Monday 7 December 2009

நீரோ மன்னனும், இம்சை அரசன் இருபத்தி மூணாம் புலிகேசியும்



















நீரோ மன்னன் ரோம் பற்றி எரிந்த போது வயலின் வாசித்துக் கொண்டிருந்தவன்.கலைஞர் விழா நடுத்துவது தனக்கு தானே விருதுகள் கொடுப்பது அதைப் போலவே உள்ளன.நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன.சென்னையை தவிர மற்ற ஊர்களில் மின்சாரம் நான்கு மணி நேரம் கிடையாது.ஆனால் கலைஞர் பிறந்தநாளோ அழகிரி பிறந்த நாளோ என்றால் மின்னொளி போட்டி. அதை நடத்துவது கலைஞர் பேரன் துரை தயாநிதி.மதுரையில் உள்ள முக்கிய ஆட்டக்கார்கள் அவர் அணியில் ஆடுவார்கள்,ஜெயிப்பது அவர்கள் அணியே .

மின்சாரம் இல்லையாம் மின்னொளி போட்டி தேவையா. அதே நேரத்தில் சென்னையில் நடந்த போட்டியிலும் கலைஞர் பேரனே ஜெயிப்பார். சரி பேருந்து பிரச்சனைக்கு வருவோம்,நான் மதுரை எங்க ஊர் கிழவிகள் 50 பைசா கூட இருந்தாலே அரை மணி நேரம் காத்து இருந்து போபவர்கள். மதுரை சுற்றி சொகுசு பேருந்து மட்டுமே ஓடுகிறது. பணக்காரன் மட்டும் தான் பேருந்தில் செல்ல வேண்டுமா என்ன????

என்ன கொடுமை?????பாவம் எங்க ஊரு கிழவிகள்.காலை காய்கறிகளை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு செல்லும் கிழவிக்கு கிடைப்பது சொற்பமே அதையும் பிடுங்கி விடுகிறார்கள்.மக்கள் வரிப் பணம் யாருக்கு போகிறது. கமலஹாசன் ஏதோ சினிமா சம்பந்தமான விழா எடுப்பாராம்,அதற்கு ஐம்பது லட்சம் தருவாராம்,ஏன் கமலிடம் காசு இல்லையா.கமல் வருமான வரி கூட கட்ட மாட்டாராம்.....கேள்வி.சினிமா எடுப்பவர்கள் ஏழையா எதற்கு வருமான வரி. புதிதாக மகள் பிறக்கிறது ஒருவனுக்கு அவன் தமிழிலே பெயர் வைக்கிறான் அவனுக்கு வருமான வரி விளக்கு தருவாரா? "மானாட மயிலாட' இவர் தமிழிலே பெயர் வைத்தது,நமீதா எவ்வளவு அழகாய் தமிழ் பேசுகிறார் பார்த்தோமே. அதைப் போல ஆட்ட நிகழ்ச்சிகள் தமிழிலே கலாச்சார படுகொலை செய்கின்றன.

சரி தமிழ் அறிஞர் என்று சொல்கிறார்.தமிழ் நன்றாய் தெரிந்தவர் தான் ஆனால் அவர் தான் தமிழ் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் லியாகத் அலி கான் கூட தான் நன்றாய் வசனம் எழுதுகிறார். புத்தக கண்காட்சியில் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும் ,அண்ணா அறிவாலயம் ஸ்டால் கூட்டமே இல்லாமல் இருக்கும்.சில புத்தகங்கள் எழுதியதாலேயே அவர் தான் தமிழ் என்று சொல்ல முடியாது. புத்தகம் அதிகம் படிப்பவர்கள் கூட கலைஞர் கண்டால் ஓடுகிறார்கள்.

உளியின் ஓசை சிறந்த வசனமாம்,கொடுமை. கமல் கலைஞரை பார்த்துதான் திரைக்கதை எழுத கற்று கொண்டதாக கதை விடுகிறார். ஏன் கமல் கலைஞர் வசனத்தில் இன்னும் நடிக்கவில்லை,அரசியல் புரிகிறதா நண்பர்களே.கலைஞர் விழா எடுப்பதும் அனைவரும் புகழ்ந்து பாடுவதும் "இம்சை அரசன் 23 புலிகேசி" நியாபகப்படுத்துகிறது.சரி அதை விட கனிமொழியை கவிஞர் கவிஞர் என்று சொல்கிறார்களே.அவர் கவிதை புத்தகம் எங்கு கிடைக்கிறது.அப்படி எத்தனை புத்தகம் எழுதி விட்டார். இப்படி அரசியல் பண்ணி தான் தலைவருக்கும் கலைஞர் பட்டம் கிடைத்திருக்குமோ??????சரி கலைங்கராய் இருங்கள் எப்பொழுது முதவராய் பணியை செய்யப்போறீர்கள். சரி நீங்கள் 'பெண் சிங்கம்' வசனம் எழுதவதில் இருப்பீர்கள்.

படம் முடிந்ததும் வட்டம் மாவட்டம் எல்லாரிடம் நூறு நூறு டிக்கெட் அவர்கள் செலவிலே எடுக்க சொல்லி கொடுமை செய்வீர்கள்.'கள்ளிக்காட்டு இதிகாசம்' படித்து உச்சத்தில் இருந்த வைரமுத்து,இறங்கிக் கொண்டே இருக்கிறார்,என் மனதில்
எனக்கு உங்களை புகழும் வைரமுத்து வாலி பார்க்கும் பொழுது 23 புலிகேசி படத்தில் இருவர் புலிகேசியை பாராட்டிக்கொண்டே இருப்பார்களே அவர்கள் நியாபகம் வருகிறார்கள். நான் இப்பொழுது எல்லாம் வைரமுத்து வாலி படிப்பதில்லை.

16 comments:

ஊடகன் said...

நீங்கள் கூறியது அனைத்தும் 100%உண்மை....!உண்மை....!உண்மை....!உண்மை....!உண்மை....!

புலவன் புலிகேசி said...

நல்ல ஒப்பீடு...

Unknown said...

நல்ல பதிவு..

vasu balaji said...

அடேங்கப்பா. கார்த்திக்கா!!!!. அடி பின்னிட்டீங்க.

க.பாலாசி said...

சாட்டையடி....நல்ல நெடி....

rajeshkannan said...
This comment has been removed by the author.
rajeshkannan said...

எங்கள் மனதில் உள்ள கேள்விகளின் பிரதிபளிப்கத்தான் இதை பார்கிறேன்.
மிகவும் அருமை.உங்களை மாதிரி நாலு பேர் கேள்வி கேட்டா தன இந்த மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வரும் ... சரியான செருப்படி

ஹேமா said...

இதைவிட யாராலும் வலிக்காம அடிக்கமுடியாது.

அஹோரி said...

அருமை. அல்லகைகள் இதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.

//வைரமுத்து வாலி //
நீங்க மூணு வேளை சோறு போட்டு , பேட்டா கொடுத்தா போதும் ..... பின்னாலேயே வருவார்கள்.

சூரியசந்திரன் said...

சோறு போட்டா பத்தாதா?பேட்டா வேற கொடுக்கனுமாக்கும்.....?
அதுக்கு எங்க போறதாக்கும்!!!

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
சாட்டையடி....நல்ல நெடி....//

ரிப்பீட்டேய்

Unknown said...

சமுதாயத்தின் கோவம் உங்களின் வரிகளாய்...........
மிகவும் அருமை..........

இன்றைய கவிதை said...

கோபங்கள்...காயங்கள்!
நல்ல வெளிப்பாடு!

-கேயார்

Chitra said...

இம்புட்டு பேசிட்டு உங்களை மதுரையிலேயே எப்படி இருக்க விடுறாங்க? கையில் எடுத்த சவுக்கை கீழே வச்சுடாதிங்க.....
super entry!

ரோஸ்விக் said...

நண்பா! இவய்ங்க மேல இருக்கிற கோபம் மட்டும் நமக்கு ஆறவே மாட்டேங்குது...

அடி சுளுக்கு எடுத்துருக்கீங்க...:-)

Uthamaputhra Purushotham said...

கமலுக்குக் கூட்டத்துக்குத் தகுந்தமாதிறி உளறும் வியாதி, இந்த செலக்டிவ் அம்னீசியாவோ என்ன எழவோ என்பார்களே. அது மாதிரி. பாப்பான்கள் கூட்டம் என்றால் நாகேஷை அப்பா என்பார். பெருசுகள் இருந்தால் சிவாஜி அப்பா ஆவார். எம்ஜிஆர் கட்சிக்காரர்கள் இண்டர்வியூ என்றால் அவர்தான் எனக்குப் பெரிசு என்பார். கருணாநிதி வருடம் ஒரு அவார்டை ரொடேஷனில் தருவதால் அவரைப் பார்த்துத்தான் தமிழ் கற்றேன் என்பார். வைரமுத்து இருந்தால் கண்ணதாசன் என்பார். கண்ணதாசனை எல்லாரும் பாராட்டினால் அவர் குடித்துவிட்டுத்தானே அர்த்தமுள்ளதை எழுதினார் என்பார். வித்தியாசப் படுத்திக் கொண்டால் மேதாவி என்பார்களாம். ஜெயகாந்தன் பண்ணுகின்ற அதே கோமாளித்தனம்.

அழுது கொண்டே பழி தீர்ப்பார். பழித்துக் கொண்டே சிரிப்பார். பெரியாரின் கடவுள் மறுப்பைப் பகுத்தறிவு எனும் நாமத்தோடு ஏற்றுக் கொள்வாராம். கடவுள் இருந்தால் நல்லது தானே என்பார். மகாத்மாவை கரம்சந்த் என்று பார்ப்பனத் திமிர் பேசுவார். பகுத்தறிவு வாதி என்பார். அஹிம்சையைப் பாராட்டும் தீவிரவியாதியாம். தீவிரவியாதியால் தீவிரவியாதியைக் குணப்படுத்துவாராம். எந்தத் தமிழ் வைணவனும், அய்யங்காரும் துணியாத காந்தி கொலையை பார்ப்பனத் தீனித் தினவுக்கு எடுத்துக் காட்டுவார். பிறகு கடைசி ஃபிரேமில் ஹ்ஹா... என்று மயில்மாதிரியெல்லாம் கத்தி மனுசத்தனத்தை, துலுக்கனின் கோமணமெல்லாம் அவிழ்த்துப் பார்ததபிறகு பதிவு செய்வார்.

பார்ப்பனைப் பிடிக்காத கருணாநிதிக்கு கமல் எனும் செல்லப் பிள்ளையை எவ்வளவு தூரம் மட்டும் தூக்கவேண்டும் என்று தெரியும். ரஜினியையும் தான். செத்தால் மரணத் துதிபாட இந்த துக்கடாக்கள் தேவை. அதேபோல் கமலுக்கும் கருணாநிதி இறந்த பிறகு நிச்சயம் கால் வாரத் தெரியும். அது பரம்பரையாக வருவதுதானே...

கவிஞர்களைப் பற்றி நீங்களே நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். இந்த மந்திரிகளுக்கெல்லாம் தான் இறந்தபிறகு எப்படியெல்லாம் வாழ்த்துப் பாட வேண்டும் என்று வசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் சாவார் கருநாநிதி. அரசியல் சாணித்துவம் ...ச்சீய் சாணக்கியத்துவம் என்றால் சும்மாவா? ஒருவருக் கொருவர் பிரியத்துடன் கொடுத்துக் கொள்ளும் அல்வாதானே...

தமிழகத்தில்தான் எத்தனை நாடகங்கள்... நடக்கட்டும்... நடக்கட்டும்...