Tuesday 15 December 2009

கவிதைக்குள் எதற்கு போட்டி....!













கவிதை போட்டிக்கு
கவிதையாம் .....!
ரோஜா நறுமணத்தை ஏன்
மல்லிகையிடம் ஒப்பிட வேண்டும் .....!
என் அம்மாவின் பாசம்
எனக்கு சிறந்தது .....!
உங்களுக்கும் அம்மா இருப்பார்
என் தங்கை திவ்யாவின்
பாசம் எனக்கு சிறந்தது .....!
உங்களுக்கும் தங்கை இருப்பாள்
அஜித் ஷாலினி அழகான
ஜோடி தான் ........!
அதற்காய் என் காதல் சொம்பையா
என்ன .....!
என் கவிதை சிறந்ததே
கவிதைக்குள் எதற்கு போட்டி....!
அன்பிற்கு எதற்கு போட்டி .....
என் கவிதையை அங்கீகரிக்க நீங்கள் யார் .......
பாரதி முதல் கவிதை திருப்பி அனுப்பப்பட்டதாம் .......
கவிதைக்கும் கலைக்கும் போட்டிகள் வைக்க வேண்டாம் .....
ரோஜா அழகு தான் ,மல்லிகையும் அழகு தானே ......
என் கவிதைகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டாம் .....
ஒரு கவிதைக்கு பரிசு கொடுத்து
மற்ற கவிதையை பரிகாசம் செய்ய வேண்டாம்.....!
கலையை அங்கீகரிக்க நீங்கள் யார் ???????
கவிதை என்ன ஓட்டப்பந்தயமா

16 comments:

ஸ்ரீராம். said...

ஏன்...ஏன் இந்தக் கோபம்? போட்டிக்கு அனுப்பி இருந்தீங்க இல்லே...

இன்றைய கவிதை said...

என்னாச்சு?!

-கேயார்

வெண்ணிற இரவுகள்....! said...

கவிதைக்குள் போட்டி நடக்க கூடாது என்பதே என் விருப்பம் ....
ஒரு கவிதையையும் இன்னொன்றையும் போட்டி போட சொல்லக்கூடாது என்று தோன்றியது ........
மைனஸ் வாக்கு போட்டவரை பார்த்து மனம் வருந்துகிறேன் .............
கலைகள் அனைத்தும் ரசிக்ககூடியதே .................................
என்பதே என் கருத்து ..........
எப்படி என் காதலையும் உன் காதலையும் போட்டி போட சொல்ல முடியும் ....
தோன்றியதால் சொல்கிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

கோபமும் உங்கள் கவிதையின் மீதான பாசமும் சொல்லியிருக்கீங்க நல்லாவே...!

வெண்ணிற இரவுகள்....! said...

ஆமாம் வசந்த் ....
எப்படி சில பேர் முடிவு செய்ய முடியும் .....
சிறந்த படங்கள் வசூலில் தோல்வி அடைகின்றன .....
சிலர் ரசனை வைத்து சொல்ல முடியாது ...
என்னை பொறுத்தவரை கலைக்குள் எதற்கு போட்டி ....
ரசியுங்கள் எல்லாமே கவிதையே .......
ரசனைக்கு ஒன்று இரண்டு மூன்று என்று பிரிக்க வேண்டாம் ..........
ரசியுங்கள்
இப்பொழுது இது தோன்றியது ஏற்கனவே இரண்டு அனுப்பி விட்டேன்
இருந்தாலும் போட்டியில் இருந்து விலகுகிறேன் ......
சில கருத்துக்கள் முன்பே தோன்றாது

புலவன் புலிகேசி said...

//என் கவிதையை அங்கீகரிக்க நீங்கள் யார் .......
பாரதி முதல் கவிதை திருப்பி அனுப்பப்பட்டதாம் .......
கவிதைக்கும் கலைக்கும் போட்டிகள் வைக்க வேண்டாம் .....
ரோஜா அழகு தான் ,மல்லிகையும் அழகு தானே ......
என் கவிதைகளை நீங்கள் அங்கீகரிக்க வேண்டாம் .....
ஒரு கவிதைக்கு பரிசு கொடுத்து
மற்ற கவிதையை பரிகாசம் செய்ய வேண்டாம்.....!
கலையை அங்கீகரிக்க நீங்கள் யார் ???????
கவிதை என்ன ஓட்டப்பந்தயமா //

நல்லது...அத்தகைய போட்டிகள் இஎஉந்தால் தான் கவிஞனுக்கு ஒரு உற்சாகமிருக்கும்..இல்லையேல் கவிதைகள் அழிந்திருக்கும்..ஆமாம் போட்டியில கலந்துகிட்டு விலகியதா சொல்லிருக்கீங்க..எப்புடி விலகுனீங்க?

புலவன் புலிகேசி said...

இதையும் சேர்த்து 3 அனுப்பிட்டு என்ன கதை உடுறீங்களா??

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னாச்சு
வெண்ணிற இரவுகள்....!

வெண்ணிற இரவுகள்....! said...

கதை விடவில்லை .............நண்பரே ....உண்மையை சொன்னேன் ...............
கவிதைக்கு போட்டி இருக்க கூடாது .....சில எண்ணங்கள் உடனே தோன்றாது .............
இப்பொழுது தோன்றியது ..................
பரிசு கொடுத்தால் எனக்கு வேண்டாம் ................................
அது தான் போட்டியில் இருந்து விலகியது ...................

நீங்கள் நான் சொல்ல வருகிறேன் என்றால் எல்லாவற்றையும் எதிர்பீர்கள்
எப்படி சொன்னாலும் சண்டை போடுவீர்கள் புலிகேசி ...
நான் என்ன சொன்னேன் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ..........

Cable சங்கர் said...

வெண்ணிற இரவுகள்... நான் கவிதை எழுதினதை வச்சியெல்லாம் நொந்து போய் நீங்க விலகுறது நல்லாயில்லை..:)))))

வெண்ணிற இரவுகள்....! said...

சங்கர் நீங்கள் வந்ததால் சொல்ல வில்லை ....இது என் அபிமானமே ......
கருத்துக்களை பதிவு செய்தேன் அவ்வளவே ...................................
அனைத்து கவிதைகளும் சிறப்பானது என்பது என் கருத்து ...........
யார் மீதும் கோபம் எல்லாம் இல்லை .....................
கோபம் இருந்திருந்தால் முதல் இரண்டு கவிதையை அனுப்பி இருக்க மாட்டனே ....
கேபிள் அண்ணன் நல்லா தானே எழுதுறீங்க

புலவன் புலிகேசி said...

//நீங்கள் நான் சொல்ல வருகிறேன் என்றால் எல்லாவற்றையும் எதிர்பீர்கள்
எப்படி சொன்னாலும் சண்டை போடுவீர்கள் புலிகேசி ...
நான் என்ன சொன்னேன் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ..........//

இது அபாண்டமான பழி..உங்களின் எத்தனை பதிவுகளுக்கு நான் ஆதரவு தெரிவித்திருக்கிறேன் என்று எண்ணிப் பாருங்கள். எதிர் கருத்து தோன்றினால் சொல்ல வேண்டாம் என்றால் தெரிவியுங்கள் கருத்து தெரிவிப்பதை நிறுத்தி விடுகிறேன்...அதற்காக இப்படி அபாண்டமாக பழி சொல்லாதீர்கள்.நான் எதிர்கருத்து தெரிவித்த பதிவுகள் மிகக் குறைவே....

Unknown said...

Hi this one is really fantastic.... good shot...

இனியாள் said...

நியாயமான கவிதை.

சுரபி said...

Kalaikkul etharku potti endru ninatihtal "Awards"lam koduthu best film, best lyrics, best cinematography apadinu ellam kodukka thevai illaye?? Indha pottigal, angigaaram oru kalainganai innum munneri sellaththoondum oru vaaippu..

Kidaithavargal ellam best illanalum kidaikathavanga nammakitta enna minusnu paarthu oru alagiya padaippai uruvaakuvargal..

Angigaaram oru padaippukku miga avasiyam.. Makkalin angigaaram kidaiththa padaippugale vaalgirathu..Kalai kalaikkaga enbathai thaanid kalai makkalukkaga apadingarathu en karuththu..


Nenga eluthina poemsku yaarum comment podavendamnu nenakamatinga.. potta sandhosapaduvinga.. athu than angigaaram.. ithu iyalbu thane???

Lifela ellame plus-a irundha kastamnga.. Minus than interesting-a irukkum.. Padaippugalukku ethirkaruththu vandhal mattume innum sirappaga padaikkamudiyum..vaalthugal.. :))))

Thenammai Lakshmanan said...

ரோஜா அழகு தான் ,மல்லிகையும் அழகு தானே

wellsaid Karthik

but i wish u all da best for success