Wednesday 9 December 2009

வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன




"நீ இல்லாம இருக்க முடியாது.." எத்தனையோ

முறை சொல்லிருக்கிறேன்..?

பிறந்தவுடன் தாய் கண்களை பார்த்து,

மூன்று வயதில் பொம்மையுடன்......

இரண்டாம் வகுப்பு ஆசிரியையிடம்...,

ஈர்ப்பிலே முதல் காதலியிடம்,

உயிர் நண்பனிடம்....

உயிர்த் தங்கை திவ்யாவிடம்..........



விடம் விடம் விடம் ......!
சொல்பவனும் கேட்பவனும் உயிருடன் இல்லை ....
வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன .... !



பின் குறிப்பு:
இது போன கவிதை மாதிரியே இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்.இது முதலில் எழுதப்பட்டது .....
இது ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்ட கவிதை வருமா வராதா என்று தெரியாது.....???நான் காதலியை பற்றி எழுதியதால் என் தங்கை திவ்யா கோபித்துக்கொண்டாள்.....அதனால் இது நான் எழுதிய அசல் ,இதனுடைய நகல் தான் போன கவிதை,உறவுகளுக்குள் இருப்பதை வெறும் காதலாக நகல் எடுத்திருந்தேன்....நேற்று தங்கை வீட்டில் அதாவது என் வீட்டில் internet இணைப்பு வந்தது. அரசியல் பற்றி எழுத வேண்டாம் எழுதினால் பேச மாட்டேன் என்றாள் ................இனி என் பதிவுகளில் அரசியல் சுத்தமாக இருக்காது .......................மன்னிக்கவும் நண்பர்களே .....என் தங்கை சொன்னால் பதிவுலத்தில் இருந்து கூட விடை பெறுவேன் ..............என் தங்கையை விடவா எல்லாம் முக்கியம் ....

6 comments:

இனியாள் said...

உங்கள் தங்கைக்கு என் பாராட்டுக்கள், அரசியல் எழுதாமல் இருப்பது நல்லது. உங்களிடம் இருந்து இன்னும் ஆழமான கவிதைகளை எதிர்பார்கிறேன்.

பூங்குன்றன்.வே said...

//சொல்பவனும் கேட்பவனும் உயிருடன் இல்லை ....வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன .... !//

என்னோவோ செய்கிறது மனசை..வரிகள் ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கிறது.
உங்கள் தங்கைக்கும் வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

//அரசியல் பற்றி எழுத வேண்டாம் எழுதினால் பேச மாட்டேன் என்றாள் ................இனி என் பதிவுகளில் அரசியல் சுத்தமாக இருக்காது .......................மன்னிக்கவும் நண்பர்களே .....என் தங்கை சொன்னால் பதிவுலத்தில் இருந்து கூட விடை பெறுவேன் ..............என் தங்கையை விடவா எல்லாம் முக்கியம் .... //

முதலில் உங்கள் தங்கைக்கு வாழ்த்துக்கள். இப்படி ஒரு அண்ணன் கிடைத்தமைக்கு.

மேலும் என்னுடைய ஒரு கருத்து: தவறுகளை சுட்டிக்காட்டத்தான் இந்த வலைப்பூ உலகம் என நினைக்கிறேன்..இன்று நாட்டில் நடக்கும் தவறுகளில் 60 சதம் அரசியலில்தான். அதைப்பற்றி எழுதுவது இல்லை என முடிவெடுத்தால் உங்களிடம் உள்ள கருத்துக்கள் கோபங்கள் எல்லாம் உங்களுடன் முடிந்து விடும்.

இது சமுதாய அக்கரையிலிருந்து விலகுவது போல் தோன்றுகிறது.

க.பாலாசி said...

கவிதை அழகு....

//சொல்பவனும் கேட்பவனும் உயிருடன் இல்லை ....
வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன .... !//

உண்மைதான் நண்பா...மறுப்பதற்கில்லை...

//புலவன் புலிகேசி said...
முதலில் உங்கள் தங்கைக்கு வாழ்த்துக்கள். இப்படி ஒரு அண்ணன் கிடைத்தமைக்கு. //

நானும் வழிமொழிகிறேன்...

சயந்தன் said...

சொல்பவனும் கேட்பவனும் உயிருடன் இல்லை ....
வார்த்தைகள் காற்றில் உலவிக் கொண்டிருக்கின்றன .... !!!!

அருமையான வரிகள் நண்பா ;

உங்களுடைய உறவு பிணைப்புக்கு எனது வழ்த்துக்கள்.

அத்திரி said...

அருமையான வரிகள்