Wednesday, 16 December 2009

திரும்பி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்












உன்னை பார்க்கும்
நேரத்தை விட பார்க்காத நேரத்தில்
அதிகமாய் பார்க்கிறேன் ..!
பார்க்கும் நொடியை விட...
பார்க்காத நொடியில் காதல் ஒளிந்துகொண்டிருக்கிறது.....!
'விழி மூடி தனக்குள் பேசும்' மௌனம்
என்ற 7g பாடல் கேட்கிறேன்.....!
காதலித்து கசிந்து காமுற்று காதல் வாழாது....
காதலிக்கும் போதே காதல் வாழும் ......!
நீ இருந்திருந்தால் கூட
இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது......!
போனதால் மட்டுமே அந்த சுவடுகள்
உள்ளது ......
இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள்
செத்திருக்கும்....!
உதட்டோடு உதடு ஓட்டுவதை
விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல் அதிகம் ....!
காதலித்ததை விட
நான் காதல் சொல்லும் முன்
கடந்து செல்லும் முன் ...
இந்த பார்வை காதலா என்னும் சந்தேகத்தில்
காதல் அதிகம் .....!
இப்பொழுது நீ வந்தாலும்
நீ காதலி அல்ல ....
என் காதலி நான் இமை மூடியவுடன்
எனக்குள் புகுந்து பேசுவாள் ......
அவள் வேறு
பிம்பம் வேறு .....
இமைகளை மூடுபவன்
ஒன்று தூங்குபவன்
இரண்டு காதலிப்பவன்.....
நான் காதலிப்பவன் ....!
ஆம் நீ பிரிந்ததால்
மட்டுமே காதல் வாழ்கிறது .......!
காதல் திருமணத்தில் முடிந்தால் தான்
வெற்றியா ...?
என் காதலி நான் இமை மூடும்
போது என்னை திரும்பி பார்த்துக்கொண்டே
இருக்கிறாள் .....!

11 comments:

இனியாள் said...

பின்பாதி மட்டுமே போதும் என்று தோன்றுகிறது, சில வரிகளை விடுத்தால் இது இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும். வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

ஆஆஆஆஆஆஆஆங்ங்ங்்ங்ங்!

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதை கார்த்தி...இனியாள் சொன்னது போல் சற்று சறுக்கலாகத் தெரிகிறது...

Unknown said...

ரொம்ப பெருசு..., ஹ்ம்ம்..., இன்னும் எதிர் பாக்குறேன் சார்..,

CJ TECHNOLOGIES said...

Konjam Kulappinalum...Mudivula sonningala...//காதல் திருமணத்தில் முடிந்தால் தான்

வெற்றியா ...?//
Innum ungakida ethiparkiren...

ஸ்ரீராம். said...

நீள் கவிதை.
Voted.
தமிழ் 10 Y not submitted yet...

க.பாலாசி said...

காதல்...காதல்...கவிதையாய்....

நல்லாருக்கு நண்பா...

ப்ரியமுடன் வசந்த் said...

//உன்னை பார்க்கும்
நேரத்தை விட பார்க்காத நேரத்தில்
அதிகமாய் பார்க்கிறேன் ..!//

இந்த முதல் மூன்று வரிகளே ரொம்ப நல்லா வந்திருக்கே...!

//காதலித்ததை விட
நான் காதல் சொல்லும் முன்
கடந்து செல்லும் முன் ...
இந்த பார்வை காதலா என்னும் சந்தேகத்தில்
காதல் அதிகம் .....!//

இது இன்னும் அழகா வந்துருக்கு கார்த்திக்...!

? said...

காதல் வெற்றி பெறுவதோ அல்லது தோற்பதோ திருமணம் என்ற ஒற்றை முடிவில் வெற்றியா தோல்வியா என்பதில் அல்ல•. மாறாக தமது விழுமியங்களில் காதலர் இருவரும் உயர்ந்த தளத்தில் ஒத்திசைவாக பயணிக்க முடியுமானால் அல்லது அதற்காக முயற்சித்து வெற்றி பெற முடியுமானால் அதுதான் காதலின் வெற்றி.

மாசினி உடைய காதலி எழுதிய கடிதம் தான் மாசினியை ஒரு ஒப்புயர்வற்ற புரட்சியாளனாக மாற்றியதாம். மனிதனை தான் ஏற்றுஉக் கொண்ட லட்சியத்திற்காக உழைக்கத் தூண்டுவதுதான் காதல். மாறாக தனிமையில் அமர்ந்து காதலியின் சிரிப்பை, பார்வையை எண்ணி வியப்பது அவற்றையே மீண்டும் எழுதி முகர்ந்து பார்ப்பது உவப்பானது அல்ல• ஒருவேளை திருமணம் செய்திருந்தால் கவிதை பிறந்திருக்காது. மற்றபடி காதல் அதற்கு எதுவும் பொருளே இல்லாமல் போய் விடுமா..

சமூகத்துக்காக போராடுவது என்ற லட்சியத்தை ஏற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கோ மகிழ்ச்சி சமூகத்தின் வளர்ச்சியில் அல்லது வளர்சிக்கான மாற்றத்தில் இருக்கிறது. செல்லக் கோபம், ஊடலுடன் கூடிய காதல், சில அர்த்தமுள்ள பார்வைகள் இவற்றை நிரப்பியுள்ள சிற்றின்பங்களை தமுது விழுமியத்தின் பேரளவு காரணமாக அவர்கள் பேரின்பமாக பெறுகிறார்கள். வறுமையோ, வாய்ப்பின்மையோ அவர்களை துன்புறுத்துவதில்லை.

ஆம் காதிலின் வெற்றி வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது. புகழ்பெற்ற ரசிய சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வரும். முதல் நாள் இரவு வருந்தோஓன்றில் ஒரு பெண்ணை சந்திக்கும் இளைஞனுக்கு காதல் வரும். எல்லா இடங்களிலும் நல்லவர்களும் நல்லவைகளும் நிரம்பி இருப்பது போல அவனுக்கு படும். இரவு இனிமையாக கழியும். காலையில் வண்டியில் கிளம்புகிறான். எதிரில் தெருவில் ஒரு குடியானவனை சாட்டையால் ஒரு ராணுவ அதிகாரி அடித்த்து விளசுவான். மகிழ்ச்சி கதாநாயனுக்கு இறங்கி விடும். அந்த ராணுவ அதிகாரியை வண்டிக்குள் அவனது மகளுடன் பார்க்கையில் அவள்தான் தனது காதலி எனத் தெரிந்தவுடன் காதலையே தூக்கி எறிவான் கதாநாயன•

தமிழ் உதயம் said...

காதல் மனிதர்களை ரெம்பத்தான் இம்சை செய்கிறது.

கமலேஷ் said...

கவிதை அழகாக இருக்கிறது..