Friday 18 December 2009

திரைப்படம் காலத்தின் ஆவண குறிப்பு
















உலகத்தின் முதல் படம் திரையிடப்படுகிறது. ரயில் வண்டி திரையில் ஓடுகிறது,எங்கு தம் மீது மோதிவிடுமோ என்று அனைவரும் சிதறுகின்றனர். ஆம் திரைப்படம் மாய பிம்பம்,அது தனி உலகம்....மாய வலையில் கட்டிப்போடும் உலகம்.கண்முன்னே நடப்பது உண்மை என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் உலகம்.அந்த உலகத்தின் கடவுள் இயக்குனர். ஆம் திரைப்பட உலகத்தை இயக்குபவர்.அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது .கதாப்பாத்திரங்களை படைக்கிறார். ஒளி ஒலி கோர்க்கிறார். படச்சுருளில் ஒரு கவிதை எழுதுகிறார். தான் நினைக்கும் காட்சிகளை படம் பிடிக்கிறார்.காதல் சொல்கிறார்,நட்பு சொல்கிறார்.முதல் பிரேம் முதல் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.















ஆம் இயக்குனர் ஒரு ஆளுமை .மண்ணை பதிவு செய்பவனே மனதில் பதிவாகிறான்.
மஜீத் முதல் பாரதிராஜா வரை மண்ணை பதிவு செய்தவர்களே.திரைப்படம் காலத்தின் பதிவு, 1982 மதுரை சுற்றி கிராமம் எப்படி இருந்தது என்று தெரிய வேணுமா பாருங்கள் எங்கள் பாரதிராஜாவை..பாரதிராஜா படங்களில் கிராம இலக்கியத்தை காணலாம்,கிராம வழக்கு மொழிகளை காணலாம் . பல்வேறு பழமொழிகள் கிராம வழக்கங்களை அழுத்தமாய் பதிவு செய்தவர் பாரதிராஜா.ஈரான் பற்றி சுவடு வேண்டுமா பாருங்கள் மஜீத் படங்கள் ஈரான் குழந்தைகளின் அக வெளிப்பாடு.

இயக்குனர் என்பவர் ஒரு ஆளுமை.இயக்குனரின் மனம் எவ்வளவு ஆழமாய் உள்ளதோ அதைப் பொருத்து அவன் படைப்பு வெளிப்படும். சேரனின் படங்களில் அவர் மனித உறவுகளை எவ்வளவு மதிப்பவர் என்று வெளிப்படும்.ஆட்டோகிராப் படத்தில் அவர் தொலைந்த வாழ்க்கையை அசை போடுவார். பழைய காதலிகளை
சந்திப்பார் அது ஒரு உணர்வுப்பூர்வமான கவிதை. பாண்டவர் பூமி பார்த்து சற்று குலுங்கித் தான் போனேன்.தொலைந்த வாழ்க்கையை சேரனின் படச்சுருள் தேடிக்கொண்டே இருக்கிறது. பாலா தொலைந்த ,யாருமே கண்டு கொள்ளாத மனிதர்களையே காட்டுகிறார். ஒரு படம் இயக்குனரின் அக வெளிப்பாடு, அன்புக்காக ஏங்கித் துடிக்கும் இயக்குனர் அதை படைப்பாய்
வெளிப்படுத்துகிறார்.பாலாவின் படங்கள் உலகப் படங்கள் பார்ப்பது போல மனதை உலுக்கி விடும்.மன ரீதியான அதிக வலிகளை கொண்டவரே அப்படிப்பட்ட படைப்பை படைக்க முடியும்.

























செல்வராகவனின் படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இவர் படங்களும் பாலாவை போலவே இருக்கின்றன.மனதை போட்டு ஒரு வழி செய்கின்றன."நினைத்து நினைத்து " பாட்டு பார்க்கும் பொழுது திரையரங்கில் எத்தனை பேர் அழுதிருப்பார்கள்
என்பது அப்பொழுது விளக்கை போட்டு இருந்தால் தெரிந்திருக்கும் . காதலி இறக்கும் போது ஒரு வெறுமை இருக்குமே அதை பதிவு செய்திருப்பார் செல்வா. இவர்களின் வேர் ஆதர்ஷ இயக்குனர் பாலு மகேந்திரா.

















ஒரு பெண் எப்படி தன்னை எப்படி உலுக்குகிறாள் என்பதை சொன்ன படம் 'மூன்றாம் பிறை'.
முன்றாம் பிறை படத்தை ஷோபாவின் நீட்சியாக பார்க்கலாம்."கனவு காணும்" பாடல் காட்சி அமைப்பு போதும் அவர் எவ்வளவு பக்குவப்பட்டவர் என்று. அதனால் தான் என்னவோ அவர் வியாபாரத்திலே வெற்றி பெற வில்லை. உங்களால் வியாபாரத்தில் வெற்றி அடைய முடியாது என்ற போது எடுத்த படம் "நீங்கள் கேட்டவை".....அதாவது ரசிகர்களுக்காக எடுத்த படம் என்றே சொல்லலாம்.ஆட்டோகிராப் படத்தின் தந்தை 'அழியாத கோலங்கள்...'
அவரின் வாரிசுகள் இன்று கலக்குகிறார்கள்........பாலா ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் .ராம் கற்றது தமிழ் .ஆளுமை என்றால் அது பாலு மகேந்திரா....தலைவருக்கு பிடித்த இடம் கேத்தி.

ஒரு சிறந்த இயக்குனர் தனிமையாகவே இருக்கிறான்.அவன் படைப்பு பேசப்படுகிறது,அகத் தனிமையாக இருக்கிறான்.திரையில் ஏதோ தேடிக்கொண்டே இருக்கிறான்.அவன் எவ்வளவுக்கு எவ்வளவு மனதில் அடி வாங்குகிறானோ,அந்த அளவு அவன் படைப்பு ஆழமாய் வருகிறது. ஒரு தொலைந்தவனின் ஆழமான பதிவாய் வெயில் படம் இருக்கிறது.அது வசந்த பாலனின்
கதை. ஆம் உலகத்தை சந்தோஷ படுத்தி மௌனமாய் அழுது கொண்டே இருக்கிறான் என் இயக்குனர்.அவன் தனிமைக்கு வடிகாலாய் இருக்கிறது திரைப்படம்.

















காலத்தை இயக்குனர் டைரியில் பதிவு செய்வதை போல பதிவு செய்து கொண்டே இருக்கிறான்.ஈரான் மண்ணின் வாசனை மஜீத் படங்களில் அடிக்கிறது.தேனியின் செம்மண் பாரதிராஜா படங்களில் படிந்து இருக்கிறது.எந்த ஊர் மண் என்றாலும்,மண்ணின் வெளிப்பாடு இயக்குனர்.திரைப்படம் காலத்தின் ஆவண குறிப்பு.குறிப்பு எடுத்துக்கொண்டே இருக்கிறான் இயக்குனர்.

6 comments:

தர்ஷன் said...

அருமையான பதிவு
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்கள் என் மனதுக்கு மிக நெருக்கமானவை எல்லோருக்கும் பிடித்த autograph மட்டும் ஏனோ பிடிக்கவில்லை. வெயில் புறக்கணிப்பின் வலியையும் தனிமையின் வெறுமையையும் மனதைப் பிசையும் வகையில் சொன்னப் படம்.

புலவன் புலிகேசி said...

ம் நல்ல ஆய்வு கார்த்தி வாழ்த்துக்கள்..

க.பாலாசி said...

திரைப்பட இயக்குனன் சார்ந்த உங்களின் பார்வை நன்றாயிருக்கிறது.

//பாலாவின் படங்கள் உலகப் படங்கள் பார்ப்பது போல மனதை உலுக்கி விடும்//

உண்மைதான் நண்பரே...இறுதியாக வந்த நான் கடவுளும் என்னை உலுக்கியது. ஒரு நல்ல படைப்பாளி...

ஸ்ரீநி said...

இதேபோல் ஒரு பதிவு நானும் முயற்சித்திருக்கிறேன் . .. . நீங்கள் பின்நூடினால் மகிழ்வேன்
http://sangadhi.blogspot.com/2009/12/avatar.html

Unknown said...

நல்ல வேளை இந்த வரிசையில் பொக்கிஷத்தை சேர்த்து விடுவீர்களோ என்று பயந்து விட்டேன்... நல்ல வேளை இல்லை .., என்னை பாதித்த படங்களுள் முக்கியமானது பாண்டவர் பூமி என்னை பொறுத்த வரை அது சேரனின் மாஸ்டர் பீஸ் ..., இன்னும் எதிர் பார்கிறேன் சேரனிடம் இருந்து உண்மைனா பொக்கிஷங்களை...

rajeshkannan said...

மிகவும் அருமையாக இருக்கு .இயக்குனர்களை
சரியாக புரிந்து பிரித்திருக்கிறீர்கள் கார்த்திக் .good