Tuesday, 29 December 2009
கடலோரக் கவிதைகள்
மிக கூட்டமாய் இருக்கும் பேருந்து மாதவன் ஒரு பெண்ணை பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் இவனுக்கு சளைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.அவள் பக்கத்தில் ஒரு இருக்கை இருக்க அருகிலே அமர்ந்து கொண்டான் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டே வந்தான் அவளும் ஒன்றும் சொல்லவில்லை.பக்கத்தில் அமர்ந்து கணவன் போல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான்,அவளும் நன்றாகவே இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
மெரினா கடற்க்கரை வந்தது,அவள் இறங்கினாள் கூடவே இவனும் இறங்கினான்.இருவரும் கடற்கரை நோக்கி சென்றனர்,அலைகள் உயர வந்து கொண்டே இருந்தது.கரை பக்கத்தில் இருவரும் சற்றே பாதை மாறி சிறிய இடைவெளியில் அமர்ந்தனர். ஆம் அவன் காதலி அருகில்,அவள் காதலன் அருகில். பத்து அடி இடைவெளி இருக்கும். இவள் அவன் காதலனிடம் "உன்னைய விட்டா யாரு டா இருக்கா" என்று சொல்லிக்கொண்டிருந்த வேளையில் அவனும் அதே வசனத்தை தன் காதலியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இதுக்குப்பேர்தானே காதல்னு(!!!???) சொல்றாங்க நண்பா... மெரினாவில் சகஜம்தானே.
வாவ்....... நல்லாயிருக்கு
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............
சின்னதாய் இருந்தாலும் காரம் அதிகம்...
நல்ல சிந்தனைதான் நண்பா..இன்னும் சிறப்பாக விளக்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது..இதை குறும்படமாக சொல்வது சுலபம். எழுத்து மூலம் சொல்வது கடினம்.
சூப்பரு......
"Flirting" என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறாய் பாராட்டுக்கள்
மிக அரிதான தற்காலிக நிகழ்வு....
இதுவரை 100 பின்தொடர்பவர்கள்...வாழ்த்துக்கள்.
சரியாக சொன்னீர்கள் கார்த்திக் ... இது தான் இன்றைய உலகின் நாய் காதல்
Nalla Sinthanai...
Post a Comment