Thursday, 10 December 2009

உங்கள் வீட்டில் கூட 'city of god ' குழந்தை இருக்கலாம்













குமுதம் அரசு கேள்வி பதிலில் ஒரு கேள்வி 2012 படம் பார்த்தீர்களா. அதற்கு அவர் சொன்ன பதிலில் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் ,உலகில் உள்ள அனைவரும் இறந்து கொண்டிருக்க நாம் கதாநாயகன் தப்பிக்கவேண்டும் என்று படபடக்கிறோம் இது தான் 'director touch ' என்று எழுதி இருந்தார்.இந்த ரசனை சரியா அரசு அவர்களே.இது சுயநலம் என்னும் தளத்தில் அல்லவா இருக்கின்றது.அதே படத்தின் விளம்பரத்தை தினத்தந்தியில் பார்த்தேன் "குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்களாம்" என்ன கொடுமை இது.

இப்பொழுது ரேணிகுண்டா என்னும் படம் வந்திருக்கிறது.படம் முழுக்க வன்முறை,ஏன் வன்முறை செய்பவன் தான் கதாநாயகனாய் இருக்க முடியுமா.அதற்கு ஆனந்த விகடனில் கொடுத்த மதிப்பெண் 43 . அந்த சிறுவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை கூட சரியாக காட்டவில்லை.கேட்டால் 'city of god ' படத்தை உதாரணம் சொல்கிறார்கள். ஏன் சுப்ரமணியபுரம் பருத்திவீரன் படங்களில் கூட வன்முறை கலந்து இருக்கிறது. heroism கொஞ்சம் அழகாய் சொல்கிறார்கள். ஊரில் வெட்டியாக இருக்கிற கதாநாயகன் அவனுக்கு ஒரு காதல் கேட்டால் யதார்த்த சினிமா என்பது. ஏன் under world வாழ்கையை படம் பிடித்தால் தான் யதார்த்தமா. இதற்கு அஜித் விஜய் போல் பாமரனுக்கு படம் பண்ணி விடலாம்.

சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் தலையை சீவும் போது அவர் மூஞ்சியில் ரத்தம் பீச்சீ அடிக்கும் அதற்கு அனைவரும் கை தட்டுகிறோம்,நம் ரசனை கீழ் தரமாய் போகிறது. அது மேம்பட்ட ரசனை போல நினைத்துக்கொள்கிறோம். ஹீரோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அடுத்தவன் மனைவியை பார்க்கும் கலாச்சாரத்தை ஹிந்தியில் ஷாருக் கான் படத்திற்கு படம் செய்கிறார்.

இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் 'யோகி' 'ரேணிகுண்டா' 'நான் அவன் இல்லை' இதில் எந்த நாயகனாவது நல்லவனா????சொல்லுங்கள். ஏன் உலக சினிமா பார்த்து நகல் எடுக்கிறார்களே children of heaven போன்ற படங்கள் இவர்கள் கண்களுக்கு தெரியாதா .....இவர்களை சொல்லியும் குத்தம் இல்லை....நம் சேரன் பொக்கிஷம் என்ற படம் எடுத்தார் அது 'the classic ' என்ற படத்தின் தழுவல். படம் பார்த்தவர்கள் படம் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டார்கள் ஏன் என்றால் சேரன் கத்தி தூக்க வில்லை post box நனைய கூடாது என்று குடை பிடித்தார்.ரசிகர்கள் அதற்கு பெயர் மொக்கை என்று வைத்து விட்டனர் என்ன சொல்ல????

நீங்கள் வன்முறையை ரசித்தால் உங்களுக்குள் ஒரு மன நோயாளி இருக்கலாம்,இந்த ரசனையை வளர்க்க வேண்டாம்.ரசிகர்களே இது தப்பான ரசனை உங்கள் வீட்டில் கூட 'city of god ' குழந்தை இருக்கலாம்.

17 comments:

Raju said...

இப்போல்லாம் குமுதம் "அரசு" பதிலகளைத்தான் கூர்ந்து கவனித்து படிக்கிற மாதிரி தெரியுதே கார்த்திக்..!

Cable சங்கர் said...

தலைவரே சேரன் தடாலடி பட்மெடுக்கிறவர் இல்லை.. ஆனால் பொக்கிஷத்தை பொருத்தவரை அவர் செய்த தவறு திரைக்கதையில். இதே சேரனை ஆட்டோகிராப் பண்ணியபோது தலையில் தூக்கி வைத்து ஆடவில்லையா.. எவ்ரி பிலிம் நீட் டு பி பிரசெண்ட்ட்

Toto said...

ரொம்ப‌ ச‌ரியா சொல்லி இருக்கீங்க‌..ரேணிகுண்டா ப‌ட‌த்தை தியேட்ட‌ரில் த‌லை மேல் கை வைத்த‌ப‌டியே பார்த்தேன்.. ய‌தார்த்தம்ன்ற‌ பேர்ல‌ இவ‌ங்க‌ அடிக்க‌ற‌ கூத்து இருக்கே..அர‌சு டோர்ன‌மென்ட் ப‌ட‌ம் கூட‌ அற்புத‌ம்னு எழுத‌ற‌வ‌ர்.. இதெல்லாம் வெள‌ங்க‌வா..

-Toto
www.pixmonk.com

க.பாலாசி said...

உங்களின் திரைப்பார்வை நன்றாக இருக்கிறது. மற்றபடி எனக்கு திரைப்படங்களில் அவவளவு ஆர்வமில்லை.

//நீங்கள் வன்முறையை ரசித்தால் உங்களுக்குள் ஒரு மன நோயாளி இருக்கலாம்//

இது முற்றிலும் உண்மை...

புலவன் புலிகேசி said...

எல்லாம் சரிதான் கார்த்தி...ஆனா அதுக்காக பொக்கிஷத்தையெல்லாம் நல்ல படம்னு ஒத்துக்க முடியாது..நீங்க சொன்ன போஸ்ட் பாக்சுக்கு குடை பிடிப்பதெல்லாம் முட்டாள் தனம் இல்லையா? கேட்டா காதல்னு சொல்றீங்க...சேரனை தயவு செஞ்சி நடிக்காம இயக்கம் மட்டும் பன்ன சொல்லுங்க...நாங்க படம் பாக்குறோம்..

KarthigaVasudevan said...

இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு நிஜம் .வன்முறையை ரசிப்பது தவறு தான்,ஆனால் சில தவிர்க்க முடியாத சூழலில் வன்முறை அவசியம் இதுவும் நூற்றுக்கு நூறு நிஜமே!

"ரௌத்திரம் பழகு "

பாரதி சொன்னதை நேர்மையாக உணர்ந்து கொள்ளத் தெரிந்திருந்தால் வன்முறைக்கும் நியாயம் இருக்கலாம்.பிறகொரு விஷயம் சொல்லியாக வேண்டும்....இன்று அந்த மகா கவியின் பிறந்த நாள்.

Unknown said...

பதிவுகளின் கருத்துக்கள் அருமை.. ஆன வேற உதாரணம் குடுத்ருக்கலம்.., பொக்கிஷம் பேர கேட்டாலே எல்லாம் terror ஆகுரங்க..,

மேவி... said...

"ராஜு ♠ said...
இப்போல்லாம் குமுதம் "அரசு" பதிலகளைத்தான் கூர்ந்து கவனித்து படிக்கிற மாதிரி தெரியுதே கார்த்திக்..!"


athe athe

மேவி... said...

cable anne.... unga padam eppo????

ஜெட்லி... said...

இப்போ வில்லன்கள் தான் நல்லவங்க பாஸ்...
படத்தை நாம் உள்வாங்கும் முறையில் தான்
உள்ளது..... படத்தை பார்த்து யாரும் திருந்த
போவதும் இல்லை கெட்டு போவதும் இல்லை.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

மிக சரியான பார்வை. புரிந்தவர்கள் சுதாரித்துக்கொள்ளட்டும்.
வாழ்த்துக்கள்

Raju said...

\\இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் 'யோகி' 'ரேணிகுண்டா' 'நான் அவன் இல்லை' இதில் எந்த நாயகனாவது நல்லவனா????\\

நாயகன் நல்லவனாவே இருக்கனும்ன்னு ஏன் நினைக்கறீங்க‌ பாஸ்..?

\\நீங்கள் வன்முறையை ரசித்தால் உங்களுக்குள் ஒரு மன நோயாளி இருக்கலாம்\\

வன்முறை மட்டுமல்ல, எதையுமே அளவுக்கதிகமாக ரசித்தால்தான் மன நோய்.

வெண்ணிற இரவுகள்....! said...

நாயகன் நல்லவனாய் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை .ஏன் கெட்டவனாகவே காட்டப் படவேண்டும் .

இன்றைய கவிதை said...

தொடருங்க!

-கேயார்

பிரேமி said...

உங்களின் கருத்துக்கள் அருமை. வன்முறையை தூண்டும் படங்களை முதலில் அரசு தடை செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் முதற் கொண்டு பாதிக்கப் படுகின்றனர். இதயத்தில் ஏற்பட்ட சுமையை அழகாக நீங்கள் இறக்கி வைத்திருக்கிறீர்கள். நன்றி.

? said...

nayagan eppothumae kuttramatravanaaga irrukka vendum enpathu kalai tharamaan padaippu illai

mouli said...

very nice