Tuesday 8 December 2009

இறந்த பின்பு ஆவிகளாக ......!
















நான் பேசிய
வார்த்தை அவள் வார்த்தையோடு
முத்தமிட்டுக்கொண்டது காற்றில் ....!
நான் பார்த்த முதல் பார்வை நொடி ...
எங்கோ என் கவிதையில் பதிவு செய்யப்பட்டு இருந்தது....!
நொடிக்கு நொடி அவள் வீட்டுத் தெருவில்
நடந்த கால்கள் காலடிகளை விட்டுச் சென்றன ....!
சுவடுகள் உயிரோடு இருக்கின்றன.....
உதடுகள் உயிரோடு இல்லை வார்த்தைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன...!
ஏய் காதலியே .....
என்றாவது ஒரு நாள் சந்திக்க வேண்டும் அதே தெருவில் ....
இறந்த பின்பு ஆவிகளாக ......!

பின் குறிப்பு:
இது ஐம்பதாவது பதிவு

15 comments:

தேவன் said...

me the first

தேவன் said...

கைய கொடுங்க உங்க ஐம்பதாவது பதிவிற்கும், கழண்ட உங்க காதலிக்குகும் வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் ஐம்பதுக்கும்

...........சந்திப்பதற்கும்

பூங்குன்றன்.வே said...

அய்யோ..அய்யோ..ஆவி..பயமா இருக்கு :)

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திக் !!!

சத்ரியன் said...

//சுவடுகள் உயிரோடு இருக்கின்றன.....
உதடுகள் உயிரோடு இல்லை //

ரசனையான வரிகள்..!

ஐம்பதுக்கு வாழ்த்துகள். (ஆவியுடன் பேசும் வித்தையை அடியேனுக்கும் கற்றுக் கொடுங்கள்)

ரோஸ்விக் said...

ஐம்பதுக்கு வாழ்த்துகள் நண்பா!

சிவாஜி சங்கர் said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள் ...

vasu balaji said...

ஐம்பதுக்குள்ள எவ்வளவு மாறிட்ட கார்த்திக். அபாரம். பாராட்டுக்கள்.

இனியாள் said...

வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

காதலிலே தோல்வி என்றாலும் பதிவில் வெற்றி...50க்கு வாழ்த்துக்கள் கார்த்தி...

கலையரசன் said...

50க்கு வாழ்த்துக்கள்... இனி 200க்கு, ஸ்டார்ட் மீயூஜிக்!!

ஹேமா said...

ஆவியைச் சந்திக்கும் ஆர்வத்தோடு எழுதிய கவிதைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்.

rajeshkannan said...

மிகவும் அருமை .. வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//நொடிக்கு நொடி அவள் வீட்டுத் தெருவில்
நடந்த கால்கள் காலடிகளை விட்டுச் சென்றன ....!//

கவிதை நன்றாயிருக்கிறது நண்பா...கொஞ்சம் வலிக்கவும் செய்கிறது...சோகங்களை சுகமாக்குங்கள்....வாழ்த்துக்கள்...பெருகட்டும் உங்கள் எழுத்தின் வளம்....

Unknown said...

கவிதா நல்ல இருக்கு... 50 -க்கு வாழ்த்துக்கள்..,