என்பது தான் குஜாலான வார்த்தை!
சாரு மேல் உங்களுக்கு இருக்கும் அலாதி பிரியம் உங்கள் பதிவில் வெளிபடுகிறது, எனக்குள் ஒரு கேள்வி பதிவுலகில் இருப்போர் பொதுவாக சாருவை பாராட்டுபவர் சாருவை பிடிக்காதவர் என்று இரண்டு பிரிவாகவே இருக்கின்றார்கள், ஏன் அப்படி இருக்க வேண்டும், அவரை பிடித்தால் ஜால்ரா ஆஹ வேண்டுமா, அன்றி பிடிக்காமல் போனால் கூட அவரை திட்டி ஒரு பதிவு எழுதி விட வேண்டும், இதெல்லாம் என்ன கலாச்சாரம், ஒரு வேளை இந்த ரெண்டு பிரிவில் இல்லாத பதிவர்கள் இலக்கிய பரிச்சயமே இல்லாதவர்கள் என்று கருதப்படுவார்களோ....?
நண்பரே நான் எதையும் சொல்ல வில்லை. சாருவை பாராட்டி பேசினால்,அடியாள் என்கிறார்கள்.
அதற்காக பதிவு போட்டேன். ஆம் என்று. மற்றபடி நான் ஜால்ரா இல்லை . ஜால்ரா என்று சொல்பவர்களின்
வாயை எப்படி அடைப்பீர்கள் .."ஆமாம் நான் அப்படி தான்..." என்று சொல்விரீர்கள் தானே
வாலு.. பப்ளிக்.. பப்ளிக்.. :))
இந்த உலகத்திலேயே சிறந்த இலக்கியம் சீரோ டிகிரி தான். அதை படிக்காதவர்கள் நரகத்திற்கு போக...சாருவின் இன்னபிற அருமைபெருமைகளை தெரிந்துகொள்ள இங்கே செல்லவும் - http://chandanaar.blogspot.com/2009/11/blog-post.html
அது மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே முதன்முதலில் கமலை எதிர்த்தவர் இந்த (இஞ்சி)சாறு தான்.
வாவ்! கிரேட்!! என்ன துணிச்சல் !!!
//சாரு கலியுக பாரதி//
அப்ப அந்த பாரதி வாழ்ந்தது எந்த யுகம்?
சாருவின் கருத்துக்கள் ஒரு வேளை சிறப்பாக இருக்கலாம், நீங்கள் சொல்வது போல.
அப்படியானால் அவர் சொல்லும் முறையில் தான் குறை உள்ளதா . எனவேதான் அவரால் அதிகம் வாசகர்களை அடைய முடிய வில்லையா. அதிக வாசகர்களின் விருப்பத்தை பெற முடிய வில்லையா.
எனவே அவர் எழுதும் முறையை மாற்றினால் இன்னும் பல வட்டத்தை அவரின் எழுத்துக்கள், கருத்துக்கள் போய் சேரும்,
இல்லாவிடில், அவார்ட் வாங்கிய திரை படம் போல குறுகிய வட்டத்துக்குளேயே அவரின் எழுத்துக்கள் கருத்துக்கள் முடங்கி விடும் கவலை உள்ளது எனக்கு.
ஹலோ... வெண்ணிற இரவு... உங்களின் ஜிஞ்சக் சத்தம் தாங்க முடியாமல் எழுதுகிறேன்...
இதயத்தால் யோசிப்பதை நிறுத்திவிட்டு, மூளையை வைத்து யோசியுங்கள். சாரு, தனக்கு மிகவும் பிடித்த கல்லூரி - எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி என்று அவர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கல்லூரியின் தரம் பற்றி உண்மை நிலை இவருக்கு தெரியுமா? எத்தனையோ சிறந்த தனியார் பொறியியற் கல்லூரிகள் இருக்கும் போது, தன் வலைப்பக்கத்தில் விளம்பரம் கொடுத்த ஒரே காரணத்துக்காக அந்த கல்லூரிதான் இவருக்கு பிடித்த கல்லூரியாம். உங்களை போன்ற தீவிர விசிறி யாரேனும் இவரின் பேச்சை கேட்டு அங்கு சேர்ந்தால் அப்போது தெரியும் அக்கல்லூரியின் லட்சணம்.
இப்படிப்பட்ட ஒருவரைப்போய் பாரதியுடன் ஒப்பிடுகிறீர்கள்.
நான் பாரதியின் அடியாள்.
தேடிவந்து உதைப்பேன்.
Dinakaran vazhakkil adiyaaLgaL viduthalai.
nadakkattum ithu adiyaaLgaLin kaalam
ஹலோ குப்பன் யாஹூ
எழுத்தாளர்கள் யாருமே வாசகர்கள் வட்டம் விரிவாக்க தங்களது எழுத்து நடையை அமைத்து கொள்பவர்கள் அல்லர் .
எழுத்து நடை என்பது தனித்துவம் ..........கண் மூக்கு முகவாய் என்று எல்லா மனிதருக்கும் தனித்தன்மை இருப்பது போல மூளை யோசிப்பதும் அதை சுவாரசியமாக எழுத்து வடிவத்தில் பதிவதும் அவரவர் இயல்பு ..............
இதே படிமானதிற்குள் சாரு வும் அடங்குகிறார் ........அவருடைய எழுத்தை பிடித்தால் படியுங்கள் இல்லையேல் விலகுங்கள் ...........எவருடைய எழுத்துக்கும் இது பொருந்தும் ...........இப்படி தான் எழுதவேண்டும் என்று யாரும் யாருக்கும் சொல்ல முடியாது ....................அப்படி சொல்லி எழுதப்பட சாரு என்ன வெகு ஜன திரை உலகத்திலா எழுதிக்கொண்டிருக்கிறார் ............இப்பொழுது அடிக்கும் விமர்சன அலைகள் அவர் திரைக்கதை அமைக்கும் போது எழ வேண்டியவை .................... கூட்டம் கூவி கூவி கூட்ட வேண்டியது இல்லை .........அவருக்கு தானாக கூடும் ............அவருடைய எழுத்தை பிடித்தவர்கள் தானாக கூடுவார்கள் ............
நண்பர்களே உங்களை நீ யாரவது கெட்டவனாமே என்று சொன்னால் என்ன சொல்வீர்கள் ஆம் அப்படிதான் என்று
சொல்ல மாட்டீர்கள் ..............................சாருவே தப்பு செய்தலும் கேட்பேன் ......நண்பர்களே பிடித்தால் படியுங்கள் உங்களை யாரும் கட்டயபடுத்த வில்லை ....அவர் வலை தளம் என் மேய்கிரீர்கள்.......
அவரை படிப்பீர்கள் அவர் சொன்ன விஷயத்தை படிப்பது ஆனால் அவரை கிழிப்பது என்ன நண்பா....
பிடிக்கவில்லை என்றால் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்
i accept all u r comments.
syed
கார்த்திக்,
தயவுசெய்து பாரதியை மண்ணாங்கட்டி சாருவோடு ஒப்பிட வேண்டாம்.
தவிர பாரதி ஒரு கோமாளியாக அவரது சமூகத்தால் மட்டுமே தூற்றப்பட்டார்.
தேசிய உணர்வை ஊட்டிய பாரதியை வெள்ளையன் அவரைத்தேடிய வரலாறு உங்களுக்கு
தெரியாது போலும். கண்மூடித்தனமாக துதி பாடும் சாருவின் ரசிகர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்.
சாரு தங்களுக்கு இலக்கிய வேந்தராக இருக்கலாம் அதற்காக பாரதியை இவருடன் ஒப்பிடுவது தவறு மட்டும் அல்ல தமிழுக்கு தாங்கள் செய்யும் மாபெரும் பாவம்.
தயவு செய்து பாரதியை யாருடனும் ஒப்பிடதிகள் .
சாரி தெரியாம வந்துட்டேன் !
பாரதி எவ்வளவு அற்புதமான ஆளுமை...அவரைப் போயி.....குஷ்டமப்பா...நீங்க இன்னும் வளரனும் தம்பி..
யோவ், சாருவை பாரதியுடன்...கொஞ்சம் கூட வெவஸ்தை இருக்கா?
Post a Comment