Sunday 20 December 2009

என் கடைசி பதிவு



















நான் சமிபத்தில் நண்பர் ஒருவரை சந்தித்தேன் . எழுத்து தான் இலக்கியம் அல்ல மனிதர்களோடு களப் பணி ஆற்றுங்கள் என்றார்.நாம் இலக்கியவாதி என்று நம்பிக்கொண்டிருக்கும் மனிதர்கள் வெறும் பிம்பமே என்று புரிய வைத்தார். என் மனதிற்குள் ஆத்ம விசாரணை நடத்தி பார்த்தேன்.நான் எழுதி பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை . நண்பர் குறை ஒன்றும் இல்லை அடிக்கடி என் பின்னூட்டத்தில் போடுவார்,இப்படி எழுதி எழுதி என்ன செய்ய போறீங்க என்று. நான் கேட்கிறேன் எழுதுவதற்கு தானே எழுத்து.

நீங்கள் சொல்வது சரியே நண்பரே அதனால் தான் எழுதாமல் களப் பணி ஆற்றபோகிறேன்.அதற்காய் தோழர் தளபதியுடன் பேசி கொண்டிருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன்,இறங்க வில்லை என்றாலும் எழுதபோவதில்லை .

களப் பணி செய்து ஓரளவு எனக்கு தகுதி வந்தால் எழுதுவேன் நண்பா.குறை ஒன்றும் இல்லை அவர்களே நீங்கள் சொல்வதில் நிஜம் உள்ளது ஆனால் ஒரு வேண்டுகோள் நீங்கள் எழுதுகிறீர்கள் அதனால் என்ன நடக்க போகிறது.எழுத்து என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. நீங்கள் களப் பணியில் விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.எழுதுபவன் கட்டாயம் தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று எழுதினேனே தவிர யாரும் ஹிட்ச்க்கு எழுதவில்லை நண்பா.

எனக்கு சினிமா நன்றாகவே தெரியும்,ஒரு பட விமர்சனம் எழுதினால் இதை விட எனக்கு ஹிட்ஸ் வரும் நண்பனே. இதற்கு தான் எழுதினேன் என்று சொன்னது கொஞ்சம் புண்படுத்தியது .என் நண்பர்களிடம் கேட்டுப்பார் ,எனக்கு இந்த ஊடகங்கள் எல்லாம் தெரியும் முன்னரே, என் ரூமில் மேட்ச் பார்த்த உயிர் நண்பன் ,அதாவது போரின் போது மேட்ச் அதே இலங்கையில் நடந்தது அப்பொழுது மேட்ச் பார்த்த நண்பனிடம் பேசாமல் இருந்தேன் . அது என்ன ஹிட்சுக்காகவா சொல் நண்பா.

இன்னொரு முக்கிய காரணம் ஒன்று உண்டு.நான் அவ்வளவு சொல்லியும் பதிவு எழுதியும் 'வேட்டைக்காரன்' படத்திற்கு போய் மறுபடியும் அசிங்கபடுத்தி விட்டார்கள் உயிர் நண்பர்கள்.இந்த குழுவில் ஈழ பிரச்சனை பற்றி நன்றாய் தெரிந்த என் நண்பனும் அடக்கம் என்னால் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் இருக்க முடியவில்லை.என்னால் என் உயிர் நண்பனை பார்க்க வைக்க முடியாமல் இருக்க வைக்க முடியவில்லை நான் எல்லாம் எழுதி என்ன மயிறவா புடுங்க போகிறேன்.

நாமெல்லாம் முத்துக்குமரனை பிரபாகரனை மறந்து விஜய்யை நியாபகம் வைத்திருக்கிறோம் என்ன கொடுமை நண்பா. நாங்கள் படம் பார்க்காததால் பிரச்சனை தீருமா என்று நண்பன் கேட்டான். ஒரு உயிர் போகிறது கொண்டு வர முடியாது,சன் டிவியில் படம் பார்பீர்களா அழுக மாட்டீர்களா என்ன???????????கண்ணீரை காசாக்கியவனிடம் துரோகியுடன் படம் பார்க்க வேண்டுமா. நண்பனே நீ களப் பணி ஆற்ற சொல்லவில்லை,உயிர் தியாகம் செய்ய சொல்லவில்லை,படம் பார்க்காமல் துரோகியின் படம் பார்க்காமல் இருந்திருக்கலாமே.

நண்பா நீ சொல்வது சரி தான்.நான் சொல்லி கேட்க என் நண்பர்கள் கூட இல்லை .நாமெல்லாம் வணிக குப்பை ஆகி விட்டோமா. நான் முடிந்தால் களப் பணி ஆற்ற போகிறேன். இல்லை என்றால் என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க போகிறேன்.அதனால் தான் ஈரோடு பதிவர் சந்திப்பிற்கு கூட செல்லவில்லை.மனது ஒரே குழப்பமாய் உள்ளது.போலித்தனமாய் எழுதி வெறும் பாராட்டுகள் வாங்க விருப்பமில்லை.இந்த புத்தக கண்காட்சியில் புத்தகம் கூட வாங்க போவதில்லை. நம் இலக்கியத்தால் என்ன சாதித்து விட்டோம் என்ற கோபம் ரணம் இருக்கிறது நண்பா......!

இது தான் கடைசி பதிவு.பதிவுலகில் எனக்கு கிடைத்த நண்பன் அரவிந்த்.
அவனை பிடிக்கும்.அரவிந்த் நேர்மையானவன். நான் அவன் பதிவு படிக்கவில்லை என்றாலும் எனக்கு வந்து பின்னூட்டம் போடும் பாலாசி.அவன் பண்பு பிடிக்கும்,நண்பா நீ ஒரு சிறந்த மனிதன் பலமுறை உணர்ந்து இருக்கிறேன்.

நான் மயங்கும் எழுத்து கதிர் அண்ணன் மற்றும் நரசிம் அண்ணன். நான் வாசகனாய் படித்து கொண்டிருப்பேன்.என்னுடைய அண்ணன் என்றால் பிரபாகர் அண்ணனை சொல்வேன்.
பிரபாகர் அண்ணனே வெகு நாட்களாய் உனக்கு பின்னூட்டம் போடவில்லை .இனி பின்னூட்டம் மட்டுமே தம்பி பதிவுலகம் விட்டு விலகுகிறேன்.எனக்கு பாமரன் ஐயா கலகல பிரியா பிடிக்கும்.வசந்த் கற்பனை அபாரம்.மேலும் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.என்னை உணர வைத்த நண்பன் குறை ஒன்றும் இல்லை.


கடைசியாய் என் உயிர் தங்கை திவ்யா......நான் அரசியலே எழுத போவதில்லை ஏன் என்றால் நான் எழுதவே போவதில்லை.

13 comments:

இனியாள் said...

கார்த்திக் எதற்காக இவ்வளவு வருத்தம், இப்படி பாதியிலேயே விட்டு போகும் அளவு நீங்கள் மனம் வருந்தி இருக்கிறீர்கள் என்று அறிந்தால் உங்கள் நண்பர்கள் அந்த படத்திற்கு போகாமலேயே இருந்திருப்பார்கள். ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் போதும் உங்கள் வாசிப்பையும் உங்கள் பதிவுகளையும் நான் வேறு கண்ணோட்டத்தோடு பார்க்க முடிகிறது, உங்களிடம் நல்ல observation இருக்கிறது, இதை நீங்கள் எதற்காக விட வேண்டும், நீங்கள் களப்பணியில் ஈடுபடுங்கள் உங்களை யார் தடுக்க போகிறார்கள், எழுத்து ஒரு நல்ல ஊடகம் பிரபலமான பல எழுத்தாளர்கள் இதை போன்ற ஒரு முடிவை எடுத்திருந்தால் நமக்கு எவ்வளவு நல்ல இலக்கியங்கள் கிடைக்காமலே போய் இருக்கும். சில நாட்கள் ஓய்வாய் விட்டு விட்டு மறுபடியும் எழுதலாமே, பின்னூட்டங்களுக்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் தந்து வருத்துகிறீர்கள், பாரதியை போல சளைக்காமல் போரிடுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ஸ்ரீநி said...

மூன்றாம் மாடியிநின்று
மட மடவென
தலை நிறுத்தி நடந்தது போலிருக்கு

இந்த எழுத்துக்கள்
பொய்யென்று நீ உரைத்தால்
துடிக்க தவறிய நெஞ்செல்லாம்
நிமிர்ந்து அமர்ந்து
குவளைகள் பிடித்து
உயிர் குடித்துக் கொள்ளும்

இல்லையென்று ஒற்றைவிரலில்
மௌனம் நனைத்து குறள் சொல்ல
நீ நேர்ந்தால்
நிச்சயம் இந்த வலைப் பூக்கள்
சூரிய ஒளியில்
தன்னை வட்டி வதைத்துக் கொள்ளும்

ஆனால்
யசோதராவுக்கு போதி மரங்கள்
அழுதது கேட்பதில்லை

நீ போய் வா

உன் கனல்களை
பயிர்செய்து விட்டு போகிறாய்
உன் செரிபெற மின்னல்கள் வெட்டாமல்
இனி மேகங்கள்
இங்கே கருக்க மறுக்கலாம்

தனியனாய் செல்லும்
மாயை உனக்கு
இப்பொழுதாவது இல்லையென்று கூறி
இந்த திரையை கிழித்து விலக்கு

balavasakan said...

என்ன கார்த்தி இது தமிழனை திருத்த யாராலும் முடியாது ஏனெனில் நாங்கள் தப்பாக படைக்கபட்டிருக்கிறோம் இதுக்கு எழுதாமல் விடுவதெல்லாம் ... ரொம்ப ஓவர் உங்களின் எழுத்துக்களின் ஆழ்ந்த கருத்துக்களை சத்தமின்றி ரசித்து வரும் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்

? said...

எழுத்தும் ஒரு ஆயுதம்தான். சமூகம் மாற வேண்டும் என்ற ஆவல் உள்ள பலரும் தமக்கு உகந்த ஆயுதங்களை தேர்வு செய்ய முடிகிது. அதில் எழுத்தின் பங்கு ஒன்றும் குறைவானது அல்ல• சிந்திக்கவும் சிந்தித்ததை பேசவும் மறந்த ஒரு சமூகத்தை ஒரு சீரிய எழுத்தாளன் தான் கண்டு உணர்ந்த நிகழ்வுகளின் வழியே தட்டி எழுப்ப முடியும். அந்த எழுத்தாளனின் பாத்திரத்தை ஏற்பது என்பது வெறுமென எழுத்துக் கலை சார்ந்த ஒன்றல்ல• எழுத்து ஒரு கலைதான். கதைகளை தாத்தா பாட்டியிடம் கேட்டு வளர்ந்த சமூகத்தில் எழுதுவது ஒன்றும் தனிச்சிறப்பான ஒன்றும் அல்லதான். ஆனால் நான் உணர்ந்த்து இன்னதுதான் என்ற சமூகத்திடம் பேச முன்வருபவர்களுக்கான ஊடகத்தில் எளிய வடிவம் எழுத்தாகத்தான் இருக்க முடியும்.

ஒரு விசயத்தை பேசுவதற்கே களப்பணி அவசியம் என்று சட்டம் போட்டு கருத்தை திணிக்க முடியாது. அது விசயத்தின் பால் எழுத்தாளனின் அக்கறையைப் பொறுத்த்து. பெண்ண்டிமைத்தனத்தை எதிர்க்கும் எழுத்தாளன் தன் மனைவியிடமும், தாயிடமும் ஆணாதிக்க வாதியாக இருக்க மாட்டான் என யார் உறுதி சொல்ல முடியும். அது எழுத்தாளனின் நேர்மை சம்பந்தப்பட்டது. களப்பணியும், எழுதுவதும், தவறைத்
திருத்தி எழுத மீண்டும் களப்பணி ஆற்றி தெரிந்து கொள்வதும் முக்கியம். களப்பணியை தனியாக ஆற்றுவது சிரம்ம் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. களப்பணிதான் நமக்கு எதனை முன்னுரிமை கொடுத்து எழுத வேண்டும் எனக் காட்டும். அதுதான் நமது பிடிலில் இசைக்கும் இசையும் நீரோவின் இசையும் ஒன்றா என்பதையும் காட்டும்.

பிரபாகரனையும் முத்துக்குமரனையும் நினைப்பது அல்லது அவர்களை விமர்சனமில்லாமல் ஏற்றுக்கொள்வது என்ற உங்களது பாரவை தவறு என புரியவரும் காலம் வரும்வரையில் கூட போராடாமல், எழுதி என்ன சாதிக்கப் போகிறோம் என விரக்தி அடைவதில் பொருள் இல்லை. அதற்காக புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கப் போவதில்லை என முடிவு செய்வதெல்லாம் உங்களைப் பற்றிய உங்களது மதிப்பீட்டில் வரும் சமனின்மையால் விளைவது. அதுதான் குழப்பமாகவும் முடிகிறது. படிப்பதை நிறுத்திக் கொள்வதன் மூலம் நாம் மீண்டும் விலங்கு நிலைக்குத்தான் திரும்ப போகிறோமா அல்லது படித்து விவாதிப்பதன் மூலம் சமூக மாற்றத்திற்கு உதவும் வகையில் புத்தகங்களை தேர்வு செய்து படிக்கப் போகிறோமா என நீங்கள் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.

இதெற்கெல்லாம் ஒரு அடிப்படைதான் இருக்க முடியும். நமது எழுத்தால் என்ன சாதிக்க முடிந்த்து என்ற உங்களது வரிகள்தான் அதன் சாரம். சாதிக்க வேண்டும் என்பது திட்டமாக இருக்கலாம். எதிர்பார்ப்பாக மாத்திரம் மிதமிஞ்சி இருக்க கூடாது. திட்டம் போட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போகின்றவர்கள் யாரும் வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதை முடித்துக் கொள்வதில்லை. மாறாக மாற்று வழிமுறைகளைத் தேர்வு செய்கின்றனர். புகழ்பெற்ற லெனின் உடைய மேற்கோள் ஒன்றுதான் ஞாபகத்தில் நிழலாடுகிறது.

....ஒரு கொடூரமான நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக ஜப்பானிய விஞ்ஞானி ஒருவன் 400 மருந்துகளை கண்டுபிடித்து சோதனைக்கு உட்படுத்துகிறான் என்றால் அதனினும் கடினமான சமூக மாற்றம் என்ற நிகழ்ச்சிக்கு முனைந்து வேலைசெய்பவர்கள் அந்த ஜப்பானிய விஞ்ஞானியைப் போலன்றி 401 ஆவது மருந்தையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு பொறுமையும், நிதானமும், கடின உழைப்பும் உடையவராகவும், சோர்வடையாதவராகவும் இருக்க வேண்டும்....வி.இ.லெனின்

க.பாலாசி said...

உங்களை அறுதல் படுத்துவதா, அல்லது எனது ஆற்றாமையை ஆறவைப்பதா என்றுதான் தெரியவில்லை.

//சமூகத்திடம் பேச முன்வருபவர்களுக்கான ஊடகத்தில் எளிய வடிவம் எழுத்தாகத்தான் இருக்க முடியும்.//

இதையே நானும், எனது ஆழக்கருத்தாக பதிவிடுகிறேன். முடிவு உங்கள் கையில்...

ரோஸ்விக் said...

வருத்தமாக இருக்கிறது. தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

? said...

sorry. Below is Lenin's Quote...
"இயற்கையிலும் சமூக வாழ்விலும் இப்படித்தான். புதியதன் இளங்குருத்துக்களின் வலுவின்மையைக் கேலி செய்தலும், அறிவுத்துறையினரின் கீழ்த்தரமான ஐயுறவு மனப்பான்மையும்... சோசலிசத்துக்கெதிராய் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதே ஆகும். புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம். இவற்றுள் நிலைத்து வாழ்ந்தவற்றை வாழ்க்கை தெரிந்தெடுத்துக் கொள்ளும். மேக நோயை ஒழித்துக் கட்டும் பொருட்டு 605 மருந்துத் தயாரிப்புகளை சோதித்துப் பார்த்து குறிப்பிட்ட தேவைகளுக்கு உகந்தபடி 606வது தயாரிப்பை உருவாக்கும் பொறுமை ஒரு ஜப்பானிய விஞ்ஞானிக்கு இருந்ததென்றால், இதனினும் கடினமான ஒரு பணிக்கு, முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவது என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவோர்... ஆயிரக்கணக்கில் புதிய போராட்ட முறைகளையும், வழிகளையும், ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி உடையோராய் இருக்க வேண்டும் அல்லவா?''

Further reading please visit to this article also..

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3714:2008-09-07-17-29-01&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59

புலவன் புலிகேசி said...

எழுத்துக்கள் நம் மனதை பண்படுத்துவதோடில்லாமல் படிப்பவர் மனதையும் பண்படுத்தும். எழுதுவதை நிறுத்துவதெல்லாம் சரியில்லை..தொடர்ந்து எழுதுங்கள்

ரோஸ்விக் said...

send your mobile number to thisaikaati@gmail.com

வெண்ணிற இரவுகள்....! said...

என் எழுத்திற்கு இவ்வளவு மரியாதை இருக்கிறதா ....நண்பர்களே மனிக்கவும் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது ....என் மீது தவறு இருக்கிறது என்று உணர்கிறேன் ......நான் பாசிசம் போன்று என் கருத்துக்களை எல்லாரும் கேட்க வேண்டும் என்ற பாணியில் இருக்கிறேன். இது ஒரு மன நோய் .....கருத்து சரியாக இருந்தாலும் இதை செய் என்று நான் கட்டாயமாய் வற்புறுத்த கூடாது ....உணர்கிறேன் .....மன்னிக்கவும் ..................I AM BACK

Think Why Not said...

/*..
உங்களின் எழுத்துக்களின் ஆழ்ந்த கருத்துக்களை சத்தமின்றி ரசித்து வரும் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்..*/

வழி மொழிகிறேன்...

தொடர்க உங்கள் பணி....

குறை ஒன்றும் இல்லை !!! said...

//களப் பணி செய்து ஓரளவு எனக்கு தகுதி வந்தால் எழுதுவேன் நண்பா.குறை ஒன்றும் இல்லை அவர்களே நீங்கள் சொல்வதில் நிஜம் உள்ளது ஆனால் ஒரு வேண்டுகோள் நீங்கள் எழுதுகிறீர்கள் அதனால் என்ன நடக்க போகிறது.//

நண்பரே.. நான் களப்பணி செய்தால் மட்டுமே எழுத வேண்டும் என சொல்லவில்லை... நான் இதுவரை ஈழத்தமிழர் ஆதரவாக ஏதும் எழுத வில்லை அதற்காக எனக்கு ராஜபக்க்ஷே உறவினர் என அர்த்தம் அல்ல!!!

நான் கொஞ்சம் நிதர்சனவாதி... நடக்க முடியாததை எழுத மாட்டேன் ,,,,,

இலங்கையில் வேட்டைக்காரன் படம் 10 திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.. அதை தமிழன் தானே பார்த்து ரசிக்கிறான்?

நீங்கள் ஈழத்தமிழர் விசயத்தில் உங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்த வில்லை, ஒரு கட்சித்தலைவர் போல ஆணையிட்டே எழுதுகிறீர்கள்... அது தான் பிரச்சினையே... இந்த பிளாக் எனும் ஊடகம் எவ்வளவு பேரை சென்றடையும் என நம்புகிறீர்? இது வரை பதிவு மூலம் ஏதாவது ஒரு சிறு சமூக பிரச்சினையாவது தீர்க்கப்பட்டு இருப்பதாக நம்புகிறீரா?

பதிவே நமது மனக்குமுறலை கொட்ட பயன் படும் இடம்.. மற்றவர்களுக்கு ஆணையிடும் இடம் அல்ல.

நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.. களப்பணி ஆற்றி தான் எழுத வேண்டும் என இல்லை. ஆனால் தயவு செய்து நடக்க கூடையதை மட்டுமே எழுதலாமே?

யூர்கன் க்ருகியர் said...

களப்பணி என்றால் என்ன ?